ஒரு ஊரில்…!
ஒரு முயலும், ஆமையும் இருந்ததாம் இருவருக்கும் ஓட்டபந்தயம் நடத்த முடிவானது. அதன்படி முயலும் - ஆமையும் ஓடத் தயாரானது.
முதலில் வேகமாக ஓடிய முயல் பாதி தூரம் கடந்ததும் மமதை கொண்டு அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க எண்ணி அங்கே சிறு உறக்கம் கொண்டதும் மெதுவாக வந்த ஆமை முயலைக் கடந்து வெற்றியைத் தொட்டதும் வெற்றி வெற்றி என்று ஆமை கத்தியது. அதை கேட்ட முயல் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ள மறுத்தது.
சரி மறுபடியும் போட்டியை துவங்கலாம் என முடிவாகி தொடர்ந்து முயலும் ஆமையும் மீண்டும் ஓடத் துவங்கியது. இந்த முறை முயல் உஷாராக போட்டியில் முந்தி வந்து வெற்றியடைந்தது. அதற்கு அடுத்து கடைசியில் வந்த ஆமை “சரி நாம் இருவரும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே, இருவரும் சமம்தான்” என்று ஆமை சொன்னது.
இதை ஒப்புக்கொள்ளாத முயல் மூன்றாவதாக போட்டிக்கு அழைத்தது. ஆமைக்கும் எப்படியாவது முயலை ஜெயித்து விடவேண்டும், என்று ஒரு விவேகமான முடிவை எடுத்தது ஆமை.
சரி இந்த முறை போட்டியின் தன்மையை நான் முடிவு செய்வேன் என்ற ஆமை சொல்ல தலைக்கனம் பிடித்த முயல் தன்மீது அதீத நம்பிக்கையினால் (over confident) ஆமையின் முடிவிற்கு ஒப்புக்கொண்டது.
ஆமை சொன்னது “இந்த போட்டியை தண்ணீரில் வைத்துக் கொள்ளலாம்” என்றதும் அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது முயலுக்கும் தெரிந்து விட்டது நிச்சயமாக ஆமை தான் வெற்றி பெறும். மறுபடியும் முயல் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றுமொரு போட்டிக்கு முயல் அழைக்க அதில் மூன்றாவது நபர் ஒருவரிடம் போட்டியின் தன்மை எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
அவர் நல்லதொரு முடிவை சொன்னார் அதாவது, பாதி தூரம் தரையிலும் பாதி தூரம் தண்ணீரிலும் போட்டி நடக்க வேண்டும். முயலுக்கும் ஆமைக்கும் தலையைச் சுற்றியது பின்னர் இருவரும் பல்வேறு கட்டங்களாக கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதில் தரையில் செல்லும்போது முயலின் முதுகில் ஆமையும், தண்ணீரில் செல்லும்போது ஆமையின் முதுகில் முயலும் அமர்ந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஒற்றுமையாய் போட்டிக்கான இலக்கை அடைந்தார்கள்.
இவ்வாறு ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் சகோதரர்கள் வெவ்வேறு குணநலன்களுடன் இருக்கலாம். ஆமை, முயல் போல எவ்வளவுதான் வேகமாக முயல் ஓடினாலும் ஆமையின் விவேகத்திற்கு முயல் தோற்று விட்டதல்லவா? அதுபோல அண்ணன் தம்பி குணாதிசயங்களில் வேறுபட்டாலும் " அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் " எனும் அல்லாஹ்வின் திருவாக்கினை நாமெல்லாம் பின்பற்றுவோமாக!
குடும்பத்தில், தெருவில், ஊரில் வேறுபாடுகள் இல்லாமல் வெற்றி / தோல்வி இரண்டினையும் சமமாக பாவித்து சுபிச்சமாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்…
மு.செ.மு.சபீர் அஹமது
16 Responses So Far:
ரெண்டு பேருக்கும் ஓட்டப்பந்தயப் போட்டி ரொம்ப சுவராஸ்யமாய் இருக்குது.
ஒரே ஊரில் பிறந்தாலும் அவரவர் குணாதிசயங்களில் வேறுபாடு இருக்கத் தான் செய்யும். ஆனால் ஊர் நலன் என்று வரும்போது கதையில் சொல்லப்பட்ட ஒரு முடிவாக பேசி முடிவெடுத்தது போல அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்" எனும் நாயகம்(ஸல்) அவர்களின் திருவாக்கினை நாமெல்லாம் பின்பற்றி நடப்போமாக!
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தோரு நீதி போதனை கதை. முயல் ஆமையிடம் தோற்க்க காரணம் "முயலாமை"(தெனாவெட்டு).தலைக்கணம். ஒற்றுமையை அனைவரும் பேணி அல்லாஹ் சொன்ன வழியில் நடப்போம். ஆமீன்.
எம்.ஹெச்.அவர்களே சும்மாத்தான் கதை சொல்லவந்தேன் ஊர்வம்புல மாட்டிவிட்டுராதிய
முயலாமை எனும் வார்த்தையே ஆமையிடம் முயல் தோற்றதால் உருவானதுதான் மிஸ்டர் கிரவ்ன்
அண்ணன் தம்பி உறவை மிக
அழகாக விளக்கிய மு.செ.மு .சபீருக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
எனக்கும் இப்படி ஒரு காக்கா
இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ..
Assalamu alaikkum.
Dear Br. Sabeer,
There is no such "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்" எனும் அல்லாஹ்வின் திருவாக்கினை word in the Book of Allah.
Br. M.H. Jahabar Sadiq,
There is no such "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்" எனும் நாயகம்(ஸல்) அவர்களின் திருவாக்கினை word of Prophet (Sal).
Sorry for English typing as I have limited access to the internet and suffering from power cut almost working hours of browsing Centres.
அதிரை சித்தீக். காக்கா கதை வேனும்னா இருக்கு சொல்லவா நான் உனக்கு காகாவாகமுடியாது காரனம் உன்னை விட வயதி நான் குறைந்தவன்
ஜமீல் காக்கா
و عليكم السلام
//Br. M.H. Jahabar Sadiq,
There is no such "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்" எனும் நாயகம்(ஸல்) அவர்களின் திருவாக்கினை word of Prophet (Sal).//
திருத்திக் கொள்கிறேன்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
"ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள்" எனும் அல்லாஹ்வின் திருவாக்கினை நாமெல்லாம் பின்பற்றி நடப்போமாக!
சபீர் காக்கா (ஜனாப்+ஊர்)
// எம்.ஹெச்.சும்மாத்தான் கதை சொல்லவந்தேன் ஊர்வம்புல மாட்டிவிட்டுராதிய//
ஏற்கெனவே பேரு ஊரு எல்லாம் ரிப்பேரு செய்யப்பட்டிருக்கு, அதுக்கு சீக்கினம் உங்க பதிலெ சொல்ல வாங்க!
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜமீல் காக்கா சுட்டிக்காட்டியவைகளுக்கு தொடர்புடைய வசனங்கள் இதோ..
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
bold எழுத்தில் உள்ள வாசகமே சரியானது, அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; என்பது நமக்கு தெளிவு பெறுகிறது.
வ அலைக்குமுஸ்ஸலாம் ஜமீல் காக்கா தங்களின் அறிவுரையை ஏற்க்கிறேன்
குர்ஆன் 3:103 - இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில்
வாதிட்டு வருகின்றனர்.இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை.ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.‘அல்லாஹ்வின்கயிற்றை அனை வரும்சேர்ந்து பிடியுங்கள்’ என்று தான் இவ்வசனம் கூறுகிறது.அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
‘குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்’ என்று இவர்கள் நேர்மாறான
விளக்கத்தைத் தருகின்றனர். அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது.அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
நன்றி: http://vadakarai-arangai.blogspot.in/2012/07/rope-of-allah.html
மேல் சொல்லப்பட்ட கருத்தில் மாற்றுக் கருத்திருந்தால் தெரிவிக்கலாம்.
தம்பி தஜுதீன் சாதாரன முயல் ஆமைகதை சொல்லப்போனால் எவ்வலவு நல்ல விசயங்கள் வருகிறது.
நம்மூரில் பாதிபேர் பட்டம் பெராத ஆலிம்கள் தான் போங்க
ஊரில் பெரும்பாலும் போட்டியிட வந்த அ|ணிக்கும், நடுவர்களுக்கும் போட்டி நடந்து வருகிறது.
"மவுத்து, மவுத்து" என்று சொல்லி ஊரில் பெரியவர் முதல் சிறியவர் வரை நிறைய பேர் பெரிய அநியாய, அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம் முன்னப்பின்ன மவுத்தா போயிருந்தால் தானே மவுத்து பற்றிய எக்ஸ்பீரியஸ் இருந்திருக்கும். ஒரு சமயம் அதை எல்லாம் யார் போய் பார்த்தா? கபுருடைய வேதனைகள் இருந்தாலும் இருக்கலாம்? இல்லாட்டியும் இல்லை? என்று மனதிற்குள் அவர்களாகவே தீர்மானித்துக்கொண்டு வெளி வேசம் போட்டு வேடதாரிகளாக ஊரில் பல நாதாரிகள் அலைந்து வருகிறார்கள். (இதில் யார், யாரெல்லாம் அடங்குவர் என்பது அந்த அல்லாஹ்வுக்கே நன்கு விளங்கும்)
சகோதரர்களுக்குள் சொத்துப்பிரச்சினையில் அரிவாள் தூக்கும் மூதேவிகளிடம் போய் ஊர் ஒற்றுமையைப்பற்றி எப்படி பேச முடியும்? அல்லது எதிர்பார்க்க முடியும்? சொல்லுங்க பார்க்கலாம்.
சபீர் காக்காவின் கதை அருமை!
//குடும்பத்தில், தெருவில், ஊரில் வேறுபாடுகள் இல்லாமல் வெற்றி / தோல்வி இரண்டினையும் சமமாக பாவித்து சுபிச்சமாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்…//
"நச்"
சபீர் காக்கா இப்பதான் உங்க ஆக்கத்தை படிக்க நேரம் கிடைத்தது...சிந்தனையும் அருமை..”மெசேஜ்” உம் தெளிவு....தொடர்ந்து இது மாதிரி நற்சிந்தனைகளை அள்ளி தாருங்கள்....
Post a Comment