கொழுப்பெடுத்து திரியிறாண்டா என்று நண்பர்கள் வட்டத்தில் வழக்காடினாலும் இந்த டாக்டருங்க அவங்க பங்கிற்கு உங்களுக்கு ரொம்பதான் கொழுப்பு இருக்குன்னு அதை குறைக்கனும், அதிகமா மட்டன் சாப்பிடாதீங்கன்னு அட்வைஸ் ஒருபக்கம்.
சரி, கொழுப்பு (கொலஸ்டாலுக்கு) மட்டனுக்கு மட்டும்தான் குத்தகைக்கு கொடுத்த மாதிரி ஆளாலுக்கு அட்வைஸ் வேற, மட்டன்னு நெனப்பு வந்தாலே ஆட்டுக்கறி தாங்க இதுநாள் வரைக்கும் நெனப்புல வரும்... ஆனா இப்பொவெல்லாம் என்னான்னே தெரியலைங்க மட்டன் சொன்னாலே பின்னாடி யாரோ முட்டுற மாதிரியெல்லாம் பிரம்மையா இருக்குங்க !
களரிச் சாப்பாட்டுக்கு போகலாம் கெளம்பினா, மாடு எதிர்ல வருது... இது எதேச்சையா ! இல்லே இதுதான் டிரெண்டான்னு தெரியலைங்க !
மாட்டுக் கறியை வச்சு சமையலுக்குத்தான் கறி ஆக்குவங்கன்னு இருந்த காலம் போயி... மாட்டுக்கறியை வச்சு நிறைய நியூஸ் போடலாம், வீடியோ பேட்டி போடலாம், போஸ்டர் அடிக்கலாம், நீயா நானா போட்டி வைக்கலாம், மாட்டுக்கறிய போட்டவய்ங்க ஏன், அந்த மேட்டரை போடல, இந்த மேட்டரை போடலைன்னு வேற குடைச்சல் கொடுக்கலாம் !
இதெல்லாத்தையும் விட, கூடும், கூடாது என்பதையும் தாண்டி யார் மாட்டுகறியோடு தொடர்பாக இல்லையோ அவங்க எல்லோருக்கும் முக்கிய பேசுபொருளாகவும், கிடைத்ததை மெல்லுவதற்கு இந்த மாட்டுக்கறிதாங்க இப்ப ஹாட் !
ஒன்னுமட்டும் தெளிவா தெரியுதுங்க, நங்கள் சொல்வதுதான் சரி, இதுக்கு அவங்க என்ன சொல்றாங்க !? இப்படியே தொடரும் !! மாட்டுகறிக்கென்று தனி பிளாக் ஆரம்பிக்க யாராவது முயற்சிக்கலாம்… !
ரொம்ப சிம்பிள் தலைங்களா !
அறுக்கிற வரைக்கும்தாங்க இந்த ஆடுகள் / மாடுகள் முரண்டு பிடிக்கும் அறுத்துட்டா சூப்பர் கறிதாங்க !
அரசியல்ல இருக்கிற வரைக்கும்தாங்க இந்த ஆடு / மாடெல்லாம் விவாதப் பொருள் அதற்கு அப்புறம் நாமெல்லாம் தாயா பிள்ளையா பழக்கியெடுத்த மக்களாச்சே சும்மா இருந்துடுவோமா....
நாளைக்கே தாத்தாவும் (இல்லேன்னா தளபதி / மதுர வீரன்) சமுதாய தூண்களும் ஒன்னாயிட்டாங்கன்னா ! அங்கே மாட்டுக் கறி சாப்பாடுதானே !
பாஸ் அந்த மாட்டை கொஞ்ச நேரம் அவுத்து விட்டுங்களேன் இரண்டு பேருமே ! :)
அபுஇபுறாஹிம்
18 Responses So Far:
மாட்டிறைச்சியைப் போட்டறைச்சா கீமா
ஆட்டிறைச்சியை வாட்டியெடுத்தா கபாப்
கீமா வேணுமா
கபாப் வேணுமா
ரெண்டும்தானே வேண்டும் சகோதரா?
மாடு நம்மள முட்டாம இருந்தா சரி
அபு இபுறாஹீம்,
இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே. ஒரு ச்சேஞ்சுக்கு மாட்டு பிரியாணி ட்ரைப் பண்ணுங்களேன்.
துபாயில் கிடைக்கும்ல? அல்லது
கிடாய்தானா?
க்ரவுனும் வந்துட்டா நாம் மூனு பேரும் ஒரு சகன்ல உட்கார்ந்துடலாம்
//மாடு நம்மள முட்டாம இருந்தா சரி//
சரியாச் சொன்னீக அன்புத் தம்பி அர.அல.
போட்டிப் போட்டுப்
பேட்டி போட்டு
வாட்டி வதைக்கும்
மாட்டிறைச்சியால் மாற்றாரின்
நகைப்புக்கு நம்மவர்களின்
பகைப்புகை பரவாமல்
இறைவனிடம் இறைஞ்சினால்
நிறைவாகும் இறைச்சிச்
சண்டையும்...
//க்ரவுனும் வந்துட்டா நாம் மூனு பேரும் ஒரு சகன்ல உட்கார்ந்துடலாம் //
காலையில் எனக்குப் பசியாற வைத்துவிட்டுப் பயண வாழ்த்து சொல்லிட்டாக அன்புத் தம்பி க்ரவுன் எனும் பவுன்.
பகல் விருந்தை சபீருடன் சாப்பிட்டுவிட்டால் என் பயணச்சாப்பாடுக் கடன் தீர்ந்தமாதிரி
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை நெசவுதெரு முஹல்லாவில் நடைபெறும் AAMF மாதாந்திரக் கூட்டத்திற்குக் கவிவேந்தர் வந்தால் “தேநீர்” விருந்துடன் விழிப்புணர்வு வித்தகருடன் இணைந்து எனக்கு வழியனுப்புதல் சந்திப்பு என்னும் தித்திப்பும் கிட்டுமல்லவா?
கவியன்பன்.
தற்போது கூகுளில் க்ரவுனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
சட்டென்ற ஒரு தீர்மாணத்தில் நானும் நாளை மதியம் 3.30 விமானத்தில் திருச்சியிலிருந்து துபாய் பறக்கிறேன்.
இன்று மாமி வீட்டும் புது மணத்தம்பதிகளோடு எனக்கும் விருந்து.
ஆடும் வேண்டாம் மாடும் வேண்டாம் என்றா அபு இபுறாஹீம் கோழி வாங்க போயிட்டார்?
அப்ப சகன்ல கவியன்பன் உட்காரலாமே. வயிற்றுக்கும் செவிக்கும் ஒரே நேரத்தில் விருந்து.
//அறுக்கிற வரைக்கும்தாங்க இந்த ஆடுகள் / மாடுகள் முரண்டு பிடிக்கும் அறுத்துட்டா சூப்பர் கறிதாங்க !//
கவிக் காக்கா, இரண்டுமே இருக்காது என்பது சரிதான் !
தோழி வீட்டு - கோழிக் கறிதான் என்று சாய்ந்தே இருக்கிறேன் ! :)
மாட்டுக்கறியே - நேற்று ஊரிலே ஒரு போஸ்டர் அடித்த மாதிரி தெரியுது ?
மீண்டும் மாடு வந்துருச்சா!
mMaaaaaaa.........................
சுதந்திரமா சேர்மன் வாடி பக்கமும் வண்டிப்பேட்டையிலையும் இருந்த எங்களை வீடியோ எடுத்து எங்களால் உங்களுக்கு தொந்தரவுன்னு நெட்டுலையும் போட்டுவுட்டு கம்பளைன்டும் பண்ணுனதாலே நாங்க மத்தவங்கலை வச்சு பண்ணுன சதி தான் உங்க ரெண்டு பேரையும் மூட்டி விட்டு நாங்க குளிர் காயுற மேட்டரு!
மீண்டும் சொல்றோம் ஏங்கிட்டே மோதாதியோ அப்பரம் வேற மாதிரி அசிங்கமா ஐந்தறிவோடு அரசியல் பண்ணுற மாதிரி வரும்...
மறுபடியும் மாடா.....போத்தும் + நெய் சோறும் வாரம் 4 முறை அடிச்சுகளையும் மலையாளிகளை “ நெஞ்சு தாக்குதல்” நோய் சீக்கிரம் கூட்டிக்க்கொண்டு போகிறதாம்......நேற்றுக்கூட ஒரு சம்பவம் ஷார்ஜாவில்.....மாட்டுகறி சாப்பிட்டாதான் உயிர் வாழ் முடியும் என்ற அவசியம் இல்லை மக்கா...மாட்டுக்கறி வைச்சு சமுதாயத்தை கொத்துக்கறி போடாமல் இருந்தால் சரி
//மாட்டுக்கறி வைச்சு சமுதாயத்தை கொத்துக்கறி போடாமல் இருந்தால் சரி //
இது சூப்பர் கமென்ட்ஸ் என்ற பகுதி உருவாக்கினால் அதற்கு நிச்சயம் இதை பரிந்துரைக்களாம்,
//மாட்டுக்கறி வைச்சு சமுதாயத்தை கொத்துக்கறி போடாமல் இருந்தால் சரி //
//இது சூப்பர் கமென்ட்ஸ் என்ற பகுதி உருவாக்கினால் அதற்கு நிச்சயம் இதை பரிந்துரைக்களாம்,//
வழிமொழிகிறேன்.
கவிகள் இரண்டு பேரும் பேசிவைத்துக்கொண்டு அமீரகம் வருகிறீர்களா? போகிறீர்களா?
வெல்கம் வெல்கம்.
கறி சாப்பிடனும் என்ற ஆசை வரும்போது மாடு கறி கொஞ்சம் விலை குறைவாக இருப்பதால் மாட்டுக்கறி வாங்கி சாப்பிடுறாங்க. அதுலேயும் “பசு” மாடு சாப்பிடலாமா, எவ்வளவு பேருக்கு தெரியும் இது என்னாவகை மாடு என்று (பசு, எருமை, காளை...), என்ன வகை மாடு நம்மூரில் அறுக்கப்படுகிறது. கொஞ்சம் விரிவாக (ஹதீஸ்படியும் பரவாயில்லை) விளக்கினால் தெரிஞிக்கலாம்..
யார் வீட்டிலாவது வலிமா விருந்துக்கு மாட்டு பிரியாணி போடுறதா ஒரு அறிவிப்பு செய்தால் மக்களோட ரியாக்ஸன் எப்படியிருக்கும்னு கொஞ்சம் கற்பனை செய்யுங்களேன்...
மாடுதான் அசை போடும்ன்னு பார்த்தா இப்போ மாட்டை பத்தி மனுசங்க அசை போட ஆரபிச்சுடாங்க!
Post a Comment