நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஔரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 2 [வரலாறு பதிக்கப்படுகிறது] 17

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 18, 2013 | , ,

உயிரைக் குடிக்கும் உயர்சாதிப் பொய்யைப்
பயிராய் விளையப் படிக்கின்ற பாடம்
திரித்து வழங்கும் திருட்டைத்தான் இங்கே
உரித்து விளக்கும் உரை

எல்லையைத் தாண்டிக் கணவாய் வழியில் இடம்பிடித்தோர்த்
தொல்லையைத் தந்துப் பழங்குடி மக்கட் தொலையவேண்டி
சொல்லொணாச் சாத்திரச் சட்டம்  கொடுத்த துயரினால்தான்
இல்லையே சாதிகள் என்பதால் இஸ்லாம் இனித்ததுவே!

ஆரியர் வருகை என்று
....ஆணவம் மிக்கோர்க் கூற்று
நேரிய வழியைக் காட்டி
....நெஞ்சினில் நீதி சொல்ல
வாரியே அணைத்து மார்க்கம்
...வழங்கிய நன்மை ஏற்றால்
போரினால் வென்று மாற்றிப்
...போட்டனர் என்ற பொய்யே!

பிஞ்சு நெஞ்சில் நஞ்சினை விதைத்துக்
கொஞ்சிப் பேசும் வாஞ்சை நட்பினில்
பிளவைக் கூட்டிப் பிள்ளைகள் கொலைசெயும்
களத்தை நாடக் கண்ட வித்தை
பாரினில் பலருமே படையால் வந்தவர்
ஊரினில் இளைத்தவன் உண்மை சொல்லும்
முஸ்லிம் என்பதால் முடிவில்
இஸ்லாம் என்றதும் இழிவாய்ப் போனதே!

”கவியன்பன்” கலாம்

17 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

ஆரியர் வருகை என்று
....ஆணவம் மிக்கோர்க் கூற்று
நேரிய வழியைக் காட்டி
....நெஞ்சினில் நீதி சொல்ல
வாரியே அணைத்து மார்க்கம்
...வழங்கிய நன்மை ஏற்றால்
போரினால் வென்று மாற்றிப்
...போட்டனர் என்ற பொய்யே!//

சரித்திர கோல்மால்களின்மீதான ஞாயமான கோபத்தை அப்படியே பிரதிபலிக்கும் வரிகள்.

உமருப்புலவரை நினைவு படுத்துகிறது செய்யுள்.

அருமை கவியன்பன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

Masha Allah, nice poem created by bro. Kaviyanban Kalam Kaka, for the hidden truth of our Indian History. In the Indian past era, whoever lived & ruled in simple way with uprightness for the real welfare of the nation as well as the sake of Almighty Allah (the god) those all are hidden intentionally and their biography had been annihilated by the cruel & racist ruler of India.

Abdul Khadir Khadir சொன்னது…

//எல்லையைத் தாண்டிக் கணவாய் வழியில் இடம்பிடித்தோர்த்
தொல்லையைத் தந்துப் பழங்குடி மக்கட் தொலையவேண்டி
சொல்லொணாச் சாத்திரச் சட்டம் கொடுத்த துயரினால்தான்
இல்லையே சாதிகள் என்பதால் இஸ்லாம் இனித்ததுவே!//கைபர் போலன் கணவாய் வழியாக ஊடுருவிய ஆரியாக்கூட்டம் ,
காலம் காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை
சாதிக்கொடுமைகளை சொல்லி சாதித்து விடலாம் என்றெண்ணிய கயவர்களுக்கு

சாதிகள் இல்லாத இனிய மார்க்கம் என்பதால், இது இதை தழுவியோர்க்கு
இம்மார்க்கம் இனித்தது என்ற உண்மைகள் கவியில் மின்னுகின்றது.

அபு ஆசிப்மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

if every one rules or follows such like the great moghal emperor Aurangajeeb, then there will be 0 balance in Swiss bank account from whole Indian nation. Also we can't weep & nominate the millionaire of the cricket to the nation's high reward Bharath Rathna.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

As indian, we suspect that in order to pull into the party as a full time politician & reap the maximum amount of cricket lovers' vote in the upcoming parliament election our Govt. might have done it. Who knows?

Yasir சொன்னது…

மாஷா அல்லாஹ் துடிப்புள்ள உண்மையைச் சொல்லும் கவிதை கவித்தீபம் கலாம் அவர்களே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

மன்னரின் உண்மை நிகழ்வை அன்சாரியாக்கா மலராய் பூத்திடச் செய்ததை மாலையாய் வடித்தமை அருமை.

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

//உயிரை குடிக்கும் உயர் சாதி பொய்//

உயர் சாதி பொய்களுக்கே விலை கூடுதலாக இருக்கிறது!.

வாங்குவோர் கூட்டமும் முண்டியடித்து வரிசை பிடித்து நிற்கிறது!.

சரித்திர கவிதை! சபாஷ் கவியன்பரே!

S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

Ebrahim Ansari சொன்னது…

கட்டுரைச் செய்திகளைவைத்து கவி புனைந்த என் மண்ணின் கவியன்பரே! உள்ளமெல்லாம் மகிழ்கிறது உமது கருத்தாழம் மிக்க கவிதை கண்டு.
இலக்கண நெறியோடு எமக்காக யாத்தளித்த உம்மை உளமாரப் பாராட்டி மகிழ்கிறோம்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

அன்பின் கவிவேந்தரே! உங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

உமறுப்புலவர் மற்றும் செய்குத்தம்பிப் பாவலர் ஆகியோரின் பெயரனாக தமிழிலக்கியத்தில் மிளிர வேண்டும் என்ற என் அவாவிற்கு உங்களின் துஆ பிரதிபலன் தரும் என்றே நம்புகிறேன்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

Thanks you lot Brother MSM Naina . Jazaakkallah khairan. We have received updated political news from you.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

இனிய குரலோனே என் இனிய நண்ப, அப்துல் காதிர்! உங்களின் அன்பான வாழ்த்துக்கும் அழகிய ஆய்வுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்- ஜஸாக்கல்லாஹ் கைரன்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

அன்புச் சகோதரர் யாசிர்! துடிப்புள்ள விடயங்களும் வரலாற்று உண்மைகளும் உங்களின் மாமா - எங்களின் இ.அ. காக்கா அவர்களுடையதாகும். அதனை வடிவம் மாற்றி இப்பொழுதுக் கவிதையாக வனைந்தனன். உங்களின் வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ்கைரன்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

இலண்டன் இளங்கவியே மு.செ.மு. ஜாஃபர் ஸாதிக்! உங்களின் கவித்துவமான கோர்வையில் சொல்லப்பட்ட இந்தக் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய எங்களின் மூத்த சகோதரர் எஸ்.எம்.எஃப் காக்கா அவர்களின் பாராட்டும் வாழ்த்தும் என் கவிதைக் குழந்தைக்குக் கிட்டிய ஆதரவு முத்தம்; தங்களின் அன்பில் நனையும் என் உள்ளம் நித்தம்!

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

என் கவிதைக் குழந்தைக்குக் கரு வழங்கிய மூத்தவர்- வரலாற்று ஆயவாளர் அவர்களின் பாராட்டால் இன்னும் இதுபோன்ற தொடர் மாலைகள் இன்ஷா அல்லாஹ் என்னால் யாத்திட இயலும் என்ற நம்பிக்கை ஊட்டப்படுகின்றது. , தங்களின் அணுக்கத் தோழர் - என் தமிழ்பேராசிரியர் அவர்களின் பார்வைக்குள் என் பாக்கள் சென்றனவா?

Ebrahim Ansari சொன்னது…

//தங்களின் அணுக்கத் தோழர் - என் தமிழ்பேராசிரியர் அவர்களின் பார்வைக்குள் என் பாக்கள் சென்றனவா?//

சில செல்கின்றன. பல சொல்லப் படுகின்றன.

உங்களையும் உங்களின் ஆற்றலையும் அவர் என்னிடம் பலமுறை வியந்து பாராட்டி சொன்னதுண்டு.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு