Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நல்ல மனையாளின் நேசம்! (வாழ்க்கையின் வலக்கரம்-II) 64

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2013 | , , , ,


அதிகாலை விடியலிலும் அஸ்தமன முடிவினிலும்
அதிஅழகாய் மின்னுமந்த அடிவான வடிவினிலும்
அதிமதுர அழகியலை அணிவித்த அரசனவன்
அதிபதியாம் அருளாளன் அளித்திட்ட அன்பவள்

ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிலும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்
ஆராய ஏதுமின்றி அழுக்கில்லா அன்பாலே
ஆணான கணவர்க்கு அவதரித்த அழகவள்

இலக்கில்லாப் பயணமதில் ஏகிச்சென்ற வேளை
விளக்கெனவே வாய்த்தவளோ வெண்ணிலவின் திவலை
கலக்கமற களித்திடவே கண்டகனா பளித்திடவே
குளக்கரையில் குளிர்க்காற்றாய்க் குதித்துவரும் தென்றல்

தூக்கமிறா இரவுகளில் துணையாகும் இணையவள்
நீக்கமற நெஞ்சினிலே நிறைந்துநிற்கும் இளையவள்
பாக்குமர நிழலெனவே பாசமிலா உலகில்
பூக்குமரக் கிளைகளெனப் புல்விரிக்கும் பரிவு

சுட்டுவிடும் தீயெனவே உயிர்வதைக்கும் உறவில்
கொட்டுமழைத் துளியெனவே குளிர்விதைக்கும் குணமவள்
கெட்டவளும் மனம்மாறி கீழ்ப்படியும் வகையில்
மொட்டவிழும் பொழுதுகளாய் மணம்பரப்பும் மலர்

தூரநிறம் பச்சையென தவறிழைக்கும் பலரில்
துளிநீரும் தீர்த்தமென திருப்தியுறும் நிசமவள்
தேனெடுக்கக் கூடழிக்கும் திருடர்களின் குடிலில்
தீனெடுத்துத் தீதொழிக்கும் திங்கள்முகத் தளிர்

வம்பெடுத்து வரிந்துகட்டி வாழ்வழிக்கும் உலகில்
அன்பெடுத்து அறிவுடனே அரவணைக்கும் அசலவள்
கொம்பெடுத்துக் கூர்ச்சீவி குத்தவரும் கூட்டம்
கொடிமலரின் குணம்கண்டு திரும்பியொரு ஓட்டம்

உச்சிவெயில் வேளையிலே ஊருக்குள்ளே வெளிச்சம்
அச்சுஅசல் நிலவொளியாய் அவள்வதனம் அனிச்சம்
சுற்றத்திலும் நட்புகளும் வாழ்த்துகின்ற வண்ணம்
சுத்தமுள்ள உள்ளன்பால் மனம்கவரும் அன்னம்

ஏழுவர்ண வானவில்லோ வெயில்மழையின் குழந்தை
ஏகவர்ண வானவில்லாய் எழுமவளோ விந்தை
கட்டுரையாய் நீளுகின்ற கவலைகளின் கருவை
சுட்டும்விழிப் புன்னகையால் சுருக்கித்தரும் கவிதை

ஒற்றையடிப் பாதையிலும் உடன்நடக்கும் அவளே
கற்றைவெயில் கோடையிலும் குடைவிரிக்கும் கனிவு
எத்தகைய இடைஞ்சல்கள் படைதிரட்டி வரினும்
எதிர்கொள்வர் யாவருமே மனையாளின் துணையில்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

64 Responses So Far:

Unknown said...

நல்ல மனையாளின் இலக்கணத்தை வரிந்து கட்டு வார்த்தைகளில் வார்த்தெடுத்து இருக்கின்றாய்.

//ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிழும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்
ஆராய ஏதுமின்றி அழுக்கில்லா அன்பாலே
ஆணான கணவர்க்கு அவதரித்த அழகவள்//

அன்பை பொழிவதில் ஆதாயம் ஏதுமின்றி அழுக்கில்லா அன்பை தருபவளே உண்மை மனைவி

உண்மை மனைவிக்கு ஓர் உன்னத இலக்கணம்.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருமையான கவிதை உண்மையில் அன்பானவளுக்கு. பாசம் காட்டும் மனைவி வாழ்க்கையின் வலக்கரமாக இருப்பது போல் வேசம் போடும் மனைவி வாழ்க்கையின் இடக்கரம் என கொள்ளலாமா?

sabeer.abushahruk said...

எம் எஸ் எம் (N),

வலக்கரம் - வளமான வாழ்க்கைக்கு (வலக்கரம்கொண்டு உரிமையாக்கிக் கொள்வதைத்தானே குர் ஆனும் அனுமதிக்கின்றது!)

இடக்கரம் என்றானால் இளக்காரம்தானே?

Yasir said...

மாஷா அல்லாஹ்...அன்பானவளின் பண்புகளை காதல் ரசம் சொட்ட சொட்ட சொல்லும் கவிதை...வார்த்தைகள் வார்த்தெடுக்கப்படு கோர்க்கப்ட்டிருக்கின்றன...உண்மையும் கூட.வாழ்த்துக்களும் துவாக்களும் காக்கா

//எத்தகைய இடைஞ்சல்கள் படைதிரட்டி வரினும்
எதிர்கொள்வர் யாவருமே மனையாளின் துணையில்!//

உண்மை உண்மை உண்மை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அழகியலை மட்டும் சொல்லவில்லை !
ரசிகனுக்குத்தான் தெரியும் ரசனையின் உச்சம் !
எந்த வரி எடுத்து நான் சொல்ல !?
கிரவ்ன் வருவான்... கிரக்கம் கொள்வான் உங்கள் வரிகளில் !
அப்புற்றம் பாருங்கள் சுரக்கும் அவனிடமிருந்து... தேன்...

சட்டென்று சொல்லிவிடும் சங்கதிகள் அல்ல SUM-சாரம், கூட்டிக் கொண்டே போகும் அன்பு !

ZAKIR HUSSAIN said...

பாஸ்....சுகுரா சொல்லுங்க பாஸ்...இது வொய்ஃப் நல்லவுங்கோனு , கோழி கூவுறதுக்கு முன்னாடி எழுந்திச்சி...12 மணி நியூசுக்கு அப்பாலெ தூங்குவாங்கோன்ர மாதிரி தானே பாஸ்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

இதுக்குத்தான் நான் கடுசானத் தமிஷ்ல எழுத மாட்டேங்கிறது.

மறுக்கா ஒருக்கா படிச்சுப் பார்ரா...வலக்கரத்த ஊருக்கு அனுச்சிட்டு வீட்ல சும்மாத்தானே கெடக்கே.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahruk,

An ideal set of characteristics of a wife with excellent narration.
A lovely poem with kaleidoscopic view of good wife.
And nice picture(reminscent of kaleidoscopic magic
of colors and patterns) complements and beautifies the poem.

Jazakkallah khairan

B.Ahamed Ameen from Dubai.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவள் பற்றிய அக மதை
முழுமதியாய் தரும் கவிதை!

உள்ளம் உள்ளபடி உணர்ந்ததை
அள்ளித் தரும் தேன் கவிதை!

எல்லாராலும் இதை
சொல்லமுடியா இனிய கவிதை!

வலக்கரம் ஒன்னு ரெண்டாய் தந்ததை
மேலும் இன்னொன்றையும் தேட்டமிடும் கவிதை!

crown said...
This comment has been removed by the author.
crown said...

ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிழும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்
--------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவியரசே நலமா? சின்ன திருத்தம்??? நான் சொல்ல விளைவது சரியா? என சரிபார்க்கவும். முகில்(மேகம்) ,முகிழ்(இளம் மொட்டு =முகை)அதனால் தான் நறுமுகை(புன்முறுவல்=இளம் மொட்டுபோல் ,சிறு சிரிப்பு) தவறாக அங்கே நிகழ்திருக்கும் என்பது அறிகிறேன். என் ஊகம் சரியா????

crown said...

அதிகாலை விடியலிலும் அஸ்தமன முடிவினிலும்
அதிஅழகாய் மின்னுமந்த அடிவான வடிவினிலும்
அதிமதுர அழகியலை அணிவித்த அரசனவன்
அதிபதியாம் அருளாளன் அளித்திட்ட அன்பவள்
------------------------------------------------------------------------------------
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்!
இதை அழகாய் , அழகியலாய் அமைத்து கொடுத்த கரம் ! கவியரசுவின் கவிதை தரம்!

crown said...

ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிழும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்
ஆராய ஏதுமின்றி அழுக்கில்லா அன்பாலே
ஆணான கணவர்க்கு அவதரித்த அழகவள்
--------------------------------------------------------------------------------------------------


என் மேல் விழுந்த மழைத்துளியே! இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?என அழைக்கும் படி மனையாளின் அன்பு மழைதனை கவியரசுவின் கவிதை மழை கொட்டோ கொட்டென்று கொட்டினாலும் தேள் கொடுக்கல்ல தேன் மழைஇது இதமோ,இதம்.

crown said...

இலக்கில்லாப் பயணமதில் ஏகிச்சென்ற வேளை
விளக்கெனவே வாய்த்தவளோ வெண்ணிலவின் திவலை
கலக்கமற களித்திடவே கண்டகனா பளித்திடவே
குளக்கரையில் குளிர்க்காற்றாய்க் குதித்துவரும் தென்றல்
-----------------------------------------------------------------------------------------------
இனிய சுகந்தமாய்! இழுக்கும் காந்தமாய்!இனிக்கிறது கவிதை வரிகள் . இதமாய்,பதமாய் வீசும் தென்றலும், கவலையில் வரும் கண்ணீர் துவலையும் துடைக்கும் டவலை(துடைப்பான்)கொண்டுவரும் அவளை!இப்படி அழகாய் எழுத என்(எம்) கவியரசால் மட்டுமே முடியும், இது நித்தம் அனுபவிக்கும் அவருக்கே சம்பவிக்கும் வரிகளின் விரிவாக்கம் இந்த கவிதை வரிகள்...

crown said...

தூக்கமிறா இரவுகளில் துணையாகும் இணையவள்
நீக்கமற நெஞ்சினிலே நிறைந்துநிற்கும் இளையவள்
பாக்குமர நிழலெனவே பாசமிலா உலகில்
பூக்குமரக் கிளைகளெனப் புல்விரிக்கும் பரிவு
----------------------------------------------------------------------------------

பாக்குமர நிழல் என உவமையுடன் தாக்கும் போதே அதை போக்கும் விதமாய் மனைவியின் நிழலில் நிசமாய் நாம் அமரும் விதத்தை கவியரசே மனதில் ஆழமாய் விதைத்தாய் நீர் வாழ்க பல்லாண்டு இதேபோல் என்றும் சுகம் கண்டு!

crown said...

சுட்டுவிடும் தீயெனவே உயிர்வதைக்கும் உறவில்
கொட்டுமழைத் துளியெனவே குளிர்விதைக்கும் குணமவள்
கெட்டவளும் மனம்மாறி கீழ்ப்படியும் வகையில்
மொட்டவிழும் பொழுதுகளாய் மணம்பரப்பும் மலர்

தூரநிறம் பச்சையென தவறிழைக்கும் பலரில்
துளிநீரும் தீர்த்தமென திருப்தியுறும் நிசமவள்
தேனெடுக்கக் கூடழிக்கும் திருடர்களின் குடிலில்
தீனெடுத்துத் தீதொழிக்கும் திங்கள்முகத் தளிர்

வம்பெடுத்து வரிந்துகட்டி வாழ்வழிக்கும் உலகில்
அன்பெடுத்து அறிவுடனே அரவணைக்கும் அசலவள்
கொம்பெடுத்துக் கூர்ச்சீவி குத்தவரும் கூட்டம்
கொடிமலரின் குணம்கண்டு திரும்பியொரு ஓட்டம்
-------------------------------------------------------------------------------
அட!அட!தேனடை!அதை நான் அடைந்தேன் இப்பொழுதினில்!வாயடைத்து போகும் படி வியப்படைந்தேன்!களிப்பில் களைப்பிழந்தேன்! அத்தனையும் தேன்!தேன்! எதை பருக!எதில் உருக!எதை தொட! எப்படி விட????எல்லாம் அமுதமாய் அழகாய் இப்படியும் எழுத அல்லாஹ் தந்த அருளே!அந்த அருளும் அவனையே நம்புவதாளே சாத்தியம்!'தேனெடுக்கக் கூடழிக்கும் திருடர்களின் குடிலில்
தீனெடுத்துத் தீதொழிக்கும் திங்கள்முகத் தளிர்'-இது மகுடம்! தேன் குடம்!அல்லாஹுக்கே எல்லாப்புகழும். நான் பார்த்த கவிஞரிலே எதார்தமாய் எழுதும் கவிகளிலே நீங்கள் தான் என் கவிதேசத்தின் அரசன்!

crown said...

உச்சிவெயில் வேளையிலே ஊருக்குள்ளே வெளிச்சம்
அச்சுஅசல் நிலவொளியாய் அவள்வதனம் அனிச்சம்
சுற்றத்திலும் நட்புகளும் வாழ்த்துகின்ற வண்ணம்
சுத்தமுள்ள உள்ளன்பால் மனம்கவரும் அன்னம்
-----------------------------------------------------------------------------------

காக்கா!இதை படித்துகாட்டிருந்தால் மச்சியின் கண்ணம் சிவந்திருக்குமே? கண்ணதாசன் என ஒருகவிஞன் காதல் பாட்டை எப்படியெல்லாம் எழுதிபோனானே? அவன் கோப்பையில் மதுஇருக்குமாம் அது தரும் மயக்கத்தில் அவன் எழுதும் வரிகள் தான் காதல் வரிகளாம். ஆனால் என் கவியரசன் எழுத மது தேவை இல்லை !மார்க்கம் அவரை வழினடத்தும்!அதனாலேயே உண்மை மட்டும் கவியாக வெளிப்படுகிறது.

crown said...

ஏழுவர்ண வானவில்லோ வெயில்மழையின் குழந்தை
ஏகவர்ண வானவில்லாய் எழுமவளோ விந்தை
கட்டுரையாய் நீளுகின்ற கவலைகளின் கருவை
சுட்டும்விழிப் புன்னகையால் சுருக்கித்தரும் கவிதை
----------------------------------------------------------------------------------------
நாளுவரிக்களுல் எத்தனை உவமைகள்! அது இந்த பாட்டின் புதுமை! பதுமையை எழுதும் பொழுது வார்தை வில்லாய் வளை(வது)த்தது அருமை! வெயில் மழையின் குழந்தை =வானாவில் நல்லதொரு உவமானம்!கவிதை வானில் உதித்த சிந்தனை!

sabeer.abushahruk said...

அட, கிரவுன் வந்தாச்சா?

வ அலைக்குமுஸ்ஸலாம். உஙகள் வகுப்பு முடிந்ததும் பதில் தருகிறேன்.

crown said...

கட்டுரையாய் நீளுகின்ற கவலைகளின் கருவை
சுட்டும்விழிப் புன்னகையால் சுருக்கித்தரும் கவிதை
---------------------------------------------------------------------------------------------------
மொத்த கவிதையின் வரிகளின் அர்த்தப் பொட்டலம் இந்த வரிகளே! இந்த கவிதையின் வாக்குமூலம் இந்த வரிகள்!கண்ணியவள் கடைக்கண் காட்டி விட்டாள்! ஆண் மகனுக்கும் மாமலையும் ஓர் கடுகாம்" என சொல்லிவரும் வேளையிலும், ஓர் கடுகை அவள் காட்டிவிட்டாள்!அதுவே மாமலைபோல் காட்சித்தரும் கட்சி என்னுடையது எப்படி கவிஞரே நீங்களும் என் கட்சி தானே?

sabeer.abushahruk said...

அ.நி.: முகிழை முகிலாக்கவும், தயவு செய்து.

//ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிழும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்//

நுணுக்கமான தங்களின் திருத்தத்திற்கு நன்றி, கிரவுன்.

crown said...

ஒற்றையடிப் பாதையிலும் உடன்நடக்கும் அவளே
கற்றைவெயில் கோடையிலும் குடைவிரிக்கும் கனிவு
எத்தகைய இடைஞ்சல்கள் படைதிரட்டி வரினும்
எதிர்கொள்வர் யாவருமே மனையாளின் துணையில்!
----------------------------------------------------------------------------------------------
ஆஹா! அருமை!அருமை! கவிஞரே! அவள் திரட்டும் கோபத்துக்கு எந்த படைவெல்லும்???????? வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

அதிரை நிருபரின் வாசகர்கள் தத்தம் மனைவியர்மீது கோபமாக இருக்கும்போது இந்தப் பதிவு பதிக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ரொம்பதான் கப்சிப் என்று இருந்தது ரெஸ்பான்ஸ்.

யாசிர், கிரவுன், எம் ஹெச் ஜே, ஜாகிர், அபு இபு, காதரு, ஹமீது போன்ற என் கட்சியைச் சார்ந்தவர்களைக்கூட காணவில்லையே என்று பார்த்திருந்தபோது கிரவுனின் வருகை வழக்கம்போல் பதிவை கலைகட்ட வைத்துவிட்டது.

என் கட்சியைச் சார்ந்தவர்கள்? சம்மந்தப்பட்டவர்களுக்குத் தெரியும் எங்கள் கட்சியின் கொள்கையும் கோஷமும்.

ZAKIR HUSSAIN said...

//அதிரை நிருபரின் வாசகர்கள் தத்தம் மனைவியர்மீது கோபமாக இருக்கும்போது இந்தப் பதிவு பதிக்கப்பட்டுவிட்டதோ ////


பாஸ் அப்டீயெல்லாம் இல்லே பாஸ். ஹோம் மினிஸ்டர் ஊருக்கு போயிட்டதாலே, "எதற்கும் நாளைக்கு தேவைப்படும்" எனும் விதியில் இருக்க புதிதாக பழகியதால் சாப்பாடு மிஞ்சினால் கூட ஃபிரிட்ஜில் வைத்துப்பழகாத நான் [ 27 வருசமா ] திடீர்னு நாளைக்குத்தேவைப்படும் என்று மொபைல் போனைக்கூட ஃப்ரிட்ஜில் வைக்கும் அளவுக்கு பொறக்கிறுக்கு பிடித்த மாதிரி ஞாபக மறதி இருப்பதால் ரொம்பவும் எழுத முடியவில்லை.



இப்போது நான் படித்துக்கொண்ட பாடம் " YOU ARE ALONE" ...இதை ஒரு தீவில் உட்கார்ந்து 6 நாள் ட்ரைனிங்கில் கற்றுக்கொண்டது....

இப்போது லைவ் டெலிகாஸ்ட்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் உங்கள் காதைக் கொடுங்கள். நான் உங்கள் கட்சி.

இந்தக் கவிதை , எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளங்கலை வகுப்பில் மனப்பாடப் பகுதியாக ஆக்கப்படும். காரணம் இது மனை(வி)ப் பாடப் பகுதி.

உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் தேங்காய் சட்னிக்கும் அதில் மிதக்கும் மல்லிகைப் பூ இட்லிக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்றத்தில் முதல் தீர்மானம் நிறைவேற்றப் படும்.

காலின் வலியை நீலகிரித் தைலம்தான் நீக்குவதாக நினைத்துக் கொண்டு இருப்பவர்களின் அறியாமைக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு தீர்மானம் அவசியம் உண்டு.

இது இளையோர் பகுதி நமக்கு வம்பு வேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் கட்சி என்று ஒரு வார்த்தை கவிஞரிடமிருந்து வந்துவிட்டதால் கட்சியை விட்டுக் கொடுக்க முடியாது என்றே இந்தக் கருத்து.
மற்றபடி தம்பி அபூ இப்ராஹிமுக்கு அஞ்சி அல்ல.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//அதிரை நிருபரின் வாசகர்கள் தத்தம் மனைவியர்மீது கோபமாக இருக்கும்போது இந்தப் பதிவு பதிக்கப்பட்டுவிட்டதோ ////

பாஸ் அப்டீயெல்லாம் இல்லே பாஸ். ஹோம் மினிஸ்டர் ஊருக்கு போயிட்டதாலே, "எதற்கும் நாளைக்கு தேவைப்படும்" எனும் விதியில் இருக்க புதிதாக பழகியதால் சாப்பாடு மிஞ்சினால் கூட ஃபிரிட்ஜில் வைத்துப்பழகாத நான் [ 27 வருசமா ] திடீர்னு நாளைக்குத்தேவைப்படும் என்று மொபைல் போனைக்கூட ஃப்ரிட்ஜில் வைக்கும் அளவுக்கு பொறக்கிறுக்கு பிடித்த மாதிரி ஞாபக மறதி இருப்பதால் ரொம்பவும் எழுத முடியவில்லை.

இப்போது நான் படித்துக்கொண்ட பாடம் " YOU ARE ALONE" ...இதை ஒரு தீவில் உட்கார்ந்து 6 நாள் ட்ரைனிங்கில் கற்றுக்கொண்டது....

இப்போது லைவ் டெலிகாஸ்ட்...
--------------------

ஹா ஹா ஹா ! நட்சத்திர கமெண்ட் ! :)

காக்கா... இதை மனசு வச்சுகிட்டுதான் கவிக் காக்கா இந்த கவிதையே எழுதியிருப்பாங்களோ !?

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய சகோதரர்களே,

வீட்டில் நிம்மதி இல்லையெனில் நாட்டில் எதையும் எந்த ஆணாலும் சாதிக்க முடியாது. கணவனுக்கும் மனைவிக்கும் மாபெரும் விஷயங்களிலொன்றும் கருத்து வேறுபாடுகள் வந்து விடுவதில்லை. சாதாரண விஷயங்களில்தான் பெரும்பாலும் மாற்றுக் கருத்துகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் விவாதங்களில் சட்டென்று மனைவியிடம் தோற்றுப்போவதே எங்கள் கட்சியின் கொள்கை.

"நீ சொன்னாச் சரிதான்" -இது எங்கள் கட்சியின் கோஷம். கட்சியில் சேர்ந்துவிட்டால் எல்லாம் இன்பமயம்தான்.

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போய்ட்டா, செல்ஃபோன் கெட்டுப்போகாமல் இருக்க அதையும்கூட ஃபிரிட்ஜில் வைக்குமளவுக்கு மழுங்கிய மூளைதான் எங்கள் கொ.ப.செ. அவர்களின் தனித்திறமை.

இனி, சின்னதா ஒரு ஏற்புரை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது இளையோர் பகுதி நமக்கு வம்பு வேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் கட்சி என்று ஒரு வார்த்தை கவிஞரிடமிருந்து வந்துவிட்டதால் கட்சியை விட்டுக் கொடுக்க முடியாது என்றே இந்தக் கருத்து.
மற்றபடி தம்பி அபூ இப்ராஹிமுக்கு அஞ்சி அல்ல. //

யாங்காக்கா... இரண்டு இளைஞர்கள் இணைந்து படைக்கும் நேற்று இன்று நாளையும், 'ம.ச.பூ.மறைக்கப்பட்ட வரலாறுகள்' படைக்கும் வீரமிக்க இளைஞர் தாங்கள் இருக்கும்போது ! ஏன் காக்கா என்னை வம்புக்கு ! :)

sabeer.abushahruk said...

காதர்,

//அன்பை பொழிவதில் ஆதாயம் ஏதுமின்றி அழுக்கில்லா அன்பை தருபவளே உண்மை மனைவி //

சத்தமாச் சொல்லாதே. "அதான் ஆதாயம் வேண்டமாட்டாகளாமே, எதுக்குச் சம்பாதித்து பொண்டாட்டி புள்ளைகளுக்குக் கொடுத்துக்கிட்டு?" என்று வூட்டோட மாப்ஸா இருந்து கொட்டிக்கப் போறாங்க.

அதிரை.மெய்சா said...

அதிகாலை விடியலிலும் அஸ்தமன முடிவினிலும்

நதிபோலப்பாய்ந்திட்டு
நாவினித்து நினைத்திட்டு

சுதிமாறக் கவிதையிது
சொக்கிநின்றேன் மதி மறந்து

பிணி போக்கும் நன்மனைவி
அமைந்திட்டால் பேரின்பம்

சனியன்று தூரப்போகும்
சகலமும் கைகூடும்

மனையாளவளின் மகிழ்ச்சி
துணையாளனின் நெகிழ்ச்சி

கனிவானவனின் நற்க் கவிக்கு
பணிவானவனின் நல் வாழ்த்து

அதிரை.மெய்சா said...

வொர்க்கு லோடு டூமச்சி லேட்டு கோவச்சிக்காதே நட்பே

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,

வலக்கரமாக வேஷம்கூடவா போடுவாங்க? நெனச்சுப் பார்க்கவே முடியல. அப்படியொன்று வாய்த்துவிட்டால் அது இறைவனின் சாபமாகவே எனக்குப் படுகிறது.

அல்லாஹ் காப்பாத்தனும்.

யாசிர்,

//உண்மை உண்மை உண்மை//

கட்சிக்காரர்களுக்குள்ளே அதிகமாப் புகழ்ச்சி எதற்கு? நல்ல மனையாளின் நேசம்தானே நம்மை வெற்றிப்படிக்கட்டுகளில் இட்டுச் செல்கிறது. தொடர்ந்து இந்தக் கட்சியிலேயே நிலைத்திருப்போம்; நிஜ சந்தோஷத்தில் திளைத்திருப்போம்.

அபு இபு,

//சட்டென்று சொல்லிவிடும் சங்கதிகள் அல்ல SUM-சாரம், கூட்டிக் கொண்டே போகும் அன்பு !//

உண்மை.

கூடிக்கொண்டே போகும் அன்பு குறைவதற்கு வாய்ப்பே தரக்கூடாது. வாழ்க்கையின் அர்த்தம் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது.

sabeer.abushahruk said...

//A lovely poem with kaleidoscopic view of good wife.//

va alsikkumussalam, bro Ahamed Ameen,

Thanks for your poetic comment.

i just wanted to encourage hubbies to live an emotional life with their pairs instead of calculative one. it wouldnt be appropriate if i dont state the lovely benifits of loving their wives.

i think my aim has social welfare in it.

Thanks.

எம் ஹெச் ஜெ,

//எல்லாராலும் இதை
சொல்லமுடியா இனிய கவிதை!//

நம் கட்சியின் மற்றுமொரு கட்சிக்காரராகிய தங்களுக்கும் அதிகம் சொல்ல சேண்டியதில்லை. அன்பான வாழ்க்கையின் புறம் வெளியே தெரியும்போது அது எல்லோரையும் அவ்வாறே வாழத்தூண்டும், அல்லவா?

ஜாகிர்,

//பொறக்கிறுக்கு// இந்த வார்த்தையின் அர்த்தம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் வலக்கரம் ஊருக்குப்போயிருக்கும் தவிப்பில் இந்த அளவுக்குக்கூட பிதற்றவில்லையென்றால் கட்சியின் கொ.ப.செ. பதவி பறிக்கப்படும்.

sabeer.abushahruk said...

//நான் உங்கள் கட்சி.//

வாங்க காக்கா. கட்டித் தலைமையின் சார்பாகத் தங்களை வரவேற்பதுடன்

//இந்தக் கவிதை , எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளங்கலை வகுப்பில் மனப்பாடப் பகுதியாக ஆக்கப்படும். காரணம் இது மனை(வி)ப் பாடப் பகுதி.

உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் தேங்காய் சட்னிக்கும் அதில் மிதக்கும் மல்லிகைப் பூ இட்லிக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்றத்தில் முதல் தீர்மானம் நிறைவேற்றப் படும்.

காலின் வலியை நீலகிரித் தைலம்தான் நீக்குவதாக நினைத்துக் கொண்டு இருப்பவர்களின் அறியாமைக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு தீர்மானம் அவசியம் உண்டு.//

இத்தனை நளினமாகக் கூட குடும்பவியல் நடப்புகளைச் சொல்லிவிட முடியுமா என்கிற ஆச்சர்யத்திலும்; அப்படி சொல்வதென்றால் அதற்கு எங்கள் கட்சியின் பொதுச்செயலாளரால்தான் முடியும் என்பதாலும் அவ்வாறே தங்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன்.

"ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன; வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்று சும்மாவா சொன்னான் கவிஞன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதற்கு எங்கள் கட்சியின் பொதுச்செயலாளரால்தான் முடியும் என்பதாலும் அவ்வாறே தங்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன்.//

'அம்மா' கோவிச்சுக்க மாட்டேங்களே ?

நான் எதைச் சொன்னாலும் அரசியல் பேசுறேன்னு நினைக்கிறதே இதை படிக்கிறவங்களுக்கு நெனப்பு வரக்கூடாது !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கே எம்.எஃப். (மூத்த) காக்காவை கானோம் !?

தனி மின்னஞ்சல் தடைகள் இருப்பின் 'தடை'களுடைத்து 'கொடை' கொடுத்து 'படை'ப்போம் "மஹா பாரதம்"

sabeer.abushahruk said...

மெய்சா,

//பிணி போக்கும் நன்மனைவி
அமைந்திட்டால் பேரின்பம்//

உண்மை.

டென்ஷன் தரும் மனைவியால் உடல் மற்றும் உள நலம் பாதிக்கப்பட்டு அவதியுறுவோரும் இருக்கின்றனர்தாம். விட்டுக்கொடுத்தும் வெறுப்பின்றியும் வாழத்தலைப்பட்டால் மனசு லேசாகும்; உடலையும் பிணி அண்டாது.

யாவரும் நலம் என்றாகிவிடும்.

sabeer.abushahruk said...


கிரவுன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அந்த நுணுக்கமான பிழை திருத்தத்திற்கு மீண்டும் ஒரு நன்றி.

இந்தப் பதிவைப் பதியுமுன் அபு இபு உறுதியாகச் சொன்னார், "கிரவுனுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று. "வாழ்க்கையின் வலக்கரத்தின்மீது மெய்யன்பு கொண்ட யாவருக்கும் இது பிடித்தே தீரும்" என்பதில் நானும் உறுதியாக இருந்தேன்.

//இனிய சுகந்தமாய்! இழுக்கும் காந்தமாய்!//

//இது நித்தம் அனுபவிக்கும் அவருக்கே சம்பவிக்கும் வரிகளின் விரிவாக்கம் இந்த கவிதை வரிகள்...//

//அட!அட!தேனடை!அதை நான் அடைந்தேன் இப்பொழுதினில்!வாயடைத்து போகும் படி வியப்படைந்தேன்!களிப்பில் களைப்பிழந்தேன்! அத்தனையும் தேன்!தேன்! எதை பருக!எதில் உருக!எதை தொட! எப்படி விட//

என்று அழகு தமிழில் கொஞ்சிய தங்களின் விமரிசனத்தால் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெறுகிறது இந்தப் பதிவு. குறிப்பாக,

//கட்டுரையாய் நீளுகின்ற கவலைகளின் கருவை
சுட்டும்விழிப் புன்னகையால் சுருக்கித்தரும் கவிதை
---------------------------------------------------------------------------------------------------
மொத்த கவிதையின் வரிகளின் அர்த்தப் பொட்டலம் இந்த வரிகளே! இந்த கவிதையின் வாக்குமூலம் இந்த வரிகள்!//

என்று சரியாக கணித்தது பியக்க வைத்தது.

//கண்ணியவள் கடைக்கண் காட்டி விட்டாள்! ஆண் மகனுக்கும் மாமலையும் ஓர் கடுகாம்" என சொல்லிவரும் வேளையிலும், ஓர் கடுகை அவள் காட்டிவிட்டாள்!அதுவே மாமலைபோல் காட்சித்தரும் கட்சி என்னுடையது எப்படி கவிஞரே நீங்களும் என் கட்சி தானே?//

எப்போதுமே "அந்த .-)" கட்சிதான் கிரவுன். கை கொடுங்க.

வாசிப்பிற்கும் ரசனைமிக்க விமரிசனத்திற்கும் நன்றியும் கடப்பாடும்.



ZAKIR HUSSAIN said...

//பொறக்கிறுக்கு// இந்த வார்த்தையின் அர்த்தம் தெளிவாகத் தெரியவில்லை //

இது மதுரைத்தமிழ். 'பிறைக்கிறுக்கு' என்பதின் வட்டாரத்தமிழ். அமாவாசை / பிறை / பெளர்ணமி போன்ற காலங்களில் ஏற்படும் மென்டல் டிஸ் ஆர்டர்.

Ebrahim Ansari said...

//ஏன் காக்கா என்னை வம்புக்கு ! :)//

வம்பு அல்ல தம்பி . ஒரு பதிவுக்கு என் பின்னூட்டம் வராவிட்டால் என்னை வழக்குக் கூண்டில் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் உங்கள் அன்புக்கு.

Ebrahim Ansari said...

//"ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன; வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்று சும்மாவா சொன்னான் கவிஞன்!//

சேலையில் எனது முகம் துடைப்பாள் - நான்
சிணுங்கினால் செல்ல அடி கொடுப்பாள்
விரல்களுக்கேல்லாம் சுளுக்கெடுப்பாள்- என்
நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்

- என்று ஒரு கவிஞனும்

தன்னந்தனிமையிலே - உடல்
தள்ளாடும் வயதினிலே - உன்
புன்னகையைப் பார்த்திருந்தால் - அது
போதாதோ எந்தனுக்கு

- என்று ஒரு கவிஞனும்

பாடியது நினைவுக்கு வருகிறது.

அதிரை நிருபரில் ஒரே புறநானூற்றுப் பதிவுகளாகப் படித்து வந்த வேளையில் இந்த அகநானூறு ஆஸ்வாசம் தருகிறது.

தம்பி அபூ இபு !

தங்களின் மூத்த சகோதரர் உடைய கணினிக்கும் தமிழுக்கும் ஊடலாம்.
அவசரமாக தங்களின் பஞ்சாயத்து தேவைப் படுகிறதாம். என்னை மனு கொடுக்க சொனார்கள்.

பொறக்கிறுக்கு பற்றி தம்பி ஜாகீர் தந்துள்ள விளக்கத்துக்கு ஒரு தமிழ்ப் பேராசியர் 100/100 தருகிறார். அத்துடன் விளக்கத்தைக் கண்டு வியப்பதாகவும் பாராட்டுவதாகவும் எழுதச் சொன்னார். பேராசிரியரும் மதுரைக்காரர்.

Unknown said...

Assalamu Alaikkum

///பொறக்கிறுக்கு பற்றி தம்பி ஜாகீர் தந்துள்ள விளக்கத்துக்கு ஒரு தமிழ்ப் பேராசியர் 100/100 தருகிறார். அத்துடன் விளக்கத்தைக் கண்டு வியப்பதாகவும் பாராட்டுவதாகவும் எழுதச் சொன்னார். பேராசிரியரும் மதுரைக்காரர். ///

Dear brother Mr. Ebrahim Ansari,

'பிறைக்கிறுக்கு' is translated in English into 'Lunatic' or "Lunacy". Mostly in the time of full moon, the mind will be highly active and would trigger anger and negative emotions. Hence there would more violence at the time of full moon. So, people who are called affected by full moon days called lunatics(mad - பிறைக்கிறுக்கு).

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Anonymous said...

//எங்கே மூத்த காக்காவை காணோம்//

இரண்டு காரணங்கள்- கணிணிக்கும் தமிழுக்கும் பெரும்பாலான நேரங்களில் பிணக்கு!

தமிழுக்கோ. அல்லது கணிணிக்கோ' மருமகன் கவிதையில் சொன்ன லட்சணம் கொண்ட மனையாள் அமையவில்லை போலும்!

பெரும்பாலான நேரங்களில் ஒருதமிழ் சொல்லை கணிணியில் ஏற்ற அரை மணி நேரம் ஆகிறது.

நெடுநேரம் கணிணி பார்ப்பதில் கண்ணில் நீர் வருகிறது.

அதனால்அ.நி.யில் வரும் ஆக்கத்தை படிப்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

மருமகன் சபீரின் கவிதை வரிகளின்அற்புதக் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டிய கருத்துக்கள்.அவைகள் மெய்படும் வண்ணம் நம் எல்லோர் வாழ்விலும் மனையாள் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக!.ஆமீன்.

தம்பி நெய்னாதம்பியின் அன்பான தேடலுக்கு நன்றி!.

மற்றும் உள்ளேன் ஐயா!

S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

Unknown said...

Assalamu Alaikkum

Dear Uncle,

How are you doing? Hope you are doing fine.
I was thinking of you just few hours back. Your comments are popped up now. Alhamdulillah.

When you read and write, enlarge the font size by any technique(like, by holding ctrl key and mouse scroll up, optimizing brightness of your computer screen) so that there is less strain for your eyes. Hope the tears problem when you read would be no more. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook said...

நன்றிமருமகன்அஹமத்அமீன்!சொன்னதுபோல்செய்தேன்பலன்கிட்டியது.முகமதுபாரூக்

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா அவர்களுக்கு,

தங்களின் வாழ்க்கையின் வலக்கரம்தான் முதன்முதலில் எனக்கு விலாங்குமீன் சமைத்துக் கொடுக்க நாங்கள் தங்களின் கடற்கரைத்தெரு வீட்டின் மாடியில் அப்பத்துக்குத் தொட்டுக்கிட்டு ஒரு வெட்டு வெட்டினோம்.

அதற்குமுன் நான் அந்த மீன் சாப்பிட்டதில்லை. அதற்குப் பிறகு அத்தனைச் சுவையாக விலாங்குமீன் சாப்பிட்டதுமில்லை. அந்தக் கைகளை மொத்தமாகப் பற்றிக்கொண்ட தாங்கள் அதிர்ஷ்டசாலிதான் மாமா.

மாமிக்கும் என் சலாத்தைச் சொல்லி நினைவுகூர உதவுங்கள்.

உடல்நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

//அதிரை நிருபரில் ஒரே புறநானூற்றுப் பதிவுகளாகப் படித்து வந்த வேளையில் இந்த அகநானூறு ஆஸ்வாசம் தருகிறது. //

காக்கா,

என்ன ஒரு ட்டெலிப்பதி?!?!?

இந்தப் பதிவைப் பதிவது தொடர்பாக அபு இபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது நானும் இப்படித்தான் சொன்னேன். எப்படி?

"அதிரை நிருபரில் ஒரே புறநானூற்றுப் பதிவுகளாக வருகிறது. அகநானூறு பதிவோமா? ஆஸ்வாசம் தரும்?"

அப்புறம். அந்த அற்புதமான அந்யோனிய கவிதை வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி.

Ebrahim Ansari said...

//காக்கா,

என்ன ஒரு ட்டெலிப்பதி?!?!?//

கட்சித் தலைமையில் இருப்பவர்களுக்கெல்லாம் இப்படி டெலிப்பதி அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

crown said...

கட்சித் தலைமையில் இருப்பவர்களுக்கெல்லாம் இப்படி டெலிப்பதி அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
-------------------அப்பத்தான் டெல்லிக்கு அதிபதியாக முடியும்?அங்கே ஒரே குழப்பம்!------------------------------------------------------------------

crown said...

அதற்குப் பிறகு அத்தனைச் சுவையாக விலாங்குமீன் சாப்பிட்டதுமில்லை. அந்தக் கைகளை மொத்தமாகப் பற்றிக்கொண்ட தாங்கள் அதிர்ஷ்டசாலிதான் மாமா.
-----------------------------ஒஹோ! இதுதான் வலைக்கரம் தந்த அன்பு விலங்கு(மீன்)பாருக் காக்கா???--------------------------------------------------------------------

Unknown said...

மரபுக் கவிதை மாதிரி............

இனி, எங்களுடன் மேடை ஏற வேண்டியதுதான்...!

Unknown said...

மரபுக் கவிதை மாதிரி............

இனி, எங்களுடன் மேடை ஏற வேண்டியதுதான்...!

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய எம் பி அஹ்மத் காக்கா,

மரபுக்காக வார்த்தைகளை உடைத்து உடைபட்டத் துண்டு வார்த்தைகள் வாய்க்குள் நுழைய அவதிப்படுமளவுக்கு சீருக்கும் தளைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் மரபுக்கவிதையென்றால், மன்னிக்கவும் அதில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லை.

ஆனால், தாங்கள் சொல்வதுபோல் இந்தப் பதிவு எதார்த்தமாகவே மரபை ஒட்டி அமைந்திருப்பதாக, அல்லது மரபுக்கு அருகில் யதார்த்தமாகவே அமைந்திருக்கிறது என்றால் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

தங்களின் கருத்து எனக்கு, "மோதிரக்கையால் ஷொட்டு"

மரபுக்குப் பிரசித்திபெற்ற கவியன்பன் கலாம் அவர்கள்கூட இதைச் சுட்டிக்காட்டாதது ஏனென்று விளங்கவில்லை.

மேடை?

என் மதிப்பிற்குரிய காக்காமார்களின் மனமேடையே போதும், அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

மேடை?

என் மதிப்பிற்குரிய காக்காமார்களின் மனமேடையே போதும், அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இது மோதிர கை அணைப்பு!மேலும் இவர்களின் மனமேடை மனம் பரப்பும் ஓடை!என்றும் சோடை போகாத வாடை அதில் இருக்கும். சரியாகத்தான் கணித்திருக்கீங்க கவிஞரே!
--------------------------------------------------------------------------------------

Ebrahim Ansari said...

//என் மதிப்பிற்குரிய காக்காமார்களின் மனமேடையே போதும், அல்ஹம்துலில்லாஹ்.//

பெருந்தலைவர் மரியாதைக்குரிய அஹமது காக்கா முன் மொழிந்ததை நான் வழி மொழிகிறேன்.

தம்பி சபீர் அவர்களின் கவிதை ஆற்றலை உலகம் அறியச் செய்ய அவர் மேடை ஏறியே ஆகவேண்டுமென்று வலியுறுத்துகிறேன். முடிந்தால் அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையை அணுகியாவது இதை ஏற்றுக் கொள்ள கோரிக்கை வைக்கபப்டும்.

பொ ............டி சொன்னாக் கேட்டுக்கணும். இது கட்சியின் தேர்தல் அறிக்கை.

Ebrahim Ansari said...

தம்பி அஹமது அமீன்

வ அலைக்குமுஸ் ஸலாம்.

Thanks for your supporting view.

Ebrahim Ansari said...

//தங்களின் வாழ்க்கையின் வலக்கரம்தான் முதன்முதலில் எனக்கு விலாங்குமீன் சமைத்துக் கொடுக்க நாங்கள் தங்களின் கடற்கரைத்தெரு வீட்டின் மாடியில் அப்பத்துக்குத் தொட்டுக்கிட்டு ஒரு வெட்டு வெட்டினோம்//

அதே கரங்கள் காய்ச்சும் வறுத்த மொச்சைக் கொட்டை போட்ட கொடுவாக் கருவாட்டு ஆனத்தை, ஒரு பேராசிரியர் உறிஞ்சிக் குடிப்பாராமே!

நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த தகவல். .

sabeer.abushahruk said...

//அதே கரங்கள் காய்ச்சும் வறுத்த மொச்சைக் கொட்டை போட்ட கொடுவாக் கருவாட்டு ஆனத்தை, ஒரு பேராசிரியர் உறிஞ்சிக் குடிப்பாராமே! //

ஹாஹா. ஆமா காக்கா. இப்ப அவ்ரூ பாம்புக்கறி சாப்டற ஊர்லேல்ல கீறாரு.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//தங்களின் வாழ்க்கையின் வலக்கரம்தான் முதன்முதலில் எனக்கு விலாங்குமீன் சமைத்துக் கொடுக்க நாங்கள் தங்களின் கடற்கரைத்தெரு வீட்டின் மாடியில் அப்பத்துக்குத் தொட்டுக்கிட்டு ஒரு வெட்டு வெட்டினோம். //

வெட்டி ஆக்கிய விலாங்கு மீனை மறுமடியும் வெட்டினோம்

இதை இன்னும் மறக்கலையா !!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//அதே கரங்கள் காய்ச்சும் வறுத்த மொச்சைக் கொட்டை போட்ட கொடுவாக் கருவாட்டு ஆனத்தை, ஒரு பேராசிரியர் உறிஞ்சிக் குடிப்பாராமே! //

//ஹாஹா. ஆமா காக்கா. இப்ப அவ்ரூ பாம்புக்கறி சாப்டற ஊர்லேல்ல கீறாரு.//



அப்போ நடுத்துண்டு அவருக்குத்தான்னு சொல்லுங்கோ

Ebrahim Ansari said...

பாம்புக்கறி சாப்பிடும் ஊர்.

இந்த ஊரில் "உள்ள மீன்" உயிரோடு கிடைக்குமென்று வியட்நாமில் வாழ்ந்து வந்த எனது கூத்தாநல்லூர் நண்பர்கள் சொல்வார்கள்.

உள்ளமீன் ருசி மிகவும் அருமையாக இருக்கும். இப்போது நம் பகுதிகளில் கிடைப்பதில்லை.

ஆறும் கடலும் கலக்கும் இடங்களில்தான் இது கிடைக்கும். உள்ள மீன் பற்றி ஒரு நாட்டுப் புறப பாடலே உண்டு. அது

" ஆத்துலே தண்ணி வர
அதுலே ரெண்டு உள்ளம் வர
உள்ளத்துக்கு ஆசைப்பட்டு
புள்ளே வரம் கேட்குறியே "

-என்பதே அந்தப் பாடல்.

Riyaz Ahamed said...

சலாம். வைர முத்து வரிசையில் நின்னு வீரமா முனிவர் போல் ஓலை சுவடி கவியும் எழுத முடியும் என்பதை காட்டிய அப்பா பாராட்டுக்கு உரியவரே

Riyaz Ahamed said...

சலாம். வைர முத்து வரிசையில் நின்னு வீரமா முனிவர் போல் ஓலை சுவடி கவியும் எழுத முடியும் என்பதை காட்டிய அப்பா பாராட்டுக்கு உரியவரே

sabeer.abushahruk said...

//சலாம். வைர முத்து வரிசையில் நின்னு வீரமா முனிவர் போல் ஓலை சுவடி கவியும் எழுத முடியும் என்பதை காட்டிய அப்பா பாராட்டுக்கு உரியவரே//

வ அலைக்குமுஸ்ஸலாம்.

வாடா,

இவ்வ்வ்வ்ளோவ் லேட்டா வர்ர நீ அப்பாவா நா அப்பாவா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு