Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இறைவனிடம் கையேந்துவோம் ! உருக்கமாக ! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2012 | , , , ,

தமிழ்கூறும் மக்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்க அறிஞர், ஒடுக்கப்பட்ட சமுதயத்தை தட்டி எழுப்பிய அற்புதமான சிந்தனையாளர்களில் முக்கியமானவர் தமிழக முஸ்லீம்களால் P.J. என்று அனைவராலும் அழைக்கப்படும் சகோதரர் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் உடல் நலம் குறித்த தகவல் அடங்கிய செய்தியை தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளிவந்திருப்பது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கவலையளிக்கும் செய்தியாகும். 

வல்லமை நிறைந்த அல்லாஹ் அவனது சக்தியைக் கொண்டு சகோதரர் P.J.அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் மீண்டும் அவர்கள் எடுத்துக் கொண்ட மார்க்கப் பணி தொடரவும் அருள்புரிவானாக !

அவர்களின் ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

குறிப்பு : இயக்கமென்ற மயக்கமெல்லால் தனிமனித ஆரோக்கியத்திற்கு பொருந்தாது என்பதில் அதிரைநிருபர் குழு தெளிவுடன் இருக்கிறது. 

மேலும் தகவல்களுக்கு : http://pinnoottavaathi.blogspot.com/2012/10/pj.html

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு : (நன்றி : http://www.tntj.net/108877.html)

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

10.10.2012

37 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழக முஸ்லீம்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய மதிப்பிற்குரிய P.J.அவர்களின் எழுச்சியான மார்க்கப்பணிகளால் பலன்கள் கண்ட ஏராளமானோரில் அடியேனும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் தயங்கவில்லை !

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு பூரண நற்சுகத்தை கொடுத்து அதே எழுச்சியுடன் இறுதிவரை அவர்கள் மார்க்கப் பணிகளில் தொடர துஆச் செய்கிறேன்...!

அல்லாஹ்வின் நாடமின்றி அணும் அசையாது ! அவனின் விருப்பமின்றி எதுவும் நிகழாது ! அந்த வல்லமை நிறைந்த அல்லாஹ் ஒருவனால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

வாப்பா உம்மா மற்றும் போற்றத்தக்க மனிதர்கள் சொல்லித் தந்ததுதான் இஸ்லாம் என்றிருந்த என்போன்ற பலருக்கு, 'இல்லையில்லை குர் ஆன் ஹதீஸ் காட்டித் தருவதுதான் மார்க்கம்' என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்திய அன்பிற்குரிய சகோதரர்

பி. ஜே. அவர்கள்

பூரண நலம் பெற்றுத் திரும்பி மார்க்கப் பணிகளைத் தொடர இருகரம் ஏந்தி இறைவனிடம் துஆச் செய்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

May Allah Bless Brother P.Jainulabdeen for the speedy recovery.

Iqbal M. Salih said...

தமிழக முஸ்லிம்களின் தவ்ஹீத் எழுச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவும் அதற்காக இன்று வரை அயராது தம் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் தொடர்ந்து பாடுபட்டு வருபவருமான எனதருமைச் சகோதரர் பேரறிஞர் பீ.ஜே. அவர்கள் முற்றிலும் குணமடைந்து அவர்கள் அரும்பணி தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆச்செய்து கொள்கிறேன். நம் சகோதரர்களையும் துஆச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிஞர் PJ அவர்கள் வழக்கம்போல் மார்க்கப்பணிகளில் தொடரவும் மருத்துவ அறிக்கையெல்லாம் பொய்யாகி எதுவானாலும் இறைவனின் இரக்கக் குணத்தாலேயே பூரண ஆரோக்கியம் பெற துஆ செய்தவனாக!
ஆமீன்

Shameed said...

புளியங்குச்சி இனிக்கும் புளியமரம் ஆடும் என்ற பல சிர்கான விசயங்களை எல்லாம் நாம் சரி என்று நினைத்து இருந்தபோது அது மிகப்பெரிய தவறு என்று மிக எளிமையாக எமக்கு எத்திவைத்த சகோதரர் PJ அவர்கள் பூரண குணம் அடைய என்றென்றும் நம் துவா

Unknown said...

ஏகத்துவ கொள்கையை தமிழக முஸ்லிம் மக்களிடம் அத்துனை இடர்களுக்கு மத்தியில் எடுத்துரைத்தவர் சகோ PJ அவர்கள்.இஸ்லாமிய உலகில் அனைவராலும் பாராட்டத்தக்க பங்களிப்பு செய்தவர்.எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ PJ அவர்களுக்கு நோயை குணபடுத்தி பூரண சுகத்தை கொடுப்பானாக.., இறைவனின் அருளால் நோயின் பிடியிலிருந்து மீண்டு சமுதாய சேவையற்றிட வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வோம்

Ebrahim Ansari said...

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியை தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் நடத்தி, மாற்று மதத்தவர்களும் நம்மைப் புரிந்துகொள்ள / தெரிந்துகொள்ள வழிவகுத்தவர்,

வரதட்சணை வாங்குவோர் தாங்கள் வீட்டுத் திருமணத்துக்கு எங்களை அழைக்கவேண்டாம் என்று பல வீடுகளில் அறிவிப்புப் பலகை தொங்க காரணமானவர்,

அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துவைத்து எதிரிகளையும் தனது கருத்தை ஏற்கச் செய்யும் சொல்வல்லார், சோர்விலார் -

நம் அனைவரின் துஆக்களையும் இறைவன் செவிமடுத்து ஜனாப். பி.ஜெ. அவர்களுக்கு விரைவில் நல்ல சுகத்தைத் தந்தருள்வானாக.

KALAM SHAICK ABDUL KADER said...

நமதூரில் “தவ்ஹீத் மாப்பிள்ளைதான் வேண்டும்” என்று கூறுமளவுக்கு வரதக்‌ஷணைக் கொடுமையால் வதைக்கப்பட்ட குமருகளின் கண்ணீரைத் துடைக்கும் அளவுக்கு, மஹரைப் பவுன் கணக்கில் கொடுக்கத் தூண்டும இளைஞர்கள உருவாக்கிய ஆற்றல் மிக்கப் பேச்சாளர்/ எழுத்தாளர். இத்தகைய வரதக்‌ஷணக் கொடுமைகளிலிருந்து மீட்கப்பட்டு மார்க்க வழியில் தூய மஹர் கொடுத்துத் திருமணம் செய்விக்கப்பட்ட தம்பதிகளிநல் குறிப்பாக “குமர்”களாய் இருந்து இத்தகுச் சீர்திருத்தம் வழியாகத் திருமணம் என்னும் நறுமணத்தைச் சுகித்தவர்கள் இறைவனிடம் கையேந்திக் கேட்பார்கள்;அவர்களின் துஆவினால் எளியவர், இனியவர் அன்புச் சகோதரர் பி.ஜே அவர்களுக்குப் பூரணக் குணமளிக்க அல்லாஹ் போதுமானவன்.

aa said...
This comment has been removed by a blog administrator.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. பி.ஜே. அவர்களுக்கு பரிபூரண சுகம் கிடைக்க து'ஆச்செய்வோம். தமிழகத்து தர்ஹாக்களில் சிரம் தாழ்த்தி தலைவணங்கிச்சென்ற எத்தனையோ மக்களுக்கு தன் தெளிவான மார்க்க தெளிவுரையால் நல்ல விளக்கத்தை ஆரம்ப காலங்களில் துணிவுடன் கொடுத்த நபர்களின் முக்கியமானவர் இந்த பி.ஜே. என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீது said...

யா அல்லாஹ்.... கிருபையாளனே..... உன்னையன்றி நாங்கள் யாரிடமும் கையேந்தவும் முடியாது, யாரிடம் கையேந்தினாலும் அவர்களால் ஒரு அணுவையும் அசைத்திட முடியாது, இறைவனே சகோதரர் பீ.ஜே. அவர்கள் முற்றிலும் குணமடைந்து அவர்கள் அரும்பணி தொடர நீ போதுமானவன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வல்ல அல்லாஹ்வின் அருளால் அன்புச் சகோதரர் பி.ஜே அவர்களின் பேச்சுக்களை அதிகமதிகம் கேட்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்து, குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டும்தான் மார்க்கம் என்பதை அறிந்து தெளிந்து அதன்படி நடக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

பிற மத மக்களுக்கு இஸ்லாத்தை விளங்க வைப்பதிலும், இஸ்லாமியர்களுக்கு 'மார்க்கத்தை' ''குர்ஆன், ஹதீஸ்'' ஒளியில் எளிமையாக விளக்கும் ஆற்றலையும் சகோதரருக்கு வல்ல அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

''நான் சொல்கிறேன் என்று மார்க்கத்தை அப்படியே பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து விளங்கி பின்பற்றுங்கள் என்று நிறைய பயான்களில் கூறியவர்.''

அவருக்கு நோயை தந்தவனும் அதை நீக்கி சுகத்தை அளிப்பவனும் வல்ல அல்லாஹ்வே! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு வந்த நோயை நீக்கி பூரண குணமாக்கி அவர் மீண்டும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியில் வீரியமுடன் செயல்பட வேண்டும் என்று மனிதர்களின் ரப்பான வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வல்ல நாயன் இந்த மார்க்க அறிஞ்ஞரை பரிபூரன சுகத்துடன் வாழச்செய்வானாக அனை வரும் ஆமீன் கூருங்கள்

Unknown said...

அஸ்ஸலாமு அலைகும்
இன்ஷா அல்லாஹ் இறைவன் உதவியால் சகோதரர் விரைவில் நலம் பெற்று முன்பை காட்டிலும் இறைவன் விரும்புகின்ற வலியில் வீரியமுடன் சத்திய பனியை எடுத்துச் சொல்ல இறைவன் அருள் செய்வான்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும், நமக்கும் அல்லாஹ் நல்ல சுகத்தை தந்து நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் P.J.அவர்களின் ஆரோக்கியம் வேண்டி வல்லமை நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டி பதியப்பட்ட இந்த பதிவிற்கு, சகோதரர் பி.ஜே.அவர்களை தனிபட்ட விமர்சனம் செய்து தனி மின்னஞ்சல் வழியாகவும், அலைபேசி வழியாகவும் ஏராளமாக பெறப்பட்டு வருகின்றன !

அன்புச் சகோதரர்களே ! நோயின் கொடுமையை அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாய்மொழியாக காதுபட கேட்பவைகள் இதுபோல் எதிரிக்கு கூட வரக்கூடாது என்பதே (இவ்வாறு காதுபட கேட்டவர்கள் நம்மில் ஏராளமாக இருப்பார்கள்) ஏன் நேற்று கூட என் சொந்தமொன்று இவ்வாறு சொன்னதை நினைத்து அவ்விடத்தை விட்டு நான் நகர்ந்ததும் என்னை அறியாமலே கண்ணீர் தெரித்தது.

குறை நிறை எடைபோட இதுவல்ல நேரம் ! உருக்கமாக பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !

Zain said...
This comment has been removed by the author.
Zain said...திருப்பூரு சபிரு,

கொய்யால இததான்யா அவரு வேணான்னு சொன்னாரு . நீ துஆ கேட்டு மத்தவங்க ஆமீன் சொல்றத நம்ம தலைவர் முஹம்மத்(ஸல்) காட்டிதரலப்பா.

Yasir said...

சமுதாயத்தில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திய நபர் பி.ஜே அவர்கள்...அவர்கள் பூரண நலம் பெற துவாச்செய்கின்றோம்

அப்துல்மாலிக் said...

இன்று ஒரு சிறந்த மார்க்கத்தை இளைஞர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கு என்றால் அல்லாஹ் சகோ. பி.ஜெ அவர்களின் மூலம் ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தியிருக்கான், அதே இறைவன் சகோதரரின் உடல் நலத்தை ஆரோக்யமாக்கீ மேலும் இந்த மார்க்கத்தை நேரான வழியை பற்றி அனைவருக்கும் அறிய தருவானாகவும் ஆமீன்

அப்துல்மாலிக் said...

//Zain சொன்னது…


திருப்பூரு சபிரு,

கொய்யால இததான்யா அவரு வேணான்னு சொன்னாரு . நீ துஆ கேட்டு மத்தவங்க ஆமீன் சொல்றத நம்ம தலைவர் முஹம்மத்(ஸல்) காட்டிதரலப்பா//

இங்கே யாரும் கூட்டு துஆ செய்யலே, அவரவர் தன்னோட துஆவில் அவருடைய நலனுக்காக்வும் துஆ செய்ங்கனு வேண்டுதல் வெச்சிருக்காங்க.....

Yasir said...

//அப்துல்மாலிக் சொன்னது…
இன்று ஒரு சிறந்த மார்க்கத்தை//
இதனை “சிறந்த மாற்றத்தை” என்று மாற்றிபடிக்கவும்....தட்டச்சுப்பிழையேயன்றி கருத்துபிழையல்ல சரிதானே நண்பரே

அப்துல்மாலிக் said...

சகோ யாஸிர்@ சரியே நன்றி நன்றி

Unknown said...

Zain சொன்னது…
//திருப்பூரு சபிரு,

கொய்யால இததான்யா அவரு வேணான்னு சொன்னாரு . நீ துஆ கேட்டு மத்தவங்க ஆமீன் சொல்றத நம்ம தலைவர் முஹம்மத்(ஸல்) காட்டிதரலப்பா.//

சூரா பாத்திஹாவில் தொழுகையிலேயே நாம் எல்லோரும் சேர்ந்து ஆமீன் கூருகிரோம்.கூட்டு துவாவிற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா??!!

Zain said...

ஜமாஅத் தொழுகையில் பாதிஹா சூராவுக்கு "ஆமீன்" சொல்வதை தவிர வேறு எந்த சந்தர்பத்திலும் ஆமீன் சொல்ல நமது கண்மணி நாயகம் (ஸல்) நமக்கு கற்றுத்தரவில்லை.

Zain said...

என் நண்பர் சபீர் எழுதிய "அனை வரும் ஆமீன் கூருங்கள்" என்ற
வார்த்தைக்கு நான் தந்த பதில்தான் இது.

எந்தவொரு சந்தர்பத்திலும் ரசூல்(ஸல்) துஆ கேட்டு சஹாபாக்கள் ஆமீன் சொன்னதில்லை.

முஹம்மது (ஸல்) காட்டித்தராத எந்தவொரு விஷயமும் இஸ்லாத்தை சாராது.

aa said...

அல்லாஹ் இந்த மனிதருக்கு ஹிதாயத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். வழிகெட்ட முஃதஜிலா சிந்தனைகளிலிருந்தும், கொடிய வியாதிகளிலிருந்தும் முழு முஸ்லிம் உம்மத்தை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

நிற்க,பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது விமர்சனங்கள் வருவது இயல்பே.அத்தகைய விமர்சனங்கள் நியாயமாகவும், நாகரீகமாகவும், மார்க்க வரையறைகளுக்கு உட்பட்டும் இருக்கும் வரை அதனால் எந்த தீங்கும் இல்லை. மாறாக அத்தகைய விமர்சனங்கள் தான் முஸ்லிம் உம்மாவை கியாமத் நாள் வரை நேர்வழியில் வைத்திருக்க உதவும்.’ஜரஹ் வத் தஃதீல்’ (Appraisal and Criticism) என்பது மார்க்க அறிவின் ஒரு கிளையே. இதனால் தான் இவர் பல்வீனமானவர், இவர் பொய்யர், இவர் ஞாபக மறதிக்காரர் என்றெல்லாம் பல்வேறு தனி நபர்களை பற்றி நாம் ஹதீஸ் கலையில் படிக்கிறோம். இவ்வாறு வழிகேடர்களயும்,நம்பகமற்றவர்க்ளையும் அடையாளம் காட்டுவது அறிவுடையோர் மீதுள்ள கடமையாகும். இது அல்லாஹ்வுடைய மார்க்கம் இறுதி நாள்வரை கலங்கமற்ற முறையில் பாதுகாக்கபடுவதற்கான ஒரு ஏற்பாடே.

இந்த அடிப்படையில் தான் நாம் இவரைப் பற்றி செய்யும் விமர்சன்ங்களும் பார்ர்க்கப்படவேண்டும். தவிர இவர் மீது நமக்கு இயக்கச் சண்டையோ, பொருளாதாரச் சண்டையோ இல்லை.
(இந்த பின்னூட்ட்த்தை நல்ல முறையில் பிரசுரிப்பதோடு நீக்கவும் மாட்டீர்கள் எனநம்புகிறேன்.)
-அஹ்மத் ஃபிர்தௌஸ்
ஷார்ஜா (+971-553075692)

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை சகோ பீ ஜே அவர்கள் ,அல்லாஹ்வின் அருளால் பூரண குணம் பெற பிரார்த்திப்போம்.இன்றைய நாம் வாழும் காலத்தில் அவர் ஒரு புரட்சியாளர்,சிறந்த மார்க்க அறிஞர்,அல்லாஹ் நம் சமுதாயத்துக்கு வழங்கிய ஒரு கிப்ட் என்றே கருதுகிறேன்.அல்லாஹ்வின் மேல் தவக்குல் வைத்து துவா செய்வோம்.அல்லாஹ் கருணையாளன்.அவன் உதவி செய்வான்,இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பன் ஜெயின் கடைசிவரை பி.ஜெ.விர்க்காக நம் வலைதலத்தில் கேட்டுக்கொண்டபடி நம்மோடு துஆ கேட்கவே இல்லயே
ஒரே ஒரு முறை ஆமீன் சொல்லேன் pls

அதிரை சித்திக் said...

ஒரு முறை நபி (ஸல்)
ஜும் ஆ மேடையில் ஏறும் போது
மூன்று முறை ஆமீன் கூறினார்கள்
சகாபாக்கள் எதற்காக ஆமீன் கூறினீர்கள்
என வினவிய போது ஜிப்ரீல் (அலை)
மூன்று விசயங்களுக்கு து ஆ கேட்க
அதற்கு ஆமீன் கூறினார்கள் ..
மூன்று விஷயம் என்ன .ஆதாரம் என
பின்னூட்டம் நீளும் என்பதால்
சுருக்கமாக கூருகிறேன்..
ஜிப்ரீல் து ஆ கேட்க
நபி (ஸல் ) ஆமீன் கூறியது
கூட்டு து ஆ தானே ..
ஜெய் னுள் ஹுசைன்
சொல்லுங்கள் ...! இது
தப்லீகில் கேட்ட ஹதீஸ்

Zain said...

இத, இததான்யா எதிர்பார்த்தேன்.

இது மலக்குகளின் தலைவருக்கும் மனிதர்களின் தலைவருக்கும் இடையே நடந்த விசேஷமான உரையாடல்.

எந்தவொரு சமயத்திலும் நபி (ஸல்) து ஆ செய்து சஹாபாக்கள் ஆமீன் சொன்னதாக ஏதாவதொரு ஹதீஸ் உண்டா? இல்லை, 'நான் து ஆ செய்தால் நீங்கள் ஆமீன் சொல்லனும்' என்று என்றாவது அவர்கள் கட்டளையிட்டார்களா?

எத்தனையோ சந்தர்பங்களில் தன் சஹாபாக்களுக்காக ரசூல் (ஸல்) துஆ செய்துள்ளார்கள், தனியாக; கூட்டாக இல்லை; அதற்கு யாரும் ஆமீன் சொன்னதாக எந்த ஒரு ஹதீஸும் இல்லை.


அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றுவர்கள் மட்டும் இதை ஏற்றுக்கொள்வார்கள். நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

y.m.ansari said...

சங்கைமிகு குரானும் நபி ஸல் அவர்களின் ஹதீஸ்கள் ஆகிய இந்த இரண்டுமட்டுமே மார்க்கம் என்று சகோதரர் பி .ஜே அவர்களின் அறிவான தெளிவான வளைந்து கொடுக்காத பிரசாறதால் நம்மை தெளிவடைய செய்தார்கள் வல்ல நயன் அல்லாஹ் அவர்களுக்கு ஷிபாவை கொடுத்து
நீண்ட ஆயுளை கொடுத்து அவர்களின் பணி தொடர செய்வானாக

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

பிஜேயின் பித்தலாட்டாங்கள்........

மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும்

நபித்தோழர்களை நையாண்டி செய்யும் நவீனவாதிகள்

பி.ஜே.யின் விபரீத குர்ஆன் மொழிப்பெயர்ப்பு (ஆடியோ)

ததஜ-வின் விவாதப் பூச்சாண்டி

நபித்தோழர்கள் பற்றி ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்

சுன்னத்தும் பித்அத்தும் (ததஜ -வில் ஊடுறுவியுள்ள கொள்கை ரீதியிலான பித்அத்கள்)

பீ.ஜே. அவர்களின் அல்குர்ஆன் விரிவுரையும் விபரீதங்களும்
மார்க்கமும் மனோ இச்சையும்

ஒரு பொருளுக்குரிய ஜகாத் ஒவ்வொரு ஆண்டுமா? ஒரு தடவை மட்டுமா?

மேலும் இவரின் வழிகேட்டை அறிய....

http://www.islamkalvi.com/portal/?page_id=1530

aa said...

அதிரை நிருபரின் மட்டுறுத்தல் கொள்கையை (Moderation Policy) பகிரங்கமாக வெளியிட்டால் பின்னூட்டமிடும் எங்களைப் போன்றவர்களுக்கு வசதியாய் இருக்கும். கைகடுக்க தமிழில் டைப் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து, அநாகரீகம் இல்லாமலும், அருவருப்பான சொற்பிரயோகம் இல்லாமலும் இருக்கிறதா என்று உறுதி செய்திகொண்டு பதிவிடப்படும் பின்னூட்டங்கள் தடயம் இல்லாமல் நீக்கப்படும்போது மனம் கனக்கிறது. மேலும் வெளியிடப்படும் பின்னூட்டங்களுக்கு முழுமையான பெயருடனும் அடையாளத்துடனும் பதிபவர் பொறுபேற்கும் பொழுது மட்டுறுத்துனரின் செயல்பாடு புதிராகவே உள்ளது.

தயைகூர்ந்து என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி (ஆலடித் தெரு)
ஷார்ஜா
Mobile: +971 55 3075692

sabeer.abushahruk said...

சகோதரர்களே,

இந்தப் பதிவு, நோயுற்றிருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு அவர் நோயிலிருந்து குணம்பெறுவதற்காக ஏனைய முஸ்லிம்களையும் துஆச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள இட்டப் பதிவு.

அவர் கொள்கைகளையோ வாழ்க்கையையோ விமரிசிப்பதற்காக அல்ல.

விரும்பினால் துஆச் செய்யுங்கள், இல்லையேல் அமைதியாயிருங்கள்.

பதிவின் கரு: முஸ்லிம் சகோதரருக்கு நலம் வேண்டி துஆ. அவ்வளவுதான்.

பதிவுக்கு, அதாவது பதிவின் கருவுக்கு தொடர்பில்லாத பின்னுட்டஙகளும் களையப்படுதலே இத்தளத்தின் நிலைபாடாக இருக்க வேண்டும்.

sabeer.abushahruk said...

இப்பதிவை ஒரு அறிவிப்பாக கருதி, அதிரை நிருபர் இப்பதிவுக்கான கருத்துப் பெட்டியை மூடுமாறு சிபாரிசு செய்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு