Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுகாதாரத்திற்கு முன்னுரிமை ! பேரூராட்சித் தலைவர் பேட்டி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2011 | , ,

அதிரையில் இன்றைய தலையாய பிரச்சினையாக இருப்பது அடிப்படை சுகாதாரமே, இதனை மனதில் கொண்டுதான் தேர்தல் களத்தில் முன்னின்றதாக அதிரை பேருராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்கள் அதிரைநிருபர் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

பதவி ஏற்பு நடந்ததும் முதல் வேலையாக சுகாதரத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்களை துவக்க இருப்பதாகவும், அன்றாடம் எதிர் நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு செயல்பட முடிவு செய்திருப்பதாக மேலும் தெரிவித்தார்.

நன்றி மறப்பது நன்றன்னு என்பதற்கினங்க வெற்றிக்காக உழைத்தவர்கள் அவர்களின் சுயலாபத்திற்காக அல்லாமல் ஊர் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் உழைத்ததன் பலனை நிச்சயம் அதிரை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் மும்முரமாக ஈடுபடப் போதவகாவும் தெரிவித்தார்.

தோல்வியைத் தழுவிய சகோதரர்களை காலச் சூழல் அறிந்து அவர்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர்களோடு ஒன்றினைந்து செயல்படவும் தயராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட நண்பர்களோடு தொடர்பு கொண்டு பேசுகையில், பதவிகள் இல்லா நாட்களில் துணிவே பாதை என்றமைத்து நற்காரியங்கள் செய்தவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது தொடர்ந்து ஊருக்காக செயல்பட்டு நிச்சயம் சாதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.





- அதிரைநிருபர் குழு

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தேர்தலுக்கு முன்னர் அதிகமாக சொல்லாததால், வெற்றி பெற்றதும் சொல்லாததையும் செய்வோம் என்று சூசகமாக சொல்லிய விதம் அருமை !

தொடரட்டும் நற்பனிகள், நண்பர்கள் மீது வைத்திருக்கும் நெருக்கமும் அன்பும் நிலைத்து ஊர் நலனையே முன்னிருத்தி செயல்பட வாழ்த்துகிறோம்

இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று பட்டியலிட ஆசைதான் இருப்பினும் எதைச் செய்தாலும் ஊர் நலனுக்கு என்று உறுதியளித்திருப்பதால் வரவேற்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் !

நிஸார் அஹமது said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நண்பர் சேர்மன் அஸ்லாம் அவர்கள் வெற்றியை கொண்டாடாமல் மிக நிதானமாகவும் அதே சமயம் நன்றியுடனும் இந்த பேட்டியை அளித்துள்ள விதமே அவரிடம் ஒரு பக்குவப்பட்ட தலைவருக்கான தகுதி தெரிகிறது.
அரசியலுக்கு வரும் முன்பே சுய ஆர்வத்துடன் - பிறரது விமர்சனங்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் - சமூக சேவை செய்துவந்தவர்., எனவே கிடைத்துள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அதிராம்பட்டினம் மக்களுக்கு - பாகுபாடு இல்லாமல் சிறந்த சேவையாற்றுவார் என எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரைப் பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்களிடம் சற்று முன்னர் அலைபேசி வழியேப் பேசினேன்;அலைகளாய் வேலைகள் பற்பல இருப்பினும் எனது அழைப்பிற்கு மறுமொழிக் கொடுத்த பண்பின் மூலம் எந்த நேரமும் அவர்களைத் தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற நன்னம்பிகையினை உணர்ந்தேன்.மேலும்,இவ்வொலிப் பேட்டி வழியே அவர்கள் தன்னடக்கத்துடன் பேசிய உரையினைக் கேட்டு அவர்களின் அரசியல் பாதை அல்லாஹ்வுக்கு பயந்த ஒன்றாகவே அமையும் என்பதும் எதனை முன்னுரிமைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையும் கண்டு கொண்டேன்.

எளியத் தோற்றம்
எளிமையானக்
குறைவான வாக்குறுதிகள்
தெளிவானச் சிந்தனை
இது போதும்
இனி நாம் எதிர்பார்த்த
அரசியல் தலைவர்
இங்கே உருவாகி விட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்

sabeer.abushahruk said...

சகோதரர் அஸ்லம் அவர்களின் பேச்சு அரசியல்வாதிகளின் பேச்சுப் போல இல்லாதது மிக ஆறுதலாக இருப்பதோடு நம்பிக்கைத் தருவதாக இருக்கிறது. துவங்குங்கள் தலைவர் அவர்களே தோள் தருகிறோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சேர்மன் அஸ்லம் அவர்களால் அதிரையே ஆரோக்கியமாகட்டும்.

//தோல்வியைத் தழுவிய சகோதரர்களை காலச் சூழல் அறிந்து அவர்களை சந்திக்கவும் அவர்களோடு ஒன்றிணைந்து செயல்படவும் தயாராக இருப்பதாகவும், ஊர்நலனே அரும்பாடுபட்டவர்களுக்கு செய்யும் கைமாறு என்று சொன்னதும்//

முதற்குடிமகனுக்கு நிகரான சிறந்த நிர்வாகத் துவக்கம்.

ZAKIR HUSSAIN said...

To Brother S.H. Asslam,

Since you have worked in Singapore..we expect atleast 30% of Singapore Cleanliness in our Adirampattinam. hope you can do it. The entire Adirampattinam is looking towards your effort and work.

Wish you all the best.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி மு க .வேட்பாளர் S.H.அஸ்லம் அவர்கள் வெற்றி வாகை சூடி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார்கள் .
இது சாதாரன வெற்றி அல்ல.அதிரைக்கு பெரும் மாற்றம் வேண்டும்.என்கிற
அதிரை மக்களின் அடங்கா தாகத்தின் விளைவுதான்.அல்லாஹ்வின் உதவி கிடைத்துள்ளது .சுகாதாரத்திற்கு முன் மாதிரியான ஊராக மாற்றி அமைக்க சேர்மன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அஸ்லம் வச்ச கூடையிலே கூளத்தத் தானே போடச் சொன்னோம் , ஓட்டையா போடச் சொன்னோம்?! தீந்த பொண்டுவமா நீங்க!!

-வாவன்னா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அஸ்லம் வச்ச கூடையிலே கூளத்தத் தானே போடச் சொன்னோம் , ஓட்டையா போடச் சொன்னோம்?! தீந்த பொண்டுவமா நீங்க!! ///

அஸ்லம் தலைவரா வந்தால் அந்த கூடையிலிருப்பதை அள்ளிட ஏற்பாடு செய்வார் என்ற நம்பிக்கையில் அனைவரும் ஓட்டையும் போட்டிருப்பார்கள் !

மிகவும் ரசித்த கருத்து ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

குப்பைக்கு அஸ்லம் அவர்கள்
”குட்பை” சொல்லத்தான் துடிக்கின்றார்கள்

புதுசுரபி said...

தமிழகத்தின் முன்மாதிரி பேரூராட்சியினை உருவாக்க,
சகோதரருக்கு வாழ்த்துகள்!

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்லம் வச்ச கூடையிலே கூளத்தையும் போட்டார்கள், ஓட்டையும் போட்டு அவர்களை வெற்றிபெறவும் செய்துவிட்டார்கள் இந்த பொண்டுவோ.

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்லம் வச்ச கூடையிலே கூளத்தையும் போட்டார்கள், ஓட்டையும் போட்டு அவர்களை வெற்றிபெறவும் செய்துவிட்டார்கள் இந்த பொண்டுவோ.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு