நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

J U M M A A - ஓர் அற்புதக் காட்சி‏ 3

Unknown | வெள்ளி, டிசம்பர் 24, 2010 | ,

எமது நினைவுகளை அசை போட்டுப் பார்த்ததில் பாம்பேயில் (மும்பையில் அல்ல) பிரதான வீதிகளில் வெள்ளிக் கிழமை பகல் 11 மணிக்கே பள்ளிக்கருகே தட்டி வைத்து தடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லும்படி கோர ,மக்கள்(மற்ற மதத்தினர் கூட) அச்சா... ஆஜ் ஜும்மா ஹேனா... என புன்முறுவலுடன் வளைந்து சென்றனர்.  ஹைதராபாத் - செகந்தராபாத் - நாக்பூர் - சோலாப்பூர்களில் அரசு அதிகாரிகள் - ஊழியர்கள் - பொதுமக்கள் அனைவரும் "ஈவேள ஷுக்ரவாரன்காதான்ட்டி, சாஹிப்லு தன்னம் பெட்டுக் கொண்டாரு" என உவந்து ஒத்துழைத்தனர். இதெல்லாம் கி.மு./ கி.பி. வில் அல்ல! சற்றே இருபது வருடங்களுக்கு முன்னர். நம் பாரதத் தேசத்தில் நடந்தவை. இப்போது எல்லாம் நேர் மாற்றம். எங்கே போனது அந்த சகிப்பு த்தன்மை?எப்படி ஒளிந்தது ஒத்துழைக்கும் உன்னத உணர்வு? எங்கே தாவியது அந்த விசாலம்? எவர் தூவியது இந்த விஷ(ம)ம்?

இந்த பதிவு உங்கள் பார்வைக்கு கிடைக்கும்போது ஜும்மாத் தொழுகைக்கு தயாராகிக்  கொண்டிருக்கலாம், அல்லது தொழுதுத் திரும்பியிருக்கலாம். பள்ளி நிரம்பி சிலர் வெயிலில் - சிலர் மழை ஈரத்தில் - சிலர் ப்ளாட்பாரத்தில் தொழுதிருக்கலாம். இந்தப் படங்களைப் பாருங்கள். ரஷியப் பிரதேசமான கஜகிஸ்தான் பகுதியில் கொட்டும் கொடும் பனியினூடே சென்ற வார ஜும்மாத் தொழுகைக்கு விசுவாசம் கொண்ட அத்தனை மக்களும் பள்ளி நிரம்பி - இடம் கிடைக்காமல் வெளியிலும் பல் முளைக்காத குழந்தைகளும் - பல் விழுந்த முதியவர்கள் சகிதம் தக்வாவுடன் தொழும் ஓர் அற்புதக் காட்சி ! இறைவனே உன் ஈமானே மாட்சி !!!இறைக் கட்டளைக்கு கட்டுப்பட்டு இன்ஸான் இபாதத்தில் திளைக்கும் போது மலக்குகளை விளித்து இறைவன் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறானாம். ஒருவேளை இந்தத் தருணத்தையும் மலாயிக்குகளிடத்தில் இறைவன் உவந்திருப்பானோ?!  ALLAAHU A'LAM.

யா அல்லாஹ் எங்கள் ஈமானை மேலும் பலப் படுத்துவாயாக!யாக்கல்லாஹ்!

வாழ்க வளமுடன்.

-MSM ராஃபியா

3 Responses So Far:

Unknown சொன்னது…

இந்த கட்டுரையில் உள்ள செய்தி மற்றும் புகைப்படங்களை நம்முடன் மின்னஞ்சலில் பகிர்ந்துக்கொண்ட சகோதரர்கள் MSM நெய்னா முஹம்மது மற்றும் சகோதரர் தஸ்தகீர் இருவருக்கும் மிக்க நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இருக்கும் இடத்தை பிடுங்கியெடுக்கும் வெறியர்களின் கொட்டம் தீராத காவித் தீவிரவாதம் ஆட்டிப் படைக்கும் இந்தியத் திருநாட்டில் மீளுமா அந்த நாட்கள் !

நல்ல பதிவு !

அற்புதங்களை கண்டெடுப்பதோடில்லாமல் உங்களின் ஆழ்ந்த சிந்தனையோட்ட கருத்துக்களை ஆக்கங்களாக தொடர்ந்து பகிர்ந்திடுங்கள் MSM(r)Senior !

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

இன்று ஜும்மாவில் வெளியில் தொழும்போது இந்த கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் ஞாபகத்தில் வந்தது.

இது போல் வளைக்குடா நாடுகளில் கடும் வெயிலில் தொழும்போதும் நம் மக்களின் இறையச்சத்தை காணமுடியும். கடும் வெயில், குளிர், மழை காலங்களில் ஜும்மா தொழுகையில் தென்படும் இறையச்சம், எல்லா நாட்களிலும், எல்லா நிலைகளிலும் தக்க வைத்துக்கொண்டால் உலகில் நிறைய பாவங்களுக்கு இடமில்லால் போகுமே.

எல்லோர் மனதிலும் தக்வா ஏற்பட படைத்தவனிட்ம் கையேந்துவோம். இன்ஷா அல்லாஹ்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு