நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உங்கள் கோபம் என்ன விலை? 55

Unknown | வியாழன், மார்ச் 31, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பான அதிரை நிருபர் வாசகர்களே…கொஞ்சம் இதைப்படிங்க...

என்னடா தன்னம்பிக்கை பற்றிய எழுதி வந்த நான் கோபத்தை பற்றி எழுதுறேன் நினைக்காதீங்க, கோபத்தை அடக்கி வாழ்ந்தால் அதுவே எல்லாருடைய தன்நம்பிக்கைக்கும் அடிப்படையாக அமையும்.

கோபம் கொண்டிருப்பது கொதிக்கும் இரும்பு உருளையை கையில் பிடித்து இருப்பதற்கு சமம்.. அது நம்மை அழித்துவிடும்.

கோபம் கொள்ளாமல் இருப்பவன் முட்டாள். ஆனால் அறிவுடையவன் அதை செய்யமாட்டான் என்ற பழமொழிகள் சொல்வதுபோல கோபம் கொடுமையானது.

ANGER IS ONLY ONE LETTER SHORT OF DANGER

கோபம் வருவது இயற்க்கைதான், பித்தப்பை இருக்கும்வரை கோபமும் குடி கொண்டு இருக்குமாம், (ஜாஹிர் காக்கா கன்ஃபாம் பிலீஸ்), ஆனால் அதை கண்ட்ரோல் பண்ணவும் முயற்சிக்கலாம்.

கோபம் வருவதுபோல் தெரிந்தால் “ அவுது பில்லாஹி மினஷ்சைத்தானிர் "ரஜீம்“ ஒதி கொள்ளும்போது பெரும்பாலும் கோபம் போய்விடும், ஆனால் சில பேருக்கு காது புடைத்து கொண்டு கோபம் குறையாமல் Maintain பண்ணும் அவங்களுக்காக இந்த ஆக்கம் (நான் கோபப்படுவது ரொம்ப குறைவு).

கோபம் என்னவெல்லாம் செய்யும் பாருங்கள்

கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரையும் உண்டு பண்ணும் மற்றும் மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

கோபம் நாம் விரும்பதாக சம்பவத்தை நம்மை அறியாமல் செய்ய தூண்டிவிடும். பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவது வருந்தக்கூடிய நிலைக்கு தள்ளி விடும். கோபம் எத்தனை பேர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி விட்டது என்பதை நாம் வாழ்வில் கண்டு இருப்போம் தொட்டா சிணுங்கி கோபம் எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவை தரும்.

கோபம் எதுக்கெல்லாம் கொள்ளலாம்

கோபத்தினால் பல கேடுதல்கள் இருப்பினும், இந்த கோபங்கள் நம்மை பாழ்படுத்தாமல் பண்படுத்தும் சமுதாய திருத்துவதற்கு கொள்ளும்- சமயோஜத கோபம்.

பிள்ளை திருத்துவதற்க்கு உதவும் செல்ல கோபம்---ஜஸ் போல கரைந்துவிடும் இக்கோபத்தால் ஹெல்த் ரிஸ்க் எதுவும் இல்லை.

மனமில்லாலமல் மனைவி/கணவன் மேல் கொள்ளும் அனபு கோபம்- இதற்கு ஈசல் போல ஆயுள் கம்மி.

சரி எதை செய்தாலும் கோபம் குறையவில்லையா, இதை டிரை பண்ணுங்களேன்.

தொழுகையை சரிவர தொழுது வருவது கோபப்படுவதை மிகவும் குறைக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க,,,,சூடான தண்ணியை குடித்துவிடாதீங்க…. நிலமை தலைகிழா ஆகிடும் (தண்ணிய குடி,தண்ணிய குடி என்பது இதற்க்குதானோ)

ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்க ( கரெக்கட்டா).

கோபப்பட்டும் ஆள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் (உதாரணத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு காற்று வாங்க போய்விடலாம்).

கோபத்திற்கு காரணமாக இருந்த சம்பவம் எண்ணத்தில் இருந்து விடுபடாலாம் (எங்க தெருவில் ஒருவர் கோபம் வந்தால் 10 நாள் ஜமாத் சென்றுவிடுவார்,அதனாலயே அவர்கள் வீட்டில் அவரை உசுப்பேத்துவாங்க)..

கோபத்தின் போது முகம் விகாரமாகி, டார்வின் மனிதகுல தோற்றத்தை பற்றி (தவறாக) சொன்ன பொருள்போல் கலக்கலாக இருப்போம் இதை கண்ணாடியில் பார்த்து மகிழலாம் (கண்ணாடி பக்கத்தில் கருங்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்)

தனியாக அமைதியாக இருக்கும் போது…நாம் கோபப்பட்ட சம்பவத்தை நினைத்து அதை எப்படி தவிர்த்து இருக்கலாம் என்று சிந்திக்கலாம்.

நீச்சல்,குளியல் செய்ய கோபம் குறையும் (தோப்பில் பம்பு செட்டு தண்ணியில் குளித்தால் கோபம் என்ன கோவலமே மறந்து போற அளவுக்கு மனம் மகிழ்ச்சியால் துள்ளும்).

கொஞ்சம் காய்கறி சேர்த்து கொள்ளவேண்டும். ( நாம் ஆட்களுக்கு கோபம் வருவதற்க்கு முதல் காரணமே இஞ்சி பூண்டு ஆனம் அதிகமாக சாப்பிடுவதுதான்).


நீங்க இதைப்படித்துவிட்டு கருத்து எழுதாமே போனாலும் நான் கோபப்படமாட்டேன் ;)

அலாவுதீன் காக்கா…..கோபத்தை பற்றி நம் மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை இங்கு நீங்கள் பின்னூட்டமாகவோ அல்லது நேரம் கிடைத்தால் தனி ஆக்கமாகவோ இட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நீங்கள் கோப்படமாட்டீங் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்).

அபுஇபுறாஹிம் காக்கா.. தேர்தல் நேரம் என்பதால் கோபப்படாத வாலிபர் இயக்கம் என்று புதிய ஒரு இயக்கத்தை எல்லாம் உருவாக்கி தேர்தல்ல போட்டியிட வச்சு ஒட்டுகேட்க வைச்சுடாதிங்க. அப்புறம் கோபப்படாத நமக்கு கோபம்வந்துடும்.

WHATEVER IS BEGUN IN ANGER ENDS IN SHAME

கோவப்படாத உங்கள்

--முகமது யாசிர்

55 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கோபமான,மன அழுத்தமான நேரத்தில் எடுத்த முடிவு எதுவும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.சகோதரரர் யாசிரின் கட்டுரை பயனுள்ள ஒன்று இன்று.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு நண்பர் யாசிர்,

இப்படியா கோபட்டு எழுதுவது என்று கேட்காத அளவுக்கு ரொம்ப சாதுவாகவும் புரியும்படியும் விசயத்தை சொல்லிப்புட்டியளே. வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

இதை படித்தவுடம் டையிலி சக ஊழியருடன் என் மேலாளர் (Romanian) கோபப்படும் போது அரபியில் அடிக்கடி இப்படி சொல்லுவார் "முக்கு மாபி", "ஷூ ஹாதா மஸ்கரா", "அஸ்தஹ் பிர்லாஹுல் அலீம்" இந்த 3 அரபி வார்த்தை மட்டுமே சொல்லி சொல்லி திட்டுவார். சக ஊழியர்கள் எங்க மேலாளரை ஒரு காமெடி பீஸாகவே பார்க்கிறார்கள் இப்படி தொடர்ந்து திட்டுவதால்.

கோபப்படுகிற ஆட்களிடம் நிறைய காமெடியும் இருக்கும்..

கோபம் கொள்வதால் உடல் ஆரோக்கியமே கெடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//கோபத்திற்கு காரணமாக இருந்த சம்பவம் எண்ணத்தில் இருந்து விடுபடாலாம் (எங்க தெருவில் ஒருவர் கோபம் வந்தால் 10 நாள் ஜமாத் சென்றுவிடுவார்,அதனாலயே அவர்கள் வீட்டில் அவரை உசுப்பேத்துவாங்க).. //

நானும் நிறைய கண்டதுண்டு இது போன்ற சம்பவங்கள். இது மாதிரி ஆட்களுக்கு அடிக்கடி மாதம் ஒரு முறை கோபம் வரும்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
கோபமே வராத குணாலன்
கோபத்தின் தன்மையும்,தீமையும் பற்றி
விரிவாக சொன்னவிதமும் ,அதன் விளைவு பற்றி விளக்கியதும்
விளங்கியதே கோபத்தின் தாக்க பக்க விளைவு.
கோபம் சைத்தானின் நண்பன்,
கோபம் நம்மையும் , நன்மையையும் சுட்டெரிக்கும் நெருப்பு.
கோபம் அரோக்கியத்தை கெடுக்கவந்த அரக்கன்.
கோபம் நன் மதிப்பின் வீழ்ச்சி!
கோபம் கொன்றுவிடும் வாழ்வின் மகிழ்சி.
சாந்தம் கொள்வோம் ,சுற்றம் வெல்வோம்.

ZAKIR HUSSAIN சொன்னது…

மனதளவில் பலவீனமானவர்கள் கோபப்படுவார்கள்.

Yasir your article is superb...go ahead and write more.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

தம்பி யாசிர் : என் கோபம் விற்பனைக்கு அல்ல !

அது என்றுமே இலவசம் !

ஒரு கோபக் காரனோடு மீட்டிங்க் முடிச்சுட்டு வந்துடுறேனே... !

Unknown சொன்னது…

சகோ யாசிர் ........
அடிக்கடி இந்த மாதிரி பதிவுகள் போடாமல் இருப்பதற்கு
கோபப்படலாமா?
அருமையான பதிவு ........

Abu Easa சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//கோபம் வருவதுபோல் தெரிந்தால் “ அவுது பில்லாஹி மினஷ்சைத்தான் னிர்ரஹிம் “ஒதி கொள்ளும்போது பெரும்பாலும் கோபம் போய்விடும்//

மினஷ்சைத்தானிர் "ரஜீம்" என்று சொல்ல வேண்டும். தயவு செய்து அந்த எழுத்துப் பிழையை சரி செய்யவும்.

மற்றபடி மிகவும் பயனுல்ல பதிவு, ஜஜாக்கல்லாஹு கைரன்!

ம'அஸ்ஸலாம்

அப்துல்மாலிக் சொன்னது…

இஞ்சிப்பூண்டு ஆனத்தை குறைங்கப்பா கோவம் தானாப்பூடும், பட் நம்மக்கு அது இல்லாமல் இருக்கமுடியுமா, இருந்தும் கோவத்தை கட்டுப்படுத்த அது பற்றி விழிப்புணர்வு தந்த விளக்கம் அருமை

அப்துல்மாலிக் சொன்னது…

என் வாப்பா கோவப்பட்டால் உடனே அறையுனுள் சென்று அறைக்கதவை மூடிக்கொண்டு குரானை சத்தமாக ஓத ஆரம்பித்துவிடுவார்கள், அதுக்கப்புறம் உங்களுக்கே தெரியும் அதன் மகிமை. அட்லீஸ்ட் நாம கைவசம் சின்ன குரானை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இதுக்குத்தானோ

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபு ஈஸா, தாங்கள் சுட்டிகாட்டிய எழுத்துபிழை சரிசெய்யப்பட்டுவிட்டது.

மிக்க நன்றி

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ. யாசிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கோபத்தை பற்றி நல்லதொரு பதிவை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்! ஹதீஸ் ஆதாரத்தோடு கோபத்தின் தீமைகள் என்ன, எப்படி அடக்கியாள்வது என்பது பற்றிய பதிவு விரைவில் இன்ஷாஅல்லாஹ் வெளிவரும். தாங்களும் எழுதி , என்னையும் எழுத தூண்டியதற்கு வாழ்த்துக்கள் சகோதரரே!

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

எனக்கு கோபம் கோபமா வருது உங்களுக்கு கோபம் வராததை பார்த்து

அபு ஆதில் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,
கடைசியாய் வருகிறவர் எல்லோரையும் தள்ளிவிட்டு லிஃப்டில் ஏறும்போதும்...அவங்க நல்லா புகையைப்புடிச்சிட்டு நம்ம முகத்துக்கு நேரே ஊதிவிட்டு போகும்போதும்.....
எப்படி அடக்கியாள்வது என்பது பற்றிய பதிவு விரைவில்(இன்ஷாஅல்லாஹ் )அதிரைநிருபரில்தான் வரபோகிறதே.
சகோ.தாஜூதின்
"இப்படியா கோபட்டு எழுதுவது என்று கேட்காத அளவுக்கு ரொம்ப சாதுவாகவும் புரியும்படியும் விசயத்தை சொல்லிப்புட்டியளே." வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

மலேசிய வாழ் அதிரை வாசிகள் தான் கோபத்தின் தலை நகரம் எனலாம்.

இதற்க்கு நேர் எதிர் சகோ ஜாகிர்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

ஒரு காலத்தில் சிலர் கோபப்பட்டு இரயிலடி, கடற்கரைத்தெரு புலியமரம், காட்டுப்பள்ளி, செக்கடிமேடு, வண்டிப்பேட்டை, ராஜாமடம் என்று சுற்றித்திரிந்தார்கள். இன்று அப்படி உள்ளதா என்று தெரியவில்லை.

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

கோபம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்காது

எ. க. எம் ஜி ஆர்ருக்கு கோபம் வராமல் இருந்தால் ஆ தி மு கா என்ற கட்சி உருவாகி இருக்காது

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//எ. க. எம் ஜி ஆர்ருக்கு கோபம் வராமல் இருந்தால் ஆ தி மு கா என்ற கட்சி உருவாகி இருக்காது //

நீங்கள் சொல்லுவது சரிதான் ஹமீது காக்கா..

அவசியமானது நிதானத்துடன் கோபட்டால் நிச்சயம் நன்மையே நடக்கும், இதற்கு பல உதாரணங்கள். அதில் அதிரைநிருபர் உருவாகியதும் ஒர் எடுத்துக்காட்டு.

அபு ஆதில் சொன்னது…

//கோபம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்காது

"எ. க. எம். ஜி. ஆருக்கு கோபம் வராமல் இருந்தால் ஆ தி மு கா என்ற கட்சி உருவாகி இருக்காது ."
கண்ணகியின் கோபம் மதுரையை எரித்த(மாதிரி)து.

sabeer.abushahruk சொன்னது…

வேலைப் பளு மற்றும் ஸ்கூல்ஸ் ஓபன் ஹவுஸ் என்று டைட் ஷெட்யூலினால் இப்பதான் பார்த்தேன்!

யாசிரின் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி, வாழ்த்துகள்.
கொஞ்சம் ஃபிரியாகிவிட்டு பிறகு வர்ரேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அபு ஆதில் சொன்னது…
//கோபம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்காது

"எ. க. எம். ஜி. ஆருக்கு கோபம் வராமல் இருந்தால் ஆ தி மு கா என்ற கட்சி உருவாகி இருக்காது ."
கண்ணகியின் கோபம் மதுரையை எரித்த(மாதிரி)து. ///

யான்ங் காக்கா எங்கேயோ போறீயா, இன்னைக்கு நான் கோபப் படலைன்னா சம்பளத்திற்கான பேரோல் என்கைக்கு வந்திருக்காது கையெழுத்துக்கு !! இப்புடியும் இருக்கனும்தானே ! :)

ஜாகிர் ஹீசைன் சொன்னது…

சகோதரர் யாசிர் உங்கள் கோபம் என்ன விலை? ரொம்பவும் முயற்சிசெய்து எழுதியுள்ளீர்கள் சந்தோஷம் வாழ்த்துக்கள்

//தொழுகையை சரிவர தொழுது வருவது கோபப்படுவதை மிகவும் குறைக்கும்.//

இந்த செய்தியை எந்த ஹதீஸ் அல்லது குர்ஆன் ஆயத்திலிருந்து எடுத்தீர்கள்? அல்லது சொந்தக்கருத்தா?

ஜாகிர் ஹீசைன் சொன்னது…

//கோபம் கொள்ளாமல் இருப்பவன் முட்டாள். ஆனால் அறிவுடையவன் அதை செய்யமாட்டான் என்ற பழமொழிகள் சொல்வதுபோல கோபம் கொடுமையானது.//
இதற்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்

Shameed சொன்னது…

தாஜுதீன் சொன்னது…
//அவசியமானது நிதானத்துடன் கோபட்டால் நிச்சயம் நன்மையே நடக்கும், இதற்கு பல உதாரணங்கள். அதில் அதிரைநிருபர் உருவாகியதும் ஒர் எடுத்துக்காட்டு//


அஸ்ஸலாமு அழைக்கும்

அதை சொல்வதற்கு யோசனை செய்து கொண்டிருந்தேன் நீங்கள் பளிச் என்று சொல்லிவிட்டீர்கள்

Shameed சொன்னது…

//எங்க தெருவில் ஒருவர் கோபம் வந்தால் 10 நாள் ஜமாத் சென்றுவிடுவார்,அதனாலயே அவர்கள் வீட்டில் அவரை உசுப்பேத்துவாங்க//


அஸ்ஸலாமு அழைக்கும்

அந்த நபர் யார் என்று எனக்கு தெரியும்
யாசிர் பயப்படவேண்டாம் யாருக்கும் சொல்ல மாட்டேன்

Shameed சொன்னது…

ஜாகிர் ஹீசைன் சொன்னது…
//தொழுகையை சரிவர தொழுது வருவது கோபப்படுவதை மிகவும் குறைக்கும்.//

//இந்த செய்தியை எந்த ஹதீஸ் அல்லது குர்ஆன் ஆயத்திலிருந்து எடுத்தீர்கள்? அல்லது சொந்தக்கருத்தா? //


அஸ்ஸலாமு அழைக்கும்

பொதுவா தொழுகையை சரிவர தொழுது வருபவர்கள் நல்லவர்கள் என்ற அடிப்படையில்தம்பி யாசிர் சொல்லி இருக்கலாம்.

Yasir சொன்னது…

கருத்து சொன்ன நல் உள்ளங்கள்

சகோ.M.H.ஜஹபர் சாதிக் ((நீங்கள் சொல்வது மிகச்சரி ))
அன்பு சகோதரர் தாஜுதின் ((ஆமா நாம் நிறைய பார்த்து இருக்கிறோம்,பிரமிட் காரர்கள் கோபம் வந்தால் எச்சிலை காரி காரி துப்புவார்கள்”))
பல்மொழி வித்தகர் கிரவுன் (( நான் கட்டுரையில் கூறியதை 11 வரிகளில் பக்குவமாக கூறி இருக்கீறிர்கள், எல்லாம் அல்லாஹ் கொடுத்த அருள் உங்களுக்கு))
அசத்தல் காக்கா ஜாஹிர் (( தங்கள் உற்சாக வார்த்தை ரொம்ப உசுப்பேத்தி விட்டது காக்கா,எழுதுகிறேன்))
புதுமை கணினிக்கவி அபு இபுராஹிம்((கோபக்காரரோட மீட்டிங் சாந்தமா முடிந்ததா ?? கோபகாரனையும் கூலாக்கும் ஜிகிர்தாண்டா நீங்கள்))
சகோ.ஹர்மிஸ் (( உங்ளிடம் இருந்து பதிவுகள் வரவில்லை என்று எனக்கு கோபம் உண்டுதான்..எப்ப தரப்போறீங்க))
சகோ.அபு ஈஷா ((தங்கள் வருகையும் கருத்தும் உற்சாக டானிக்/ திருத்திற்க்கு நன்றி))
சகோ.அப்துல் மாலிக் ((சில வாப்பாக்கள் யாருமேல கோபம் இருந்தாலும் பிள்ளைகளை போட்டு அடிப்பார்கள்..தங்கள் தகப்பனார் உண்மையிலயே உயர்ந்தவர்கள்தான்))
இஸ்லாமிய வழிகாட்டி சகோ.அலாவுதீன்((உங்களை போன்றோரின் ஆக்கங்களை படித்த ஏக்கம்தான் எதோ கிறுக்கி கொண்டு இருக்கிறேன்.காத்திருப்போம் உங்கள் ஆக்கதிற்க்காக))
என்னை தூக்கி வளர்த்த சாகுல் காக்கா ((கோவப்படாதிய காக்கா -சில கோபங்களினால் பலன் விளையும் அது நல்லது,ஆனாக் பல கோபங்கள் வாழ்க்கையை பஸ்பமாக்கிவிடும்))
சகோ.அபு ஆதில் ((கஷ்டம்தான் லிப்டில் இதைமாதிரி நடந்தால் என்ன செய்வது அடக்கி ஆள வேண்டியதுதான் )
எங்கள் ஆஸ்தான கவி காக்கா (((வேலைபளுவிலும் தம்பியின் ஆக்கத்திற்க்கு கருத்து சொல்லி என்னை வலுப்படுத்தி இருக்கீறீர்கள்))
நேரமின்மையால் கருத்திட தவறிய சகோதர்கள்

திருமணப்பெண்ணை அலங்கரித்ததுபோல் இக்கட்டுரைக்கு வலு சேர்க்கும் படங்களை இணைத்த அதிரை நிருபருக்கும்
எல்லாவற்றிற்க்கும் மேலாக “ அல்லாஹ்” வுக்கும் நன்றி …மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்

Yasir சொன்னது…

நன்றி சகோ.ஜாகிர் ஹீசைன் தங்களுடைய கருத்துக்கு..ஆமா சகோ ஒரு மணி நேர முயற்ச்சியில் உருவானதுதான்

Yasir சொன்னது…

//இந்த செய்தியை எந்த ஹதீஸ் அல்லது குர்ஆன் ஆயத்திலிருந்து எடுத்தீர்கள்? அல்லது சொந்தக்கருத்தா?// கிட்டதட்ட சொந்த கருத்துதான் சகோ. சாகுல் காக்கா சொன்னதுடன்...மனதை தொழுகையில் தக்பீர் கட்டியதில் இருந்து சலாம் சொல்லும் வரை ஒரு நிலைபடுத்தி வைக்கும் போது அது பண்படையும் ( யோகா என்று சொல்லுகிறார்களே மற்றவர்கள் ) ஆகையால் பண்பட்ட மனது சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட்டுவிடாது என்ற நோக்கில் சொன்னேன்...

அதிரை முஜீப் சொன்னது…

//ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க,,,,சூடான தண்ணியை குடித்துவிடாதீங்க…!.//

நம்ம இ(ம)யக்க தலைவர்கள் எல்லாம், சூடான தண்ணிய குடிச்சிபுட்டுத்தான், இப்படி கோபப்பட்டு, முஸ்லிம்களை மறந்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்குராங்களோ?.

முதல்ல எல்லாத்தலைக்கும், ஒரு கூல்டிரிங்க்ஸ் கொடுத்து பார்ப்போம்!. அப்பவாவது கூலாகட்டும்!.

இந்த இ(ம)யக்க தலைவர்களை பார்த்து நாம கோபப்படாம இருக்கமுடியாதே!

கோபமும் சில சமயம் ஆக்கப்பூர்வமான கோபம் நல்லது!. ஏனெனில் அது வெற்றியை தரும்.

மேகத்தின் கோபம் மழையாகும்!
மின்னலின் கோபம் ஒளியாகும்!
நாற்றின் கோபம் நெல்லாகும்!
நெல்லின் கோபம் விதையாகும்!
நதியின் கோபம் ஆறாகும்!
மணியின் கோபம் ஒலியாகும்!
பூக்களின் கோபம் மனமாகும்!
கற்பனையின் கோபம் கவிதையாகும்!
கவிஞனின் கோபம் பாட்டாகும்!
ஏட்டின் கோபம் கல்வியாகும்!
மக்களின் கோபம் புரட்சியாகும்!
தென்றலின் கோபம் காற்றாகும்!
தேனியின் கோபம் தேனாகும்!.

Yasir சொன்னது…

//கோபம் கொள்ளாமல் இருப்பவன் முட்டாள். ஆனால் அறிவுடையவன் அதை செய்யமாட்டான் என்ற பழமொழிகள் சொல்வதுபோல கோபம் கொடுமையானது.// ...இது ஒரு சீனப்பழமொழிதான்,,எப்படி திருக்குறளை படிக்கும் போது ஒன்றுமே புரியாதோ...கிட்டதட்ட இதுவும் அது போலத்தான்....
சிம்பிளா சொல்லப்போனால் “ கோபப்படுபவன் முட்டாள் கோபப்படாமல் இருப்பவன் அறிவாளி “ என்பதைதான் இவ்வளது டிரிக்கா சொல்லி இருங்க்காங்க..சரியா ??

Yasir சொன்னது…

இதுதான் உண்மையான சீனபழமொழி,மொழியாக்கத்தில் சிறிது மாற்றம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்

“He is a fool who cannot be angry; but he is a wise man who will not”

Yasir சொன்னது…

வருகைக்கு நன்றி முஜீப் காக்கா,ஆக்கப்பூர்வமான கோபத்தைபற்றி இவ்வளவு விளக்கமா சொல்லிட்டீங்க...வாங்க கோபப்படுவோம்

Yasir சொன்னது…

சகோ.ஜாகிர் ஹீசைன் ஆங்கிலத்தில் உள்ளதை படித்து பார்த்தபிறகு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்...நன்றி தங்கள் கேள்விக்கு

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

நெறியாளர் மின் அஞ்சலுக்கு வந்த கருத்து
--------------------------------

என்னுடைய நன்பர் வேலைபார்க்கும் இடத்தில் அவர் மேளாலர்,எந்த விசயத்திற்கும் கோபப்படவே மாட்டாராம். அப்படி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் தலைக்கேரிவிட்டால் உடனே தன்னுடைய ஆபீஸில் கதவை பூட்டிக்கொண்டு இருக்கின்ற ஸ்கராச் பேப்பரை கிழித்து விடுவாராம்.
இது ஏன் அப்படி என வினவ? கோபப்பட்டு என்ன பிரயோஜனம் வீனால் பகைமைதான் ஏற்படும்.

நன்றி யாசிர், உடல் நலத்திற்கு அரும் மருந்து.

jaleelsa

Yasir சொன்னது…

//அந்த நபர் யார் என்று எனக்கு தெரியும்
யாசிர் பயப்படவேண்டாம் யாருக்கும் சொல்ல மாட்டேன்// ஆமா காக்கா உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான்...பீலிஸ் சொல்லிடாதீங்க :)

Yasir சொன்னது…

வித்தியாசமான மேலாளர்தான்....அறிவாளியும் கூட...நன்றி தங்கள் கருத்துக்கு ஜலீல் காக்கா

Shameed சொன்னது…

Yasir சொன்னது…

//ஆமா காக்கா உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான்...பீலிஸ் சொல்லிடாதீங்க//


அஸ்ஸலாமு அழைக்கும்

யார் என்று சொன்னால் நாம ஒரு 40 நாள் ஜமாஅத் போய்விடவேண்டும் இல்லையேல் வம்புதான்
(அண்ணன் ஷாகுல் சாருக்கும் புரியும் யார் என்று)

Yasir சொன்னது…

என்ன காக்கா...கொஞசம் கொஞசமா லீக் பண்ணுருவிங்க போல..ஹாஹாஹா

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//தேர்தல் நேரம் என்பதால் கோபப்படாத வாலிபர் இயக்கம் என்று புதிய ஒரு இயக்கத்தை எல்லாம் உருவாக்கி தேர்தல்ல போட்டியிட வச்சு ஒட்டுகேட்க வைச்சுடாதிங்க. அப்புறம் கோபப்படாத நமக்கு கோபம்வந்துடும்.//

இதுக்கு அவசியமில்லாமே செய்திட்டாய்ங்களே தேர்தல் களத்தில்...

விஜயகாந்த் தனது வேட்பாளரை அடித்தார்...

ஜெயலலிதா தனது கட்சிக் கொடியை கீழிறிக்கச் சொன்ன விஜயகாந்த் மீது..

கருணாநிதி தேர்தல் கமிஷன் சோதனைமேல் சோதனை தருகிறதே...

இவைகள் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோமே...

கருக்கால 05:55 மணிக்கு டாக்சி வழிவிடாமலே வெறுப்பேத்தும் போது வந்தது கோபம்...

முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டு (கூட்டணிப் பேச்சுவார்த்தை மாதிரி) கூப்பிட்டு உட்காரவச்சு வதைத்து எடுத்த மேதாவிகள் (வேற எங்க பொலைப்பு நடத்துற இடத்திலதான்) தலைக்கு ஏணி வைத்து ஏற்றி வைத்த கோபம்.

துபாய் கோர்ட்டுக்கு வேலை விஷயமாக சென்று வா என்று கம்பெணி டிரைவரிடம் சொல்லப்போய் அவர் என்னிடமே அது எங்கேயிருக்கு அதற்கு வழி சொல்லுன்னதும் எகிரியதே கோபம். (நேற்று அவய்ங்க தோற்காம இருந்திருந்தா இவர் விண்வெளிக்கே சென்று பெட்ரோல் எடுத்து வந்திருப்பார்)

இன்று பாதி நாள்தான் வேலல என்று தெரிந்தும் அதுவும் மாசக் கடைசியின்னும் அறிந்தும் பேரோலை அப்ரூவலுக்கு அனுப்பாதவய்ங்க மேல கோபம் பாஸ்....

வேலை விட்டு வரும்போது சிக்னலில் நிறுத்தத்தில் காரில் இருக்கும்போது முன்னாலிருந்தவர் அப்படியே தனது வண்டியை விட்டு இறங்கி வந்து ஜன்னல் கண்ணாடியை தட்டி என்னிடம் கேட்டர் "கார் நம்பரை விலைக்குத் தரமுடியுமான்னு" வந்தது கோபம்...

இப்போ சொல்லுங்கள் கோபப்படுரது சர்ஃப் மாதிரி கறைபடுற மாதிரிததனே இருக்கு !?

sabeer.abushahruk சொன்னது…

தீமையை எதிர்த்து கோபப்படனும்
தீயதைத் தடுக்க கோபப்படனும்
சதிகளை முறிக்க கோபப்படனும்
சனியனை அழிக்க கோபப்படனும்

பெற்றோர்மீது கோபம் வேண்டாம் - நல்ல
பிள்ளைமீது கோபம் வேண்டாம்
நண்பர்களுக்குள் கோபம் வேண்டாம்
அன்பென்கிற ஆயுதமிருக்க
அறிவை அழிக்கும் கோபம் வேண்டாம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதானே பார்த்தேன் புலி ஏன் பதுங்குதுன்னு (வேலைப் பளுவும் ஒரு காரணம்) கவிக் காக்காவின் கோபம் நியாயமானதே...

Ahamed irshad சொன்னது…

கோவப்படாத உங்கள்

--முகமது யாசிர்//

நாளைக்கு ஏப்ர‌ல் ஒன்னாச்சே அதானா ரைட்டு.. ச‌கோ.யாசிர் :))

Yasir சொன்னது…

திருப்பிவந்தாலும் அழுத்தம் திருத்தமா கோபத்தை பற்றி கவிக்காக்கா சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள்...ஒபென் ஹவுஸ் எப்படி இருந்தது காக்கா ???

சகோ.அஹமது இர்ஷாத் எப்படி இவ்வளவு கரெக்டா சொல்லிட்டீங்க :) // ஏப்ரல் 1 சேட்டையை இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா :))) // வருகைக்கு நன்றி

crown சொன்னது…

அஹமது இர்ஷாத் சொன்னது…
கோவப்படாத உங்கள்

--முகமது யாசிர்//

நாளைக்கு ஏப்ர‌ல் ஒன்னாச்சே அதானா ரைட்டு.. ச‌கோ.யாசிர் :))
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சின்னதா ஒரு கடி(இப்பத்தான் தோனுனிச்சி) நல்ல கடியா இல்லையான்னு நீக்கள் சக வாசகர்கள் தான் சொல்லனும்.
யாசர்: நாளைக்கு ஏப்பரல் 1
நான்: நாளைக்கு எங்களுக்கு 31
ஆக நாங்கத்தான் 30 முந்தி ஆனாலும் பிந்தி நீங்கதான் முந்தி.
1விட 31 ,30 நாள் முந்தி ஆனாலும் நீங்களும் தேதி கணக்கு படி பார்த்தா 1 நாள் நீங்க முந்தினாலும், ஒரு மாதம் கணக்கு காரணம் நாங்கள் மார்சு31 நீக்கள் ஏப்ரல் 1 இப்ப ஈசியா புரிந்திருக்குமே.

sabeer.abushahruk சொன்னது…

ஓபன் ஹவுஸிலேயெ புக்ஸ் யூனிஃபா(ர்)ம், ஃபீஸ், ரிஸல்ட் என்று எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து குறுகிய நேரத்தில் நடத்துவதால் கூட்டம் பிதிங்கியது.

பிள்ளைகளெல்லாம் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் என்பதால் நிம்மதி.

மற்றபடி ஹிந்தி மலையாளம் தெலுகு இங்கிலீஷ் தமிழ் என்று கலந்துகட்டிய இறைச்சலில் கோபம் வந்தாலும் உங்கள் போதனைக்கு மதிப்பளித்து கம்முனு வந்துட்டேன் யாசிர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

"ஒபன்ஹவுஸ்"ன்னு சொன்னா "கூரையில்லாத வீடு"தானே ? - தமிழகத் தேர்தல் வேட்பாளர் ஒருவரின் கேள்விங்கோ !

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் குயிலின் குஞ்சுகள் டைனசருக்கே பாடம் எடுப்பாங்களே நல்ல மதிப்பெண் எடுக்காமலா இருந்திடுவாங்க ! (புள்ளைங்களா மாமா வின் வாழ்த்துக்கள்) !

Yasir சொன்னது…

///பிள்ளைகளெல்லாம் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் என்பதால் நிம்மதி// ALHAMDULILLAH....CONGRATS ....ALLAH BLESS THEM

crown சொன்னது…

Yasir சொன்னது…
///பிள்ளைகளெல்லாம் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் என்பதால் நிம்மதி// ALHAMDULILLAH....CONGRATS ....ALLAH BLESS THEM

---------------------------------------------------------Assalamualikum. AAmeen!

ZAKIR HUSSAIN சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும். சின்னதா ஒரு கடி(இப்பத்தான் தோனுனிச்சி) நல்ல கடியா இல்லையான்னு நீக்கள் சக வாசகர்கள் தான் சொல்லனும்.
யாசர்: நாளைக்கு ஏப்பரல் 1
நான்: நாளைக்கு எங்களுக்கு 31
ஆக நாங்கத்தான் 30 முந்தி ஆனாலும் பிந்தி நீங்கதான் முந்தி.
1விட 31 ,30 நாள் முந்தி ஆனாலும் நீங்களும் தேதி கணக்கு படி பார்த்தா 1 நாள் நீங்க முந்தினாலும், ஒரு மாதம் கணக்கு காரணம் நாங்கள் மார்சு31 நீக்கள் ஏப்ரல் 1 இப்ப ஈசியா புரிந்திருக்குமே. //

To Bro Crown,

காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் உள்ள என்னையே...லெமென் & புதினா இலை & ஐஸ் போட்டு சில்லென்ற தண்ணீர் குடிக்கும் அளவுக்கு தலை சுற்றவைத்தது....

ஸ்ஸ் அப்பா..இப்பவே கண்ணக்கட்டுதே..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அசத்தல் காக்கா, உங்களுக்கே இப்படின்னா எங்களுக்கு ? இந்தக் கிரவ்ன்(னுபய யோசிப்பான்னு, ஆனா அவன் மேல கோபமே வராது காக்கா எனக்கு.. ஏன்னா தலைக்கு மேலை வைக்க வேண்டியிருப்பதால் ! (ஒரு வேலை தலைக்கு மேல கோபத்தை வச்சிருக்கான்னு சொல்லிடப்புடாது பாருங்க அதான்)

Yasir சொன்னது…

சகோ.கிரவுனின் கடியை கடித்துவிட்டு அதனை புரிந்து கொள்ள முயன்று வாழ்க்கையிலேயே முதல் முறையாக இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன்...ஆமா கவிக்காக்கா நம்ம கிரவுன் என்ன சொல்லி இருக்காங்க ??

sabeer.abushahruk சொன்னது…

டைம் டிஃபெரென்ஸைக் கொண்டு கிரவுன் கடித்தது இப்படி ரெத்தெக்களரியாகும்னு யாருக்குத் தெரியும்.

க்ளூ: மாசத்த மறந்தா தேதி எண்ணிக்கையில் அவர் முந்தி, இல்லேனா நாம முந்தி. இதுவும் புரியலேன்னா ஜாகிர், அபு இபுறாஹீம் யாசிர் ஆகியோர் நல்ல உஸ்த்தாதா பார்த்து தட்டை யெழுதி குடிப்பது நல்லது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா: ஏன் கிரவுன் கிட்டேயே கணக்கு போட்டு பார்த்திட்டா போச்சு !? அவய்ந்தான் சரியா கணக்குபோடுவான் !

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு