Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெண்களுக்கு பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகை ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் 

கடற்கரை தெரு பள்ளிவாசல் புதிதாக கட்டி முடித்து வக்ஃப் செய்ததிலிருந்து தொடர்ந்து வந்த நோன்பு காலங்களில் பெண்களுக்களுக்கென்று ரமளான் இரவுத் தொழுகையை (தராவிஹ்) பள்ளி வாசலில் (மாடியில்)நடத்துவதற்கு நடந்த முயற்சி பல்வேறு காரணங்களால் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றது, இறைவன் உதவியால் இந்த வருடத்தில் இருந்து புதிதாக பெண்களுக்கும் இரவுத் தொழுகை ஜமாத் (தராவிஹ்) நடை பெற்று வருகின்றது.

கடற்கரைத் தெருவில் கடந்த ரமளான் காலங்களில் பெண்களுக்கென்று தனியாக இரவுத் தொழுகை (தராவிஹ்) பெண்கள் மதரசாவிலும் ஒரு சில வீடுகளிலும் நடந்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக முன்பு தராவிஹ் தொழுகை நடந்து வந்த பெண்கள் மதரஸாவிற்கென தற்போது புதிய கட்டிடம் கட்டிக் கொண்டு வருவதால் அந்த புதிய கட்டிடத்தில் கீற்றுக் கொட்டகை போட்டு  கடற்கரைத் தெரு ஜூம்மா பள்ளி முன்னாள் இமாம் அவர்களால்  தராவிஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது இது பள்ளிவாசல் மாடிப் படி ஏற முடியாத வயதான பெண்களுக்கு வசதியாக  இருப்பதாகவும்  அங்குள்ளவர்கள் கருதுகின்றனர்.


தகவல் : Sஹமீது

11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மஸ்ஜிதில் தொழுகை என்பதால் தொழாதவர்களுக்கும் அந்த ஆர்வம் கிடைத்து பெரும்பாலோனோர் அங்கு வந்து தொழுது இறை வணக்கத்தால் பள்ளி சிறப்பு பெறட்டுமாக!
மாற்றங்கள் நன்மைக்கு மட்டும் இருக்கட்டுமாக!

ZAKIR HUSSAIN said...

பெண்களுக்கான தொழுகை வசதிகளை செய்து கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

எங்கள் தெருவில் [ தரகர் தெரு ] பள்ளிவாசலுக்கு முன் இருந்த காலிநிலத்தில் இதற்கான ஏற்பாடு பல வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு பெண்களுக்கான தொழுகை வசதிகளுடன் தொழுகைகள் நடக்கிறது.

sabeer.abushahruk said...

நல்ல செய்தி.

தனி வீடுகளில் தராவீஹ் தொழுகை முற்றிலும் நிருத்தப்பட்டுவிட்டதா?

Ebrahim Ansari said...

நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.

இப்போ தெருவில் கூட்டம் குறைந்துவிட்டது போல் தோன்றுகிறது. காரணம் ?

அப்துல்மாலிக் said...

நல்ல செய்தி, பள்ளிவாசல் தொழுகை என்பது எல்லோருக்கும் புதிய உந்துதலை கொடுக்கும். இதை அப்படியே பள்ளியில் 5 வேளை தொழும் பாக்கியத்தை ஏற்படுத்தினால் மிக்க நலம், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Anonymous said...

கடந்த காலங்களில் தனியார் இல்லங்களில் நடைபெற்ற பெண்கள் தராவீஹ் தொழுகை இப்பொழுது ஒரு பொது இடத்தில் நடப்பது பாராட்டத்தக்க நல்ல மாற்றங்களே ! மாற்றங்கள் நன்மைக்கு இட்டுச்ச்செல்ல துஆச்செய்கிறேன்.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.

//இப்போ தெருவில் கூட்டம் குறைந்துவிட்டது போல் தோன்றுகிறது. காரணம் ?//

வெளி தெருவில் இருந்து இந்தத் தெருவில் பெண் கட்டியவர்கள் அந்தப் பெண்ணுக்குரிய வீட்டு சீதனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அடுத்த தெருவில் அவர்கள் சொந்த காசில் வீடு வாங்கியதுபோல் வாங்கிக்கொண்டு குடியேறினால் இந்தப் பள்ளியில் எப்படி கூட்டம் கூடும்?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
நல்ல செய்தி.

//தனி வீடுகளில் தராவீஹ் தொழுகை முற்றிலும் நிருத்தப்பட்டுவிட்டதா?//

தனி வீடுகளில் இன்னும் தொழுகை நிறுத்தப்படவில்லை .

ஒருவீட்டில் மட்டும்பெண்களுக்கு பெண்ணால் தொழுகை நடத்தபடுகின்றது அதுவும் நாலு சலாம் சொல்லி எட்டு ரக்காத் தொழுகை நடை பெறுகின்றது

نتائج الاعداية بسوريا said...

ஒரு அருமையான ஏற்ப்பாடு.

பெண்களும் ஆண்களுக்கு நிகராக பள்ளியில் தராவீஹ் தொழுவது
அவர்களின் நன்மையின் பங்கை அதிகரிக்க போதுமானது.
ஆதலால் இந்த ஏற்ப்பாடு எக்காரணம் கொண்டும் இடை நிறுத்தம் செய்யப்படாமல் தொடர்ந்தால், இப்புனித மாதத்தை அவர்களும் பயனுள்ளதாக நன்மையின் நாட்டத்தோடு கழிக்க ஏதுவாகும்.

அல்லாஹ், இந்த ஏற்ப்பாடு செய்த, இதற்க்கு முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இந்த புனித ரமலானில் நல பரக்கத்தையும், செல்வத்தில் அபிவிருத்தியையும் கொடுக்கப்போதுமானவன்.

அபு ஆசிப்.

Anonymous said...

shameedசொன்னது
//இந்த தெருவில் பெண்கட்டிய வெளி தெரு மாப்பிளை வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டு.........//

இதுஒரு கேள்வியோடு.சேர்ந்த பதில். அதை விடுவோம்! இப்போ என்னுடயை டவுட் என்ன வென்றால் சீதன வீட்டை' நல்ல விலைக்கு 'தள்ளி விட்டு 'மாப்பிளேயே தன் சொந்த பணத்தில் மனைவிக்கு வீடு கட்டிடுத்தது. போல-'இம்மேஜ் உண்டு பண்ணிக் கொள்வது பற்றி 'இஸ்லாமிய பொருளாதார சிந்தனையில்''யேதும் point உண்டா? என்பதே!

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.

adiraimansoor said...

அல்ஹம்துலில்லாஹ் நமதூரில் பெணகளுக்கு பள்ளியில் தொழ அனுமதித்த கடற்கறை ஜமாத்தினருக்கு வாழ்த்துக்கள்
ஆலிம்கள் நிறந்த அதிராம்பட்டினத்தில் ஆலிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் எங்கள் பகுதியில் கூட முன்வராதவர்களுக்கு எடுத்துக்காட்டாக செய்தமைக்கு நாம் ஜமாத்தினரை பாராட்டியே ஆகவேண்டும். தராவீஹ் தொழுகையை உதாசீனப்படுத்திவிட்டு வெட்டிப்பேச்சு பேசி சும்மா ஊர் சுற்றும் ஆண்களுக்கு பெண்கள் தொழுவதை பார்த்தாவது கொஞ்சம் தராவீஹ் தொழுகையில் அக்கரை வரட்டும். பெரும்பாலன பெண்களுக்கு தராவீஹ் தொழுகையை விடமாட்டர்கள்.

அதிரைமன்சூர்
ரியாத்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு