Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை நிருபர் யாருடன் போட்டி? 11

தாஜுதீன் (THAJUDEEN ) | July 09, 2010 | , ,


நம்முடைய அதிரை நிருபர் வலைப்பூ போட்டிக்காக உருவாக்கப்பட்ட அதிரை செய்தி ஊடகம் என்ற குற்றச்சாட்டு எம்முடைய நட்பு வட்டாரத்திலிருந்து வந்துள்ளது.                                                                      

அதிரை நிருபர் வலைப்பூ அதிரையில் உள்ள மற்ற வலைப்பூக்களைப் போன்று ஒரு சாதாரண வலைப்பூ தான். சில அதிரை வலைப்பூக்கள் பரப்பரப்பு நிறைந்த செய்திகளையும், வேறு செய்தி ஊடங்களின் செய்திகளையும், கல்வி செய்திகளையும், மருத்துவ செய்திகளையும், பல்சுவை செய்திகளை, சமையல் செய்திகளை, மார்க்க செய்திகளையும், இயக்க செய்திகளையும், மற்ற செய்திகளையும் தனித்தனியாக வெளியிட்டு வருகிறது அதனுடன் சேர்ந்து தான் நம்முடைய அதிரை நிருபரும் அதிரை நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

எம்முடைய முதல் நோக்கம், இணையத்தின் மூலம் பிரிவினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை நம் அதிரைவாசிகளிடம் ஏற்படுத்துவது மட்டும் தான் நோக்கம். வேறு எந்த புரட்சி வசனங்களும், எந்த புலம்பல்களும் நம்மிடம் இல்லை.

அதிரை நிருபரில் வரும் செய்திகளும், கட்டுரைகளும் எந்த தனி நபரையோ, எந்த சமுதாயத்தையோ தாக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் பலமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ்.

அதிரை நிருபரின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இனியும் அதிகரிக்கப்படும், உங்களின் மேலான கருத்துக்களை எமக்கு தெரிவிக்கலாம், இதோ ஈ-மடல் முகவரி tjdn77@gmail.com , அதிரை நல்ல செய்திகள், கட்டுரைகள் எம்முடைய முகவரிக்கு அனுப்பிவையுங்கள், இவைகள் நல்ல செய்தியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பதியப்படும். பின்னூட்ட கருத்துக்கள் யாருடைய மனதை பாதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீக்கப்படும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால் உடனே நீக்கப்படும், எவ்விதத்திலும் சப்பை கட்டுகள் கட்டி சமாளிக்கப்படமாட்டாது என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

அதிரைக்காக நடுநிலையான அனைத்து தெருவாசிகளை உள்ளடக்கிய ஒரு பொது இணையத்தளம் நிச்சயம் தேவை, இதற்காக ஒழிந்துக்கொண்டு இணையத்தளம் வைப்பதில் எந்த நண்மையும் இல்லை, குழப்பங்களும் பிரிவினைகளும் தான் வரும், இதற்காக நேரத்தை வீணடித்து பதில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சமூக அக்கறையுடன் எழுதுபவர்கள் ஒழிந்துக் கொண்டு எழுத வேண்டி அவசியமில்லை என்பது என்னுடைய நம்பிக்கை, சொல்லும் செய்தியின் நம்பகத்தன்மையும் பலப்படும்.

அதிரை பெயருடன் இணைந்து வரும் அத்துனை வலைப்பூக்களும் (சகோதரர்களும்) சமூக அக்கரையுடன் செய்திகள் வெளியிடுகிறார்கள் என்று  நம்புகிறவன் நான். இங்கு அதிரை நிருபர் யாருடன் போட்டி போடவில்லை, போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை, அதிரை நிருபரில் அதிரையின் நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகள் மட்டும் வெளிவரும்.

விரைவில் அதிரை நிருபர் வலைப்பூக்கான விதிமுறைகள் வெளியிடப்படும்.

அதிரைக்கு என்று ஒரு நல்ல பொது இணையத்தளத்தை யாராவது உருவாக்கினால், நிச்சயம் அதிரை நிருபர் மூடப்படும். நீண்ட காலமாக இருக்கும் வலைப்பூக்களில் ஏதாவது ஒன்று பொதுவான விதி முறைகளுடன், நல்ல மனப்பக்குவபட்ட பதிவாளர்களை தேர்வு செய்து, சர்ச்சைகள் இல்லாத தினசரி செய்திகளை வெளியிட்டு நடத்துபவர்கள் இன்னார் தான் என்று வெளியிட்டால் எல்லா கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒற்றுமையை நிலை நிறுத்த என்னைப்போன்றவர்கள் நிச்சயம் தயாராகி உள்ளோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். யாராவது முன்வர மாட்டார்களா?

ஏன் நல்ல செய்திகளால் நம்முடைய ஊர்மக்களின் இதயங்களை இந்த இணையத்தின் மூலம் இணைக்க முடியாதா என்ன?

முடியும் என்பது என்னுடை பலமான நம்பிக்கை. அல்லாஹ் நாடினால் முடியும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி படுத்துவானாக.

அன்புடன்

தாஜுதீன்


ஜூலை 08.07.2010

11 Responses So Far:

crown said...

தலைப்பு சற்று மலைப்பை தந்தாலும் இந்த இணையப்பூ இனிப்புதான்.னல்லதொரு பொது இணையம் வந்துவிட்டால் இதை மூடிவிடத்தாயர் என்ற முடிவோ முத்தாய்போ வேண்டாமே! இதையே நீங்கள் சொல்லவந்த் இணையம் போல் இயக்கலாம் இதில் நல் இதயங்கள் இணையலாம் இன்சாஅல்லாஹ் .இனி ஒரு தயக்கம் வேண்டாம்.எல்லா நல்ல சிந்தனையும் நம் சமூகத்திற்கு வலுசேர்பதும்,பயன் சேர்பதுவுமே!தொடரட்டும் உம் பணி அது இனிதாய் சிறக்க வல்ல அல்லாஹ் துணை இருப்பானாக ஆமீன்.

crown said...

என்னுடைய இணையதில் தம்முடைய இணையச்சுட்டியை இணைதுள்ளேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//crown கூறியது... பொது இணையம் வந்துவிட்டால் இதை மூடிவிடத்தாயர் என்ற முடிவோ முத்தாய்போ வேண்டாமே! இதையே நீங்கள் சொல்லவந்த் இணையம் போல் இயக்கலாம் இதில் நல் இதயங்கள் இணையலாம் இன்சாஅல்லாஹ்//

சகோதரர் தஸ்தகீர் உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

தங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
அதிரை நிருபரை உங்களை இணையத்தில் இணைத்ததுக்கு மிக்க நன்றி.

Yasir said...

சகோ.தாஜீதின்..இதை இங்கு சொன்னால் முகஸ்த்துதி என்று ஆகிவிடும்..அல்லாஹ் போதுமானவன்...பெருமைக்கும் & புகழுக்கும் கொடிபிடிக்கும் இந்த காலத்தில் “ அதிரைக்கு ஒரு பொதுவான இணையம் கிடைத்தால் இதை மூடிவிடுவோம் “ என்றும் சொல்லும் தைரியம் யாருக்கு வரும்,,உங்கள் எழுத்தில் மட்டுமல்ல எண்ணத்திலும் ஒற்றுமை வேரூன்றி இருப்பதை அறிய முடிகிறது..அல்லாஹ் நாம் யாவரையும் மரணிக்கும் வரை சமுதாய , குடும்ப ஒற்றுமை பேணுபவர்களாக ஆக்கி வைப்பானாக : ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் யாசிர். உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களுடன் சேர்ந்து நானும் நம் ஊர், நம் சமுதாய ஒற்றுமைக்காக துஆ செய்கிறேன்.

Shameed said...

வலைப்புகளில் அவர் வைத்து இருந்தால் இவர் வைத்துகொள்ள கூடாது என்பது எல்லாம் சட்டமும் கிடையாது நியாயமும் கிடையாது தேவை படுபவர் வைத்துகொள்ளலாம் வைத்து இருப்பவர் நேர்மையாகவும் நியாயமாகவும் அல்லாஹ்விற்கு பயந்து நடந்துகொள்ளவேண்டும், அவருக்கு போட்டி இவருக்கு போட்டிஎன்பது வியாபாரத்திலும் வருமானம் ஈடுவதிளும்தான் இதில் கிடையாது என்பது தான் என் கருத்து .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//shahulhameed கூறியது... போட்டிஎன்பது வியாபாரத்திலும் வருமானம் ஈடுவதிளும்தான் இதில் கிடையாது என்பது தான் என் கருத்து//

சகோதரர் சாஹுல் என்னுடைய கருத்தும் இது தான்.

அப்துல்மாலிக் said...

//இணையத்தின் மூலம் பிரிவினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை நம் அதிரைவாசிகளிடம் ஏற்படுத்துவது மட்டும் தான் நோக்கம். //
தாங்கள் நோக்கம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்

ஃபாளோயர் ஆகமுடியலியே, ஏதாவது வழி இருக்கா?

அப்துல்மாலிக் said...

தாங்கள் பதிவை பிந்தொடர முடியவில்லை. இல்லையேல் என் மின் அஞ்சலை subscribe செய்யவும்.

அப்துல் மாலிக்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர் அபூஅஃப்ஸர் (மாலிக்), வருகைக்கு நன்றி.
நம் அதிரை நிருபரில் ஃபாளோயர் விட்ஜெட்டை விரைவில் சேர்த்துவிடுகிறேன்.
தங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளும், ஊக்கமும் என்னை இன்னும் சிறப்பாக செய்ய உதவும் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு