வர்ணச் சிக்கலை
வாழ்க்கையாகச் செதுக்கியுள்ளார்
வரை கவிஞர்
தொப்பூழ்க் கொடிச் சிக்கலைத்
தொட்டவிழ்க்காமல்
நெகிழ்த்தி
வெளியே வந்து
வாழ்க்கைச் சிக்கலில்
வீழ்கிறது குழந்தை
பெற்றோரைப் புரிந்து
புன்னகைக்கும் குழந்தை
உறவுச் சிக்கல்களில்
வீழ்ந்து மீள்கிறது
கல்வியில் சிக்கி
கரைகண்ட பின்னர்
கடைவிழியர் வலையில்
சிக்கிக் கொள்கிறது
வளைவு நெளிவுகளில்
கவனமற்றுப் போவதால்
சிக்கலாகிப் போகிறது
வாழ்க்கைப் பயணம்
துவங்கிய இடத்திற்கும்
திரும்ப முடியாமல்
தொடர்ந்து இலக்கைத்
தேடவும் இயலாமல்
சிக்கிச் சின்னாபின்னமாகி
சிதைகிறது பயணம்
இந்த
வர்ணச் சிக்கல்களுக்குள்
எத்துணை
எல்லைக் கோடுகளோ
காசாக்கும் கையெழுத்துகளோ
ஈஸீஜி தடுமாற்றங்களோ
தூக்குக் கயிறுகளோ
தேய்ந்த துடப்பங்களோ
நெடுஞ் சாலைகளோ
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களோ
எத்துணை
நதிநீர் இணைப்புத் திட்டங்களோ
ராமர் பாலங்களோ
எத்துணை
அம்சங்களின் அடிக்கோடுகளோ
வம்சங்களின் வக்கிரங்களோ
பச்சை வயற்காட்டை வறளடடித்து
மஞ்சள் மனைக்கட்டுகளோ
நீலவானின் அமைதி குலைத்த
சிவப்பு வன்முறைகளோ
இந்த
வர்ண வழிக் கோடுகளுக்கிடையேதான்
மறைந்திருக்கிறது
வெற்றி வெள்ளைக் கோடுகளும்
சிக்கலெடுத்து
அவற்றைப் பற்றிப் பிடிப்பவர்
மீள்வர்
வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!
வாழ்க்கையாகச் செதுக்கியுள்ளார்
வரை கவிஞர்
தொப்பூழ்க் கொடிச் சிக்கலைத்
தொட்டவிழ்க்காமல்
நெகிழ்த்தி
வெளியே வந்து
வாழ்க்கைச் சிக்கலில்
வீழ்கிறது குழந்தை
பெற்றோரைப் புரிந்து
புன்னகைக்கும் குழந்தை
உறவுச் சிக்கல்களில்
வீழ்ந்து மீள்கிறது
கல்வியில் சிக்கி
கரைகண்ட பின்னர்
கடைவிழியர் வலையில்
சிக்கிக் கொள்கிறது
வளைவு நெளிவுகளில்
கவனமற்றுப் போவதால்
சிக்கலாகிப் போகிறது
வாழ்க்கைப் பயணம்
துவங்கிய இடத்திற்கும்
திரும்ப முடியாமல்
தொடர்ந்து இலக்கைத்
தேடவும் இயலாமல்
சிக்கிச் சின்னாபின்னமாகி
சிதைகிறது பயணம்
இந்த
வர்ணச் சிக்கல்களுக்குள்
எத்துணை
எல்லைக் கோடுகளோ
காசாக்கும் கையெழுத்துகளோ
ஈஸீஜி தடுமாற்றங்களோ
தூக்குக் கயிறுகளோ
தேய்ந்த துடப்பங்களோ
நெடுஞ் சாலைகளோ
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களோ
எத்துணை
நதிநீர் இணைப்புத் திட்டங்களோ
ராமர் பாலங்களோ
எத்துணை
அம்சங்களின் அடிக்கோடுகளோ
வம்சங்களின் வக்கிரங்களோ
பச்சை வயற்காட்டை வறளடடித்து
மஞ்சள் மனைக்கட்டுகளோ
நீலவானின் அமைதி குலைத்த
சிவப்பு வன்முறைகளோ
இந்த
வர்ண வழிக் கோடுகளுக்கிடையேதான்
மறைந்திருக்கிறது
வெற்றி வெள்ளைக் கோடுகளும்
சிக்கலெடுத்து
அவற்றைப் பற்றிப் பிடிப்பவர்
மீள்வர்
வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!
வரைந்தது: நூருத்தீன்
எழுதியது: சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
எழுதியது: சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
7 Responses So Far:
வரைவுக்கும் வரிகளுக்கும்
ஏகப்பொருத்தம்
வானவில் கலர்களுக்கு
உன் கவிகளில் அருமையான அர்த்தம்
மீள்வர் வீழ்வர் முடிவுரையில்
மின்னுது உன் அலங்கார கவிமொழியில்
வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!
.
சிக்கிச் சிதைவர் !
சிக்கலும் கவிதைச் சிற்பியிடம் சிக்கினால் மேற்கண்டவைதான் நடக்கும் ! :)
90000கோடிகடனில் சிக்கிய மல்லையா சிக்கல் இல்லாமல் தப்பிவிட்டார்
அட!
தொண்டையில் சிலநேரம் விக்கல்
தொடரும் வாழ்க்கை முழுவதும் தீராது
விடைகாணா வினாவாய்ச் சிக்கல்!
சிக்கிக் கொண்டோம் கவியில்
சிந்தனையைத் தட்டி எழுப்பும் உன்றன்
சிக்கலில் லாத நடையில்
மெய்சா, அபு இபு, ஃபாருக் மாமா, நூர் பாய், கவியன்பன்:
வாசிப்பில் கலந்து கொண்டமைக்கு நன்றி.
வஸ்ஸலாம்.
//வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!//
நான் இந்தக் கோணத்தில்தான் இதைப் பார்க்கிறேன்.
உடுமலைப் பேட்டை சங்கர் முதல் கோகுல்ராஜ் வரை " வர்ண"த்தால் தான் வாழ்வை இழந்தனர்.
மனுநீதியை இந்தியாவின் அரசியல் சட்டமாக ஆக்கவேண்டுமென்றவர்களின் அடிபணிந்தவர்கள்தான் இன்றைய ஆட்சிக் கட்டிலில். அதனால்தான் நாடெங்கும் சிக்கல்.
Post a Comment