முஸ்லீம் MP உவைஸியின் எழுச்சியுரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களேவிக்கிலீக்ஸ் என்று கடந்த சில வாரங்கலாக  இந்திய பாராளுமன்றத்தின்  நேரத்தை வீண்டித்தார்கள். கிடைத்த சொற்பான நேரத்தில் சிறுபான்மையினர் கல்வி தொடர்பான விவாத்ததில் பங்கெடுத்துப் பேசினார் அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி.MP இவரைப் போல் வரவேண்டும் ஒவ்வொரு முஸ்லீம் மேலவை உறுப்பினர்களும். இந்த காணொளியில் ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி அவர்கள் சிறுபான்மையினரின் அபிமானிகள் என்று வேசமிடும் அரசியல்வாதிகளை இங்கு எப்படி சாடுகிறார் என்பதை பாருங்கள்.

முஸ்லீம் அபிமானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைகள் மட்டுமே விடுகிறார்கள், இந்த மத்திய அரசால் சிறுபான்மையினருக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சட்டை பகிரங்கமாக வைக்கிறார். இவர் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதால் மிகத்துணிச்சலாக பேசுகிறார். சிறுபான்மையினர் துறை அமைச்சருக்கு அவர் புள்ளி விபரங்களுடன் வைக்கும் கேள்விகளை கேளுங்கள் இதோ.இவரைப்போல் சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு நம் தமிழ் நாட்டிலிருந்து தைரியமாக ஆளுபவர்களை கேள்வி கேட்கும் திறன் படைத்தவர்களை முஸ்லீம்கள் ஒன்றிணைந்து தேர்தெடுக்க ஏன் மறுக்கிறோம் என்பது தான் வேதனை.
ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி இந்திய முஸ்லீம்களின் சார்பாக பேசுகிறேன் என்று சொல்லும்போது இவரை நிச்சயம் பாராட்டாமல் நம்மால் இருக்க முடியாது. இச்சகோதரர் மேலும் நம் சமுதாய மக்களுக்காக இன்னும் நிறைய பேசவேண்டும். இவரின் பேச்சை பார்த்தாவது மற்ற முஸ்லீம் உறுப்பினர்களும் சுறனையுடன் மக்கள் நலனின் அக்கரைகொண்டு தங்களின் குரலை அனைத்து சட்ட மேலவைகளிலும் உயர்த்தவேண்டும் மக்கள் நலனுக்காக மட்டும்.
அதிரைநிருபர் குழு

11 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நல்ல தருனத்தில் நன்மையை நாடியே பதிந்திருக்கும் இப்பதிவு யாவருக்கும் பொருந்தும்...

எங்கள் கவிக் காக்கா சொன்னதுபோல்

"ஆட்சி அதிகாரம் வேண்டும்...
அன்றாடம் காய்ச்சியேயாயினும்.."

இதத்தானே எதிர்பார்க்கிறோம், எங்காளால் களம் காண முடியாதச் சூழலில் களம் கண்டிருக்கும் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது, எங்கள் சகோதரர்கள் உங்களிடம் தானே உரிமையோடு உரையாட முடியும்.. ஒன்று பட்டு பலம் காட்டுங்கள் அங்கே சாதித்து காட்டுங்கள்...

//புத்தி சொன்ன தேதி போய்
குத்திக் கொன்ன சேதிகள்
பத்தி பத்தியாய்
பத்திரிக்கையில்! //

இப்படீருப்பதும் வேதனையே...

Yasir சொன்னது…

நல்ல உரை....
என்ன எல்லாம் கிரிகெட் பார்க்கபோய்ட்டீங்களா...வெறிச்சோடி கிடக்குது 12 மணி மீன் மார்க்கெட் போல....

Abu Easa சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது தான் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் செல்வோருக்கும், பிர கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டு பினாமிகளாகச் செல்வோருக்குமுள்ள வித்தியாசம்.

தனி சின்னத்தில் வெற்றி பெற்றவருக்கு எவரிடத்திலும் அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்கிற நிலை இல்லாததன் காரனமாக எந்தத் தடையுமில்லாமல் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!

ம'அஸ்ஸலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நாளைய நம் MLA க்கள் அனைவரும் பாரளுமன்ற நட்சத்திர பேச்சாளர் அஸாதுதீன் உவைசி MP அவர்களிடம் பாடம் கற்க வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

எனக்கு தெரிந்து இது போல் வேறு எந்த முஸ்லீம் MP இதுவரை பாராளுமன்றத்தில் பேசியதை நான் கண்டதில்லை.

இது போல் மேல் நம் குரல் ஒலிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் உவைஸி MP அவர்களுக்கும்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

// Abu Easa சொன்னது… இது தான் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் செல்வோருக்கும், பிர கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டு பினாமிகளாகச் செல்வோருக்குமுள்ள வித்தியாசம்//

சரியாக சொன்னீர்கள் சகோதரர் அபுஈசா, பினாமி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் பேச முடியும் என்று மலுப்பல் பேச்சு வேற பாரம்பரியமிக்க சமுதாய கட்சியிடம்.

அட இவர்கள் தேர்தல் மேடையில் பேசும் பேச்சில் ஒரு 10 சதவீதம் மேலவைகளில் மக்கள் பிரச்சினைகளை பேசினாலே போதும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நாங்கள் போட்டியிடாத சின்னமே கிடையாது என்ற வரட்டு கௌரவ பேச்சும் அந்த பாரம்பரிய சமுதாயக்கட்சியிடம் உண்டு.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். தலைமைப்பண்புக்கு சரியானவராக இந்த சகோதரர் விளங்குகிறார். அல்லாஹ் அவருக்கு துணைனிற்பானாக ஆமீன். இவர் போல தலைவர்களை கண்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

(N)தம்பி அபுமஹ்மூத்: முஸ்லீம் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களை பேச்சுக்களை இதுமாதிரியான காணொளித் தொகுப்பு ஆவணப் படுத்தப் படவில்லை (அதற்கான வாய்ப்புகள் அன்று இல்லை)...

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் உரையை கேட்டிருக்கிறேன் வாய்ப்புகள் கிடைக்கும்போது இங்கே பதிவுகளாக கேர்த்து இடலாம் இன்ஷா அல்லாஹ்...

இதேபோல் மதிப்பிற்குரிய பனாத்வாலா அவர்களின் உரைகளும் நிறைய உண்டு...

தேடியெடுப்போம் இன்ஷா அல்லாஹ்...

அப்துல்மாலிக் சொன்னது…

அலுவலகத்தில் கேட்க முடியாது, வீட்டில்ல் கெட்டுவிட்டு கருத்திடுகிறேன், பகிர்வுக்கு நன்றி மக்கா

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்): சகோ. அஸாதுதீன் உவைஸி.MP போல் திறமைகள் அதிகம், பேச்சாற்றல் உள்ள நிறைய சுயேட்சை முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

சமுதாயத்திற்கு வீரியத்துடன் சேவை செய்ய வல்ல அல்லாஹ் அவருக்கு உதவியும், ஆற்றலையும் தரட்டும்.

சகோதரர்: அஸாதுதீன் உவைஸி.MP க்கு வாழ்த்துக்கள்!