வீரியம் குறைந்த
சூரியன் மறைந்து
மேற்கு வானிலே
தோற்கு மாலையில்
வேலையால் களைத்து
நாளைதான் முடித்து
இருக்கும் உறைவிடம்
திரும்பும் வாலிபம்
உச்சந்தலை வழி
உடலில் நீரூற்ற
உயிரும் குளிர்ந்திடும்
உணர்வோ கொதித்திடும்
வெள்ளித்திரையிலும்
சின்னத்திரையிலும்
நடித்த வாழ்க்கையை
ரசித்த வாலிபம்
மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க
வங்காள விரிகுடா
கரைதனில் வசிப்பவள்
வரும்வரை காத்திருக்கும்
வளைகுடா வாலிபம்
உயிருடல் இணைந்தவள்
உணர்வினில் கலந்தவள்
ஊடுறுவிப் பார்த்திட
உயிருறுகும் வாலிபம்
மின்காந்த அலைவழி
குசலம் விசாரிக்க
எந்திரக் குரல்கேட்டு
இயங்கிடும் வாலிபம்
அத்தனை அருகினில்
மொட்டென அவள்முகம்
திரைதனில் பிம்பத்தை
வருடிடும் வாலிபம்
இணையத் தொடர்பு
பலகீனப் படுகையில்
உறைந்திடும் பிம்பத்தை
முறைத்திடும் வாலிபம்
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல
வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
சூரியன் மறைந்து
மேற்கு வானிலே
தோற்கு மாலையில்
வேலையால் களைத்து
நாளைதான் முடித்து
இருக்கும் உறைவிடம்
திரும்பும் வாலிபம்
உச்சந்தலை வழி
உடலில் நீரூற்ற
உயிரும் குளிர்ந்திடும்
உணர்வோ கொதித்திடும்
வெள்ளித்திரையிலும்
சின்னத்திரையிலும்
நடித்த வாழ்க்கையை
ரசித்த வாலிபம்
மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க
வங்காள விரிகுடா
கரைதனில் வசிப்பவள்
வரும்வரை காத்திருக்கும்
வளைகுடா வாலிபம்
உயிருடல் இணைந்தவள்
உணர்வினில் கலந்தவள்
ஊடுறுவிப் பார்த்திட
உயிருறுகும் வாலிபம்
மின்காந்த அலைவழி
குசலம் விசாரிக்க
எந்திரக் குரல்கேட்டு
இயங்கிடும் வாலிபம்
அத்தனை அருகினில்
மொட்டென அவள்முகம்
திரைதனில் பிம்பத்தை
வருடிடும் வாலிபம்
இணையத் தொடர்பு
பலகீனப் படுகையில்
உறைந்திடும் பிம்பத்தை
முறைத்திடும் வாலிபம்
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல
வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
25 Responses So Far:
என் இனிய கவியே !
உன் கவிதைச்சாரலில் குளித்து தலை துவட்டிய பிறகு
இதை என் கவி நட்புக்கு எழுதுகிறேன்.
பொருள் தேடி அதற்காக இளமையை அடகு வைக்கும் வாலிபத்தை உன் கவியில் வார்த்தெடுத்திருக்கின்றாய்
உன் கவியில் இன்றைய வாலிபத்தின் ஏழ்மை தெரிகின்றது, அது ஏக்கப்பெருமூச்சாய் வளைகுடாவை நாடி வாய்ப்புத்தேடி வந்தது தெரிகின்றது
தன் வாழ்க்கைத்துணையை பிம்பத்திலாவது தரிசிக்கலாம் என்ற
அவனது இயலாமையின் விளைவு தெரிகின்றது.
அவனுக்கு கணினி செய்யும் துரோகம் தெரிகின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக உன் கவியின் கடைசி வரிகள்
கணினி முன் வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
என் இதயத்தைதொடுகின்றது.
அன்றும் இன்றும் என்றும்
உன் கவியின் தாசன்,
abu asif endra abdul khadir
riyadh saudi arabia.
எதனை விட
எதனைத் தொட
அத்தனையும் உருக்கம்
உத்தமியின் நெருக்கம்!
நேற்று உணர்ந்தேன்;
இன்று உரைத்தாய்
நாளை செய்முறை!
உயிரின் ஓசையை
உணர்வின் ஆசையை
நடுநிசியில் படிக்க வைத்து
கடுதாசி எழுத வைத்தாய்!
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
அற்புதமான, உண்மையான வரிகள்
வாழ்த்துக்களும்,துவாவும்
வீரியம் குறைந்த
சூரியன் மறைந்து
மேற்கு வானிலே
தோற்கு மாலையில்
வேலையால் களைத்து
நாளைதான் முடித்து
இருக்கும் உறைவிடம்
திரும்பும் வாலிபம்
உச்சந்தலை வழி
உடலில் நீரூற்ற
உயிரும் குளிர்ந்திடும்
உணர்வோ கொதித்திடும்.
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இயல்பாகிப்போன இயந்திர வாழ்கையை வடித்த,
வீரியம் குறையாத கவிதை ஆக்கம்!அல்ஹம்துலில்லாஹ்! வழக்கம்போலவே வசீகர வார்தையும் அதில் கசியும் கண்ணீரை சொல்லும் லாவகம்!
வெள்ளித்திரையிலும்
சின்னத்திரையிலும்
நடித்த வாழ்க்கையை
ரசித்த வாலிபம்
மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க.
-------------------------------------------------
கணித்திரையில் நித்திரை தொலைத்து பத்தரை மாற்று தங்க குழந்தைகளும் காத்திருக்கும்,இதய தாமரை பூத்திருக்கும்.கணினியை மீறும் கைகள் பரபரக்கும் அந்த கனியைப்போன்ற குடும்ப கிளையில் சேர்ந்து அமர ஆனாலும் எதார்த்தம் சுடும் ,எதிரே இருந்தாலும் அந்த பிம்பங்கள் மாய பிம்பங்களே! பாச அதிர்வுதரும் மின் கம்பங்களே!தொடாமலே மெல்ல அதிர்வலைககளை ஏற்படுத்தும்.பரவசம் நம் வசப்படாமலே அதுவே பரவசப்படும்.தொடும் (திரை) தொலைவில் நம் உயிரை கொஞ்சும் பின்பம் ஆனாலும் கலந்து தொடமுடியாத துன்பம்.
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல
வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
------------------------------------------
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல,அது சிங்ககுகைவாயில்
மாட்டிய ஆட்டுத்( நி)தலைபோல. அந்தரத்தில் பிடிமானம் இல்லாத காற்று பலூன் பயணம் போல! எதிலும் பிடிப்பு இல்லாமல் பிடிப்பதாய் நடிக்கமுடியும்,ஆனால் அவள் "வேராய்" இல்லாமல் நாம் வேறு, அவள்வேறாய் நிலைத்திருக்கமுடியாது
குடும்பமெனும் ஆல மரம்!அது விழுது இருந்தாலும் ஒரு சிறு காற்றிலும் விழுந்து போகும்.
அல்ஹம்துலில்லாஹ்! உணர்வுபூர்வமான கவிதை! எதார்த்ததின் வெளிப்பாடு!உளவியல் சார்ந்த ஒரு வடிகால்! கவிதை ஆற்றில் நீர் பெற்ற வாய்கால்! கால்வாயில் ஓடும் குளிர் நீர்! உள்ளக் குளத்தின் கண்ணீரையும் மெலுந்து செய்து அனுதாப அலைவீசும் இந்த காந்த கவிதை! வாழ்த்துக்கள் கவியரசே!
அன்புக் கவிஞர் தம்பி!
// துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!//
கடை வரிகளில் காந்தம். ஏகாந்தமாய் வாழ்வோரின் சந்தம்.
அண்மையில் ஒரு கவிதை படித்தேன். அதைப் பகிர விரும்புகிறேன். அது
======================
"ஒரு வார்த்தையில்
ஒரு சோகக் கவிதை சொல் என்றேன்
அவள் சொன்னாள்
தனிமை."
======================
உனக்குப் பிடித்த பொருள்களை
பட்டியலிடு வாங்கி அனுப்புகிறேன் என்றேன்
லிஸ்ட் வந்தது
முதலில் என் பெயர் பாஸ்போர்ட் நம்பருடன் .
========================
தன்னந்தனிமையிலே- உடல்
தள்ளாடும் வயதினிலே- உன்
புன்னகையைப் பார்த்திருந்தால் - அது
போதாதோ எந்தனுக்கு.-என்று ஒரு பழைய பாடல் வரிகளும் நினைவில் வருகிறது.
crown சொன்னது…
அல்ஹம்துலில்லாஹ்! உணர்வுபூர்வமான கவிதை! எதார்த்ததின் வெளிப்பாடு!உளவியல் சார்ந்த ஒரு வடிகால்! கவிதை ஆற்றில் நீர் பெற்ற வாய்கால்! கால்வாயில் ஓடும் குளிர் நீர்! உள்ளக் குளத்தின் கண்ணீரையும் மெலுந்து செய்து அனுதாப அலைவீசும் இந்த காந்த கவிதை! வாழ்த்துக்கள் கவியரசே!
---------------------------------------
மேலுந்து செய்து என இருக்கனும்.
உண்மை!
மூடியும் மூடாமலும் வைத்திருக்கும் மடிகணினி... சொல்லுமே மீதியை !
//மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க//
ஆம் ! அதுதானே உண்மை !
கிரவ்னு சொன்னதையே மறுமொழிகிறேன்..
//உணர்வுபூர்வமான கவிதை!
எதார்த்ததின் வெளிப்பாடு!
உளவியல் சார்ந்த ஒரு வடிகால்!
கவிதை ஆற்றில் நீர் பெற்ற வாய்கால்!
கால்வாயில் ஓடும் குளிர் நீர்!
உள்ளக் குளத்தின் கண்ணீரையும்
மெலுந்து செய்து அனுதாப அலைவீசும்
இந்த காந்த கவிதை!///
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
MashaAllah, your poem with short and succint wordings reflects spoiling of youth in foreign countries by "virtual living", .
//துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை//
No objection to the above statement.
As bachelors its not easier to realize "பிறன் மனை நோக்காத பேராண்மை".
So, it should be ultimate goal of our brothers in foreign coutries to be with families(either back in India or in their earning countries).
If we make niyyath strong enough, and make efforts, Allah Subhana Wathaala help us. InshaAllah.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
மிகவும் அருமை
அத்தனை வரிகளுமே!
anbulla
அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
உங்களின் இந்த கவிதைக்குப் பாராட்டு சொல்லி ஒரு அலைபேசி வழிப் வாழ்த்து வந்தது. அனுப்பியவர்: பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள். அவர் சொன்னதன் ஒரு வரி "தமிழை பாடமாகப் படித்து பாடமும் நடத்திய எங்களைப் போன்றோரின் புருவத்தை உயர்த்தவைக்கிறது சபீரின் இந்த கவிதைப் பதிவு" என்பதாகும்.
அத்துடன் இந்த அவரின் பாராட்டு பார்சலுக்கு வேறு சில பங்குதாரர்களும் இருக்கிறார்கள். பின்னூட்டமிட்ட உலகக் கவியன்பன், தம்பி கிரவுன் ஆகியவர்களுடன் நானும் இந்தப் பாராட்டின் பங்குதாரர்கள்.
ஈனா ஆனா காக்கா,
எனக்கு
பேராசிரியரும்
ஓராசிரியராக
வாய்த்திருந்தால்
தமிழை நான்
தாலாட்டி
காக்காவின் வீட்டு வாயிலில்
நிற்க வைத்திருப்பேன்
வாலாட்டி.
அவர்களின்
அங்கீகாரம்
என் காதுகளில்
ராஜ வண்டின் ரீங்காரம்.
ஆஹா ! ஓஹோ! பேஷ்! பேஷ்! ரெம்ப நன்னா இருக்கு.
அசருக்குப் பின் அரைத்த காபி கொட்டையில் வடிகட்டிய பில்டர் காபி.
இப்படிப்பட்ட காபி எங்களுக்கு கபி கபி வேண்டும்.
நைரோபியின் நைட்டில் மழை ச்சோ வன பொழிய குறுகிய கால பேச்சிலராக இருக்கும் என்னையும் ஏங்க வைத்தவிட்டது இக்கவிதை....அதெப்படிக் காக்கா நீங்கள் இதையெல்லாம் அனுபவிக்காமலயே இவ்வளவு நேர்த்தியாக எழுதுகின்றீர்கள்....பாரட்ட வார்த்தைகள் இல்லை...நன்றி காக்கா....
யாசிர் - கென்யாவிலிருந்து
//Yasir சொன்னது… அதெப்படிக் காக்கா நீங்கள் இதையெல்லாம் அனுபவிக்காமலயே இவ்வளவு நேர்த்தியாக எழுதுகின்றீர்கள்....//
எனக்கும் அதே கேள்விதான் சபீர் காக்கா...
சகோதரர்களே,
கீழ்கண்ட தொடுப்பில் உள்ள check listஐயும் வாசிக்கவும்.
http://www.satyamargam.com/articles/arts/2081-evaluate-yourself.html
சத்யமார்க்கத்திலும் உங்க கவிதை ரொம்ப தரமாயிருக்கு! வாழ்க!
நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவியரசே!பசுமையான் ஞாபங்கள் உண்டு அல்ஹம்துலில்லாஹ்! அனாலும் இவ்வாறு நிகழ்ந்துவிடவில்லையெனில் அவ்வாறு அமைத்துக்கொள்ள தூண்டும் வரிகள். ஈகை குணம் வேண்டுமென இப்படி எளிமையாக கையாள உங்களால் தான் முடிகிறது. எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வின் நற்கூலி உண்டு!
மாத்தியோசி!
இந்திய தொழிலாளிகளுக்கு
வெளி நாட்டில் மவுசாம்
அடி மட்ட தொழிலானாலும்
உயர்மட்ட வேலையானாலும்
செவ்வனே செய்வதில்
அவனுக்கு நிகர் அவனே..!!
வெளி நாட்டில் மலிந்து கிடக்கும்
தொழிலாளிகளே! நாம் என்றைக்காவது
யோசித்திருக்கிறோமா ஒரு முதலாளியாக..
குவிந்து கிடக்கும் வாய்ப்புகள் நம் நாட்டில்
ஓரக்கைகளால் தட்டி விட்டு
வீரக் கதைகள் பேசி கப்பலேறினோம்..
உறங்காமல் சம்பாத்தித்ததை
ஒரேயடியாய் ஊருக்கனுப்பிவிட்டு
ஊணின்றி உறங்குகிறோம்
முதலாளியாகும் கனவுகளோடு
தொழிலாளியாகப் புறப்பட நாம்
இளமையை முதலீடு செய்கிறோம்
உழைக்கும் மனதிருக்கு
உடம்பில் வலுவிருக்கு
புத்தியிம் கூர்மையாயிருக்கு
ஆனாலும்...
உழைக்கும் நாட்டின்
ஊருக்கனுப்பும் சட்டத்தில்
ஓட்டைகள் உண்டா என்று
ஒப்பாரி வைக்கிறோம்..
இனியாவது...
மாத்தியோசிப்போம்..
வேர்வையில்
விளையிம் கரன்சிகளை
மொத்தமாய் அனுப்பிவிட்டு
ஊருக்குப் போகும் போது
கடன் வாங்கியாவது கண்டதை வாங்கி
காசை கரியாக்குவதை
நிறுத்துங்கள்...
உள்ளதை சேமித்து
இனி ஒரு விடுமுறை
என்பது இதுவே கடைசியாகட்டும்
தொழியாளியாய்
குப்பைக் கொட்டியது போதும்
இனி முதலாளியாய்
முன்னேறுவோம்...
மாத்தியோசிப்போம்!
முதலாளியாக முடியும் நம்மால்..
-சைனுத்தீன் பி. எண்ணச் சிறகுகளில் இருந்து.
suuppar kaakkaa. iraththa oottamuLLa ezuththu.
appdiyee ithaiyum vaasiyungkaLeen:
92) ரிட்டர்ன் டிக்கெட்
இருக்கை ஒட்டிய ஜன்னல் வழியோ
இறக்கை வெட்டும் வின்னின் வெளியோ
விமான எயிலிரான்களின் விசையோ
வான எழில்முகில்களின் அசைவோ
விடுப்பு முடிந்து
வேலைக்குத் திரும்பும்
எனக்கு
எதிலும் லயிக்கவில்லை
என்
இதயம் களிக்கவில்லை
முப்பத்தி யொரு நாட்கள்
முத்தமழை பொழிந்த
மகளின் முகம் வந்து
மனத்தை கொல்லுதையா
மழலை வெல்லுதையா
ப்பிங்க் நிற பார்பியும்
அதே நிறத்தில்
பள்ளிக்கூடப் பையும்
பென்சில் பொவுச்சும்
அழி ரப்பரும்
ட்டாமின் வாயில் விட்டு
பென்சில் சீவும் ஷார்ப்பனரும்
தோரா அணிந்த ஷூவும்
தேரா பஜாரில்
ஏறி இறங்கி வாங்கிய
வெளிர் நீல ப்பஃப் கவுனும்
மதீனா மார்க்கெட்டில்
மணிக்கணக்கில் தேர்ந்தெடுத்த
ச்சாக்லேட்டும் பிஸ்கட்டும்
தமிழ் பஜார்
தலை ஸ்கார்ஃபும்
மினுக்கும் கல் வளையும்
எல்லாம் கொடுத்து
இன்முகம் ரசித்து
விடுப்பு முடிந்து
விடைபெறும் நாளினில்
தன்னுடன் இருக்க வேண்டி
என்னிடம் கெஞ்சிய
மகளுக்குச் சொன்னேன்
மறுபடியும் அவளுக்கு
பொருள் வாங்கச் செல்வதாக.
மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்தப் பதிவை வாசித்துக் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் து ஆவும்.
சத்தியமார்க்கம் தளம் சென்று வாசித்திராதவர்களுக்காகக் கீழே அந்த "ச்செக் லிஸ்ட்"
சுத்திகரிப்புச் சோதனை
சுய
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?
படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?
சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?
கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?
நாடி நரம்புகள்
நாடுமின்பம் போதை
நரக நெருப்பெண்ணி
நீங்கிச் செல்வதுண்டா?
தீப்புண்ணை மிஞ்சிவிடும்
தீஞ்சொற்கள் சொல்லி
நல்லோரை வதைக்காமல்
நாவடக்கி நவின்றதுண்டா?
வாய்க்கு ருசியாக
வயிற்றுக்குப் பசிக்கும்
நோய்க்குப் பயந்து
நிதானமா யுண்டீரா?
நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?
வாகன நிறுத்தங்களோ
வாழ்க்கையின் விருத்தங்களோ
எல்லைக் குறிக்கப்பட்டால்
மட்டுமே ஒழுங்கிருக்கும்
குறித்தாயிற்றா?
கூட்டத்தோடு கூட்டமெனில்
கூடிப்போகிறது மனிதம்
ஒற்றையாய் உமது
உண்மை நிலை என்ன?
நினைவிருக்கட்டும்!
படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!
வஸ்ஸலாம்.
Post a Comment