Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2012 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்லாஹ்வின் பேருதவியால் AAF இரண்டாவது அமர்வுக்கான ஒன்று கூடல் நேற்று மாலை வல்லேஹோ மஸ்ஜிதில் மிகச் சிறப்புடன் நடந்தது.

அமர்வின் அவைக் குறிப்புகள்:-

நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் குழந்தைகள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அமர்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

லுஹர் தொழுகைக்கு பின்னர் அமர்வு ஆரம்பமானது.

நிகழ்வின் முதலாவதாக கிராஃஅத் சகோ.மாஹிர் [த/பெ அப்துல் மாலிக்] ஓதினார்.

வரவேற்புரையை சகோ.நஜீர் (செயலாளர்) அவர்கள் நிகழ்த்தினார்.

நடப்பு நிகழ்வுகளின் இதுவரை AAF செயல்பாடுகள் பற்றிய விபரங்களை சகோ.தமீம் (இணைச் செயலாளர்) அவர்கள் எடுத்துரைத்தார்.

சுருக்கமான உரையை சகோ. சிப்ளி முஹம்மது (துணைத் தலைவர்) அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட சகோதரர்களின் ஐயங்களுக்கும் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. குறிப்பாக முதன் முறையாக வந்து கலந்து கொண்ட சகோதரர்களின் விளக்க வினாக்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. அதனை சகோ.ஹக்கீம் (தலைவர்) மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இணைந்து மிகச் சிறப்பாகவும் பொறுமையாகவும் வழங்கினார்கள்.

அஸர் தொழுகைக்குப் பின்னர் தேநீர் இடைவேளையும் அளிக்கப்பட்டது.

புதிய வரவாக முதன் முறையாக வந்த சகோதரர்களை உறுப்பினர்களாக்கும் பணியும் துவங்கியது அவர்களின் உறுப்பினர்களுக்கான சந்தாத் தொகையும் பெறப்பட்டது.

வந்திருந்த அனைத்து சகோதரர்களின் சுய அறிமுகமும் செய்து கொள்ளப்பட்டது.

அடுத்ததாக உறுப்பினர்களுக்கு திறந்த மனதுடன் விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் அனைவரும் மிகவும் பயனுள்ள தகவல்களை பறிமாறியது மட்டுமின்றி நல்ல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. அனைத்து நல்ல ஆலோசனைகளையும் விவாதங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டது அதோடு அதற்கான இயன்ற முயற்சிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

AAFன் நடப்பு  நிதி நிலவரத்தை சகோ.இக்பால் M.ஸாலிஹ் (பொருளாளர்) விரிவாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து கலந்து கொண்ட சகோதரர்களின் புகைப்பட ஆவணப்படுத்துதல் தொடங்கியது.

அமர்வின் நிறைவு மஃக்ரிப் தொழுகைப் பின்னர் இனிதே நிறைவுற்றது.



AAFன் இரண்டாவது கூட்டு அமர்வின் தீர்மானங்கள்:-

1. இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 100$ ஜக்காத்தாக (அதற்குரிய தகுதியிருப்பின்) AAFக்கு வழங்குவது என்று முடிவானது.

2.AAF போதுமான நிதியாதாரம் பெற்றதும், உறுப்பினர்களுக்கென்று வட்டியில்லாக் கடன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (இதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்)

3. அமெரிக்க வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum, AAF என்று அங்கீகரிக்கப்பட்ட பெயரையே பயன்படுத்துவது என்று பெரும்பாலான சகோதரர்களின் ஆலோசனைப்படியே ஒருமனதாக முடிவானது இன்ஷா அல்லாஹ். இதற்கென்று அதிரையல்லாத நமது சகோதரர்களும் மின்னஞ்சல் வாயிலாக ஆதரவு தெரிவுத்திருந்தனர். அதுமட்டுமல்ல, அமெரிக்க வாழ் அதிரைச் சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் இதுவே சரியான வழி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

AAF நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கென்று புதிதாக அலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் அவசர உதவிகளுக்கும், தகவல்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள், அழைப்பு வரும் இந்த எண்ணிலிருந்து நிர்வாகிகளின் தொலைபேசிகளுக்கு தொடர்புகள் தானாக ஏற்படுத்திக் கொள்ளும். இதனை பாதுகாத்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத சகோதரர்கள் அல்லது நவம்பர் / டிசம்பர் மாத உறுப்பினர் சந்தா வழங்காதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும், சந்தா வழங்கவும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் ஜனவரி முதல் வங்கி கணக்கு மற்றும் இணையதளம் செயல்படத்  துவங்கும், அதுவரைக்கும் கீழ்கண்ட வங்கி கணக்கில் உரிய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

HARISH AMEEN
BANK OF AMERICA
CHECKING ACCT.
04324 77802
Please send an email to Bro.Iqbal (iqbalmsalih@gmail.com) after you deposit the cash (To keep an account).

இனிவரும் நாட்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை AAF அமர்வுகள் நடத்த முடிவானது, அடுத்த அமர்வு வரும் மார்ச் மாதம் 2013ல் நடைபெறும்.

இப்படிக்கு
AAF - American Adirai Forum

7 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ்! அடியேன் அமெரிக்காவில் வாழ்ந்தக் காலத்தில் இப்படிப்பட்ட ஓர் அமைப்பு இல்லாமற் போனதை எண்ணிப் பார்த்தேன்; எனக்கு ஏற்பட்ட ஆபத்துகளில் எனக்கு ஆறுதல் சொல்லவும் மாற்று வழிகளைக் காட்டித் தரவும் இப்படிப்பட்ட அருமையான ஓர் அமைப்பு இல்லாமற் போனதால், என் சுய அறிவின்படி முடிவெடுத்து விட்டு அந்நாட்டை விட்டு வந்து விட்டேன்; கைர். இக்குழுவில் என் ஆருயிர் நண்பர் முஹம்மத் தமீம் பின் ஷாஹுல் ஹமீத் மற்றும் என் அன்புச் சகோகதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களும் இருப்பதை அறிந்து கொண்டேன். என் உறவினர்களான, ஹாபிழ் முஹைதீன்(MU)மற்றும் அவர்களின் தம்பி அஷ்ரஃப், அஷ்ரஃப் அவர்களின் புதல்வர் ஷிப்ளி ஆகியோரும் இணைந்திருப்பதும் அறிகிறேன்.

உங்களின் தூய எண்ணத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்தொண்டு நிறுவனம் புரியும் நற்செயற்கட்குரியப் பலனை அல்லாஹ் வழங்குவானாக(ஆமீன்)

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்,இறைவனின் மாபெரும் கிருபையால் உலகமுழுவதிலும் உள்ள அதிரையர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்துடன் வாழ AAF மற்றும் உலகமுழுவதுமுள்ள AAMF-யின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவரின் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை வழங்க வேண்டி பிராத்தித்தவனாக,, வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்
---------------
இம்ரான்.M.யூஸுப்

Unknown said...

Assalamu Alaikkum,

My best wishes for our brothers and sisters in US who are becoming part of American Adirai Forum. Hope, InshaAllah, from this union, good intentions of supporting each other will be realized, and will be an example for our community in other parts of the world too.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ்...கலந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

இவ்வமைப்பின் நோக்கம் அனைத்து அமெரிக்கா வாழ் அதிரை சகோதரர்களுக்கு பயனுள்ளதாகவும் முழு ஆதரவும் நல்கிட ஏக இறைவன் நற் கிருபை வழங்குவானாக ஆமீன்..

இப்புகைப்படத்தின் மூலம் அனைத்து சொந்த/பந்தங்களை பார்க்க நேர்ந்தது அல்ஹம்துலில்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சேவையில் சிறக்கவாழ்த்துக்கள்!
ஆனால், AAMF என்ற ஒரே பெயரில் இல்லாமல் ஆளுக்கொரு அமைப்பாக இருப்பதில் வருத்தம்.

Canada. Maan. A. Shaikh said...

Masha Allah, My Best Wishes to AAF step up to right path and successful their movement Insha Allah.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்ஹம்துலில்லாஹ்...கலந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

இவ்வமைப்பின் நோக்கம் அனைத்து அமெரிக்கா வாழ் அதிரை சகோதரர்களுக்கு பயனுள்ளதாகவும் முழு ஆதரவும் நல்கிட ஏக இறைவன் நற் கிருபை வழங்குவானாக aameen

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு