உலக இஸ்லாம்

சில வாரங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை தொடர்பாக செய்திகள் வெளிவந்தது, இந்நிலையில்  உலக இஸ்லாம் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வது பொறுத்தமானதாக இருக்கும். கீழே தரப்பட்டுள்ள செய்திகள் இங்கிலாந்து இஸ்லாமிய இதழ் வெளியிட்ட தகவல்கள். இந்திய மக்கள் தொகை கணக்கீட்டிலேயே பல்வேறு குளறுபடிகள் இருக்கும் போது, உலக அளவில் பார்க்கும்போது முன்பின் வித்தியாசங்கள் சில இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் உத்தேசமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம் தானே!


உலக முஸ்லிம் மக்கள் தொகை அடுத்த 20 ஆண்டுகளில் 35% உயரப்போகிறது. இதில் முஸ்லிம்கள் வளர்ச்சி 1.5% ஆக இருக்கும். முஸ்லிமல்லாதவர்கள் வளர்ச்சி 0.7 ஆகத்தான் இருக்கும்.

உலக முஸ்லிம்கள் இன்று 23.4%. இது 2030ல் 26.4 ஆக உயரப்போகிறது இந்த என்ணிக்கையில் இது ஆசிய பசிபிக் நாட்டில் 59.2%ஆகவும், மத்தியக்கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவை சேர்த்து 20% ஆகவும், மற்ற ஆப்ரிக்க பகுதிகளில் 17.6% ஆகவும், ஐரோப்பாவில் 2.7%ஆகவும், அமெரிக்காவில் 0.5% ஆகவும் இருக்கும்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தோனேசியாவை விட பாகிஸ்தான் 2030ல் முந்தி உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடு என்ற பெருமையை அடையப் போகிறது. முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.

முஸ்லிம்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொடர்ந்து சிறுபான்மையராகவே இருப்பர். ஆனால் மொத்த மக்கள் தொகையில் வளர்ச்சி இருக்கும். இதில் ஐரோப்பா, ரஷ்யாவைவிட அமெரிக்காவே வளர்ச்சியில் முன்னனியில் இருக்கும்.

இப்போது 1 மில்லியன் முஸ்லிம்கள் அல்லது அதற்கு மேல் உள்ள நாடுகள் எண்ணிக்கை 72. இது 2030ல் 79 ஆகப்போகிறது.

அமெரிக்கா

கனடாவில் முஸ்லிம்கள் தற்போது 940,000 உள்ளனர்.இது 2030ல் 3 மடங்காகி 2.7 மில்லியனாக மாறும்.அர்ஜென்டினா அமெரிக்காவிலேயே 3 வது அதிக முஸ்லிம்களை கொண்ட நாடாக மாறும். 15 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது 13% மட்டுமே. அதிக வயதுடையவர்கள் மட்டுமே அதிகமாக குடியேறியது தான் இதற்கு காரணம். 2030ல் அமெரிக்காவில் பிறந்தவர் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் உயரும்.இஸ்லாமிய வளர்ச்சி வீதம் தற்போது 0.8 ஆக இருப்பது 2030ல் 1.7 ஆக மாறும். தற்போது 64.5% முஸ்லிம்கள் வெளிநாட்டில் பிறந்தவராக இருக்கும் அமெரிக்காவில் 2030ல் 45% உள் நாட்டில் பிறந்தவராக இருப்பர்.

பசிபிக்-ஆசியா

30% முஸ்லிம்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் 2030ல் இருப்பர். சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகை 2% ஆகி 2030ல் உலகின் 19 வது வரிசையில் இருக்கும்.

மத்திய கிழக்கு-வடக்கு ஆப்ரிக்கா

இந்த மண்டலத்தில் 20 நாடுகள் முஸ்லிம் எண்ணிக்கையில் அதிகம் கொண்டதாக இருக்கும். 17.7% முஸ்லிம்களை உடைய இஸ்ரேலில் 2030ல் 23.2% ஆக உயரும். எகிப்து அல்ஜீரியா மொரோக்கோ போன்றவை அதிக எண்ணிக்கை கொண்ட நாடுகளாகும். இந்த மண்டலத்தில் 2 வது பெரிய நாடாக ஈராக் உருவெடுக்கும்.

ஐரோப்பா

இந்த மண்டலத்தில் 2030ல் 10% முஸ்லிம்களை கொண்ட நாடாக பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, கொசவா, அல்பேனியா, போஸ்னியா பல்கேரியா ரஷ்யா, ஜார்ஜியா ஆகியவை இருக்கும். ரஷ்ய முஸ்லிம்களின் வளர்ச்சி 0.6%, அதே சமயம் முஸ்லிமல்லாதவர்கள் 0.6% குறைந்து வருகிறார்கள்.பிரான்ஸில் குடியேறிய முஸ்லிம்கள் 68%, இங்கிலாந்தில் குடியேறியவர்கள் 28% மற்ற ஆப்ரிக்க நாடுகளில் 60% வளர்ச்சி இருக்கும்.நைஜீரியாவில் 51.5% முஸ்லிம்கள் இருப்பார்கள்.முஸ்லிம்களின் பிறப்புக் கட்டுப்பாடு 48% ஆக உள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் கட்டுப்பாடு 63% ஆக உள்ளது.

-- M. H. ஜஹபர் சாதிக்

15 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

எனக்கு இந்தத் தகவல்கள் புதுசு ! நல்ல பதிவு, ஒரு கருவும் கிடைத்திருக்கிறது மற்றொன்றை உருவாக்கிட... முயற்சிக்கிறேன் !

அதிரைநிலா சொன்னது…

தெரிய வேண்டிய தகவல்கள்.வளர்க இஸ்லாம்.

அப்துல்மாலிக் சொன்னது…

மிக்க சந்தோஷம், அல்லாஹ் நன்கறிந்தவன்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இன்றைய முஸ்லிம் எண்ணிக்கையில் மக்கள் தொகை அடிப்படையில்
TOP TEN

இந்தோனேசியா
பாகிஸ்தான்
இந்தியா
பங்களாதேஷ்
எகிப்து
நைஜீரியா
ஈரான்
துருக்கி
அல்ஜீரியா
மொராக்கோ

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

மகிழ்ச்சியூட்டும் இத்தகவலை நம்முடன் பகிர்ந்துக்கொண்ட சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களுக்கு மிக்க நன்றி.

ஒரு வகையில் நாம் பெருமையடைந்தாலும்,மனிதர்களின் வரட்டுபிடிவாதங்கள் இறைமார்க்கத்தை பிரித்தாளுகிறது என்பது மிகவும் வேதனையான அன்றாட நிகழ்வு.

உண்மையை நன்கு அறிந்தவன் அவன் ஒருவனே.

sabeer.abushahruk சொன்னது…

உற்சாகமூட்டும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

//நல்ல பதிவு, ஒரு கருவும் கிடைத்திருக்கிறது மற்றொன்றை உருவாக்கிட... முயற்சிக்கிறேன் !//

முயற்சி திருவினையாகி இந்திய மக்கள்தொகை கூட வாழ்த்துகள்:-)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா : அதெப்படி இவ்வ்வ்ளோ கரெக்ட்ட்ட்டா போட்டுடைத்தீர்கள் !?

:))

இருப்பினும், கருவென்று சொன்னது "மக்கள் தொகையும் மக்களிடமிருக்கும் தொகையும்"னு ஒன்னு பச்சுனு பட்டது அவ்வளவே அதற்கான வரிகளைக் கோர்க்கனும் ! :)

Yasir சொன்னது…

நல்லதகவல்கள்....வாழ்த்துக்கள் சகோ.ஜெஹபர் சாதிக்......இஸ்லாத்தை பரவவிடாமல் தடுக்கும் எந்த இரு செயலும் அதன் வளர்ச்சியை தூண்டும்...சர்(கஸ்)கோ(மாளி)சி பர்தாவை தடை செய்தார்...அதை ஏன் என்பதை அறிய முற்பட்ட ஒரு குருப்பை சார்ந்த மூன்று புகழ்பெற்ற பாடகிகள் அதன் மதிப்பை அறிந்து இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் என்று படித்தேன்...முடிந்தால் அந்த லின்கை இங்கு பதிகிறேன்...நீங்கள் சொல்வதுபோல் எண்ணிக்கையில் பெருகி உண்மையான முஸ்லிமாகவும் வாழ அல்லாஹ் துணை புரிய வேண்டும்

Yasir சொன்னது…

//முயற்சி திருவினையாகி இந்திய மக்கள்தொகை கூட வாழ்த்துகள்:-)//நானும் இந்த வாழ்த்தில் பங்கு கொள்கிறேன்.....கவிக்காக்கா உங்களுக்கு குறும்பு அதிகம்தான்

Yasir சொன்னது…

//மக்கள் தொகையும் மக்களிடமிருக்கும் தொகையும்"னு ஒன்னு பச்சுனு பட்டது// கண்டதையும் காணததையும் கண்முன் கொண்டுவரும் எழுத்துபுலி ஆயிற்றே நீங்கள்....காத்திருக்கிறோம் உங்கள் ஆக்கத்திற்க்காக

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//காத்திருக்கிறோம் உங்கள் ஆக்கத்திற்க்காக//

தம்பி யாசிர் : சமீபத்தில் வாக்கு வங்கிகள் பற்றி ஒரு செய்தேன்(?? Phd) அங்கே என்னான்னா "ZERO" பேலன்ஸ் இல்லாதவங்கங்களுக்கு நிறைய அக்கவுண்ட் இருப்பது தெரிய வந்துச்சா அதனாலதான் இப்படி ஒரு தலைப்பும் !

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

கவிக் காக்கா : அதெப்படி இவ்வ்வ்ளோ கரெக்ட்ட்ட்டா போட்டுடைத்தீர்கள் !?

:))

இருப்பினும், கருவென்று சொன்னது "மக்கள் தொகையும் மக்களிடமிருக்கும் தொகையும்"னு ஒன்னு பச்சுனு பட்டது அவ்வளவே அதற்கான வரிகளைக் கோர்க்கனும் ! :)
-----------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும். நம்மை கருவருக்க துடிக்கும் கயவரின் முன்னே
கரு வளரட்டும், கருவேப்பில்லையில்லை நம் சந்ததி என்கிற செய்தி மலரட்டும்.இளைதாக முள் மரம் கொல்க=பொருள்: முள் செடி சின்னதாக இருக்கும் போதே வெட்டிவிட வேண்டும் என்பது.அது போல் தான் நம் சந்ததி ,இனம் முள் மரமாய் போய் விட்டது அந்த மர மண்டையர்கள் காவி துரோகிகளுக்கு. மேலும் ஒரு குளு(தகவல்):கருவேல மரம் முள் மரம் அந்த மரம் வளரும் பகுதி சுற்றிலும்
மண் அதன் வீரிய தன்மை இழந்து(ஆக்கும் தன்மை?(அ)மலட்டு தன்மை?) அன்மையிலும், அந்த பிரதேசதிலும் வேறு செடிகள்.கொடிகள்
வேரு விடமுடியாமல் அந்த முள் மரமே வியாபித்து நிற்கும் . நம் விவசாயத்தை கெடுக்க பிரிட்டீஸ்காரர்கள் அதன் விதையை இங்கே தூவியதன் விளைவாக அந்த முள் செடி வளரும் பகுதியில் விவசாயம் படுத்துவிடும். சமீபத்தில் தான் அந்த பிரிடீஸ்சாரின் சாயம் வெளுத்தது.ஆகவே அது போல் நாமும் முன்பே விழிப்புடன் இருந்து இதுபோல் சதிகளை களையனும். மேலும் கொசுறாக ஒரு தகவல்: நம் நாட்டில் நேரிடையாக மக்கள் தொதையை கட்டுப்படுத்த முடியாத காரனத்தால் அரசு சில குறுக்கு வழியை கடை பிடிப்பதாக அறிந்தது, அது எவ்வளவு தூரம் உண்மை என படித்தவர்கள் நீங்களெல்லாம்தான் சொல்லனும். அதாவது, தபால்,ஸ்டாம் போன்றவை வரும் பசை(பேஸ்ட்)யில் ஆன்மையை(பெண்மையை???)தடுக்கும் ரசாயானம் கலந்துள்ளதாக கேள்வி உண்மை அறிந்தவர்கள் விளக்கவும்.

crown சொன்னது…

Yasir :
நல்லதகவல்கள்....வாழ்த்துக்கள் சகோ.ஜெஹபர் சாதிக்......இஸ்லாத்தை பரவவிடாமல் தடுக்கும் எந்த இரு செயலும் அதன் வளர்ச்சியை தூண்டும்...சர்(கஸ்)கோ(மாளி)சி பர்தாவை தடை செய்தார்...
-----------------------------------------------------------------
அஹா!!!! என்னவொரு சிலேடை!!!!சில்லென்ற நீரோடைபோல அதுவும் முஸ்லிம் பெண்களின் மேலாடையைப்பற்றி.யாசர் வித்தியாசமானவர்.
------------------------------------------------------------------

அதை ஏன் என்பதை அறிய முற்பட்ட ஒரு குருப்பை சார்ந்த மூன்று புகழ்பெற்ற பாடகிகள் அதன் மதிப்பை அறிந்து இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் என்று படித்தேன்...முடிந்தால் அந்த லின்கை இங்கு பதிகிறேன்...நீங்கள் சொல்வதுபோல் எண்ணிக்கையில் பெருகி உண்மையான முஸ்லிமாகவும் வாழ அல்லாஹ் துணை புரிய வேண்டும்.
------------------------------------------------------------
மிகவும் நல்ல தகவல்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் பாகிஸ்தானை பிரித்ததிலும் இஸ்லாத்திற்கு எதிராகவே சூழ்ச்சி நடந்திருக்கிறது.3 நாட்டிலும் இன்றைய முஸ்லிம் மக்கள்தொகை 59 கோடி உள்ளது. கிட்டத்தட்ட இந்திய மொத்த மக்கள் தொகையில் பாதி நாமாக இருக்கவேண்டியதை உடைத்து சின்னாபினாமாக்கியதில் அமெரிக்காவின் சதியும் இருந்திருக்கலாம்.

பட்டுக்கோட்டை தொகுதி பிரிப்பிலும் முஸ்லிம்களை பிரிக்க திட்டமிட்டு சதி நடந்ததைப்போல அன்றே சதி செய்து நாட்டையே உடைத்திருக்கின்றனர்

ABU ISMAIL சொன்னது…

அறியவேண்டிய தகவல்கள்.மேலும் உலகமுழுக்க இஸ்லாமிய அதிகாரம் அமய துவா செய்வோம்.