சவூதி வாழ் வெளிநாட்டினர் நம்மூருலே கைது வாரண்ட் மாதிரி வீடு புகுந்தோ, ரோட்டில் வைத்தோ புடிச்சி தத்தமது நாடுகளுக்கு அனுப்பிடுறாங்க என்று செய்திகள் படித்தும் கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
சவூதியர்கள் (குடிமக்கள்) தத்தமது தேவைகளுக்காகவும் வருமானத்துக்காகவும் சம்பாதிப்பதற்கு எளிய வழியாக ஒரு சிறு கம்பெனிபோல் உருவாக்கி, அதற்கு சரியான முறையில் டிரேட் லைசென்ஸ் பெற்று அந்த கம்பெனி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் குறைந்தது 10 வெளிநாட்டினர் தேவைப்படுகிறார்கள் என்று மனு தாக்கல் செய்து குறைந்தது 10 விசா பெற்றுவிடுகிறார்கள். அரசாங்கத்தை பொறுத்தவரையில் அந்த கம்பெனி நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது, ஆனால் உண்மையாகவே அது மூடப்பட்டுள்ளது. இப்படியாக வாங்கப்பட்ட விசாக்கள் வெளிநாட்டினரிடம் 6,000 ரியால் முதல் 10,000 ரியால் (80,000 ரூபாய் முதல் 140,000 ரூபாய் வரை) வரையில் விற்றுவிட்டு தன் சிறிய முதளீடில் உருவாக்கப்பட்ட அந்த கம்பெனியை இழுத்து மூடிவிடுகிறார்கள்.
இது மாதிரி வாங்கப்பட்ட/விற்கப்பட்ட விசாக்கள்தான் ஃபீரீ விசா, சொந்த விசா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த விசாவில் வந்தவர்கள் அந்த விசாவை விற்ற முதலாளியின் கன்ட்ரோலில் இருக்கவேண்டும். அவருக்கு மாதம் குறிப்பிட்ட அளவு ரியால் கப்பம் கட்டவேண்டும். அதுமட்டுமில்லாமல் விசா காலாவதியான (Expire) பின் அதை புதுப்பிக்க இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை அந்த ஸ்பான்சரின் கையொப்பம் அவசியம், அப்பொழுதும் ஒரு குறிபிட்ட பணம் கப்பமாக (மாதா மாதம் செலுத்தியது போக) செலுத்தி அந்த விசாக்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு புதுப்பித்துக் கொள்ளலாம்.
இப்படியாக பெறப்பட்ட விசாக்களை, இது நமக்கு அந்த நாட்டிற்கு ஒரு Entry யாக நினைத்துக்கொண்டு தான் வேலை செய்யும் கம்பெனிகளின் விதிமுறைகளுக்குட்பட்டு அந்த கம்பெனிகளின் ஸ்பான்சரில் மாறிக்கொண்டால் இன்றைய பிரச்சினைகளிலிருந்து நிம்மதிபெறலாம். நம் ஆட்கள் அப்படி மாறுவதில்லை, காரணம்
- பிடித்த கம்பெனிகளில் தேவையானப்போது மாறிக்கொள்ளலாம்.
- தற்போது வேலை செய்யும் கம்பெனிகளின் சட்ட திட்ட விதிமுறைக்குட்பட்டும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால் அன்றைய தினமே வேலையிலிருந்து வெளியேறி வேறு வேலை தேடிச்செல்லலாம். அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்தால் கேன்சல் செய்து நாட்டுக்கு மட்டுமே திருப்பி அனுப்பபடுவர்
- ஊருக்கு போனால் 6 மாத காலம் வரை தங்கலாம், 6 மாதம் கடந்துவிட்டால் விதிமுறைப்படி அந்த விசா காலாவதியாகிவிடும். தான் வேலை செய்யும் கம்பெனி ஸ்பான்சரில் இருந்தால் அவர்கள் தரும் நாட்களுக்குள் விடுமுறையிலிருந்து திரும்ப வேண்டும்.
- வெளிநாட்டினர் வேலை செய்பவர் முக்கியமாக அந்தந்த கம்பெனி தந்த விசாவில் மட்டுமே இருக்கவேண்டும்.
- தான் வேலை செய்யும் கம்பெனிக்கும், விசா ஸ்பான்சருக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தால் உடனே நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்
சரி, இப்படியான கடுமையான சட்டத்தால் இதுவரை சம்பாதித்து வந்த சவூதியர்களின் கதி?, இப்படி காலம் காலமாக உழைக்காமல் உண்டு வாழ்ந்த உடம்பல்லவா, உடனே போர்க்கொடி தூக்கி விட்டார்கள். எமது வருமானத்தை சவூதி அரசு கொச்சைப் படுத்துகிறார்கள், தடை போட்டு விட்டார்கள், அய்யகோ இனி எமது வாழ்வு கேள்விக்குரியாகி விட்டது.
உடனே இந்த கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தன் நாட்டு மக்களுக்கு உழைக்க கற்றுக்கொடுக்க வேண்டும், உழைப்பின் வலியை உணரவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தை? கையிலெடுத்தது. ஆக மொத்தம் 12.2% சவூதியர் வேலையில்லாமல் வெட்டியாக இவ்வாரெல்லாம் அடுத்த நாட்டினரின் வியர்வை காசில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டு அதன்படி குறைந்தது 7 பேர் வேலை செய்யும் கம்பெனிகளின் ஒரு சவூதியருக்கு வேலைக்கொடுக்க வேண்டும் என்ற அதிரடி அடாவடி திட்டத்தை கொண்டுவந்தது. எல்லோருக்கும் தெரிந்த மிக தெளிவான ஒரு விசயம் சவூதியர்கள் வேலை என்றால் என்ன விலை? என்று கேட்பார்கள். மேலும் சிறு தொழில் கம்பெனிகளின் ஒட்டுமொத்த வருவாயின் பாதியை அந்த ஒருத்தருக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும்...
இதனால் சிறு வணிகர்கள் முதல் சிறு நடுத்தர வணிகள் வரை பாதிக்கப்படுவர். இப்போதைக்கு 3 மாத காலம் அவகாசம் நீட்டித்துள்ளது அரசு. இந்த 90 நாட்களின் இத்திட்டம் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு பழைய நிலையே திரும்பி வரலாம், யார் அறிவர் நம் உயிர் யார் கையிலிருக்கிறதோ அவனையன்றி?
குறிப்பு: இத்தகவல்கள் முழுதும் கேள்விப்பட்டதும், செய்திகளில் கண்டதும், படித்தும் மட்டுமே பகிரந்தளிக்கப்பட்டுள்ளது, மேலும் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
அப்துல் மாலிக்
துபாய்
23 Responses So Far:
துபாய்லே இருந்துக்கிட்டு சவுதியெப்பத்தி இவ்ளோவ் மேட்டரு எப்புடி மாலிக்கு? ஏழுக்கு ஒன்னு சவுதியை வைத்தால் அந்த ஒன்னுக்கு ஏழு எடுபிடிகளை வைத்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் எல்லா நிறுவனங்களும் அன்று முதல் இன்று வரை இருந்து வருவது என்னவ்வோ உண்மையே. அலுவலகங்களில் வேலை பார்க்கும் இவர்களின் வாரக்காலண்டரில் வெறும் 4 1/2 நாட்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன.
400 அல்லது 500 ரியால் மாத சம்பளத்திற்கு "பலதிய்யா" எனப்படும் ரோடு கூட்டும் வேலைக்கு 10,000த்திற்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்திற்கு கூட இவர்கள் வேலைக்கு வர தயாரா? என தெரியவில்லை.
சவுதி அரசின் இந்த அதிரடி உத்தரவால் நாடு ஓரளவுக்கு ஒழுங்கு படுத்தப்பட்டாலும் நாட்டுக்குடிமக்களின் வேலையில்லாத்திண்டாட்டம் நாளாக, நாளாக அதிகரித்துக்கொண்டே சென்று மற்ற அரபு நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டு நாட்டு அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டு புது ஆட்சிகள் மலர காரணமாகி விடக்கூடாது என்பதில் அரசுக்கு அதிகம் அக்கறை இருப்பதாகவே தெரிகிறது.
அந்தந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் வீட்டில் சோம்பேறியாய் சும்மா இருந்து கொண்டு "வேளாவேளைக்கு அமூர் பொறிச்ச மீனும், KFC கோழி வறுவலும், பிட்ஜாவும், பர்கரும் பார்சலில் அரசு ஏற்பாட்டில் வந்தாக வேண்டும்" என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு சோம்பல் முறித்து சுறுசுறுப்பு கொடுக்கும் இந்த சட்டங்களெல்லாம் எந்தளவுக்கு கைக்கொடுக்கும் என்பது படெச்சவனுக்கே வெளிச்சம்.............
எங்களை போன்ற அப்பாவிகள் வாழும் இந்த நாட்டை பற்றி(சவூதி) எழுதியதற்கு நன்றி.. இந்த பதிவில் சில சட்டதிட்டங்களும், நடைமுறைகளும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கின்றது..அதை பற்றி விரிவாக பதிவு எழுத உள்ளேன்..இன்ஷா அல்லாஹ்
எது எப்படியோ, தற்போதிற்கு ஊருக்கு நாங்கள் ஊதும் சங்கு "தயவு செய்து ஃப்ரீ/ஆசாத் விசாவில் இப்போதிற்கு சவூதி வந்துடாதீர்கள்....... அது தற்கொலைக்கு சமம்..(மன்னிக்கவும்..இதைவிட சிறந்த வார்த்தை எங்களுக்கு தெரியவில்லை)
Assalamu Alaikkum
Thanks a lot brother Abdul Malik to share such information.
There is nothing wrong in stopping haram.
Its better for our brothers to be legally working and becoming eligible to get all the benefits of real companies, than having manipulated visas(of fake companies) to work and internally assisting in making money haram money by Saudi brothers.
False will fall, Truth will prevail always.
We have to trust and have faith in Almighty Allah is the provider of rizk.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
http://www.dubaibuyer.blogspot.com
ஓமானில் அராபியர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாய சட்டத்தால் அவர்களை வேலைக்கு வைத்து அவர்களுடன் பதினைந்து வருஷம் மாரடித்த கம்பெனியில் மனித வள மேம்பாட்டுத்துறையில் வேலை பார்த்த போது பட்ட அனுபவங்களை எண்ணிப் பார்த்தால் மிகவும் கசப்பாக இருக்கும்.
ஓமான் நாட்டின் சட்டப் படி சில வேலைகளுக்கு உள்நாட்டினரை மட்டுமே பணியில் அமர்த்த முடியும். இவற்றில் மிகவும் ஜீவாதாரமான வேலை ஓட்டுனர் வேலை. விடிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் சைட் வேலைக்குப் போகவேண்டிய ஒர்க்கர்ஸ் சேப்டி ஷூ மற்றும் ஹெல்மெட் அணிந்து கைகளில் காலை உணவை பார்சல் செய்து எடுத்துக் கொண்டு அவரவர் சைட்டுக்குரிய பேருந்துகள் நிற்கும் இடங்களில் வரிசையாக நின்று கொண்டு இருப்பார்கள். ஓட்டுனர் ஓமானி வரமாட்டார். ஆனால் அவரிடமிருந்து ஒரு அலைபேசி வரும் வல்லாஹி இல்யோம் சிக்கு மரித் . அனா ரூஹ் முசஸ்தஸ்பா என்பார். ( குழந்தைக்கு நலமில்லை மருத்துவமனை எடுத்துப் போகிறேன் ) என்ன செய்வது? இந்தியர் உட்பட வேறு எந்த நாட்டினரும் பஸ் எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் பாஸ்போர்ட் மற்றும் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். சிறையில் வைக்கப்பட்டு நாட்டுக்கு அனுப்பப் படுவார். என்ன செய்ய முடியும்.
அந்த நாட்டைச்சேர்ந்த லேபர்கள் சில பேர் ஹெவி லைசென்ஸ் வைத்து இருப்பார்கள். அவர்கள் ச்சும்மா கார்டு அடிப்பதர்காகவே சைட்டுகளுக்கு வருவார்கள். கார்டு அடித்துவிட்டு எங்கே போய் உறங்குவார்கள் என்று தெரியாது. அவர்களில் ஒருவரைப் பிடித்து இரண்டு நாள் அவருக்காக பிரசன்ட் போடுவதாக சொல்லி பஸ் எடுக்க வைப்பதே வழி. இல்லாவிட்டால் எண்பது வேலையாட்கள் சைட்டுக்குப் போக முடியாமல் நிற்க அல்லது தாமதிக்க நேரிடும். வேலை பாதிக்கும்.
வியாழக்கிழமை மாலை அவர்கள் கண்டிப்பாக அவரவர் கிராமங்களுக்குப் போயாக வேண்டும். வெள்ளிக் கிழமைகளில் ஓவர் டயம் பார்க்கக மாட்டார்கள். வெள்ளிக் கிழமை அவசரங்களுக்கு - முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளுக்கு வேலையாட்களை கொண்டுபோக முடியாது. அப்படி ஆல்டர்நேடிவ் ஷெட்யூல் போட்டால் அனுசரிக்க மாட்டார்கள். எம் டி இடம் புகார் செய்தால் My Dear This is your job - you should manage என்று அவர் பெண் தோழியுடன் பேசும் பின்னணியுடன் சொல்லிவிடுவார்.
லேபர் மினிஸ்ட்ரி யில் இருந்து சிலர் கடிதம் வாங்கிக் கொண்டு வருவார்கள். அவர்களை ஒரு குறிப்பிட்ட வேலையில் உதாரணமாக ஆபீஸ் பாய் வேலையில் அமர்த்த வேண்டுமென்ற கட்டளையே அந்தக் கடிதம். ஆபீஸ் பாய் வேலைக்கு வருபவருக்கு நாம் மேஜை நாற்காலி கொடுக்க வேண்டும். ஒரு பைல் எடுத்துக் கேட்டால் படித்து எடுக்கத் தெரியாது. தேநீர் போட கவுரவம் இடம் கொடுக்காது. குருடியை தண்ணீர் எடுக்க அனுப்பி எட்டு பேர் துணைக்குப் போன கதைதான். இப்படிப் பல.
ஆனால் ஒன்று அரபுகள் வேலையில் அமர்வது ஊதியத்துக்காக மட்டுமே. அதாவது எம்ப்லோய்மென்ட் என்பது அவர்களுக்கு சம்பளம். அந்த சம்பளத்துக்கு வேலை என்ற ஒன்றை செய்ய வேண்டுமென்பது அவர்களின் உணர்வில் இல்லாத ஒன்று . சொகுசான வேலைகள் - வங்கி வேலைகள்- ஆகியன சரியாக செய்வார்கள். உடல் உழைப்பு என்பது ஊஹும் ..தபான் ( களைப்பு) தான்.
நெடுந்தொடராக எழுதவேண்டிய செய்திகள்.
இந்த அனுபவங்களை சவூதி இப்போது அனுபவிக்கத்தயாராகிறதா? கஷ்டம்தான்.
MY DEAR FRIEND, IF YOU CAN DO THIS WORK YOU MAY DO
IF YOU CANNOT DO THIS WORK HOW I CAN DO ? என்பதே அரபிய வேலையாட்களின் வாதம்.
சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
"விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்"
(08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள்
பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்
தயவு செய்து யாரும் சவூதீக்கு முயற்ச்சி செய்ய வேண்டாம்.
2020 க்குள் ஒட்டு மொத்த வெளிநாட்டவர்களும் சவூதியை விட்டு துடைக்கப்படுவார்கள்.
பர்மா மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுப்பதோடு அல்லாமல் அவர்களுக்கு இக்காமா எக்ஸ்பெர்டு கிடையாது.அன்லிமிட்டெடு வேலிடிட்டி இந்த விஷயத்தில் சவுதியை பாராட்ட வேண்டும்.
மற்ற வெளி நாட்டு மக்களை துடைக்கும் விதமாக சட்டங்களையும் அதை மீறுவோருக்குரிய தண்டனைகளியும்,அபராதங்களையும்.சவூதி அரசாங்கம் விதித்துள்ளது
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால், முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால், தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ, பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ரா/ஹஜ் விசாவில் வருபவர்கள், அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன், சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும், உம்ரா/ஹஜ் விசாவில் வந்தவர்கள், மக்கா, ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும், யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் "வெளிநாட்டவராக" (இக்காமா வைத்திருப்பவர் - Expatriate) இருந்தால், அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா / விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல், இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது, விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ்/உம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது, அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்,
மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும், சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ, அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் / நிறுவனத்திற்கு வேலை செய்யாமல், பிற கஃபீல்/நிறுவனம்/சொந்த தொழில் செய்வது - பணி புரிவது குற்றம். மேலும், தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி, தற்போது பணிபுரியும் நிறுவத்தில் "கஃபாலத் - ஸ்பான்ஸர்ஷிப்" மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
தொடரும்......
முன் பக்க தொடர்ச்சி
11. தொழிலாளியின் கஃபீல் / நிறுவனத்தில் வேலை செய்யாமல், தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு, தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும், அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை - SR 5000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 50000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும், சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ, இக்காமா காலாவதி ஆனவர்களையோ, விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
மீறினால்: முதல் முறை - SR 10000 அபராதம் & ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - SR 20000 அபராதம் & மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - SR 30000 அபராதம் & ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும், இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்,
மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்...
ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால், கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி, எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில், அவருடைய கஃபீல்/நிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்
இது வெளியான சவூதி அரசாங்கத்தின் வெப்சைட் அட்ரஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இணையதளம்: www.moi.gov.sa/auth/portal/passports/home
//துபாய்லே இருந்துக்கிட்டு சவுதியெப்பத்தி இவ்ளோவ் மேட்டரு எப்புடி மாலிக்கு?//
MSM தெரியாதா? அவரு 1980 - 90களில் சிஹாத் ஹசன மன்சூர் கம்பெனியில் கொட்டை போட்டவரு. அந்த அனுபவமும் தற்போதையைத் தகவல் தொடர்புகளும் போதாதா?
என்ன இது !?
முதல், இரண்டு மூன்று பரிசு அறிவிப்பது போன்ற அபராதப் பட்டியல் ! நீளுகிறது...
இங்கே நாங்கதான் கப்பம் கட்டுகிறோம்னு நெனச்சுகிட்டு இருந்தோம் அங்கேயுமா இப்புடி !!?
இருந்தாலும் இங்கே (இந்நாட்டு மன்னர்கள்) லோக்கல்ஸ் (அரசு அலுவலகங்களில்) ரொம்பவே டிசண்ட்... நிறைய மாற்றங்கள்...!
சில அரபி அடிமைகளின் அடாவடிதான் பொறுக்க முடியாது பல சந்தர்ப்பங்களில்...
சவுதியில் வேலை செய்துவிட்டு இங்கு வந்த நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வது... அங்கே 700 ரியால் வாங்குறவனும் இங்கே 7000 திர்ஹம் வாங்குறவனும் சமம்... வித்தியாசம் அங்கே நிம்மதி இங்கே அதற்கு விலைக் கொடுக்கனும்... !
//அவரு 1980 - 90களில் //
மாமா, இவர் (சமது சார் மகன்) அந்த காலகட்டத்தில் ஊரில் படித்துக் கொண்டிருந்தார்...
ஒமானில் முனைவர் இ.அ.காக்கா அவர்கட்கு ஏற்பட்ட அனுபவங்கள் போல் எனக்கு சவூதியில் அந்நாட்டு ஊழியர்pro (மந்தூப்)இடம் பட்ட அனுபவங்கள்/ அவரின் சோம்பேறித் தனத்தால் பணிகள் முடக்கம்/ குறிப்பிட்ட காலத்தில் விசா, கேட்பாஸ் , ட்ராவெல் பெர்மிட் போன்றவைகள் கிடைக்காமல் எங்கள் பணிகள் தாமதமாக்கப்பட்ட எல்லா நினைவுகளும் மீள்பதிவாகின்றன என் மூளைக்கு:ள்!
உண்மையில் “புரட்சி”க்கு அஞ்சியே இந்த புரட்சி! ஒருமுறை அந்நாட்டு “சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்” கூட்டத்தில் 100 சதவீத வணிகர்கள் இத்திட்டத்தை ஏற்காமல் மிகவும் உறுதியாகச் சொன்னார்கள், “ உள்நாட்டுக் காரர்கட்கு 4000 ரியால் கொடுத்து நாங்கள் பெறும் வேலைகளை வெறும் 800 ரியாலுக்குள் எங்களால் அயல்நாட்டவர்களிடம் அதுவும் குறிப்பாக இந்தியர்களிடமிருந்து பெற்றுக் கொள்வோம்; இவர்கள் வந்து என்ன செய்வார்கள்; அலுவலகத்தில் உள்ள பாக்ஸ்ஃபைலை தலையணையாக்கிக் குறட்டை விட்டுத் தூங்குவாரக்ள்” என்று முன்னர்த் துணிவாக எதிர்த்திருக்கின்றார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாமலிருக்கும் அரசியலால் அவ்வணிகர்கட்கும் நட்டம்; அயல்நாட்டவர்கட்கும் நட்டம்.
நிறுவனங்கள் புகுந்து, நிறுவனங்களின் குடியிருப்புகளில் புகுந்து, கடைகளுக்கு புகுந்து பிடித்து எக்ஷிட் அடிக்க ஆரம்பித்த ஒரு வார காலத்திலேயே இந்நாடு மண்ணின் மைந்தர்களே ஆள் கிடைக்காமல் ஆடிப்போனார்கள்..
கடந்த ஒரு வருட சட்ட திட்டங்களை இங்கு எழுதினால் இடியாப்ப சிக்கல் மட்டும் உங்களுக்கு தெரியுமே தவிர என்ன சொல்லவருகின்றார்கள் என்று புரிவது கஷ்டம்தான்..
மொத்தத்தில் மூன்று மாதத்திற்குள் அனைவரும் லீகல்(legal - correct nature of job to be mentioned in residential permit, Working for right sponsor) ஆகவேண்டுமாம்..
அதற்கான கதவு திறக்கப்பட்டிருக்கின்றதாக சொல்கின்றார்கள். உண்மையில் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு கூரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.. அதன் வழி ஏரி தப்பிப்பவர்கள் சாமானிய 20-30 சதவிகித மக்களே இருக்க வாய்ப்பு இருக்கின்றது..
நமதூர்வாசிகள் நோன்பிற்கு எத்தனை தலை ஊரை எட்டிப்பார்கப்போகிறதென்று..
//நிறுவனங்கள் புகுந்து, நிறுவனங்களின் குடியிருப்புகளில் புகுந்து, கடைகளுக்கு புகுந்து பிடித்து எக்ஷிட் அடிக்க ஆரம்பித்த ஒரு வார காலத்திலேயே இந்நாடு மண்ணின் மைந்தர்களே ஆள் கிடைக்காமல் ஆடிப்போனார்கள்.. //
நமது ஊர் சகோதரர் ஒருவரை ஒரு மார்க்க அழைப்பு மா நாட்டில் இங்கு வைத்து சந்தித்து பேசும்போது இந்த பேச்சுப்பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன செய்தி '' இந்த நடவடிக்கையால் இந்த அரசிற்கு கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது என்று''
எது எப்படியோ நாளை நடப்பதை அல்லாஹ்வே அறிவான்.
நடப்பது என்ன என்பது பற்றிய நிகழ்வு!
ஹலாலாக அரசாள அந்நாட்டுக்கும், அதனால் நம்மவர்கள் பாதிக்கப்பட்டால் அதை விட சிறப்பான நல்வழியையும் அல்லாஹ் தருவானாக ஆமீன்.
அப்துல் மாலிக்,
எம் எஸ் எம்மோ, மீராஷாவோ, ஹமீதோ எழுத வேண்டிய பதிவை நீங்கள் திறம்படவே தந்து விட்டீர்கள்.
மன்சூரின் புள்ளி விபரங்கள் மிகவும் பயனுள்ளவை.
அப்போ நான் ஜுபைலில் வேலை பார்த்து வந்தேன். இப்படியொரு சவுதிக்காரர்களுக்கு கட்டாய வேலை என்னும் அறிவிப்பின்போது கையில் பச்சை கோப்போடு என்னைக் காண வந்த சவுதி ஒருவர் நான் காரியதரிசி சமர்ப்பித்த காகிகதங்களில் கையொப்பமிடுவதைப் பார்த்துக்கொண்டே, தமது கோப்பை என் மேசையில் போட்டுவிட்டு என்னைப் பார்த்தார்.
அதில் "இவருக்கு வேலை கொடு" என்னும் அரசாணை மட்டுமே இருந்தது.
"என்ன வேலை தொரிஉம்?" என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதிலில் எனக்கு மயக்கம் வராத குறை.
"எனக்குக் கையெழ்ழுத்துப் போடத் தெரியும். அதனால் மேனேஜர் வேலை கொடு"
இப்படி அசாதாரணமான சூழ்நிலையை சாதகமாக்கி சில சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆப்ரிக்க நாட்டைச்சார்ந்தவர்கள் நமது ஊர் நண்பர் ஒருவர் தனியாக அறையில் இருப்பதை அறிந்து உட்புகுந்து அடித்து உதைத்து அவரிடம் இருந்த பவுன, ரியால் டாலர்களை பிடுங்கியதாகவும் அந்த மன உளைச்சலில் அடுத்த மூன்று தினங்களுக்குப் பின் அவர் மரணமடைந்ததாகவும் துயர்ச்செய்தி கேட்டேன் உண்மையா?
வெளிநாடு வாழ் (மலையாளிகள்) இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி சவுதியில் இந்தியர்களுக்கான இந்த அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு இங்கிருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு அமெரிக்கா தற்சமயம் வழங்க உத்தேசித்துள்ள H1B விசாவில் முன்னுரிமை வழங்க இந்திய அரசு மூலம் பரிந்துரைத்தால் ஊர் திரும்பிய நம்மூர்வாசிகள் பெரும்பாலானோரின் து'ஆ பரக்கத்து கிடைக்கும்.....
பதிவிட்டமைக்கு நன்றி
//அவரு 1980 - 90களில் சிஹாத் ஹசன மன்சூர் கம்பெனியில் கொட்டை போட்டவரு//
காக்கா 1990ல் நான் 10ம் வகுப்பு பரிட்சை எழுதியிருந்தேன். எம் எஸ் எம் நெய்னாவும் நானும் 1ம் வகுப்புலேர்ந்து ஒன்னா கொட்டைப்போட்டவங்க...
//துபாய்லே இருந்துக்கிட்டு சவுதியெப்பத்தி இவ்ளோவ் மேட்டரு எப்புடி மாலிக்கு?//
சவுதியில் நடப்பது பற்றி செய்திகள் நாளொரு வண்ணமும், புதுசாவும் வந்துக்கிட்டேயிருந்தது, இது நம்மக்கள் அனைவரும் ஏன் சவூதி வாழ் மக்களே நிறைய பேருக்கு என்ன நடக்குதுனு தெரியாம இருந்துச்சி, அதான் ஒரு அலசல்..
//இந்த பதிவில் சில சட்டதிட்டங்களும், நடைமுறைகளும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கின்றது..அதை பற்றி விரிவாக பதிவு எழுத உள்ளேன்.//
நிறைய எழுதுங்க காக்கா, எதுவுமே தெளிவா தெரிஞ்சிக்கிட்டா இருப்பவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் ஒரு புரிதல் கிடைக்கும்..
சகோ.அப்துல்மாலிக் சொன்னது…
//நிறைய எழுதுங்க காக்கா//
என்னது நான் காக்காவா!?!
என் சாச்சா(MSM.நைனா) உங்களோடு ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்திருக்கின்றார் என்றால் நான் உங்களுக்கு தம்பி ஸ்தானத்திற்கும், மகன் ஸ்தானத்திற்கும் இடைபட்டவனாகவே இருக்க வாய்ப்புண்டு..
// எதுவுமே தெளிவா தெரிஞ்சிக்கிட்டா இருப்பவர்களுக்கும் வர இருப்பவர்களுக்கும் ஒரு புரிதல் கிடைக்கும்..//
வர இருப்பவர்களா?இனி இந்த வார்த்தைக்கே இடம் இல்லை..
(உள்நாட்டிலேயே நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெற்று இங்கு கள் தாராளமாக வரலாம்.. 10ல் ஒருவர் கூட இப்படி வந்து நான் பார்த்ததில்லை.)
Bro. sabeer.abushahruk சொன்னது…
//எம் எஸ் எம்மோ, மீராஷாவோ, ஹமீதோ எழுத வேண்டிய பதிவை நீங்கள் திறம்படவே தந்து விட்டீர்கள்.//
பிரச்சினை என்னவென்றால் இந்த நாட்டு செய்தித்தாள்களில் ஒவ்வொரு வாரத்திற்கும் இரண்டு சட்டம் வருகின்றது.. பழசையும்,புதுசையும் ஒட்டிப்பார்த்தால் ஒத்துப்போகவே மாட்டிருக்கு.. எந்த நினைப்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென்ற குழப்பத்திலேயே எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பதென்ற தெளிவான குழப்பம்தான் எங்களுக்குள்.
நடப்பது என்ன என்பது பற்றிய நிகழ்வு!
ஹலாலாக அரசாள அந்நாட்டுக்கும், அதனால் நம்மவர்கள் பாதிக்கப்பட்டால் அதை விட சிறப்பான நல்வழியையும் அல்லாஹ் தருவானாக ஆமீன்
40,50, வருடமா அரபு நாடுகள் இப்படி ஒரு வாய்ப்பை நமக்கு கொடுத்துக்கொண்டு இருப்பதே பெரிய விசயம். இன்றுவரை முற்றிலுமாக விசாவை நமக்கு தடை விதிக்கவில்லை என்பதும் உண்மை.
காலத்தின் கட்டாயம் அவர்கள் நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கவேண்டிய நிலை இப்போது. இதை எந்தவகைளும் குறை சொல்லமுடியாது. நியாயமான இந்த சட்டத்தை அனைவரும் மதித்து முறைப்படுத்திக்கொண்டு நமது வேலை வாய்ப்பை தக்கவைத்துக்கொல்வதே நல்லது.
குறிப்பா இன்றுவரை இந்தியர்களுக்கு உள்ள ஒரு மரியாதை அரபியர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் உண்மை.( அல்ஹம்தில்லாஹ் )
http://puthumanaikpm.blogspot.com/2012/10/blog-post_6585.html
இந்த வலைத்தளத்துக்கு வரவேற்க்கிறோம்
Post a Comment