நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலேசியா ...TRULY ASIA 15

ZAKIR HUSSAIN | வியாழன், நவம்பர் 12, 2015 | , , , ,

திரைப்படங்களில், ஊடகங்களில் மலேசியா என்றாலே இரட்டைகோபுரமும், மூக்கு சப்பையான சில சீனப்பெண்மனிகளும், அல்லது கொஞ்சம் பிசியான கோலாலம்பூர் விமான நிலையமும் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதையும் மீறி நிறைய விசயம் இந்த மலேசியாவிலும் இருக்கிறது.


ஒட்டு மொத்த வருடத்தின் அத்தனை வார இறுதியிலும் ... இந்த இடத்துக்கு போகும் வார இறுதியிலும்  எனக்கு பிடித்த இந்த ரிசார்ட். செராத்திங் எனும் இடம். கடற்கரை  காற்றில் அமர்ந்து ரசிக்க... கடற்கரை இந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவுதான். இரவின் நிலவு வெளிச்சத்தில் கடற்கரை மணலின் சலவைக்கு போட்ட சுத்தம் மனது நிறைந்து இருக்கும்.


மலேசியா மழையால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.இதை எழுதும்பொது கூட மழை பெய்கிறது. அதனால் அருவிகளுக்கும் பஞ்சம் இல்லை. இது Cameron Highlands ல் இருக்கிறது. [மலைக்கு போகும் வழியில் இருக்கிறது]. நான் இதில் குளிக்காமல் மலைக்கு போனது மிகவும் குறைவு.சாலையுடன் சேர்ந்த வயல்களும்...சாலை ஒரம் விற்கப்படும் துரியான் பழமும்.... இதையெல்லாம் ரசிக்காமல் சிலர் ஹோட்டல் ரூமில் படுத்து டி.வி யே கதியென்று கிடக்கும்போது பேசாமல் இவர்கள் வீட்டிலேயே இருந்திருக்களாம் எனத்தோன்றும்.


இரவு மார்க்கெட் என்பது மலேசிய வாழ்க்கையில் ஒன்றிப்போனது. ஒவ்வொரு இடங்களிலும் வாரத்துக்கு  ஒருமுறை இந்த மார்க்கெட்.


கொஞ்சமும் பிசியில்லாத ஊரில் அங்குள்ள மக்களுடன் சேர்ந்து டீ குடித்து..கதை பேசி , பள்ளிவாசலுக்கு போய் தொழுகையில் கலந்து பாருங்கள்..உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது விளங்கும். [ இது தெரியாமல்தான் தினம் ஆண்டவனை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம் ..சிலர்/பலர் மட்டும் ]


பினாங்கு..சாலை ஒர டீக்கடை ...நம் முன்னோர்களின் தியாகம் / அழிச்சாட்டியம் சொல்லும் இடம். இதில் "தியாகம்" என்று சொல்லக்காரணம்..வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து தனது இளமை எல்லாம் உழைப்புக்கே செலவிட்டவர்கள். "அழிச்சாட்டியம்" என நான் சொல்லக்காரணம்...வெளிநாட்டுக்கு சம்பாதிக்கபோய் குடும்பத்தை சரியாக கவனிக்காதவர்கள்.


நம்புங்கள் ..இது ரயில்வே ஸ்டேசன் தான். பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் இல்லாத, தண்டவாளங்களில் அசுத்தம் செய்யாத, சாப்பிட்ட மிச்சத்தை நடைபாதையில் எறியாத மக்கள் இருக்கும் ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேசன்.

ZAKIR HUSSAIN

15 Responses So Far:

ஆமினா சொன்னது…

மாஷா அல்லாஹ்... அழகான ஊர்!

அருமையான வர்ணனை... நன்றிsheikdawoodmohamedfarook சொன்னது…

இந்தஎட்டுபடங்கள்மட்டும்தான்மலேசியாவா?கல்தோன்றிமண்தோன்றா காலத்தேமுன்தோன்றியமூத்த'குடி'களுக்கு எழுத்தாலும் படத்தாலும் சொல்லவேண்டியது நிறையஉண்டே! தொடர்ந்துஎழுதலாமே.Colourful Malaysia வாழ்ga.!

Ebrahim Ansari சொன்னது…

இந்தியாவில் கேரளாவை இறைவனின் சொந்த நாடு என்று சொல்வார்கள்.
உலகின் விளையாட்டு மைதானம் என்று சுவிட்சர்லாந்தை சொன்னார்கள்.

ஆனால் மனிதன் இறந்த பிறகு அடக்கம் வேண்டுமென்றால் அது மலேசியாவில் உள்ள மலாக்காவில் என்று சொலக் கேட்டதுண்டு. இறப்பையும் இனிமையாக்கும் பூமி, இன்பத்தை இனிமையாக்குமென்று சொல்லியா கொடுக்க வேண்டும்?

மாஷா அல்லாஹ்.

நம்மில் பலரின் உடலில் ஓடும் ரத்தம் இந்த மண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று எண்ணுவதே மகிழ்ச்சிதான்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//ஏழாவதுபடம்//பினாங்கு ஓர டி கடை/ வெளிநாட்டுக்குசம்பாதிக்கப்போய்குடும்பத்தைசரியாக கவனிக்காதவர்கள்// தேத்தண்ணிகடைவச்சுதேத்தண்ணிகூடகுடிக்காமல்'வாயேகட்டி- வவுத்தைகட்டிபொண்டாட்டிபேரில்ஊட்டைகட்டி,தங்கத்தில்நகையைதட்டி [மனைவி] கழுத்தில்கட்டி,தங்ககாப்பு தட்டிகையில் மாட்டிமுடித்தபின்னே காலிளில்இனிப்புநீரோடும்கூடவே கால்புண்ணில்புழுக்களோடும்வந்த கணவனை''வராதே!போ!''என்றுமனைவியும்உண்டே!

sabeer.abushahruk சொன்னது…

அழகான இடங்களின் அருமையான புகைப்படங்கள்!

சுவையான வர்ணனைகள்!

அம்பி, தொடர்ந்து எழுதலாமே?

அதிரை.மெய்சா சொன்னது…

நான் சமீபத்தில் மலேசியா சென்று வந்தேன். நண்பர் ஜாகிர் சொல்வதுபோல மலேசியாவில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.அலோர்ஸ்டாரில் தொடங்கி ஜொஹுர் பாரு வரை பச்சைபசேலென்று இருக்கும் பசுமைக்கு பஞ்சமில்லா நாடு.

நண்பன் சபீரின் அறிமுகத்தில் கிடைத்த பழக இனிமையான குணம் படைத்த நண்பர் ஜாகிர் அலுவலகத்திற்கு அரைநாள் விடுப்புவிட்டு புத்ர ஜெயா என்ற அரசுசார்ந்த அலுவலகங்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்று அங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை சுற்றிக் காண்பித்தார்.

மலேசியாபோல் பசுமையாக மறக்க முடியாத நாட்கள் அது.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.பளிச் சென பிளிச்சிங் செய்ததுபோல் காட்சியும், வர்ணனையும் மலேசியா மக்கள் லேசியா இல்லாமல் இருந்து உழைக்கும் ஊர் என தகவலும். பார்க்க படிக்க பரவசம் ,இன்சா அல்லாஹ் ஒருனாள் இங்கே விஜயம் செய்யனும்.

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமா,

வட்டிக்கு வாங்கிக் குடித்து வாழ்க்கையையே தள்ளாடவிட்டு, வப்பாட்டியே கதி எனக் கிடந்து, உழைத்த காசையெல்லாம் ஊத்திக்குடித்து, ஊணுழன்று உயிர் மட்டும் இற்றுப்போன நிலையில் ஊருக்கு வரும் மலேயா சபுராளிகளை வரவேற்று எஞ்சிய காலத்திற்கு கஞ்சியூற்றி கவனித்த போற்றத்தக்க மாதரசிகளும் நம்ம ஊரில் உண்டு மாமா.

Yasir சொன்னது…

அழகான இடங்களின் அருமையான புகைப்படங்கள்!
சுவையான வர்ணனைகள்!
விரைவில் அங்கு வரணும்

ZAKIR HUSSAIN சொன்னது…

யாசிர்.... You are most welcome.

மெய்சா...Thanx for the thoughts. உங்கள் மகன் இருவரும் அதிகம் ரசித்த ஊர் மலேசியா என நினைக்கிறேன்.

Brother Ebrahim Ansari,

//நம்மில் பலரின் உடலில் ஓடும் ரத்தம் இந்த மண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்று எண்ணுவதே மகிழ்ச்சிதான். //

உண்மைதான். நம்மில் பலர் இந்த நாட்டை நம்பி வேலைக்கு வந்தவர்கள். மிகப்பெரிதாக சம்பாதிக்காவிட்டாலும் ஓரளவு கெளரவமாக வாழ இந்த நாட்டின் வேலை வாய்ப்புகள் உதவியாக இருந்தது. [ அந்நாளில் ]

கிரவுன்..

மலேசியா..லேசியா...எங்கேயிருந்து கிடைக்கிறது இந்த வார்த்தை ஜாலம்.

சபீர் & ஃபாரூக் மாமா....நீங்கள் இருவரும் சொல்ல வந்த விசயத்தை நான் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். நம் ஊரிலிருந்து போய் தியாகம் செய்தவர்களும் உண்டு...குடும்பத்தை கவனிக்காமல் அழிச்சாட்டியம் செய்தவர்களும் உண்டு.

அழிச்சாட்டியம் அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்து [ சவூதி / துபாய் / யூகே / அமெரிக்கா வந்த பிறகு ] பெரியவர்களை மதிக்காமலும் , வாழ்க்கை வசதிகளில் அடிமைப்பட்டதையும் நமது ஊரில் அரங்கேறியதையும் கேள்விப்பட்டேன்Shameed சொன்னது…

எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும் காரணம் நான் முதன் முதல் சென்ற வெளி நாடு (1981).எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும் காரணம் என் முன்னோர்கள் வாழ்ந்த நாடு.எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும் காரணம் இந்தா நாட்டின் பசுமையும் அங்கு அடிக்கடி பொழியும் மழையும்.எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும் காரணம் உலகிலே அருவிகள் அதிகம் நிறைந்த நாடு.எனக்கு இந்த நாடு ரொம்ப ரொம்ப பிடிக்கும் காரணம் ஜாகிர் இந்த நாட்டில் இருப்பதால்

ZAKIR HUSSAIN சொன்னது…

சாகுல்....கடைசி வரியில் அசத்தி விட்டீர்கள்.

ZAKIR HUSSAIN சொன்னது…

சகோதரி ஆமினா அவர்களுக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

மாஷா அல்லாஹ், பார்க்கும் கண்களுக்கு இவ்வளவு ரம்மியமா இருக்கே, அங்கே நேரிடையா விசிட் செய்தால்...? அருமை காக்கா

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+