அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரைநிருபரில் ஜனரஞ்சகமான "ஒரு புத்தகம் பிறக்கிறது" அதுவும் ஹிஜ்ரி வருடத்தின் பத்தாவது மாதத்தில் சுகப்பிரசவமாக இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) !
அதிரைநிருபர் வலைத்தளம் மூன்று தலைமுறைகள் கொண்ட பங்களிப்பாளர்களையும், வாசகர்ளையும் பால் பேதமின்று தன்னகத்தே கொண்டிருப்பதை நன்கறிவீர்கள்.
காசு கொடுத்து தினசரிகள், வாரப்பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் பழக்கங்கள் கொண்ட சிலரை தவிர்த்து, நூலகம் தேடிச் சென்று பல்வேறு தினசரி பத்திரிகைகள், வார மாத பத்திரிகைகள் வாசித்து வருவோரும் உண்டு என்று சொல்லுமளவுக்கு அவைகள் குறைந்து கொண்டே வருகிறது.
இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றுதான் இணையமும், இத்தகைய இணையப் புரட்சியில் தமிழ் எழுத்துருக்களைக் கொடையாக அளித்த நல்லுங்களின் அளப்பரிய சேவையை நினைவு கூர்ந்தவர்களாக நம்மக்களும், இணைய வழியில் அன்றாட தகவல்கள், பதிவுகள், சேவைகள், பிரச்சாரங்கள், விவாதங்கள் என்று கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஐம்பது வருடங்களுக்கு மேல் புத்தங்களோடு புரண்டு எழுந்து, அதன் அட்டைப்படம் முதல் கடைசிப் பக்கம் வரை கரை கண்ட நமதூர் மூத்த சகோதரர் மரியாதைக்குரிய எஸ்.முஹம்மது ஃபாரூக் (காக்கா) அவர்களின் அனுபவங்கள் எண்ணிடங்காத விஷயங்களைத் தாங்கி கொண்டு தொடராக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
நூலகங்களின் பெருமையையும், புத்தகங்களின் அருமையையும் அடுக்கி கொண்டே செல்லும் ஜனரஞ்சகமான தொடர் ! இன்றைய இளையவர்களின் புருவம் உயர்த்தும் உணர்வுபூர்வமான அனுபவங்களை அதிரைநிருபர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் விரைவில் !
இந்த அலசலில் ஆங்காங்கே இருக்கும் கரும்புள்ளிகளும் தெரியும், கருவில் இருக்கும் குழந்தையும் தெரியும், கயவர்களின் களியாட்டங்களும், காவியங்களின் கலைச் சோலையும் தெரியவரும்.
வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்க்கத் துடிக்கும் வாசகர்களுக்கு நல்லதொரு தேடலுக்கும் கிடைத்த அருவியாக இருக்கும் அதுவே அற்புதமான எழுத்தோடையாக அதிரைநிருபரில் தொடராக ஓட இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
ரமளானுக்கு பின்னர் "ஒரு புத்தகம் பிறக்கிறது" புத்தம் புது குழந்தை பிறக்கிறது அதன் வளர்ச்சியை ஏறிட்டுப் பார்க்க காத்திருங்கள் !
அதிரைநிருபர் பதிப்பகம்
15 Responses So Far:
புத்தகம் படிக்கும் பழக்கம் நாளுக்கு நால் அருகிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புத்தகங்களின் அருமையை தமக்கே உரிய பாணியில் ஃபாரூக் மாமா சுவாரஸ்யமாகத் தருவார்கள் என்கிற எதிர்பார்ப்பில்...
"வரவேற்பும் துஆவும்"
(என் அபிமான அம்புலிமாமா, அணில், முயல், முத்து காமிக்ஸ், கோகுலம், பி.டி.சாமி, தமிழ்வாணன், மு.வ., அண்ணாதுரை, கருணாநிதி, சான்டில்யன், கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ராஜேந்திரகுமார்,ராஜேஷ்குமார், ப.பிரபாகர்,வைரமுத்து, கவிக்கோ, மு.மேத்தா, கி.ரா.,பாலகுமாரன் பற்றியெல்லாம் செய்திகள் இருக்குமா?)
பிறக்க இருக்கும் குழந்தையை தாலாட்டி வரவேற்போம்..
படிப்போம்..மகிழ்வோம்..
புத்தம் புதிய புத்தகத்தை இருகரம் ஏந்தி வரவேற்கின்றோம்,
அறிஞர் பாரூக் காக்கா அவர்களின் எண்ணங்களை கருத்தோம்பலாக்கி அது எங்கள் இதயத்தில் சிறகடித்து குடிகொண்டு அதன் முழு பலன்களையும் நாங்கள் அருந்துவதோடு மற்றவர்களுக்கும் அருந்த கொடுக்கும் தெவிட்டாத இன்பமாய் அதிரை நிருபரில் வலம் வரக்காத்திருக்கின்றோம்
விடியட்டும் பெருநாள் பொழுது
நூலகத்தில் உலகைக் கண்ட நுண்மாண் நுழைபுலம் மிக்க காக்கா அவர்கள் இவ்வலைத்தள உலகில் நூலகத்தைக் காண வைக்கின்றார்கள் என்னும் அரிய செய்தி எனக்குள் பேரானந்தத்தை அளிக்கிறது.
நூலகமே உலகம் என்று யானும் இர்ந்தேன்; இருக்கிறேன், 1973ல் வாங்கிய கிளை நூலக அட்டையுடன் இன்றும் விடுப்பில் சென்றால் தவறாமல் நூலகம் சென்று நூல்கள் படிப்பதை நிறுத்தாமல் தொடர்கிறேன். எனவே, எனக்குப் பிடித்தமான அதே நடைமுறையில் வாழும் காக்கா அவர்களிடமிருந்து நிரம்பக் கற்கலாம். விடுப்பில் நூலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வுடன், இன்ஷா அல்லாஹ்!
படிப்பாளி தான் படைப்பாளியாகிறார்
கண்டது கற்கின் பண்டிதனவாரார்
என்பதை நிரூபிக்கப் போக்கும் நிஜத்தைக் காணத் துடிக்கும் வாசகர்களில் யான் முன் நிற்கிறேன்.
நல் வரவாகுக!
பெருநா மாசம் உதிக்கும் அனுபவ எழுத்தோவியத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்கிறேன்.
அதிரை நிருபரிலும், அதன் வாசகர்களுக்கும் ஒரு நல்ல பதிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.
எங்கள் மரியாதைக்குறிய எஸ். முஹம்மது ஃபாரூக் மாமாவின் இத்தனை வருடங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
எங்கள் மரியாதைக்குறிய எஸ். முஹம்மது ஃபாரூக் மாமாவின் இத்தனை வருடங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்கிறேன்.
பெருநாள் பரிசை அற்புதமாக வழங்கத் தயாராய் உள்ள மரியாதைக்குரிய மச்சான் அவர்களையும் அதிரை நிருபரின் நெறியாளர் மற்றும் நிர்வாகிகளையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.
கண்களையும் கருத்தையும் தீட்டி கொண்டு காத்து இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
வார நாட்களில் ஒருநாள் மற்றுமொரு வித்தியாசமான விருந்து ! சமீபத்திய கருத்தாடல்களில் நகைச்சுவையும், அதற்கு வைக்கும் பொடியும், அதில் இருக்கும் நெடியும் மூத்த சகோதரர் அவர்களிடம் நிரம்ப கண்டு வருகிறேன்... அவ்வகையில் தொடரிலும் பொரி தட்டும் என்று நம்பலாம் !
//ஒரு புத்தகம் பிறக்கிறது"// I am waiting, In Shaa Allah
இன்ஷா அல்லாஹ் பிறக்கும் புத்தகம் , சுகப்பிரசவமாக ( பிறக்கட்டும் ) இருக்கட்டும் .அனைத்து புத்தகப்பிரியர்களையும் கவ்ர்ந்திழுக்கட்டும்.
கண்டிப்பாக சுவராச்யத்திர்க்கு குறைவிருக்காது என்று அடித்துச்சொல்லலாம்.
ஏனனில் கடந்த நாட்களில் அவர்கள் தந்த பின்னூட்ட தரங்கள் அப்படி.
அபு ஆசிப்.
அன்பு மருமகன் சபீர் அபுசாருக்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்ணன், கல்கண்டு, பூஞ்சோலை, போன்ற அந்நாள் சிறுவர் பத்திரிகைளும் அழா.வள்ளியப்பா போன்ற சிறுவர்களுக்கு கவிதை எழுதுபவர்களின் புத்தகங்களும் இன்னும் 'காதல்' என்ற பத்திரிகை ஆசிரியர் அரு.ராமநாதன்
எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' போன்ற அக்கால புத்தகங்களும், ம.போ.சி.முதல் உமறுப் புலவரின் ''சீறாபுராணம்'' அதிரை அண்ணாவியாரின்'' மழை பாட்டும் ''பிற்காலத்துக்கு தேவைபடும்' என்று வீட்டில்
போட்டு விட்டு பிழைக்க கப்பல் ஏறிவிட்டேன். வந்து பார்த்தல் அந்த இனிய தமிழ் புத்தகங்கள் எல்லாம் சர்க்கரை மடிக்க போச்சு. Referenceக்கு போதுமான சரக்கு கைவசம் இல்லாததால் தமிழ் புத்தகங்கள் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமமே.
எங்கள் காலத்தில் 'தமிழ் புக்கு' முஸ்லிம்கள் படிப்பது 'ஹராம்' என்ற 'fathva அமுலில்' இருந்ததால் அதையெல்லாம் நிறுவைகாரனிடம் தள்ளிவிட்டு பாவத்திலிருந்து என் தாய் தப்பித்து விட்டார்கள்''. அந்த Fathvaa இன்னும் அமுலில் இருக்கிறதா? இல்லையா'' என்று விசாரிச்சு சொல்ல முடியுமா? எழுதலாம்.
அன்புடன்,
S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்
மாஷாஅல்லாஹ்
வருக...அறிவமுதம் தருக
ஆரத்தழுவி கொள்வோம்
//எங்கள் காலத்தில் 'தமிழ் புக்கு' முஸ்லிம்கள் படிப்பது 'ஹராம்' என்ற 'fathva அமுலில்' இருந்ததால் //
இப்போதும் இது போல் பல ஃபத்வாக்கள் இன்ஸ்டன்ட் ஆக கொடுக்கப்படுகிறது. காலம்தான் வேறே தவிர 'மனிதன் மாறவில்லை"
அதிரைநிருபர் வாசகச கோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] 'ஒரு புத்தகம் பிறக்கிறது
'அறிவிப்பு கண்டதும் அதை ஆவலுடன் வரவேற்று கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியும் சலாமும் சொல்லி கொள்கிறேன். கட்டுரையே. படிக்கும் முன் நீங்கள் அன்பு உள்ளங்கள் கொடுத்த
வரவேற்பு எனக்கு ஆச்சரியத்தையும் ஊக்கத்தையும் தந்தது' .நீங்கள் எதிர்பார்த்தது போல் அது அமைய எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன். ஆமீன்
.தம்பி ஜாபர்ஹசன், அதிரை மன்சூர், ஜனாப் அப்துல் காலம் சேக் அப்துல் காதர், M.H.ஜாபர்சாதிக் [மு.செ.மு.] மருமகன் ஜாஹிர் ஹுசைன், மருமகன் யாசிர், மைத்துனர் இப்ராகிம் அன்சாரி, ஜனாப் நெய்னா தம்பி அபு இப்ராஹிம், மற்றும் தம்பி அபுஆசிப் ஆகிய எல்லோருக்கும் என் அன்பு நன்றியை பாசத்துடனும் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.
.தம்பி அதிரை மன்சூர் கவனிக்கவும்.
"அறிஞர் பாரூக்" என்று எனக்கு ஒரு பட்டம் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த பட்டத்திற்கு' தகுதி உடையவன் நான் அல்ல' என்பதை பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். எல்லோருக்கும் மேலான கொடை வள்ளலும் அறிஞனும், கருணை உள்ளவனும் அல்லாஹ் ஒருவனே.
அவன் எல்லாம் அறிந்தவன்.. வள்ளலுக்கும் வள்ளல் என்பது என் நம்பிக்கை. தயவு செய்து என்னை அந்த பட்டம் சூட்டி அழைக்காதீர்கள்.
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
Post a Comment