Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்பின் உலகம்‏ 14

அதிரைநிருபர் | January 04, 2011 | ,

இந்த மழலையைப் பார்க்கும் உலகிற்கு

நாமும் பயணிப்போம் மழலையின்
விழி வழியாக ...
குழந்தையாக எனும்
நிபந்தனையோடு ...

அந்த உலகில் இயற்கையே அன்றி
வேறேதுமில்லை ...
நமக்கு துள்ளித்துள்ளி விளையாட தோன்றுகிறது
நம்மால் அவுலகில் முடியாதது
உடனே துள்ளியோடும் புள்ளி மானும்,
தாவித்தாவி திரியும் முயலும்
விளையாடிக் காண்பித்தது....

நமக்கு வேகமாக வீரம் புரிய ஆசை
நம்மால் அவுலகில் முடியாதது
சீறிப்பாயும் சிறுத்தை வந்து
வீரம் காண்பித்தது ....

வலியின் வேதனை பார்க்க ஆவல்
யானையின் காதில் எறும்பு புகுந்தது
யானை திணறியது ..

குசும்புகள் பார்க்க ஆசை
குரங்குகள் வந்து
குசும்பு செய்தது ...

கம்பீரம் காண ஆசை
சிங்கம் வந்து
கர்ஜித்தது .....

தந்திரம் பயில ஆசை
நரியும் காக்கையும்
வடைக்கதையை
செய்துக்காட்டியது ...

ஒற்றுமை பயில ஆசை
தேனீக்கள் பறந்து வந்து
தேன்க்கூட்டைக் காண்பித்தது ....

நறுமணம் சுவாசிக்க ஆசை
பூக்கள் வந்து
சாமரம் வீசியது ....

நாணம் பயில ஆசை
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகள் தொட்டச்சினுங்கி யை
தீண்டியவுடன்
தொட்டச்சினுங்கி
நாணம் பழகிக் காண்பித்தது ....

மேலப் பறக்க ஆசை
உடனே மேகம் இறங்கி வந்து
நம்மைத் தூக்கிச்சென்றது....

கடலின் உலகம் காண ஆவல்
மேகமே கண்ணாடியாய்
மாறி கடலின் உள்ளிருப்பை
காண்பித்தது ...

பசிக்கிறது ....

அதோ..
அன்பின் உருவமாய்
அமிர்தம் சுமந்து
அமுத மொழிகள் ஏந்தி
அரவணைக்க
அன்னை வருகிறாள் ...
அந்த உலகில் அன்பின்றி ஏதுமில்லை
நிச்சயமாக ............

---அப்துல் ரஹ்மான்
----harmys

14 Responses So Far:

crown said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் கவிதையே...
இதுவும் உன்னைப் போல் மென்மையே என்றும்...

//வலியின் வேதனை பார்க்க ஆவல்
யானையின் காதில் எறும்பு புகுந்தது
யானை திணறியது ..//

வருடும் வரிகள் வழக்கம்போல் மனம் தொட்ட அம்புக்குறிகள் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
குழந்தை வழியாக ,ஒரு இளைஞனின் ,கவிஞனின் பார்வையும்.
வார்தை கோர்வையும் அழகோ,அழகு.
ஒவ்வொரு தன்மையும்.ஓவ்வொரு மிருகத்தின்
வழி கான்பித்து.
அன்பின் வழி, அன்னை வழியென மொழிந்து.
கவிதை பொழிந்து.
மனம் மகிழ்ந்து போகவே அன்னை ஊட்டும் அன்னம் போல ,
எண்ணம்போல் எடுத்து புசித்தேன்,
தீர்ந்ததடா நன்பா என் கவிதை பசி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் ரஹ்மான், வழக்கம்போல் தங்களின் கவிதை அருமை.

நாம் இவ்வுலகில் பிறக்கும்போது கிடைத்த தாயின் அன்பு பாசம் நேசம், நாம் இவ்வுலகைவிட்டு போகும் போது அதே அன்பு பாசம் நேசம் வேறு யாரிடமாவது கிடைக்குமா?

sabeer.abushahruk said...

ஏற்கனவே இருந்த கற்பனைத் திறனோடு எழுத்தில் முதிர்ச்சியும் கூடுகிறது. கருத்தில் செறிவு கூடி எழுத்துப் பிழைகளும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

எண்ணங்களை வாசிக்கவும் வண்ணங்களை ரசிக்கவும் பழகியவர்களால் மட்டுமே எழுத்து முட்கள் தவிர்த்து நடக்க சாத்தியப்படும். 

உங்கள் கவிதையில் அழகு மிளிர்கிறது, மயிலிறகின் வருடல்போல் மிருதுவாக இருக்கிறது. துவக்கத்திலேயே குழந்தையின் கோணம் என்ற அறிவிப்பால் பாதுகாப்பாய் பயனிக்கிறது உங்கள் பாடல்.

க்ரவுனுக்கு ஆவேசம், அபு இபுறாகீமுக்கு சமாதானம், அப்துர்ரஹ்மானுக்கு மென்மை, உன்னைப்போல் ஒருவனிடம் எதார்த்தம் என நல்லதொரு கூட்டணியப்பா நீங்கள். 

வான்வில்லில் எந்த நிறம் இஷ்டம் எனப் பிரித்துச் சொல்லவியலாது. எனினும், மிகக் கவர்ந்த கற்பனை:

//நாணம் பயில ஆசை 
வண்ணத்துப் பூச்சியின் 
இறக்கைகள் தொட்டச்சினுங்கி யை 
தீண்டியவுடன் 
தொட்டச்சினுங்கி 
நாணம் பழகிக் காண்பித்தது .... //

 அபரீத கற்பனை. வாழ்க!

கடைசி முடிச்சில் கவிஞனின் பொறுப்பு தெறிகிறது.

sabeer.abushahruk said...

அதோடு, www.thinnai.com-ல் என் "தருணங்கள்" ஒருமுறை வாசித்துவிடவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் அரசவைக் கவி திண்ணைக்கு சென்று கவி பாடி அங்கே ஒரு பெயர் இட்டுருக்கிறார்கள் "பாவா சாகிப் சபீர் அகமது" - கொடுத்து வைத்த திண்ணை அங்கே இருப்பவர்க்ளை உருக்கியெடுத்த வரிகள்.

நீங்கள் எங்கு போய் உட்கார்ந்தாலும் எங்களுக்கு நீங்கள் தான் கவிக் காக்கா !

//நீங்கள் நடக்க மறந்த
நடை நடக்கிறேன்.. //

என்றும் நினைவிலிருக்கும் !

crown said...

துவக்கத்திலேயே குழந்தையின் கோணம் என்ற அறிவிப்பால் பாதுகாப்பாய் பயனிக்கிறது உங்கள் பாடல
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா கவிதை படித்தபின் அப்துற்றஹ்மானுக்கு
போன் போட்டு இந்த கருத்தைத்தான் சொன்னேன்.

crown said...



:

வாப்பா,

போய்ட்டீங்க...

மீண்டும் போய்ட்டீங்க...

எங்களை தவிக்க விட்டுட்டு

போய்ட்டீங்க...

இம்முறை-

எத்தனை முயன்றாலும்

மீட்க முடியாத இடம்...

எவ்வளவு நடந்தாலும்

தொடர முடியாத தூரம்!

அழுவது ஆணுக்கு அழகல்ல-

அழுவது நானல்ல...

என் உயிர்!

எத்தனை கனவுகள்

தேங்கிய கண்களை...

அத்தனை அருகில் தேடியும்-

வெற்றுப் பார்வையோடு

ஒற்றையாய் நீங்கள்!

ஆவி பிறிவதை - மிக

அருகில் பார்த்தேன் - உங்கள்

ஜில்லிட்ட விரல்கள்

பற்றிக்கொண்டே...!

வாழ்வியல் தத்துவத்தின்

தவிர்க்க முடியா தருணங்களை

இத்தனை விளக்கமாய்...

இதுவறை கற்றதில்லை!

சற்றேனும் கவனமின்றி

சிறு பிரயாசையுமில்லாத

அனிச்சை சுவாசம்

எங்கோ பிழைத்து

மூச்சு

இழுத்து விடுவது

இத்தனை சிரமாக

மாரிப்போயதா!

உங்கள்...

இறுதி மூச்சுக்காற்றை

என் -

சுவாசமாய் இழுக்க...

அசைவற்றுப் போனீர்கள்!

போய்ட்டீங்க என

கதறிய

சொந்த பந்தங்களின்

சப்தங்களினூடே...

கேட்டதா உஙகள்

மகனின்

உயிர் அழும் ஓசை?!

உங்கள்

மரணம் சகித்து...
குளிப்பாட்டி...
நறுமணமூட்டி...
கோடித்துணி போர்த்தி...
கட்டிலிலிட்டு...
காண விரும்பாத காட்சியாய்-
உஙகள் கோலம் கண்டு...
போய்ட்டீங்களே வாப்பா!
நீங்கள் போட மறந்த
உங்கள் செறுப்பணிந்து...
நீங்கள் நடக்க மறந்த
நடை நடக்கிறேன்...
உங்களுக்கு மிக அருகில்...
இறுதி ஊர்வலத்தில்!
அடக்கம் செய்து
அடக்க முடியாத
அழுகையோடு
திரும்பி நடக்கிறேன்...
மயானம் விட்டு...
போய்ட்டீங்களே வாப்பா!
வந்தது வாழ்ந்தது...
தொட்டது விட்டது...
எல்லாம் அற்றுப்போய்
காற்றுக் குமிழியென...
வெடித்துப் போயிற்று உயிர்!
மயாணத்தில்
கற்றுக்கொண்ட பாடத்தோடு
எஞ்சிய நாட்களை வாழ
இதோ நான்!

- ---பாவா சாகிப் சபீர் அகமது

crown said...

போய்டீங்களே என சொந்தங்களின் சத்தத்தின்னூடே கேட்டதா உங்கள் மகனின்
உயிர் அழும் ஓசை.
--------------------------------------------------------------------
வாய்விட்டு அழனும் போல இருக்கு.
கேட்டதா உங்கள் மகனின் உயிர் நசங்கும் ஓசை(என நான் எழுதிப்பார்த்தேன்)

Shameed said...

ஒற்றுமை பயில ஆசை
தேனீக்கள் பறந்து வந்து
தேன்க்கூட்டைக் காண்பித்தது ....



அஸ்ஸலாமு அழைக்கும்
ஒட்ருமைக்கு நல்ல எடுத்துக்காட்டு,

கவிதை குழந்தை தவழ்வது போல் அழகா இருந்தது

Yasir said...

ஒவ்வொருவரின் எண்ணங்களின் / நினைவுகளின் / வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே கவிதை பிறக்கிறது என்பது என் எண்ணம் அந்த வகையில் சகோ.அப்துல் ரஹ்மானை பற்றிய கணிப்பு அவர் ரொம்ப மென்மையானவர் என்பதை அவரின் முந்திய கவிதையும் இக்கவிதையும் சொல்கிறது....உம்மா நம்மை தொட்டிலில் போட்டு ராராட்டி ஆட்டும் போது கிடைக்கும் ஒரு வித மெல்லிய சுகத்தை அனுபவத்த உணர்வு இக்கவிதை படிக்கும் போது

அலாவுதீன்.S. said...

சகோ.அப்துல்ரஹ்மான் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மழலையின் விழி வழியாக ... குழந்தையாய் மாறி கற்பனை சிறகில் பறந்து வந்து தாயின் மடியில் தஞ்சம் அடைய வைத்ததற்கு வாழ்த்துக்கள்!.

அந்த குழந்தையின் கண்களில்தான் எத்தனை ஆனந்தம்!
எந்த கவலையுமற்ற கள்ளமில்லா புன்சிரிப்பு!

Unknown said...

அசலாமு அலைக்கும்..
இங்கு கருத்தும்,வாழ்த்துமிட்ட நண்பன் தஸ்தகீர்,
சபீர்,அபுஇப்ராஹீம்,அலாவுதீன்,ஷாகுல் காக்காமார்களுக்கும் ,
சகோ தாஜுதீன் ,சகோ யாசிர் ஆகிய அனைவரக்கும் தேங்க்ஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு