Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயன் தரும் பன்மொழித் தொடர்பு – 4 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2014 | ,

ஒரே நிறுவனத்தில், அல்லது அடுத்தடுத்த பிரிவுகளில் பணியாற்றுவோர், அவரவர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மிக விரையில் தெரிந்துகொள்ள, நடைமுறைப் படுத்த வாய்ப்புகள் ஏராளம். அவரவரின் மொழியைவிட, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை நாம் வெளிப்படுத்தும்போது, அவர்களின் வியப்பு, கண்களின் மூலம் வெளிப்பட்டு, சொற்களில் பாராட்டாக வந்து வீழும்.

பொதுவாக அரபுகள் மற்றவர்களுடன் கை குலுக்கும்போது நன்றாக அழுத்திப் பிடிப்பார்கள்.  அவர்களிடம் நாமும் அதே முறையைப் பின்பற்றிக் கைலாகு செய்யும்போது, அப்போதுதான் அவர்களின் முக மலர்ச்சியைக் காணலாம்.  பிடி இருக்கும் அளவுக்குப் பிரியமும் மிகுந்து வெளிப்படும்.  அவர்களின் பழக்க வழக்கங்களை ஊன்றிக் கவனித்து, அவர்களைப் போன்றே, அவர்களின் முன்னால் நாம் வெளிப்படுத்தினால், அவர்களின் உண்மையான முக மலர்ச்சியை அப்போது காண முடியும்!  இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய நாட்டவர்கள், இரு கைகளைக் கொண்டு ‘முஸாஃபஹா’ செய்வார்கள்.  அதுவும், பட்டும் படாமலும், ஒப்புக்காகச் செய்வது போல் இருக்கும்.  இறுக்கமாகச் செய்யும்போதுதான் நட்பு வலிமை பெறும்.

ஒவ்வொரு மொழிக்கும் இருப்பது போல அரபிக்கும் ‘லஹ்ஜா’ (Style) உண்டு.  அது நாட்டுக்கு நாடு வேறுபடும்.  நல விசாரிப்பைப் பொருத்தவரை, சஊதிகள், கத்தரிகள், குவைத்திகள், "கைஃப் ஹாலக்?” என்பதை இலகுவில் புரிந்து கொள்வார்கள்.  அதே அரபி இனத்தவர்களான லெபனான், சிரியா, இராக், ஃபலஸ்தீன் ஆகிய நாட்டவர்கள், அதே நலன் விசாரிப்பை, “கீஃப் ஹாலேக்?” என்று நீட்டுவார்கள்.  எகிப்தியர், “ஜெய் ஹாலேக்?”  அல்லது  “ஜெய்யக்?” என்பார்கள்.  

அவர்களின் அடுத்த நாடான சூடான் நாட்டவர், அதே முறையினை ஒன்றல்ல, பலமுறை கேட்டு, அதிலிருந்து விடுபட ஒரு மூன்று நிமிடமாவது ஆகும். அந்த அளவுக்கு இருக்கும் அவர்களின் விசாரிப்பு!  சூடானிகள் தமக்குள் நலன் விசாரிப்பைச் செய்யத் தொடங்கும் முன்பு, shake hand செய்வதற்கு முன்பு, தமது வலக் கையை மற்றவரின் நெஞ்சுக்கும் தோள் புஜத்திற்கும் இடையில் வைப்பார்கள்.  மேலதிகமாக ஒரு shake hand.  அதே முறையை நாம் கடைப்பிடித்தால், நம்மை மெச்சுவார்கள்.  எல்லாவற்றுக்கும் முதலாவதாக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமன் கண்டிப்பாக இருக்கும்.  

அரபியல்லாத பிற நாட்டவர்கள் சஊதி மற்றும் பிற அரபு நாடுகளில் வேலை பார்க்க வந்தவர்கள் இஸ்லாம் மார்க்கம் அதன் தூய வடிவில் பின்பற்றப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும், இஸ்லாமிய வாழ்வு நெறியின் அருமையை உணர்ந்து, இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள்.  அதைத் தொடர்ந்து, முழுமையான வாழ்க்கை நெறியைப் புரிந்து வாழத் தொடங்குகின்றார்கள்.

‘தஅவா’ சென்டர்கள் வழியாக இஸ்லாமிய அறிமுகம் கிடைக்கப்பெற்று, முறையாக அதைத் தன் வாழ்க்கை நெறியாக்கிக்கொண்ட பலரை உண்மையான முஸ்லிம்களாகப் பார்த்து வியந்துள்ளேன் நான்.  முஸ்லிமாக மாறிச் சில மாதங்களே ஆன ‘அஹ்மத்’ என்ற பிலிப்பைன் நாட்டுச் சகோதரர், அந்த வாரப் பயிற்சிக்காக வந்தவர் கையில் கட்டுப் போட்டவராக வந்தார்!  “என்ன நடந்தது?” என்று விசாரித்தபோது, “Every thing from Allah” என்று பதிலளித்து, என்னை வியப்பில் ஆழ்த்தினார்!

அரபு நாட்டு வாழ்க்கையால், நாம் பல பயன்களைப் பெற முடிந்தது. இஸ்லாம், ஈமான், ஓரிறை நம்பிக்கை போன்ற கொள்கைகள் அவற்றின் எதார்த்த நிலையில் பின்பற்றப் பெற்றதை நாம் கண்கூடாகக் காண முடிந்தது அங்கே.  இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்து, அதன் மீது ஆர்வம் உண்டாகி, ஈடுபாட்டுடன் அதன் கொள்கைகளைக் கற்று, அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்களாக மாறிய ஆயிரக் கணக்கானோரை அங்கே காண முடிந்தது.

1977 ஆம் ஆண்டில் சஊதிக்கு வந்து, கடினமான பணியில் அமர்த்தப்பட்டு, “இது நமக்கு லாயக்கில்லை;  இரண்டாண்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்” என்று எண்ணிய எனக்கு, முப்பதாண்டுகள் எப்படிக் கழிந்தன என்பதை மீள்பார்வை செய்து பார்த்தபோது, ‘இது அல்லாஹ்வின் ஏற்பாடு’ என்பதை மட்டும் எனக்குள் கூறி, ஆறுதல் அடைந்தேன்.

அரபு மொழி, அரபுகளின் பண்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு இருந்த உண்மை நிலையால், அந்த நாடு என் இதயத்தில் இடம் பிடித்ததை இன்றும் உணர்ந்து பார்த்து, நெஞ்சார்ந்த நன்றியை இறைவனுக்குக் கூறி, ஆறுதல் அடைகின்றேன்.

அல்ஹம்து லில்லாஹ்!

அதிரை அஹ்மது

16 Responses So Far:

Ebrahim Ansari said...

அரபிகள் நாடு ரோட்டில் குறிப்பாக சாலை விபத்துக்கள் நேரிட்டால் நடந்து கொள்ளும் முறை நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு முறை மஸ்கட்டில் இருந்து சலாலா போகும்போது கண்ட காட்சி.

நடுப் பாலைவனம். எதிரும் புதிருமாக வந்த இரு அரபிகளின் வண்டிகள் மோதிக் கொண்டன.

இருவரும் கோபத்துடன் அவரவர் வண்டிகளை விட்டு இறங்கினர்.

முதலில் ஸலாம் சொல்லிக் கொண்டனர். குடும்பம் கோத்திரம் உட்பட எல்லோர் நலமும் விசாரித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட விசாரிப்புகளுக்காக அவர்களிடம் ஒரு பட்டியலே இருக்கும்.

அது முடிந்த கையோடு இருவரும் அடித்துக் கொள்ளாத குறையாக சத்தம் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இருவரும் ஓமானிகளே!

இதே நமது ஊராக இருந்தால் வண்டியை விட்டு இறங்கியதும் வன் மொழிகளும் கை கலப்பும்தான்.

இந்தத் தொடர் பல அடையாளங்களை தொட்டுச் சென்று இப்படி விட்டுச் சென்றுவிட்டதே என எண்ணும்போது பிரிவாற்றாமை.

ஜசாக் அல்லாஹ் ஹைர் காக்கா.

adiraimansoor said...

////எகிப்தியர், “ஜெய் ஹாலேக்?” அல்லது “ஜெய்யக்?” என்பார்கள்////
எகிப்தியர்களிடம் இப்பொழுது இந்த நிலை மாறி ஜெய்யக்கை ஜெக்கோடு நிறுத்திக்கொள்கின்றார்கள்
உதாரணத்திற்கு காலித் என்பவரை சுகம் விசாரிப்பதாக இருந்தால் ஜெக் யா காலித் என்கின்றனர்

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother,

Really useful multilingual multicultural compositions.

Thanks for sharing your experience here for us. Interesting one.

Arab brothers and sisters appreciate our attempt to speak arabic in their local dialects.

When anyone is having food, I used to say, "Sahhaa"

Anyone feel sick - "Salaamaath"

When anyone return from leave "Alhamdulillah Assalamaah" - reply - "Allahi Sallamk"

In Emarathi dialects, "Kaif khaalaq?" - How are you? - asking a male
"Kaif khaalach?" - How are you? - asking a female

When I first encounter their conversation in arabic, I was much impressed by the terms we used to hear in Salaah, Dua and Islamic preachings.

Kaif khalaq?

Alhamdulillahi Rabbil Aalameen..!!!

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

எகிப்தியர்களிடம் நான் கண்ட பண்பாடு என்னவெனில், மிகக் குறுகிய காலத்திற்குள் அவர்களின் மேலதிகாரிகளையெல்லாம் பின் தள்ளிவிட்டு முதலாளியை நெருங்கி விடுவார்கள். இதே பண்பை நாம் நம் நாட்டில் ஆரிய வம்சாவழியிடம் காணலாம்.

ஜெத்தாவை கெத்தா என்றும் ஜுபைலை குபைல் என்றும் கூப்பிடும் இவர்கள் என் மச்சான் ஜலாலை "யா கலால்" என்று கூப்பிடுவதை காப்பி பேஸ்ட் செய்து அவனை நானும் யா கலால் என்றே கலாய்ப்பதுண்டு.

(அவனிடம் நம் இந்த கேள்விக்கு பதில் இல்லாமல் முகத்திரை கிழிந்தது; உளறல்கள் தொடர புறமுதுகு காட்டி ஓட்டம். என் சைட்டுக்கே கிடைக்காமல் தலைமறைவானான் என்பதெல்லாம் உபரிச் செய்திகள் )

இன்னும் இந்த எகிப்தியர்தம் குசல விசாரிப்புகளில் அதிகம் "குல்லக் ஏ, வல்லாஹி பே" என்று அதிகமாகப் பேசுவர். Ahmed kaka, meaning please?

sabeer.abushahruk said...

அப்புறம், சூடானியர்!

அரபிகளிலேயே சட்டென்று கோபமுறுவதில் பேர்பெற்றவர்கள்; சூடானவர்கள்.

எந்த அளவு சூடென்றால், ஒரு பல்பை எடுத்து இவர்கள் தலையில் வைத்தால் அந்த பல்பே (பத்திக்கிட்டு) எரியும் அளவிற்குச் சூடானவர்கள்.

சோம்பேறிகளும்கூட.

எந்தளவு சோம்பேறிகள் என்றால் நாலாவது அறையில் தீப்பிடித்தால் ரெண்டாவது அறையில் இருந்துகொண்டு "இன்னும் மூன்றாவது அறைக்கே தீ பரவல, க்ஹல்லி" என்று சோம்பிக்கிடப்பார்களாம்.

இவர்கள் பேசும்போது அதிகம் " நெஸ்மா" அதிகம் பிரயோகிப்பார்கள்.

அஹ்மது காக்கா, வாட் இஸ் நெஸ்மா, ப்ளீஸ்?

sabeer.abushahruk said...

மற்றொன்று.

தாய்லாந்து நாட்டுக்காரர்கள் வேலையில் அக்கறையோடும் பொறுப்போடும் இருப்பர். அதிகம் பேசாத இவர்களை தாய் என்று (தாயி என்றல்ல) அழைப்போம்.

எந்த வாகனத்தின் எத்தகைய ஏஸி பிரச்னைகளையும் எளிதில் முடிக்கும் ஒரு தாய் ஒரு கடும் புழுக்கமானக் கோடைகாலத்தில் வேலை செய்வதைப் பார்த்து நான் எழுதிய கீழ்க்கண்ட ஹைக்கூ, மறைந்த சுஜாதா அவர்களால் தெரிவு செய்யப்பட்டு "மின் அம்பலம்" இணையதளத்தில் பிரசுரமானது:

வேலை செய்கிறான்
ஏஸி டெக்னீஷியன்
வேர்க்க விறுவிறுக்க!

Ebrahim Ansari said...

//தாய்லாந்து நாட்டுக்காரர்கள் வேலையில் அக்கறையோடும் பொறுப்போடும் இருப்பர். // நான் வழி மொழிகிறேன்.

வியட்நாமியர் இதற்கு நேர்மாறானவர்கள். தாங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று தெரிந்தும் மீறிச் செய்வார்கள். .

கார்டு பஞ்ச் செய்துவிட்டு டாக்சி பிடித்து ரூமுக்கு வந்து சீட்டு விளையாடுவார்கள். பிடிபட்டு டெர்மினேஷன் செய்யபப்ட்டாலும் சிரித்துக் கொண்டே பிளைட் ஏறுவார்கள்.

மன்னிப்பு- காலைப் பிடிப்பதேல்லாம் பொன்த்ரா பொன்த்ரா பொச்சீஸ் தான்.

Unknown said...

//இன்னும் இந்த எகிப்தியர்தம் குசல விசாரிப்புகளில் அதிகம் "குல்லக் ஏ, வல்லாஹி பே" என்று அதிகமாகப் பேசுவர். Ahmed kaka, meaning please?//

'kullak ay' என்பது, 'நான் என்ன சொல்கிறேன் என்றால்' என்பதைக் குறிக்கும்.
'வல்லாஹி யா பே' என்பது, அல்லாவின் மேல் சத்தியமாகத் தலைவரே' என்பதைக் குறிக்கும்.

Unknown said...

Assalamu Alaikkum

My observation on co-existing with people from different culture:

* Generally people of different languages/religions/ethnicity/colors are good except few bad.

* If a particular few people of country/language/religious people are doing bad things against the ethics and moral values, then we should not generalize them all are bad. Its similar to viewing and blaming of all muslims are in generally as terrorists by few narrow minded and ignorant people.

If one's mind is impressed negatively about particular languages/religions/ethnicity/colors
then it creates hatred and distance instead of love and understanding.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

crown said...

வேலை செய்கிறான்
ஏஸி டெக்னீஷியன்
வேர்க்க விறுவிறுக்க
----------------------

அஸ்ஸலாமுஅலைக்கும்.
இதே ஹைக்கூ நான் என் வீட்டில் மின்விசிறி மாட்டுபவரிடம் சொன்னது வருடம் 1993 என நினைவு ஒரே சேனலில் சிந்திருக்கிறோம் கவிஞரே !என நினைக்கையில் குளிர்சியாகவும்,மகிழ்சியாகவும் உள்ளது.
(மறைந்த சுஜாதா அவர்களால் தெரிவு செய்யப்பட்டு "மின் அம்பலம்" இணையதளத்தில் பிரசுரமானது:)சரியான இடத்தில்தான் அம்பலம் ஆகியுள்ளது இது மின்சாரம் சார்ந்தது அல்லவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///crown உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பயன் தரும் பன்மொழித் தொடர்பு – 4":

வேலை செய்கிறான்
ஏஸி டெக்னீஷியன்
வேர்க்க விறுவிறுக்க
----------------------

அஸ்ஸலாமுஅலைக்கும்.
இதே ஹைக்கூ நான் என் வீட்டில் மின்விசிறி மாட்டுபவரிடம் சொன்னது வருடம் 1993 என நினைவு ஒரே சேனலில் சிந்திருக்கிறோம் கவிஞரே !என நினைக்கையில் குளிர்சியாகவும்,மகிழ்சியாகவும் உள்ளது.
(மறைந்த சுஜாதா அவர்களால் தெரிவு செய்யப்பட்டு "மின் அம்பலம்" இணையதளத்தில் பிரசுரமானது:)சரியான இடத்தில்தான் அம்பலம் ஆகியுள்ளது இது மின்சாரம் சார்ந்தது அல்லவா?
///

கிரவ்னு : நீ மட்டும் என்னவாம்... ஊருக்கு வர்ர மின்சாரம் மாதிரியில எப்போயாவது வர்ரே இங்கே....

Shameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அஹ்மத் காக்காவின் இந்த தொடரை தொடர்ந்து படித்து இந்த தொடர் பெரும்பாளனவர்களின் வெளி நாட்டு வாழ்க்கையை பிரதி பளிக்கின்றது

இந்த தொடரில் சவூதி என்று வரும் இடங்களில் எல்லாம் சஊதி என்றே வருகின்றதே இதற்க்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?

Unknown said...

Assalamu Alaikkum

The official name of that country is Kingdom of Saudi Arabia (KSA)

المملكة العربية السعودية

Near the correct pronounciation is "சஊதி" for the word 'السعودية'. Here the prounciation is stressed on 'ain' letter from the depth of the throat.

"சவூதி" - 'السودية' - the letter ع is missed. only و is prounced by moving up lower lip.

Thanks and best regards,

B. Ahamed Ameen
Unknown said...

//இவர்கள் பேசும்போது அதிகம் " நெஸ்மா" அதிகம் பிரயோகிப்பார்கள்.

அஹ்மது காக்கா, வாட் இஸ் நெஸ்மா, ப்ளீஸ்?//

அது 'நெஸ்மா' இல்லேம்மா. என்இவர்கள் பேசும்போது அதிகம் " நெஸ்மா" அதிகம் பிரயோகிப்பார்கள்.

அஹ்மது காக்கா, வாட் இஸ் நெஸ்மா, ப்ளீஸ்? إسع (இஸ்மஉ) என்ற அரபிச் சொல்லின் வழக்கு மொழி. அதாவது, "நான் சொல்வதைக் கேளு" என்பதுதான்.

Yasir said...

ஆர்வத்துடன் படிக்க தூண்டும் தொடர்.....

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு