Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எனக்கொரு வேலை வேண்டுமய்யா ! 13

அதிரைநிருபர் | March 15, 2011 | ,

வளைகுடா வாழ்வின் அன்றாடம் வருடும் பொழுதுகளில் ஓர் நாள் வழக்கமாக நான் சார்ந்திருந்த வேலையுனூடே நிகழ்வாக நடந்தேறியதை அப்படியே உங்கள் யாவரின் சமூகம் முன்னால் இதைச் சொல்லவில்லைனா ஓடிப்போன எகிப்திய அதிபர் திரும்பி வந்திடுவாருங்க !

வரைகலை வேலைக்கு ஆள் தேவையிருந்ததால் அதற்காக முறையாக விளம்பரம் செய்து அதில் சிக்கியவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டது, வேலைக்கு ஆள் சேர்க்கும் முறைகளில் எல்லா அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் ஒரேமுறைதான் என்றில்லாமல் அவரவர்களின் வேலைகளின் சூழலுக்கு ஏற்ப நேர்முக / பயிற்சித் தேர்வுகள் நடைபெரும் அப்படித்தான் வந்தவர்களை அந்தப் பிரிவிற்கான பொறுப்பளரிடம் அனுப்பிவைக்கப்பட்டது அவரின் கருத்து மற்றும் திருப்தியைப் பொறுத்தே அந்த நபர்களை அவருடைய மேலாளருக்கு பரிந்துரை செய்து யாரை தேர்ந்தெடுக்கலாம்னு சொல்லியும் வைப்பார். அங்கே அத்துறையின் மேலாளரின் விருப்பு வெறுப்பு அல்லது திறனைப் பொறுத்து அங்கே ஓர் முடிவுக்குள் வந்திடும்.

அடுத்து அவருக்கான சம்பள விபரங்களை நிர்ணயிக்க மற்றொருவரிடம் அனுப்பி வைக்கப்படும். அவரின் அலசல் முனுமுனுப்பு, சில சமயம் அகோரப் பார்வை, பல நேரங்களில் ஏன் வந்தாய் என்றொரு பார்வையும் இருந்திடும். அதனையும் வென்றுதான் வேலைக்கு சேரத் தகுதிச் சான்று எழுத்து மூலமான அந்த பத்திரம் கிடைக்கும் அவைகளை பெற்றதும் என்னிடமும் வருவார்கள். அது மேலோட்டமாக என்னிடம் ஒன்றுமில்லாதது மாதிரிதான் இருக்கும், வருபவருக்கு ஏன் என்றால் கைககளில் வேலைக்கு சேறுவதற்கான சான்றுப் பத்திரத்தை பெற்றுக் கொண்டதினாலதான். இங்கே அப்படியொரு நினைப்பு எல்லாமே முடிஞ்சுடுச்சு இனிமே அப்பாயிண்ட்மெண்ட் தபால்தான் மீதி என்ற நம்பிக்கை.

சரி அதனாலென்ன கேட்டுடாதீங்கோ கொஞ்சம் பொறுங்க ! நிறைவாக என்னையும் அவர் கண்டுதான் செல்ல வேண்டும் இதுவும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான் ஆதலால் என்னிடமும் வந்தார், வந்தவரைக் கண்டதும் எப்படியப்பா இந்த வேலைக்கு வந்தாய் என்று கேட்டேன் (இது வழக்கமாக கேட்பதுதான்).

உடனே அவர் சட்டென்று “எனக்கு இந்த நிறுவனத்தில் இருக்கும் மேலாளரை (அவரின் பெயரைச் சொல்லி) எனக்குத் நன்றாகத் தெரியும் அவர்தான் என்னை இங்கே வேலைக்கு சேர்த்தார்” என்றார். அப்படியா என்று அமைதியாக கேட்டுவிட்டு சரி இருக்கும் பேப்பர்களையும் காட்டு என்றேன் அவரும் காட்டினார் அவருடைய பாஸ்போர்ட்டையும் பார்த்தேன் அவர்களாகவே ஒன்று கூடி விரட்டியடித்த அதிபர் ஆட்சியில் வினியோகிக்கப்பட்டது.

அவரை அப்படி கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு, அவரின் இனர்வியூ அப்ப்ளிகேஷனில் கையொப்பமிட்டவர்கள் (மூவர்) ஒவ்வொருவரிடமும் இவரைப் பற்றி கேட்டேன் அவர்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பெயரைச் சொன்னார் சரி நீங்கள் அனுப்பியிருப்பவர் சரியாகத்தானே இருப்பார் என்று கையொப்பமிட்டோம் நாங்கள் வேற ஒன்றும் கேட்டிடவில்லை... என்றனர்.

நான் மீண்டும் அந்நபரை அழைத்தேன், சரி எல்லாமே முடிந்து விட்டது நீ சொன்ன அந்த மேலாளரிடமே உன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை வாங்கிக் கொண்டு வேலைக்குச் சேர்ந்து கொள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அவர் மீண்டும் அலுவலக முகப்பிற்கே சென்று மீண்டும் என்னிடமே வந்தவரிடம் என்னவென்றும் கேட்டேன் என்னிடமும் அதனையே கேட்டார்.

நானும் அவரிடம் அந்த மேலாளரை பார்த்திருக்கிறாயா என்றும் கேட்டேன் இல்லை என்றார் அப்படியானால் எப்படி இங்கே எல்லோரிடமும் அவரைத் தெரியும் அவர்தான் இங்கே வேலைக்கு அனுப்பி வைத்தார்னு சொன்னாய் என்று கேட்டேன்.

அதற்கு அவர் இங்கே வந்ததும் முதலில் "அந்த முக்கியமான டிபார்ட்மெண்ட்" மேலாளரின் பெயரைக் கேட்டேன் சொன்னார்கள் அதனையே எல்லோரிடமும் சொன்னேன் என்றார்.

அந்தப் பெயருடைய, அவனேதான் நான் என்றதும் அப்படியே மிரண்டவர் அவசரமாக திரும்பி (அவர் நாட்டினுடைய முன்னால் அதிபரைப்போல ஓட) போகப் பார்த்தார். அப்படியே அவரைச் சமாதானம் செய்து மீண்டும் முறையாக வரைகலைத் தேர்வுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் அங்கே சென்றதும் இங்கிருக்கும் கணினியில் வேலை செய்த அனுபவமில்லை என்று சொல்லிட்டு அப்படியே சென்றும் விட்டார். இவர் வேறுயாருமல்ல மேலேச் சொன்ன எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்தான்.

ஒழுங்கா படித்து, முறையான அனுபவத்துடன் வேலை தேடும் அனைவருக்கும் நிச்சயம் வேலை கிடைக்கும், போலிவேசம் போடுபவர்களைத் தவிர. மாணவர்களே நன்றாக முழுமையாக படியுங்கள் பட்டங்களை பெறுங்கள், உங்களுக்கு கிடைக்கப்போகும் முதல் வேலையை ஒரு அனுபவ படிப்பாக கருதுங்கள். அதுவே வேலை அனுபவத்தின் முதல் வாசல் என்ற எண்ணத்துடன்.

சரி எனக்கு ஓர் வேலை வேனுமுங்க ! ஆனால் இப்படியான ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்காத வேலையா வேனுமுங்கோ…

-- அபுஇபுறாஹிம்

13 Responses So Far:

Yasir said...

பிரமிட்காரர்களிடம் வேலை பார்ப்பதென்றும்,வேலைவாங்குவதென்றும் முடிவு செய்து விட்டால் நிறைய பிரஸ்ஸர் மாத்திரையை கைவசம் வைத்திருக்க வேண்டும்...அப்பப்ப அது இறங்கி ஏறும்....அபு இபுராஹிம் காக்கா அல்லாஹ் உங்களுக்கு ஆயிரம் பூஸ்ட் குடித்த சக்தியை தரட்டும்..

sabeer.abushahruk said...

இப்படித்தான் நான் சவுதியில் மேலாளராகப் பணிபுரிந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் சிபாரிசுக் கடிதங்களோடு அந்நாட்டவர் பலர் வேலை தேடி வருவர். அப்படி வந்த ஒருவரிடம்,

"என்ன வேலை தெரியும்" என்று அரபினேன்.
அவர் சொன்னார், "மேலாளர் வேலை தெரியும்" என்று.
நான் அதிர்ச்சியோடு, "அப்படியென்றால் நீ படித்த சான்றிதழ்கள் கோப்பில் இல்லையே என்றேன்".
"படிக்கவெல்லாம் இல்லையே" என்ற சவுதியின் தேசியகீதத்தை மொழிந்தார். "படிக்காமல் எப்படி மேலாளர்???" என்று இழுத்தேன். அவர் சொன்ன பதில்: "அப்பொலேருந்து பார்க்கிறேன் நீ கையெழுத்துதானே போடுறே. எனக்கும் கையெழுத்துப் போடத்தெரியும்" என்றார்.

நான் அப்பிடியே ஷாக்காகிட்டேன்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அபு இபுறாகிம் சமூகத்துக்கு,

உங்கள் ஆர்டிக்கிள் படித்ததில் அல்லது பிரித்து மேய்ந்ததில் சில டிப்ஸ்கள்.

முதல் பாரா சூப்பர்..நல்ல தொடக்கம்.எப்படி ரெக்ரூட் பண்ராய்ங்க என்பது சமயங்களில் சன் டி வி காம்பயர் சொல்ரமாதிரி ரொம்ப வெவரமா [ பெரிசா] இருக்கு. தேவைதானா என்பதை வாசகர் முடிவுக்கு விடுவோம்.

//அந்த நபர்களை//குறிப்பிட்ட பொறுப்பில்//

போன்ற சொத்துப்பத்திரத்தில் வரும் வார்த்தைகள் தவிர்த்துவிடுங்கள் [ ரொம்ப அவசியம் இருந்தால் ஒழிய] வாசகர்களுக்கும் ஆர்டிக்கில்லுக்கும் இடையே கொசு மருந்து அடித்த மாதிரி தூரத்தை இந்த வார்த்தைகள் ஏற்படுத்திவிடும்.

நம் ஊரில் வெட்டி ஆபிசர் எல்லாம் எப்படி கல்யாண மாப்பிள்ளை ஆகிறார்கள் என்பதைப்போல் அவருக்கு எப்படி வேலை கிடைத்தது என்பதை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.

மற்றபடி டிப்ஸ் எழுதியது சகோதார உரிமையில்தானே தவிர ' தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிவோம் ,.....என்ற கைலாச மவுன்டைன் ஆள் மாதிரி தான் எழுதியிருக்காப்லெ என நினைத்து ' நல்ல டிப்ஸ் காக்கா' என அப்ரானியாக பின்னூட்டம் இட்டு விட வேண்டாம்.

//சகோதார உரிமையில்தானே தவிர// என்ற என் வாசகத்தை ,
எந்த மவுன்டைனிலும் சொந்த செலவில் வந்து சத்தியம் செய்ய தயார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா: இதுக்கெல்லாம் போய் மலை ஏறனுமா என்ன? நாம அடிவாரத்திலிலே ஒரு டெண்ட் அடிச்சி பேசித் தீர்த்துக்குவோம் :)

கொசுத் தொல்லை மேட்டரை சரி செய்திட்டேன், ஏன்ன அரசியல்(வி)வாதிகள் நடமாட்டமும் இனிமேல் அதிகமாக இருப்பதனால் அவைகளே போதுமென்பதால்.

அப்புடியா வளைஞ்சு நெளிஞ்சு (சன் டிவியில வழியிறமாதிரியா) சொன்னேன் ஆஹா ! சரி காக்கா மக்கள் டிவி பார்ப்பதில்லையா ? அதப் பாருங்க காக்கா :))

ரொம்ப நாளியிடுச்சு உங்களின் கருத்துக்கள் விரிவாக வந்து அதார்கு இந்த வேலை வேண்டுமய்யா உதவியது (நன்றியே) ஏன்னா கருத்தாக எழுதி அழுத்தினால் குக்கீஸ்ங்கிற வழித் தரகர்களிடம் மாட்டிக்கிறீங்களே :))

முக்கியமாக, முதல் பாரா வடிவில்தான் எழுதியது வேற நிகழ்வுக்கு ஆனால் சட்டென்று இப்படி அன்றே நடந்தத்தால் இதனை எழுதிட்டேன்...

காலை எழுந்ததும் வலைப்பூ... பின்பு மாலை வந்ததும் களைப்பு (வேலைதான்)!

sabeer.abushahruk said...

//ஒரு டெண்ட் அடிச்சி பேசித் தீர்த்துக்குவோம்//

டென்ட்டா?!!! எனக்கும் கொஞ்சம் எடமிருக்குமா?

ஜாகிர் செம மூட்ல இருக்கான்னு நெனக்கேன் நகைச்சுவை பொங்கி வழியுது ( இல்லேனா ஏதாவது மருந்து பேரோ மெடிகல் டேர்மோ சொல்லி மிரட்டுவான்)

அப்துல்மாலிக் said...

இது மாதிரி பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்து உண்மையாகவே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்/நாலேட்ஜ் உள்ளவங்களுக்கே ஆப்பு வைப்பவர்களை என்னா செய்றது?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது மாதிரி பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்து உண்மையாகவே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்/நாலேட்ஜ் உள்ளவங்களுக்கே ஆப்பு வைப்பவர்களை என்னா செய்றது?///

இதனையும் செய்றாய்ங்களே... ! அந்தக் கொடுமையே எங்கேபோய் சொல்றது (இன்னொரு பதிவாகாவா சொல்றது உம்மாடியோவ்வ்வ்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// டென்ட்டா?!!! எனக்கும் கொஞ்சம் எடமிருக்குமா? ///

அதெப்படி உங்களிக்கில்லாமலா !?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாஹாஹா எப்பவும் போல அதே
நையான்டி குசும்புவுடன் நல்ல பகிர்வு. முன்பு சென்னையில் அடித்த கூத்துகல
நினைச்சு பார்த்தேன் அது ஒரு பொற்காலம் அது மலையேறிப்போச்சு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அது ஒரு பொற்காலம் அது மலையேறிப்போச்சு.//

கிரவ்ன்(னு) : மலையேற வேண்டாம்னுதான் டெண்ட் அடிச்சு அடிவாரத்திலே பேசுவோம்னு சொன்னேனே :))

crown said...

கிரவ்ன்(னு) : மலையேற வேண்டாம்னுதான் டெண்ட் அடிச்சு அடிவாரத்திலே பேசுவோம்னு சொன்னேனே :))
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இத சொல்ரியலான்னு பாக்கத்தான் அப்படியே எழுதினேன்

Meerashah Rafia said...

ஆஹா. அகிப்தியர்கள் அ(எ)ங்கும் அப்படித்தானா?! சவூதி அரேபியால மட்டும்தான் அவர்கள் இப்புடின்னு நினச்சேன்..வேலை வாங்கிரதுகுள்ள மூச்சு திணறுது.

msm(mr)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாம் பெற்ற இன்னல் இனி யாரும் பெற்றிடக் கூடாது என்றோ பதிந்தேன்... ஆதலால் கருத்திட்ட உங்களை சும்மா விட்டால் எப்படி இருந்தாலும் நன்றிகள் சொல்லாவிடினும் கோவிச்சுக்கவா போறீங்க !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு