Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பட்டா இல்லாத (தனி)குடில்கள்... 24

தாஜுதீன் (THAJUDEEN ) | July 23, 2010 | , ,


என் ஊர், என் சங்கம், என் இயக்கம், என் வீடு ஆனால் (கதவு) எண்களில்லை... பட்டா இல்லை !?
                                                                                                         
கடந்த 13 வருடங்களுக்கு முன்னால் ஆங்காங்கே மின் அஞ்சல் குழுமம் / குழுக்கள் சிதறிக் கிடந்த நட்புகளை, சொந்தங்களை, புது உறவுகளை ஒன்று சேர்த்தது. அதாவது பொதுவான பொழுது போக்கு பூங்காவுக்குள் வருதுபோல் அல்லது கண்காட்சிக்கு வந்து தகவல்கள் பகிர்ந்து கொள்வது போல் இருந்தது. நேற்று விட்டு சென்ற இடத்தில் வேறு யாரெல்லாம் உட்கார்ந்தார்கள் கண்டு கழித்தார்கள் என்று மறுமுறை வந்தால் தெரிந்து கொள்ள முடியும். இங்கேயும் வழிகாட்டியோ அல்லது பொறுப்பாளரோ இருப்பார் அசிங்கம் செய்பவர்களை வெளியில் தள்ளிவிடவும் செய்வார் அல்லது தட்டிக் கேட்கவும் செய்வார்.

பொது இடம் என்பதால் நாவடக்கம் / வார்த்தைகளில் அடக்கம் கையாளப் படுவதுண்டு, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான செயல்களும் சிறப்பாக நடந்தேறியதும் உண்டு.

ஆனால் இன்றைய சூழலில் அப்படியான மின் அஞ்சல் குழுமம் / குழுக்களின் பங்கு குறைந்து வருகிறது, இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக இருப்பது தனிக் குடில் blog எனப்படும் வலைப்பூக்கள். இவைகளின் ஆதிக்கத்தினால் ஆங்காங்க வேண்டியவர்கள் தனக்கென தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே நடத்தும் கொட்டங்கள் ஏராளம், என் வீடுதானே நான் எதனையும் செய்வேன் எப்படி வேனும்னாலும் இருப்பேன், இதுதான் என் வாதமென்று தன்னிச்சையாக செயல் படுபவர்களும் உண்டு.

கிடைத்திருக்கிற இடத்தில் இலவசமாக வீடுகட்டி நல்லது செய்பவர்களும் ஏராளம். அதுமட்டுமா இப்படி கட்டிக் கொண்ட தனிக் குடிலில் சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் வாடகை கொடுக்காமல் தன்னிச்சையாவோ அல்லது பொது நலனோடு செயல் பட்டும் வருகிறார்கள்.

சிதறிக் கிடந்தவர்கள் ஒரு வலைக் கூட்டுக்குல் இருந்து மறைந்து, ஆளாளுக்கு வீடுகட்டிக் கொண்டு, சிலர் கதவைபூட்டிகிட்டு அடிக்கும் கொட்டம், மற்றும் சிலர் கதவை திறந்து போட்டுக் கொண்டு அடிக்கும் கொட்டம், வேறு சிலரோ பினாமியாக (முகமூடியுடன்) இலவசமாக கிடைத்திருக்கிறதே என்று படுத்தும் பாடு அதிகம் அதிகம் அதிகம்.

சரி, இந்த இலவச (வீட்டு மணைப்) பட்டா இல்லாத வீடுகளுக்கு இடம் கொடுத்தவர் திடீரென்று பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் இவர்கள் ?

வேறு வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க....

- அபுஇபுறாஹிம்

24 Responses So Far:

Adirai khalid said...

பல( 15 )வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன் பட்டாயில்லா நிலத்த்தில் ( geocities supported by யாஹூ) நாம் பயிரிட்ட ஞாபகம். உமர்தம்பிமாமா பயிரிட்டு மகசூல் செய்த நேரத்தில் நீயும் (மு. நெய்னாதம்பி) நானும் சின்னதாக விளைசல் செய்தோம். மாமா அவர்களின் அநேகமான படைப்புகள் அங்கே விதைக்கப் பட்டது. ஒரு சிலவைகளே அங்கே முளைத்தது. பல ஆக்கங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்டது காரணம் இலவசமாக geocities மூலம் வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்டு பல மென்பொருள்கள் மற்றும் தகவல்கள் இன சுத்திகரிப்பு செய்யப் பட்டது போல் காணமல் போய் விட்டது. இலவசமாக வழங்கப்பட்டதால் அதை நாம் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

இப்பொழுது உன் கேள்வியும் நமக்குள் எழுந்த ஓர் ஐயம்தான் ., என்ன செய்யலாம். இடம் வாங்கினாலும் பட்டா (yearly hosting fee) வருடாவருடம் செலுத்தவேண்டும்!! பதில்"?"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்ன செய்யலாம். இடம் வாங்கினாலும் பட்டா (yearly hosting fee) வருடாவருடம் செலுத்தவேண்டும்!! பதில்"?" //

மலரும் உணர்வுகளை நினைவுக்கு கொண்டுவந்திருக்கிறாய் !
கண்டிப்பாக வழிகள் உண்டு (நமக்குள் மனம் வைத்தால்) மீண்டும் பேசலாம், மற்றவர்களின் ஏக்கம் / கலக்கம் / ஆர்வம் / ஆலோசனைகள் எப்படி இருக்கிறதுன்னு பார்ப்போமே இங்கே !

Shameed said...

கவலை படா(தே)தீர் சகோதர இதை வைத்து (குடில்) வேறு எதையாவது வித்து சரி செய்துவிடுவார்கள் (கிரிகெட்டை வைத்து குளிர் பானங்கள் விற்பதுபோல்)

crown said...

cricket with cooldrink?

Shameed said...

அப்பாடா ( ) இல்லாமல் ஒரு பின்னுட்டம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்படின்னா cool(ஊத்தி)தான்(னு) சொல்றீங்களா !? அட இது ராக்கெட் விடுற காலமென்றா சொல்றீங்க ! :) அதனால அங்கே போய் குடில் கட்டிக்கலாமே ! (நட்புடன்)

Shameed said...

எப்புடி இப்புடிcoola யோசிகிரியலோ வெள்ளிகிழமை ஜூம்மா தொழுதுட்டு பிரியாணி சாபிட்டு விட்டு கூல் கூலா (நட்புகாக) capy past

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பிரியானியிலதான் பெரிய ஆணி இருக்குன்னு க்ரவுன்(கிட்டேயிருந்து) பதிலாக இருக்கும் !

ப்ரியானியா அப்படின்னா என்னாது ?

Shameed said...

m. naina thambi says
23 ஜூலை, 2010 2:12 pm
அப்படின்னா cool(ஊத்தி)தான்(னு) சொல்றீங்களா !? அட இது ராக்கெட் விடுற காலமென்றா சொல்றீங்க ! :) அதனால அங்கே போய் குடில் கட்டிக்கலாமே ! (நட்புடன்)

குடில் கட்டலாம் ஆனால் நாம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் மூலம் போய்ச் சேர குறைந்தது 8 மாதங்கள் ஆகும்(தற்போது உள்ள வசதிப்படி) பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் குறைந்தது 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம் நீங்கள் அங்கு இருந்து போன் மூலம் பேசுவதாக இருந்தால் அங்கு ஹெலோ சொன்னால் இங்கு அந்த ஹெலோ வந்துசேர 20 நிமிடம் ஆகும்

Zakir Hussain said...

M.Nainathambi Said:///

ப்ரியானியா அப்படின்னா என்னாது ?



பாய்..இது ரொம்ப அநியாயம் பாய்..ஒரு அதிராம்பட்டினத்து ஆள் இப்படி கேள்வி கேட்டால் மத்த ஊர்க்காரனுக என்ன செய்றது?...

chinnakaka said...

கொடுத்தவனே எடுத்து கொண்டானே தங்கம்! என்று புலம்புவதற்கு பதில் இப்பவே நல்ல முடிவு எடுங்க தங்கங்களே,

chinnakaka said...

இப்போ அதிராம்பட்ட்டினத்தில் மந்தி சோறும் கப்ஸாவும் பேஷனாக இருப்பதால் நெய்னாக்கு பிரியானி ஞாபகம் இல்லையோ!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

அவரு
ஏதோ பிரியா (ணி) நெனபுலே எளுதிபுட்டாறு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஆகா இன்று நம் சகோதரர்கள் எல்லாம் பிரியானி சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன் அதான் இப்படி ஒரே பிரியானி பத்தி பின்னூட்டமா இருக்கு. அடுத்த வாரம் வெள்ளி கிழமை எங்க ரூம்ல பிரியானிதான், முடிஞ்சா விசிட் விசா எடுத்து அடுத்த வாரம் எல்லோரும் துபாய்க்கு வாங்க.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சின்னகாக்கா, ஆளே பார்க்க முடியல, ஈமெயிலுக்கு பதில் போடுங்க.

Shameed said...

விசிட் விசாவில் வந்தால் வரும் விமானத்திலும் பிரியாணி கொடுப்பார்களா ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///குடில் கட்டலாம் ஆனால் நாம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் மூலம் போய்ச் சேர குறைந்தது 8 மாதங்கள் ஆகும்(தற்போது உள்ள வசதிப்படி) பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் குறைந்தது 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம் நீங்கள் அங்கு இருந்து போன் மூலம் பேசுவதாக இருந்தால் அங்கு ஹெலோ சொன்னால் இங்கு அந்த ஹெலோ வந்துசேர 20 நிமிடம் ஆகும்///


அட இங்கபாரு(ங்கப்பா) யோசனைச் சொல்லுங்க கேட்டா "சாஹுல்" ஏற்கனவே அங்கே இடம் வாங்கிப் போட்ட மாதிரி தெரியுது ? இவ்வ்வ்ளோ விஷயம் இருக்கா ? அதுசரி அங்குள்ள உங்க குடிலின் தொலைபேசி நம்பர் கொடுத்தா புண்ணியமா இருக்கும் வழிதெரிஞ்சுக்கத்தான் :)

///பாய்..இது ரொம்ப அநியாயம் பாய்..ஒரு அதிராம்பட்டினத்து ஆள் இப்படி கேள்வி கேட்டால் மத்த ஊர்க்காரனுக என்ன செய்றது?..///

பிரியாணி(யா?)ன்னு கேட்கும் நிலைதன் அந்த மாதிரி ஸீசனில் ஊரில் இருந்த நாட்கள் குறைவு, ஆனா வீட்டில் கிடைக்கும் ப்ரியா(மான)ணி சுவையே... வாங்களேன் சேர்ந்து சாப்பிடலாம்.. :)

//இப்போ அதிராம்பட்ட்டினத்தில் மந்தி சோறும் கப்ஸாவும் பேஷனாக இருப்பதால் நெய்னாக்கு பிரியானி ஞாபகம் இல்லையோ//

இந்த வெளாட்டில் (வெள்ளாடான்னு தெரியாது) நான் இதுவரை கலந்துகிட்டது இல்லை, வேற யாரும் விளையாடியிருந்தால் சொல்லுங்கப்பா !!

Shameed said...

கேள்வி நானு

உங்களுக்கு நைனா போடும் பிரியாணி பிடிக்குமா சாலிகு போடும் பிரியாணி பிடிக்குமா அல்லது நூர்லாட்ஜ் பிரியாணியா பிடிக்குமா ?

பதிலும் நானு

எல்லா பிரியானியும் பிடிக்கும்

(ஏதாவது ஒன்றை சொல்லி மற்ற இரண்டை மிஸ்பண்ண விரும்பவில்லை)

chinnakaka said...

துபாய்க்கு பிரியானி சாப்பிட விசா கிடைப்பது சுலபம் தான் it அது (but)ஆனால் சாப்பிட்டு தூங்கதான் (bed)இடம் கிடையாது சரிதானே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சின்னகாக்கா: ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம் உங்களின் முன்னனுபவமே சாட்சி. சாப்பிட்டு சாப்பிட்டு துங்கறவங்க ரொம்பவே கம்மி அதான் பெட்(டும்)கம்மி :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ப்ளாக்கில் ஆரம்பித்து கடைசியில் பிரியாணியில் முடிந்த கட்டுரை அருமை. எல்லாம் சொற்பொழிவு/பயான் முடிந்து தானே நார்சா கொடுப்பாங்க என்று யாரோ முணு,முணுப்பது போல் தெரிகிறது. எவ்ளோ தான் பூமார்க் நெய் போட்டு, பாதாம், பிஸ்தா போட்டு பாசுமதி அரிசியிலெ பிரியாணி ஆக்கினாலும் கொஞ்சம் எண்ணெயில், காய்கறி பீன்ஸ், பட்டாணி, கேரட்டு வெட்டி போட்டு செய்வாங்களே ஜாவியா (நார்சா) பிரியாணி அந்த பிரியாணி தந்த டேஸ்ட்டெ இதுவரை யாரும் பீட் (தோக்கடிக்க)பண்ண‌ முடியலெங்கெ. எல்லாருக்கும் தெரிஞ்சது தான் ஜாவியா பயான் முடிஞ்சி நார்சா கொடுத்து முடியும் வரை சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அழீம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாதி நார்சாவை காலி பண்ணுனெ எத்துனை பேரை நாம் பார்த்திருப்போம் ( என்னெத்தெ பாக்குறது நம்மளையும் சேத்துக்கோங்கெண்டு சொல்றியளா?) சேத்துட்டா போச்சு.....

adiraidailynews said...

தாஜுதீன் காக்க ,அதிரை நிருபர் மிக அருமையாக உள்ளது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த கட்டுரையின் இறுதி வார்த்தையில் வந்தது போல், இந்த டெம்லேட் தந்தவர் இன்று காலை அதில் இருந்த வசதிகளை எடுத்துவிட்டார். இதனால் இன்று காலை முதல் நம் அதிரை நிருபரில் சில மாற்றங்க கட்டாயம் செய்யவேண்டியதாயிற்று.

அந்த சகோதரருக்கு மடல் அனுப்பியுள்ளேன், விரைவில் பழைய வடிவில் நம் அதிரை நிருபர் வரும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள் அன்பு சகோதரர்களே.

தாஜுதீன்
adirainirubar@gmail.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு