Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 - இது ஒரு G3 பதிவு 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2012 | , ,


மின்சாரம் பதிவு இன்று அதிரைநிருபரில் வருகின்றது என்று வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும்போது நான்காவது படிக்கும் என் மகள் ஒரு கேள்வி கேட்டாள்.

“கட்டுரை என்றால் என்ன வாப்பா?” என்று.

நானும் சொன்னேன் “நாம் படித்த மற்றும் நம்முடைய அனுபவத்தில் தெரிந்த நல்ல விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதிக் காட்டுவதுதான் கட்டுரை” என்றேன்.

“அப்படி நீங்கள் பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்!?” அடுத்த கேள்வி வந்து விழுந்தது.

“நாம ஒரு சில  விசயங்களை கட்டுரையாக எழுதுறப்ப அதை மத்தவங்க படிப்பாங்க அதில் உள்ள நல்ல விசயங்களை தெரிந்து கொள்வார்கள், அப்புறமா அது விஷயமா நமக்கு தெரியாத  சில செய்திகளை நமக்கு அவங்களும் சொல்லுவாங்க இதனால அதனை படிக்கின்ற அனைவருக்கும் அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றேன்

“அப்படியா!” என்று கேட்ட என்  மகள்.

“அப்போ  நான் ஒரு கட்டுரை தரட்டுமா அதை அங்கே போடுவாங்களா?” என்று கேட்டதும்.

நான் சொன்னேன் “நான்காவது படிக்கும் உன்னிடம் அப்படி என்ன கட்டுரை இருக்கிறது?” என்றேன்.

“நான் படித்த நல்ல விசயங்கள் என்னிடம் நிறைய உள்ளது அதில் ஒன்றை தருகிறேன் வாப்பா அதை போடுங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்” என்று சொல்லிக் கொண்டே ஒரு A 4 பேப்பரை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

மகள் தந்த பேப்பரை வாங்கி பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அதை அப்படியே அதிரைநிருபர் சகோதர வாசகர்களாகிய உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலும், நாம் அனைவரும் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் கண்டிப்பாக நினைவூட்டிக் கொள்ள வேண்டும்  என்ற நல்லெண்ணம் மேலோங்க இங்கே பதிவுக்குள் கொண்டு வருகிறேன் – அல்ஹம்துலில்லாஹ் !


Sஹமீது 

பகிர்வு : செல்வி மெர்சினா த/பெ சாகுல் ஹமீது - இந்தியன் இண்டர் நேஷனல் ஸ்கூல், தமாம்

இப்போ புரிந்திருக்குமே தலைப்பில் ஏன் "இது ஒரு G3 பதிவு" என்று இட்டதற்கு !

21 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை!
மிஸ் மெர்ஷினா, நீ இஸ்லாமிய விஞ்ஞானத்தில் புகழ் பெற்று வாப்பாவுக்கு இன்னும் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள்!

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்.உங்கள் அன்பு மகளை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.அல்லாஹ் எல்லா நலமும் வளமும் வழங்கட்டும்

Ebrahim Ansari said...

நான் என்ன எழுதுவது என்றே புரியவில்லை. ஆனந்தக்கண்ணீரே இதற்கு நான் பின்னூட்டமாக இட முடியும்.

crown said...

அஸ்ஸலாமுஆலைக்கும்.
அருமை!
மிஸ் மெர்ஷினா, நீ இஸ்லாமிய விஞ்ஞானத்தில் புகழ் பெற்று வாப்பாவுக்கு இன்னும் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள்!

ZAKIR HUSSAIN said...

Welldone Mersina. All the best for your studies.

crown said...

அஸ்ஸலாமுஆலைக்கும்.
அருமை!
மிஸ் மெர்ஷினா, நீ இஸ்லாமிய விஞ்ஞானத்தில் புகழ் பெற்று வாப்பாவுக்கு இன்னும் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள்!

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (அபு) மெர்சினா!!!
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உனக்கு எல்லா வளமும் நல்க மனம் மொழி மெய்களொத்து இறைஞ்சுகின்றேன்.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Well done Mersina....

All the best for your studies..

sabeer.abushahruk said...

Well done Mersina....

All the best for your studies..

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தாய் தந்தையருடைய தாக்கமும் ஊக்கமும் இது போன்ற குழந்தைகள் உருவாகிரார்கள் அல்லாஹ் அந்தப்பிள்ளைக்கு பூரண உடல் சுகத்தையும் மார்க்க அறிவையும் கொடுப்பானாக

அப்துல்மாலிக் said...

அருமை... இது மாதிரி நிறைய கட்டுரைகளை தாங்கள் வகுப்பு தோழிகளுக்கும் பகிரவும்.. வாழ்த்துக்கள்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Well done Mersina...

All the best for your studies...

வழிமொழிகிறேன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருகில் இருக்கும் குழந்தைகல் நம்மிடையே இருக்கு நல்லது கெட்டதுகளை எவ்வாறு கவணிக்கிறார்கள் என்று நமக்கே தெரியாது ஆனால் அனைத்தையும் கவணிக்கிறார்கள்.

மாஷா அல்லாஹ் !

மெர்ஷினா ! தாய் தந்தையர்க்கு உகந்த பிள்ளையாக இருந்து அனைத்து கல்விச் செல்வங்களையும் பெற வாழ்த்துக்கள்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha-Allah, I appreciate the thought with remembrance of the almighty Allah of your little daughter Mersina. We should not a miser at anytime to motivate and appreciate our young generations in order to reap the heap of scholars alongwith twin worlds' knowledge in the near future insha-allah. You have a great opportunity to looking after/taking care of your family and children in day to day and time to time basis Alhamdulillah. Utilize it with above said ways. Best of luck and pray to enjoy this kind of memorable moments to all of us by the grace of almighty Allah.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது ஒரு G3 = ஜெனெரேஷன் 3 பதிவு !

வயதில் !

Ebrahim Ansari said...

//இது ஒரு G3 = ஜெனெரேஷன் 3 பதிவு !//

இதற்குத்தான் எனது பதிவை G1 பதிவு என்றீர்களா? இப்படி ஜி வைத்துப் பேசுவது தெரியாமல் போயிற்றே.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//இது ஒரு G3 = ஜெனெரேஷன் 3 பதிவு !//

//இதற்குத்தான் எனது பதிவை G1 பதிவு என்றீர்களா? இப்படி ஜி வைத்துப் பேசுவது தெரியாமல் போயிற்றே.//

மாமா நீங்கள் ஜெனெரேஷன் 1 (அப்பா)நான் ஜெனெரேஷன் 2 (வாப்பா)மெர்சினா ஜெனெரேஷன் 3(மகள்)இதைத்தான் G 3 என்றும் உங்களை G 1 என்றும் குறிப்பிட்டேன்

crown said...

Shameed சொன்னது…

Ebrahim Ansari சொன்னது…

//இது ஒரு G3 = ஜெனெரேஷன் 3 பதிவு !//

//இதற்குத்தான் எனது பதிவை G1 பதிவு என்றீர்களா? இப்படி ஜி வைத்துப் பேசுவது தெரியாமல் போயிற்றே.//

மாமா நீங்கள் ஜெனெரேஷன் 1 (அப்பா)நான் ஜெனெரேஷன் 2 (வாப்பா)மெர்சினா ஜெனெரேஷன் 3(மகள்)இதைத்தான் G 3 என்றும் உங்களை G 1 என்றும் குறிப்பிட்டேன் .
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஜெனரேசன் கேப்பில்லாத ஜெனெரேசன் கேப் இது. மஸாஅல்லாஹ்! எல்லாம் ஜனடிக் காரணியோ? ஜனடிக் ஆங்கில விஞ்ஞான பெயர், எப்படி மக்களை ஜனம் ' என தமிழில் வந்திருக்கும்??? இந்த ஜனரஞ்சகமான கேள்வி என் மனதில் தோன்றியது. இங்கே உள்ள அறிஞர்கள் பதில் சொல்வார்களா?


Iqbal M. Salih said...

Maashaa Allaah!

Rabbanaa hablanaa Min azvaajina va durriaathinaa Qurraththa a'unin, va-ja'alnaa lil muththaqeena Imaamah!

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

Al-Bukhaari (2736) and Muslim (2677) narrated from Abu Hurayrah (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Allaah has ninety-nine names, one hundred less one. Whoever learns them will enter Paradise.”

2736. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு