அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாய் மொழியாலும் செழிப்பானப் படைப்புகளைத் தினந்தோறும் வெளியிட்டு வருவதிலும் அதிரைநிருபர் தளம், படைப்புகளின் படைப்பாளிகளின் சிரத்தைக்கும் அவர்களின் அயராத தொடர் எழுத்துகளுக்கும் அதிமதிகம் மதிப்பளித்து வருகிறது. படைப்பாளிகளின் படைப்புகளை முன்னிலைப் படுத்துவதை முதற் குறிக்கோளாகவே வைத்திருக்கிறது.
அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் படைப்புகள் அனைத்தும் அதனதன் தன்மையில் தரம் மிக்கவை என்பதை பதிவுக்குப் பின்னர் அதனை பகிர்ந்து கொள்ளும் வாசகர்களின் மின்னஞ்சல், மின்னாடல் குழுமம், மீள்பதிவு என்று பரந்து விரிந்து இருப்பதே சாட்சியாக நம் அனைவருக்கும் தெரியும். அதில் பெரும்பாலான சகோதரர்கள் படைப்பாளியைக் கவுரவிக்கும் விதத்திலும், அது வெளியான தளத்தின் பெயரையும் நன்றியுடன் குறிப்பிடத் தவறுவதில்லை, தயங்குவதில்லை - அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கிடையிலே மிகவும் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி ஆய்வுகள் செய்து வெளியாகும் பதிவுகளை மீள்பதிவு / மின்னாடல் குழுமத்தில் பரிமாற்றம் / மின்னஞ்சல் பகிர்வு என்று ஆர்வமாக செய்யும் சகோதரர்கள் அந்த மூலப் படைப்பின் ஆசிரியரை அல்லது அது வெளியான தளத்தைப் பதிந்திட தவறி விடுகின்றனர். இவை பெரும்பாலும் எமது பார்வைக்கு வாசகர்களின் சுட்டலுக்கு பின்னர் வந்தாலும், அவ்வாறு பகிரும் சகோதரர்கள் கட்டுரையாளரின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.
முன் அனுமதியுடனோ / அனுமதியின்றியோ பதிந்தாலும் அவசியம் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது அல்லது யாரால் எழுதப்பட்டது என்று பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம், அவர்களின் சேவைகளைப் போற்றுவோம், சமுதாயம் செழிக்கக் கருத்தாடலில் வளம் காண்போம் இன்ஷா அல்லாஹ் !
நெறியாளர்
www.adirainirubar.in
12 Responses So Far:
Copy, Paste ல் உள்ள எளிமை படைப்பாளியின் பெயரிடுவதில் சிலருக்கு கடினமாக இருப்பதை அவ்வப்போது நானும் கண்டு வருகின்றேன்..
இந்த எண்ணம் மாறி, பெருந்தன்மை ஓங்கவேண்டும்..
இன்ஷா அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக இது மாறக்கூடும்..
அன்பு நெறியாளர்:
copy -paste செய்து அனுப்பப்பட்டிருப்பதாக உங்கள் குழுவினர்க்கு நூறு விழுக்காடு ஐயமின்றித் தெரிந்தால் உடனே ஆக்கங்களை அனுப்பியப் பங்களிப்பாளர்க்குத் திருப்பி அனுப்பி விடுதல் நலம்; நீங்கள் அப்படிப்பட்ட பதிவுகளை உங்களின் அ.நி. தளத்தில் பதிய வேண்டா.
நாம் எழுதுவது பலரை சென்றடைய வேண்டுமென்றே . எனவே மீள் பதிவு செய்வதிலோ மற்ற தளங்களில் வெளியிடப்படுவதிலோ அவ்வளவாக வருத்தம் இல்லை.
ஆனால் அப்படி வெளியிடப்படும் போது முதலில் ஆக்கம் தந்தவருக்கும் அந்த ஆக்கம் வெளியிடப்பட்ட தளத்துக்கும் ஒரு COURTESY சொல்வது நாணயமான மரபு. இந்த மரபு மீறப்படும்போது, நாம் பெற்ற குழந்தை மருத்துவ மனைகளில் கடத்தப் பட்டதைப் போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
ஊடக வளர்ச்சியில் இது போன்ற செயல்கள் சகோ.மீராஷா அவர்கள் கூறுவதுபோல் பரவலாகவும் இலகுவாகவும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. அவரவர் மனசாட்சியின்படியும் இறைவனுக்கு அஞ்சியும் நடந்து கொள்ளவேண்டும்.
என்னைப் பொருத்தவரை, என்னுடைய ஆக்கங்களை தொடர்ந்து ஒரே நபர் வேறு தளங்களில் அவர் பெயரில் பதிவு செய்து வருகிறார். அவரது மின் அஞ்சலுக்கு ஒவ்வொரு முறையும் நான் கண்டனம் அனுப்பியும் கடந்த வாரம் வரை இந்த செயல் தொடர்கிறது. இதை அ. நி. யின் நெறியாளர் அவர்களுக்கு நான் தொடர்ந்து கவனப்படுத்துகிறேன்.
இந்தப் பதிவை அத்தகையோர் படிக்கட்டும் திருந்தட்டும் என்று து ஆச செய்வோமாக. நாம் எழுதுவது சமுதாய விழிப்புண்ர்வுகளுக்காக.அது ஒரு முறையாக இருந்தால் அனைவருக்கும் மகிழ்வே.
இந்தப் பதிவுக்கு நன்றி.
//அன்பு நெறியாளர்:
copy -paste செய்து அனுப்பப்பட்டிருப்பதாக உங்கள் குழுவினர்க்கு நூறு விழுக்காடு ஐயமின்றித் தெரிந்தால் உடனே ஆக்கங்களை அனுப்பியப் பங்களிப்பாளர்க்குத் திருப்பி அனுப்பி விடுதல் நலம்; நீங்கள் அப்படிப்பட்ட பதிவுகளை உங்களின் அ.நி. தளத்தில் பதிய வேண்டா.//
அன்பு கலாம் காக்கா:
பதிவின் நோக்கம், அதிரைநிருபரில் வெளிவரும் பதிவுகள் நிரம்ப மின்னாடல் குழுமத்தில் உளாவருவதில் மகிழ்வே, அங்கே சிறு வருத்தமெனில் கட்டுரையை எழுதியவரின் பெயரை நன்றி கூறாமல் பதியப்படுவதை பல்வேறு தருணங்களில் வாசகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். அல்லது கட்டுரை வெளியான தளத்தின் பெயரையாவது நன்றியுடன் பதிந்திருக்கலாம் அவர்கள்.
இது ஒரு வேண்டுகோள் மட்டுமே ! பகிர்வதில் சந்தோஷமே, கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டுமென்பதே நம் அனைவரின் நோக்கம்.
அதிரைநிருபர் தளம் காப்பி + பேஸ்ட் விடயத்தில் தெளிவாக இருக்கிறது !
ஒருசில செய்திகளை வேறுதளங்களில் படித்துவிட்டு அதுசம்பந்தமாக நமக்கு தெரிந்த செய்திகளை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் தேன்தடவி சுவை கூட்டி தருவது தவறில்லை முழு ஆட்டையும் சகனில் ஆட்டையை போடுவதுதான் தவறு (பூசணி காய் இப்போ அவுட் ஆப் பேசன்ஆச்சு)
//முழு ஆட்டையும் சகனில் ஆட்டையை போடுவதுதான் தவறு (பூசணி காய் இப்போ அவுட் ஆப் பேசன்ஆச்சு) //
மேலே உள்ள விசயம் Tuan Haji சாகுலின் நகைச்சுவை உணர்வில் வெளியானதாக இருந்தாலும் காப்பி / பேஸ்ட் செய்யும்போது சிரித்துக்கொண்டே செய்தேன்.
பூசனி > ஆடு = இதுதான் கிரியேட்டிவிட்டி [ அதிராம்பட்டினத்துக்கே சொந்தமானது ]
ஆக்கத்தை எழுதியவரின் பெயரையோ ஆக்கம் வெளியானத் தளத்தையோ நன்றியோடு குறிப்பிடாமல் எடுத்தாள்வது அயோக்கியத்தனம்.
ஸைபர் க்ரைம் வகைகளில் சேர்த்தால் திருந்துவார்கள்.
இன்று மாலை எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்...
அதில் !
%% போலிச்சாமியர்களை தண்டிக்கிற மாதிரி...%% ன்னு ஆரம்பித்த மின்னஞ்சலைப் படித்ததும் வாய் விட்டுச் சிரித்தேன்... இதே போல் வேறு யாருக்கும் வந்ததா ?
காப்பி பண்ணாதீங்கப்பா...கருத்தைமட்டும் எடுத்துக்கொண்டு...உங்கள் ஸ்டையில் தந்தால் அது தப்பில்லை....ஊரில எத்தனை புரோட்டா கடை இருந்தாலும் அதன் தயாரிப்புகள் ஒன்னா இருந்தாலும்...நூர் லாஜ்-கடையும் சாவன்னா கடையும் எச்சி ஊர வைக்குமுல அதே போல்தான் இதுவும்...அதுக்காக எல்லா புரோட்டா கடைகளும் பவர்டு பை நூர் லாட்ஜ்ண்டு போட முடியுமா
அன்பு நெறியாளர் அபுஇப்றாஹிம்:
உங்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை நெறிமுறைகட்குட்பட்டு இத்தளத்தின் நெறியாளர்ப் பொறுப்பைச் செவ்வனே செய்து வருதல் யாம் அறிவோம். அதனாற்றான், நீங்களும், உங்கள் குழுவினரும் இடும் அன்புக்கட்டளைக்குப் பணிகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
சகோதரர்கள் இங்கே பகிர்ந்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சரியே.
அப்படியே எழுத்து அதன் கலர் மாறாமல் காப்பியடிப்பது மட்டுமல்ல அதனை எழுதிய அல்லது வெளியான வலைத்தளத்தின் பெயரை நன்றி கூறாமல் இருப்பது வருந்தத்தக்கதே.
எனது மகள் இணையத்தில் தேடியெடுத்த ஹிண்ட்ஸ்களை வைத்து கட்டுரை எழுதி பள்ளியில் சமர்ப்பிர்த்தாள் அதன் அடிக்குறிப்பில் source என்று இட்டு தேடி எடுத்த இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தாள், மகளின் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது. கூடுதலாக அடிக்குறிப்பிட்ட அந்த நேர்மைக்கு பாராட்டும் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.
Post a Comment