முதற் குழந்தை !

உயிரும் உயிரும்
ஒருங்கே உருகி
வார்த்த
உயர்  ஓவியம்!

அன்பை அன்பால் பிணைத்து
அழகாய் பிழிந்து  எடுத்த
சுவை ரசம்!

காத்திருப்பும் காதலும்
ஆசையும் கனவும்
ஒன்றாய் கோத்து
தொடுத்த மலர்!

ஏக்கமும் வேண்டுதலும்
ஆர்வமும் உடல் ஆற்றலும்
கைகோத்து கடந்த வாழ்க்கை
தவத்தின் உயர் வரம்!

அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுபவித்த
உணர்வின் ஓட்டம்!

குலம் தழைக்க
கோத்திரம் செழிக்க
துக்கம் துடைக்க
தாத்தா,  பாட்டிக்கு
வயோதிகத்தில் நண்பனாக
அமைந்த
வசந்தத்தின் வருகை!

CROWN

12 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

// தாத்தா, பாட்டிக்கு
வயோதிகத்தில் நண்பனாக
அமைந்த
வசந்தத்தின் வருகை!// - இந்தக் கவிதை சுவைக்கு மகுடம் வைக்கும் வரிகள். என் மனத்தைக் கவர்ந்த வரிகள்

ஆம் ! அந்த முதல் குழந்தை - தலைப் பிரசவம்- தாய்க்குத் தலைமகன்- மூத்தபிள்ளை- குடும்பத்தலைவன் - தாய்க்கு தாய்மைப் பட்டம் பெற்றுத்தரும் பல்கலைக் கழகம்.

அந்த நாட்களில் - எங்களுடைய அரை டவுசர் காலத்தில் - ஒரு பாட்டு மிகவும் ரசிக்கப்படும்

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்கு காய் பாரமா? - பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா? - என்ற அந்தப்பாட்டில்

" மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமைதனை மனம்குளிர தந்தவனே ! "

என்று தாய் பாடுவதுபோல் அந்த தாலட்டு பாட்டு சூப்பர் ஹிட்.

பெற்றெடுத்த தங்க ரதம்
இடுப்பில் உள்ள நந்தவனம் - என்பது வைரமுத்து இன்னாளில் எழுதிய வரிகள்.

ஆயிரம்தான் சொல்லுங்கள் பேரன் பேத்திகளோடு கொஞ்சும் கொஞ்சல் கோலார் தங்க சுரங்கம்தான்.

தம்பி கிரவுன் அவர்கள் இத்தகைய கவிமழையைப் பொழிந்து கொண்டே இருக்க வேண்டுமென்று கோருகிறேன். இந்த மழை பொழிந்து கொண்டே இருந்தால் எங்களுக்கு எந்த நிவாரணமும் வேண்டாம். இந்தக் கவிதைகளே நிவாரணம்.

அதிரை.மெய்சா சொன்னது…

முதற்க்குழந்தை உங்கள் சத்தான கவிவரியில் முத்தான குழந்தையாய் ஈன்றெடுத்துள்ளீர்கள். முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை சமுதாயத்தார் மத்தியில் தலை நிமிர்ந்து பேசவைக்கிறது. முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை தாய் தகப்பன் எனும் அடுத்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்கிறது. முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை முழுமையான தாம்பத்ய வெற்றிக்கு பலனாக அமைகிறது. இன்னும் சொல்லப்போனால் முதற்க்குழந்தைதான் மேலும் கணவன் மனைவி உறவு வலுப்பெற காரணமாக இருக்கிறது.

நல்ல கவிக்குழந்தையை முதற்க்குழந்தையாய் தந்திருக்கிறீர்கள். சகோ.க்ரவுன். வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk சொன்னது…

அருமை!

அன்பிற்குரிய க்ரவ்ன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முதற் குழந்தை பிறக்கும்போதுதான் முதற் தந்தையும் முதற் தாயும் பிறக்கின்றனர்.

அதற்கான காத்திருப்பே உலகில் உவப்பான காத்திருப்பு. அதைப் பற்றிய கவிதைகளே ஒப்பிட முடியாதவை.

க்ரவ்ன்.... சுகப் பிரசவம்

வாழ்த்துகள்

sabeer.abushahruk சொன்னது…

/அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுபவித்த
உணர்வின் ஓட்டம்!/

நாசூக்கு! கொஞ்சம் பிசகினாலும் விவரிப்பில் விரசம் கலந்துவிடும் அபாயகரமான இடத்தை நாகரிகமாக கடக்க நல்ல தமிழ் ஞானம் வேண்டும்.

சூப்பர்!

sheikdawoodmohamedfarook சொன்னது…

தம்மக்கள்சிறுகை அலாவிய கூழ் போல இனிக்கிறது கவிதை.

crown சொன்னது…

ஆயிரம்தான் சொல்லுங்கள் பேரன் பேத்திகளோடு கொஞ்சும் கொஞ்சல் கோலார் தங்க சுரங்கம்தான்.
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.மேதை அ.இ.காக்கா அவர்களே! அனுபவத்தின் மூலம் சொன்ன வார்தை சந்தோசம் தருகிறது!மழலை மொழி கேளார் கோலார் தங்க சுரங்கமே பெற்றிருந்தாலும் அது வீண்!

crown சொன்னது…

நல்ல கவிக்குழந்தையை முதற்க்குழந்தையாய் தந்திருக்கிறீர்கள். சகோ.க்ரவுன். வாழ்த்துக்கள்.
-------------------------------------------
இந்த குழந்தை எல்லாரையும் வாரி எடுத்ததில் மகிழ்ச்சி! நன்றி சகோ.மெய்சா வாசித்து கருத்திட்டதற்கு!

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

அருமை!

அன்பிற்குரிய க்ரவ்ன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முதற் குழந்தை பிறக்கும்போதுதான் முதற் தந்தையும் முதற் தாயும் பிறக்கின்றனர்.

அதற்கான காத்திருப்பே உலகில் உவப்பான காத்திருப்பு. அதைப் பற்றிய கவிதைகளே ஒப்பிட முடியாதவை.

க்ரவ்ன்.... சுகப் பிரசவம்

வாழ்த்துகள்
------------------------------------------------
சுகப்பிரசவம் என்பது தவம்!இல்லையென்றால் உடல் உயிருள்ள சவம்!பிறகு எல்லா நேரமும் துன்பம் தரும் இன்பம் இந்த ஆயுதம் போடும் பிரசவ யுத்தம்!

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

/அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுபவித்த
உணர்வின் ஓட்டம்!/

நாசூக்கு! கொஞ்சம் பிசகினாலும் விவரிப்பில் விரசம் கலந்துவிடும் அபாயகரமான இடத்தை நாகரிகமாக கடக்க நல்ல தமிழ் ஞானம் வேண்டும்.

சூப்பர்!
--------------------------------------
நன்றி!

crown சொன்னது…

sheikdawoodmohamedfarook சொன்னது…

தம்மக்கள்சிறுகை அலாவிய கூழ் போல இனிக்கிறது கவிதை.
-----------------------------------------------------------
நன்றி! உண்மை தத்துவம்! இங்கே பெருங்கை(பெருந்த்தகை)யில் பிழைந்த கூழ் அந்த அமிழ்தைவிட சுவையாக மனதுக்கு இதமாக இருக்கிறது!பெருந்தொகை பெற்றிருந்தாலும் ஈடாகாகுமா பெருந்தகையின் வாழ்த்துக்கு!

crown சொன்னது…

படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி! //

ஓய்...! கிரவ்னு


அந்த படத்தில் இருக்கு குழந்தை யாரென்று தெரியுமா ?

இபு(டா)ப்பா ! :)