Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கள் ஆசான்கள் ! - இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளி 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2011 | , ,

நமதூர் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் மதிற்பிற்குரிய ஆசான்களை பற்றி எழுதியதை போல நமதூர் இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எங்கள் மனதில் நீங்கா நினைவுகளோடு மிக உயர்ந்த இடத்தை பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய ஆசான்களை இங்கு நினைவு கூற ஆவலோடு விழைகிறேன். எல்லா ஆசான்களும் மரியாதைக்கு உரியவர்களே !

ஜனாபா மெஹர்பான் உஸ்தாத்

முழுமையான மார்க்க அறிவும் ,அதை எத்தி வைக்க அவர்கள் கடைபிடிக்கும் கண்டிப்பு, மாணவர்களையும் தாண்டி மாணவனின் பெற்றோர் வரை எதிரொலிக்கும். அற்புதமான இந்த உஸ்தாதின் மாணவனாக இருந்ததில் என்னை போன்ற மாணவர்களுக்கு பெருமை. தற்போது மன்னார்குடியில் பெண்கள் மதரசா நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். எங்கள் உஸ்தாதின் (ஆசிரியை) மார்க்கத்தின் மீதான அலாதியான பற்று 25 வருடங்களை கடந்து இன்றும் என் கண்கள் முன்னால் நிழலாடுகின்றன !

ஜனாபா ஜைபுன்னிஷா மேடம்

எங்கள் பள்ளியின் பிரின்சிபாலின் சிறப்பு அவர்களின் கலகலப்பும் அதே விகிதத்தில் கலந்த கண்டிப்பும். நான் ஓரளவுக்கு நன்றாக படிக்கும் மாணவன் இருந்தும் botany பாடத்தில் கொஞ்சம் குறைவாக இரண்டு தேர்வுகளில் மார்க் எடுத்திருந்தேன். மேடம் என் உம்மாவை அழைத்து உங்கள் மகன் வீட்டிலிருக்கும்போது violet கலர் (botany பாடப் புத்தகத்தின் நிறம்) புத்தகம் படிக்கிறானா என்று தினமும் கவனிக்க சொன்னதுமட்டுமில்லாமல் எனக்கென்று அவர்கள் வீட்டில் தனியாக fees வாங்காமல் டியூஷன் எடுத்தது என் வாழ்நாள் முழுதும் மறக்காது. மேடத்தின் தன்னலமற்ற உழைப்பு இன்றும் என் நினைவில் நிற்கின்றன !

ஜனாபா ஆப்தாப் பேகம் மேடம் (Mrs. பரகத் சார்)

இவர்களை நாங்கள் சமாதான புறா என்றுதான் அழைப்போம். நம் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று மிக அழகாக சொன்னது இன்றும் என் மனதில். இவர்களை சிறந்த சிற்பி என்று கூட சொல்லலாம் ஏனென்றால் நம்முடைய கேரக்டர்,அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்று அன்றே personality development பற்றி 7 ஆம் வகுப்பிலே கற்று தந்தவர்கள் .creativity யை ஆர்வபடுத்துவதில் இவர்கள் ஒரு classic டீச்சர்.

ஒரு முறை ஆங்கில பாடத் தேர்வின் திருத்திய பரீட்சைத் தாள்களை எங்கள் வகுப்பில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் விடை தாளில் நான் பதிலை தவறாக ஆனால் சொந்த ஆங்கில நடையில் மனப்பாடம் செய்யாமல் எழுதியதை பாராட்டியதை நினைத்தாலே இன்னிக்கும். எங்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத பேச வர வேண்டும் என்று அவர்களுடைய வீட்டில் அவர்களுடைய கணவர் நம்மூர் போற்றும் பேராசிரியர் பரகத் சாரை வைத்து எங்களுக்கு படம் எடுத்ததை தன்னலமற்ற சேவையின் உச்சம்.

இதில் இடம் பெறாத ஆசான்களும் என் நெஞ்சில் மரியதை கூரியவர்களே ! மேலும் மேலே உள்ள என் மரியதைக்கு உரிய ஆசான்கள் ஹஜ்ஜு கடமைமுடிதிருந்தால் ஹாஜிமா என்று பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளவும்.

இமாம் ஷாஃபி முன்னாள் / இந்நாள் மாணவர்களே உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாக தொடருங்கள்......

நமக்கு பாடம் சொல்லி தந்த நம் ஆசான்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை என்றும் பிரார்தித்தவனாக !.

என்றும் நன்றியுடன்,

- அப்துல் ரஹ்மான்
- harmys -

14 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முழுமையான மார்க்க அறிவும், அதை எத்தி வைக்க அவர்கள் கடைபிடிக்கும் கண்டிப்பு, மாணவர்களையும் தாண்டி மாணவனின் பெற்றோர் வரை எதிரொலிக்கும்.//

அன்றே இதன் தாக்கத்தை உணர்ந்திருக்கிறோம்...

இன்னும் நிறைய ஆசான்கள் இருக்கிறார்கள் நம்மை செதுக்கிய சிற்பிகளாக ! அவர்கள் யாவரும் நினைவில் வைத்து நன்றி பாரட்டத் தகுதியுடையவர்களே...

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து ஆசான்களுக்கும் நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ்ந்திட அருள் புரிவானாக !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் இமாம் ஷாபி யில் படித்தவன் இல்லை யென்றாலும் நண்பன் மேலே குறிப்பிட்டவர்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுபோல் கிளார்க் உத்யோகம் பார்த்த பாத்திமா அவர்களும் நல்ல பெயருடன் பணிபுரிந்தவர்கள் என்பதையும் இங்கே பதிகிறேன். நல் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே பிற்காலத்தில் நல் நிலைக்கு அதுவும் ஒருகாரணமாக அமைகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறியாத ஆசிரியர்களை அறிய வைக்கும் அதிரை நிருபருக்கும் அதனை அதனை அளித்த அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அப்துர் ரஹ்மானின் ஆக்கத்தில் வெளிவந்திருப்பது அழகு. நான் இமாம் ஃஷாபியில் படிக்கா விட்டாலும் அந்த பள்ளியின் கல்விப்பணியை , இது வரை படிக்க வைத்த மாணவர்களை பாராட்டிதான் ஆக வேண்டும்.

இங்கு [மலேஷியாவில்] மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் பெண்களை USTAZA என அழைப்பார்கள்.ஆண்களை USTAD எனவும், ஹஜ்ஜு கடமை செய்து முடித்தவர்களை TUAN HAJI என்றும் பெண்களை HAJJAH என்றும் அழைப்பார்கள். ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களை இப்படி அழைப்பது சரிதானா என்பது பற்றி நீண்ட நாள் விவாதம் இருந்து கொண்டிருக்கிறது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் ரஹ்மான்.

நானும் இமாம ஷாஃபி மாணவன் தான். 10ம் வகுப்பு (1992) வரை படித்தேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவருமே, நமக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை தந்தார்கள். என்னுடன் படித்த நண்பர்களும் நான் சொல்லுவதற்கு மாற்றுக்கருத்து சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அறிந்தோ அறியமலோ அன்று பள்ளியில் செய்த தவற்றை மீண்டும் எங்கள் வாழ்நாளில் செய்யவிடாமல் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் முன்னால் இமாம் ஷாஃபி பிரின்சிபால் ஜனாபா ஜைபுன்னிஷா மேடம் அவர்கள்.

ஜனாபா மெஹர்பான் உஸ்தாத் அவர்களைப் போல் இன்று கண்டிப்புடன் உஸ்தாதுகளும் இருக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வருவதற்கு உஸ்தாதுமார்களின் கண்டிப்பு மிக மிக அவசியம் என்பதற்கு மெஹர்பான் உஸ்தாத் அவர்கள் உதாரணம் என்று சொன்னால் மிகையில்லை.

இன்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு தங்களின் கல்வி சேவையை செய்து வரும்
ஜனாபா ஆப்தாப் பேகம் மேடம் அவர்களை மறக்கவே மட்டேன். இவர்கள் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமே ரொம்ப சிம்பிள இருக்கும்..

வருடங்கள் பல சென்றாலும் இன்னும் கண் முன்னே உள்ளது இமாம் ஷாஃபி பள்ளி நினைவுகள்.

சரியான நேரத்தில் இந்த அற்புதமான பதிவை தந்த அன்பு சகோதரர் அப்துல்ரஹ்மான் அவர்களுக்கு மிக்க நன்றி.

Sallu said...

My Dear Students!!!

Assalamu Alaikum. I'm spell bounded to read the cherishing memoirs you all have shared in this blog. May ALLAH bless you all abundantly....

Allah Hafiz

Mrs. Zaibunnisa Basha

Unknown said...

Iam very happy that you were read my article.
thankyou
wasalam
Abdul Rahman

Anonymous said...

ZAKIR HUSSAIN சொன்னது…:

சகோதரர் அப்துர் ரஹ்மானின் ஆக்கத்தில் வெளிவந்திருப்பது அழகு. நான் இமாம் ஃஷாபியில் படிக்கா விட்டாலும் அந்த பள்ளியின் கல்விப்பணியை , இது வரை படிக்க வைத்த மாணவர்களை பாராட்டிதான் ஆக வேண்டும்.

இங்கு [மலேஷியாவில்] மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் பெண்களை USTAZA என அழைப்பார்கள்.ஆண்களை USTAD எனவும், ஹஜ்ஜு கடமை செய்து முடித்தவர்களை TUAN HAJI என்றும் பெண்களை HAJJAH என்றும் அழைப்பார்கள். ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களை இப்படி அழைப்பது சரிதானா என்பது பற்றி நீண்ட நாள் விவாதம் இருந்து கொண்டிருக்கிறது

Thursday, May 12, 2011 5:15:00 AM அன்று !

Anonymous said...

தாஜுதீன் சொன்னது…:

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் ரஹ்மான்.

நானும் இமாம ஷாஃபி மாணவன் தான். 10ம் வகுப்பு (1992) வரை படித்தேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவருமே, நமக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை தந்தார்கள். என்னுடன் படித்த நண்பர்களும் நான் சொல்லுவதற்கு மாற்றுக்கருத்து சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அறிந்தோ அறியமலோ அன்று பள்ளியில் செய்த தவற்றை மீண்டும் எங்கள் வாழ்நாளில் செய்யவிடாமல் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் முன்னால் இமாம் ஷாஃபி பிரின்சிபால் ஜனாபா ஜைபுன்னிஷா மேடம் அவர்கள்.

ஜனாபா மெஹர்பான் உஸ்தாத் அவர்களைப் போல் இன்று கண்டிப்புடன் உஸ்தாதுகளும் இருக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வருவதற்கு உஸ்தாதுமார்களின் கண்டிப்பு மிக மிக அவசியம் என்பதற்கு மெஹர்பான் உஸ்தாத் அவர்கள் உதாரணம் என்று சொன்னால் மிகையில்லை.

இன்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு தங்களின் கல்வி சேவையை செய்து வரும்
ஜனாபா ஆப்தாப் பேகம் மேடம் அவர்களை மறக்கவே மட்டேன். இவர்கள் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமே ரொம்ப சிம்பிள இருக்கும்..

வருடங்கள் பல சென்றாலும் இன்னும் கண் முன்னே உள்ளது இமாம் ஷாஃபி பள்ளி நினைவுகள்.

சரியான நேரத்தில் இந்த அற்புதமான பதிவை தந்த அன்பு சகோதரர் அப்துல்ரஹ்மான் அவர்களுக்கு மிக்க நன்றி.

Thursday, May 12, 2011 7:23:00 PM அன்று

Anonymous said...

sabeer.abushahruk சொன்னது…:

wise move, Harmys!

Thursday, May 12, 2011 5:26:00 PM அன்று

Anonymous said...

Sallu சொன்னது.... :

My Dear Students!!!

Assalamu Alaikum. I'm spell bounded to read the cherishing memoirs you all have shared in this blog. May ALLAH bless you all abundantly....

Allah Hafiz

Mrs. Zaibunnisa Basha

Thursday, May 12, 2011 5:26:00 PM அன்று

Anonymous said...

harmys சொன்னது... :

Iam very happy that you were read my article.

thankyou

wasalam

Abdul Rahman

majith safiullah said...

Im also old student of Imam Shafi, I wiil never forgot Miss.Chitra, Miss.Udaya and Miss.Tamil mathi now she is working in our khadir mohideen boys school,

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு