version 4.0.1 (update yet to release)
எதுக்கும் ஒரு முன்னுரை இருக்கனும்னு கூகிலானந்த ஆசிரமத்தில் ஒன்றும் சொல்லியெல்லாம் தரவில்லை, இருந்தாலும் இதுக்கும் ஒரு முன்னுரை எழுதிடாலாமான்னு யோசிச்சுகிட்டே இப்படித்தான் எழுதிட்டேனுங்க...
சும்மாதாங்க இருந்தேன் !
சங்கை ஊதிக் கெடுப்பானேன்னு சொல்லுவாங்களே அதுபோலத்ததான், எந்தப்பக்கமும் போகாமலும் இருந்தேனோ அங்கே போகும்படி வைத்தது ஒரு நட்பு பிடித்த அடம் அங்கே போகும்படியானது.
அதன் சாதகபாதகங்களை இரண்டு வருஷத்திற்கு முன்னாடியே அலசி ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதியிருந்தாலும், நாமும் ஏன் சிக்க வேண்டும் என்றே ஒதுங்கியிருந்தேன். மாறாக மாற்றங்கள் வேண்டி மாறாமலே இருந்தால் மாற்றம் எப்படி வரும்னு ஒரே குழப்பமா இருந்துச்சா !?
வேறு வழி ! உள்ளே சமீபத்தில்தான் நுழைந்துவிட்டேன்.
எங்கேடா! நுழைந்தேன்னு கேட்டு அடிக்க வந்து விடாதீர்கள் அதுதாங்க "ஏதோ" பக்குன்னு எல்லோரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் தமிழில் "முகநூல்" !!??
அங்கே நுழைந்ததும்தான் தெரிந்தது, ஒரே நாளில் எக்கச்சக்க குப்பைகள் ஸாரி ஸ்க்ராப்ஸ் எதனையும் கிளறாமல் அப்படியே அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன், அங்கே என்னைக் கண்டவர்களில் சிலர் தனி மின்னாடலில் "இணையத்தில் வலைவீச்சு" என்ன ஆச்சுன்னு கேட்டுபுட்டாருங்க !!
பதில் "ன்ன்ன்ன்ன்ங்ங்ங்கேகேகே"
அதுக்கப்புறமா உட்கார்ந்து யோசிச்சா !!? ஏன்(டா)ப்பா அம்போன்னு வுட்டோம்? தொடரலாமா ? மக்கள்கிட்டே கேட்டுதான் பார்ப்போமா என்று ஸ்பிரிங் ஸ்பிரிங்கா சுத்திகிட்டே இருந்துச்சுங்க.... என்னங்க! தொடரலாமா ?
பாதகங்களை மட்டுமே பார்க்காமல் சாதகங்களையும், சாதனைகளையும் அலசி பார்த்தால் அதுவும் அதிரை மக்களின் வழக்காடு மொழியாடலில்.!
யோசிச்சு சொல்லுங்கள் ப்ளீஸ் !
முக்கிய குறிப்பு : ஒருத்தர் அனுப்பிய கமெண்ட் இனிமே "அபு - இபு" ன்னெல்லாம் எழுதாம ஒழுங்கா அப்பாவோட பேரன் மாதிரி விலாசம் போட்டு எழுதச் சொன்னாருங்க...
அவரே அந்த விலாசத்தை சொன்னாருங்க !
என்னங்க போட்டுக்கலாமா ?
ஹெல்ப் ப்ளீஸ் !
இப்படிக்கு,
m.nainathambi
16 Responses So Far:
அ.நி வரும் ஆக்கங்களின் தொல்லை எல்லை மீறுவதில்லை..அதனால் தொடரலாம்...ஆமா யாரு உங்கல “அபு-இபு” போடவேண்டாம் என்று சொன்னது :)
பின்னே போகமே சும்மா தைரியமா போங்க காக்கா வற்றாத நம்ம எடிட்டரக்கா பார்த்துப்பார் ......
உங்களுடைய புதிய பேருக்கு வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த விசயம் பற்றி.
எனக்கு வரும் " ஜன்க்மெயிலை" எப்படி வர விடாமல் தடுப்பது என்று ஆலோசனை சொல்பவர்களுக்கு;
# தென்கிழக்கு திசையிலிருந்து நல்ல செய்தி வரும்.
# அரசாங்க விசயங்களில் இனக்கமான முடிவு கிடைக்கும்
# நண்பரின் உதவி கிடைக்கும்.
முக நூலில் மார்க்கெட்டிங் விசயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று ஒரு நல்ல விசயம் இருக்கிறது. இருப்பினும் ஆன்லைன் பேங்கிங்...கிரடிட் கார்டு பேமன்ட் வசதி உள்ள தொழிலை நீங்கள் செய்தால் இன்னும் நல்லது.
அதை விட்டு வெட்டியாக எதுவும் எழுதிக்கொண்டிருந்தால் அது ஒரு அடிக்சன் ஆகிவிடும்.
அபு இபு,
தொடருமையா...உடனடியாக.
மேலே உள்ள குடுகுடுப்பைக்காரன் குறிக்கெல்லாம் செவி கொடுக்காதேயும்.
எனக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.
//முக்கிய குறிப்பு : ஒருத்தர் அனுப்பிய கமெண்ட் இனிமே "அபு - இபு" ன்னெல்லாம் எழுதாம ஒழுங்கா அப்பாவோட பேரன் மாதிரி விலாசம் போட்டு எழுதச் சொன்னாருங்க...//
நல்ல நறுக்குன்னுதான் சொல்லிகிறாரு
//முக்கிய குறிப்பு : ஒருத்தர் அனுப்பிய கமெண்ட் இனிமே "அபு - இபு" ன்னெல்லாம் எழுதாம ஒழுங்கா அப்பாவோட பேரன் மாதிரி விலாசம் போட்டு எழுதச் சொன்னாருங்க...//
Gud..Some people even writing with the name "puthiyathalaimurai". Let us use original name atleast while our article/comment is in good shape..
"வெல்கம் டூ மிஸ்டர் அபு இபு"
WELCOME TO MR. NAINA THAMBI.
பெயர்கள் இப்படியே அபூ இபு என்று போய்க்கொண்டு இருந்தால் இபு அனு, சபு சாரு, அபூ ஜாகு, பாரு சாஹு , யாசூ சாஜூ என்றும் போய்க்கொண்டே இருக்கும்.
தம்பி ஜாகிர் கூறுவதுபோல் ஜங்க் மெயில் நிறுத்தப்பட்டால்
வளைகுடா நாடுகளில் இருந்தும் நல்ல செய்திவரும்.
கார்கோவில் அனுப்பிய சாமான்கள் உடையாமல் வந்து சேரும்
இந்த மாசம் குடும்ப அட்டைக்கு மூணு கிலோ சீனி கூடுதலாக கிடைக்கும்.
காக்கா சூதனமா, தெளிவா இருந்தா எதுலேயுமே பூந்து கலக்கலாம், இந்த முகநூலும் அதே வரிசையில்தான் வருது....
உங்க வீட்டுக்குள்ளே ..
நான் வந்து ..வாங்க வாங்க ..
என்று உங்களை அழைப்பது போல் இருக்கிறது .......
தங்களின் இத்தளத்தில் எழுத தங்களை அழைப்பது ..
உங்கள் எண்ணத்தை தேன் கிண்ணத்தில் தாருங்கள் ..
சுவைத்து மகிழ்கிறோம்....!
தொடரலாம் இன்ஷா அல்லாஹ்...
இலவச இணைப்புகளும் தொடர்ந்து வழங்கலாம்..
அதாவது அ, இ, வுக்கு அப்புறமா வருகிற 'பு'ரிந்தால் சரியே !
//தங்களின் இத்தளத்தில் எழுத தங்களை அழைப்பது //
யார் தளமாக இருந்தாலும் வாசகர்களான நமது அனுமதி இல்லாமல் தொடர்ந்தால் பப்பரப்பாதான்.
அ.இ. இன்னும் தொடரலையா.
என்னத்தை தேன்கிண்ணத்தில் தருவாரேயானால்
பப்பரப்பா வாகாது ..கவி வேந்தரே ..!
தர நிர்ணயம் என்பது படிப்பவரின் ....
படிப்பவரின் தரத்தை பொறுத்தது..
அனைவரையும் ஆதரிபோம்..
காலபோக்கில் வல்லுநராய்
வளம் வர வாழ்த்துவோம் ...!
உறவுகளின் சூப்பர் ஆராய்ச்சியாளரே,
நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன்.
//தர நிர்ணயம் என்பது படிப்பவரின் ....
படிப்பவரின் தரத்தை பொறுத்தது..//
//வாசகர்களான நமது அனுமதி இல்லாமல் தொடர்ந்தால் பப்பரப்பாதான்.//
ரெண்டும் ஒன்னுதானே சித்திக் பாய்.
வாசகர் அமைவதெல்லாம் ...
தளங்கள் கொடுத்த வரம் ....
சுவையான கவிக்கு நீங்கள் ...
வாழ்க்கை வெற்றிக்கு வழிகாட்டும்
சகோ ஜாகிர் ..சமூக சீர் திருத்த ஆக்கம்
சகோ அன்சாரி கக்கா ..மரபு கவிக்கு
கவியன்பன் கலாம் காக்கா ..
இன்னும் பல நச்சத்திர எழுத்தாளர்
மின்னும் இத்தளஆசிரியர்
எழுத்தால் மின்னுவார் என நம்புவோம் ...!
Post a Comment