இயற்கை இன்பம்...

மலைமகன் 
கார்மேகக்  கூட்டத்தை  வானில்  கண்டு                        
காதல்வயப்  பட்டவனாய்  முத்த  மிட்டுப்
பார்மீது  தனக்குள்ள  பிணைப்பி  னாலே
பதிவிரதை  மேகமகள்  அணைத்த  போது
நீர்விந்தை  அவளுக்குள்  மலையும்  பாய்ச்ச
நிலமெல்லாம்  மகிழ்ச்சியினால்  உணர்ச்சி  பெற்றுச்
சீர்மிக்க  மணப்பரிசாய்  நமக்குத்  தந்தான்
சிறப்பான  அருவியெனும்  மகனைத்  தானே!  

அதிரை அஹ்மத்

6 கருத்துகள்

sheikdawoodmohamedfarook சொன்னது…

கோடைவெயில் வந்து வேர்த்து மேனி புழுங்கிஎரியும் போது குளிரான கவிதை.மேனிக்கு இன்பம்.

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

அட்டகாசமான ஒப்பீடு !
நறுக்கென்று சுருக்கமாய் !


இதன் நீட்சியாய் நான் எழுதிய வேறொரு கோணத்தில் இதோ .....

நினைவுகள் புதியன !
கடற்கரையின் காற்றில்

ஒரு வண்ண மயில்

தோகையை விரித்து

அற்புத எண்ணங்களை

ஓவியமாக இறகுகளில் வரைந்து

விரித்து ஆடியது ஒரு நிகழ்வு எனில் .............

கடற்கரையின் காற்றுக்கு மேலேயுள்ள கருமேகமே நினைவுகளாகும் ,

***************

கார் மேகங்கள் குவிந்து ,

அங்குமிங்கு அலைமோதி ,

தப்படித்து ,குவியல் குவியலாய்

ஒரே இடத்தில் கூடுவது என்பது நிகழ்வு எனில் ....................

தரையில் ,மலையின் மேலே நீராவது மேகங்களின் நினைவாகும் ,

******************

மலையின் மேலே

அழகாய் தவழ்ந்து ,

மேற்படும் நினைவுகளாம்

இலைகளின் அசைவுகளும் ,

பூச்சொரிவுகளும் ,

பறவை ,விலங்குகளின் விளையாட்டையும் ,

தன் மீது வீழும் சருகுகள் ,

பூக்கள் என

யாவயும் படம்பிடித்து
தவழும் நீரோடை என்பது நிகழ்வு எனில் ..............

சற்று தொலைவில்

மலையின் நுனியில் ஓரம் சென்று

பிரம்மாண்ட அருவியாய் மாறுவது

அதன் நினைவாகும் ...

***********

ஆர்ப்பரிக்கும் அலப்பறையில்

நெஞ்சு புடைத்து ,

ஆனந்த திமிரில் சந்தோஷ சிதறல்களாய்

கொட்டும் அருவி என்பது நிகழ்வு எனில் ...............

எதார்த்தம் அறிந்து தரையில்

ஆறாக மாறுவது

அருவியின் நினைவுகளாகும் ...

**************
திக்கு திசை தெரியாமல் ,

பின்புலத்தில் அருவியின் தைரியம் என

மார்தட்டி எதிர்படும்

தடைகளை உடைத்து ,மிதித்து

செல்லும் ஆறு ஒரு நிகழ்வு எனில் ..............சுடும் பிரதேசத்தின் வெயிலினால்

சுட்டு புடமெடுத்த மணல்

பருக்கைகளை மின்னிடும்

வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........

******************

ஆற்று நீரின் உறவால்

மின்னிடும் மணல் பருக்கையின்

பிம்பங்கள் ஒரு நிகழ்வு எனில் ............

வளமொங்கும் பயிர்களை வளர்த்து

மீந்தும் நீரை வழியனுப்புவது

மணல் பருக்கையின் நினைவாகும் ....

*************

கடத்தி வரப்பட்ட நீரின்

ஆற்றுப் படுகையில் காய்ந்து ,

பூக்கள் இழந்து நிற்கும் செடிகள் என்பது நிகழ்வு எனில் ......

பருவக்காற்றில் அசைந்தாடும் பூக்களின்

பிம்பங்களை தன மீது சுமந்து ,செடிகளின்

பார்வைக்கு விருந்தாக்க முனைவது

ஆற்றின் நினைவுகளாகும் ..

******************

இல்லாத எல்லைகளை தொட்டு

முடித்து ,

ஆற்றின் அடைக்கலம் கடல் என்பது நிகழ்வு எனில் ...........

அதன் நினைவுகள் ..???

முதலிலிருந்து படியுங்கள்

---Harmys---

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

மலையும் முகிழும் முயங்கி மகிழும் அழகியலை தமிழில் கொட்டுகிறது கவிதை, தணிக்கைக்குத் தப்பித்து!

Unknown சொன்னது…

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

பட்டப் பகலில்
கொள்ளை;
போனது மனது
அடித்தது இயற்கை: