அழகு
ஓர் அழைப்பிதழ்
முத்திரையிடு முகவரியிடு
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்
அழகு
பதிவுத் தபால்கள்
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்
அழகு
தந்திச் செய்தி
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே
அழகு
மின்னஞ்சல் வர்ணனைகளில்
வசியப் படுத்துபவை
புகைப்படம் அவசியமில்லை
அழகு
குறுஞ்செய்தி யல்ல
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
அழகு
பாதுகாக்கப்பட்டால் மட்டுமே
திருமண வாழ்த்துகள்
தாங்கிய தட்டி,
பிழைத்தால்
கண்ணீர் அஞ்சலியாய்ச்
சுவரொட்டி!
sabeer.abushahruk
ஓர் அழைப்பிதழ்
முத்திரையிடு முகவரியிடு
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்
அழகு
பதிவுத் தபால்கள்
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்
அழகு
தந்திச் செய்தி
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே
அழகு
மின்னஞ்சல் வர்ணனைகளில்
வசியப் படுத்துபவை
புகைப்படம் அவசியமில்லை
அழகு
குறுஞ்செய்தி யல்ல
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
அழகு
பாதுகாக்கப்பட்டால் மட்டுமே
திருமண வாழ்த்துகள்
தாங்கிய தட்டி,
பிழைத்தால்
கண்ணீர் அஞ்சலியாய்ச்
சுவரொட்டி!
sabeer.abushahruk
26 Responses So Far:
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
Nice lines on protecting beauty of women.
"Its very nature of men to get attracted
To every aspect of women regardless of cultures.
Actualy beauty(attraction) of women
In the beholder(only men)'s eyes.
Protecting women from men's eye sight is vital.
With correct judgement can realize it is factual."
Thanks and best regards,
B. Ahamed Ameen.
//அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது//
ஆஹா !
இந்த வண்ணங்களிலிருந்து தப்பித்தால்
அழகோ ஆழகு !
அழகுக்கு அழகு. அழகான அறிவுரைகள். மனதில் ஆழப்பதியும் வார்த்தைகள்.
அழகைக் கவிதையில் காட்டும் அழகு
அழகும் மதிக்கும் அளவு.
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
அழகோ ஆழகு
அற்புதமான வரிகள்
அழகு
அது அபூசாருக் தந்தையின்
ஆக்கமாயிருப்பதால்
அழகு
ஆக்கமாயிருந்தாலும்
அதன் பின்னே தொடரும்
பின்னூட்டமாயிருந்தாலும்
அழகு
அது கருப்பு வெள்ளையாய் சொன்னாலும் சரி
அல்லது கலர்கலராய் சொன்னாலும் சரியே
அழகு
எது பற்றி சொன்னாலும்
அத்தனையுமே!
--------------------------------------------------------
ரபியுள் அவ்வல் 9
1434
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
***
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
****
ஆமாம்! அழகுற சொல்லியிருக்கிறீர்கள் சகோதரரே.
இங்கே வெளியாகும் அனைத்து கவிதைகளையும் மவுனமாக வாசித்துக் கொண்டிருந்த என்னையும் கருத்துச் சொல்ல வைத்து விட்டீர்கள்.
இந்த வரிகள்
கூட
அழகுக்கு
அழகு
சேர்க்குது
சகோதரா...
அழகு
ஓர் அழைப்பிதழ்
முத்திரையிடு முகவரியிடு
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆம் அழைக்கும் இதழ்(உதடு)அசைத்து அழைக்கட்டும் உரியவனைமட்டுமே எனும் அழைப்பிதழ் பதியும் கவிதை! அர்த்தம் புதைந்து , அழகாய் புனைந்த எச்சரிக்கை கடிதம்!
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்.
------------------------------------------
அஞ்சலட்டை உறையில்லாத(சட்டையில்லா அட்டை) நிர்வானம்தான்!அதனால்தான் முதுகில் பின் முத்திரை குத்தப்படுகிறது, முகத்திற்கு திரையில்லாவிட்டாலும் ,உறையில்லாவிட்டாலும் முகத்திரை கிழியும் என்பது நிசர்சன உண்மை!
அழகு
பதிவுத் தபால்கள்
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
------------------------------------------------------------------
இது மனதில் பதியாவிட்டாள் வாழ்கை சறுக்கி 'தபால்' என அதாளபாளத்தில் வீழ நேரும்!
ஜாயிரு,
தூண்டில் எப்புடி?
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது//
இது என்ன வார்த்தை ஜாலம் மாஷா அல்லாஹ்...ஒரு சீரியஸான விசயத்தை, இன்று ”அழகு”அலக்கழிக்கபடும் அவலத்தை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் கவிஞரே......மறைத்தால் அழகு இல்லாவிட்டால் அது அழுகாகிவிடும்
//தூண்டில் எப்புடி?// எந்த தூண்டிலிலும் சிக்காத இந்த வைரமீன் எப்படி உங்க.....? எப்படியோ கிரவுன் வந்தா கலக்கல்தான்...வெல்கம் பேக்- பிரதர்
அழகு
தந்திச் செய்தி
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே
-----------------------------------------------------------
தந்தி செய்தியை முந்தி தரும் ஆனாலும் முந்தி தரும் பெண் உரியவனுக்கே முந்தி தரணும்.முந்தி தருவதென்றாலும் முறையாக முடித்த பிறகே முந்தி பிந்தி தரணும். கவிஞர் தரும் தந்தி போல இந்த செய்தி தங்கத்தில் பதிக்கவேண்டிய பொன்னெழுத்து. இதை பெண் தன்மனதில் எழுதி அழுத்தி பதிந்து,உரியவனுக்கே எல்லாம் என உறுதிகையாளனும். இல்லையனில் அவள் வாழ்கை பொதுவில் வாசிக்கப்படும் செய்தியாகிவிடும்.
அழகு
குறுஞ்செய்தி யல்ல
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
-------------------------------------------
தேனை சிருஞ்சியில் உறிஞ்சி அதை உள்ளே அனுப்பிய விதம் அழகும் அது தேனானாலும் இடம் குணம் மாறினால் விடத்தை கக்கும் தேள் என்பது அழகுற சொல்பதம் கவிஞரின் கைவண்ணம் என்றும் அழகு திண்ணம்.
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
----------------------------------------------------
ஆமாம் நடத்தையெனும் ஓவியம் சரியாகிதீட்டப்படாவிட்டால் அது அலங்கோலம், அதன் சாயல் நீங்கி சாயம் வெளுத்து வாழ்கை முழுதும் அதன் காயம் வரும் வண்ணம் ஆகிவிடும்.
யாசிர்,
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஒரு தபால்காரருக்காகப் பிரத்யேகமக எழுதப்பட்டது இந்த கடிதம். எனவேதான் அஞ்சலைச்சார்ந்தே எழுதியிருக்கிறேன்.
அவர் வாசிக்க நிச்சயம் வருவார் என்று தெரியும். காரணம், தூண்டிலில் நான் வைத்தது தீணியல்ல , தமிழ்.
கிரவுனைப்போல ஒரு ரசனைக்காரர் வாசிக்காவிடில் அது எனக்கு எப்போதும் ஒரும் பெருங்குறையே.
மேற்கொண்டு ஏற்புரையில்.
இப்போதுதான் கவிதைக்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கிறது.
//ஜாயிரு,
தூண்டில் எப்புடி? //
ரொம்ப அநியாயம் பாஸ்....
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
கவி சபீர் காக்கா ...
வடித்த கவி வரிகளில்
பிடித்த வரிகள் ...
///அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது///
வானவில்லே
மழைமேகம்
இல்லையெனில்
உன்னைக்
காணவில்லே
ஆனாலும்
எம் கவிஞரின்
வர்ணணையின்
அழகிலே
காண்கிறோம்
வர்ணஜாலத்தை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏனைய ஆக்கங்களுக்கான பின்னூட்டங்களைவிட கவிதைகளுக்கான பின்னூட்டமிடும்போது இடுபவர்களின் வயது குறைவைதையும் மொழியில் அழகு கூடுவதையும் தாமும் எழுத வேண்டும் என்னும் முனைப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது.
எண்ணங்களை அழகாக வைத்துக்கொள்ளும் யாவருக்கும் எழுத்தும் அழகாகவே வரும்.
ஆகவே, உள்ளத்தழகை அழகாக உலகுக்கு வெளிப்படுத்தி உடலை அழகாய் உரியவருக்கு மட்டும் காட்டி வாழ ஊக்குவிப்போம்.
சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் நன்றி.
கிரவுன், நீங்கள் தூக்கி வீசிவிட்டுப் போயிருக்கும் வார்த்தைகளே இத்தனைச் சுவையாயிருக்கின்றனவே, கொஞ்சம் கோத்தெடுத்துப் பதிவாகத் தரக்கூடாதா? வழக்கம்போல் கிரவுனார் தமிழுரைக்கு நன்றி.
அழகைப் பற்றி அழகாக சொல்லியுள்ளார். அழகை ரசிக்க அருமையான மனமும் குணமும் வேண்டும் .இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு .அழகில் உள்ள உண்மையை அறிந்துக் கொள்வதும் இறைவனை அறிந்துக் கொள்ள வழியாக அமையும் .
Post a Comment