அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன.
கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால்உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516
ஒருவருடைய உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது மிகவும் அவசியமாகும். அவர்தான் இறந்துவிட்டாரே என்று அவரின் குறைகளை பேசித்திரிவதைவிட ஈனச்செயல் வேறு ஒன்றும் இறுக்க முடியாது.
'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு(ரலி) நூல்கள்: பைஹகீ 3/395,ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315
ஒரு மனிதரின் வெட்கத்தலம் அவர் இறந்த பின்னரும் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படுவதினால் இஸ்லாத்தில் உடல் தானம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மிருகங்களை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.
நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம். கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை. எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை. மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் நமக்கில்லை.
அடுத்தது நமது உறுப்புக்கள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும். நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும். ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும்.
இறைவன் தடை செய்த காரியங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது. நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது.
அதுபோல் தான் நமது உறுப்புக்களை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பஸ்ன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள். குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320) உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும்.
பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை. மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான்.
மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும். ஆக கண்தானம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் வலியுறுத்துவோம் கண்தானம் செய்ய விருப்பமுள்ளவர்களும் பெற விருப்பமுள்ளவர்களும் கீழே உள்ள மருத்துவ மனைகளை அனுகலாம்
கண்வங்கிகளின் விபரங்கள்
இத்துடன் கண்தானம் தொடர்கின்றது அடுத்த தொடரிலும் கண்ணை தானத்தை இஸ்லாம் அனுமதிக்கின்றது என்பதற்காக சில சில குர்ஆனுடைய வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்
(தொடரும்)
11 Responses So Far:
Masha Allah
Very useful article.
I fully satisfied with your opinion.please let us know if there is any opinion from imams as well.
தம்பி மன்சூர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
மனதில் பட்டதை பளிச் என்று சொல்கிறேன். இவ்வளவு நாள் இந்தத்தொடரில் பவுண்டரிகளாக அடித்துக் கொண்டு இருந்தீர்கள். இந்த அத்தியாயம் ஒரு சிக்சர் அடித்தது போலத் தோன்றுகிறது.
அருமை! அருமை! அத்தனையும் எமக்குப் பெருமை!
அனைத்து அரிமா சங்கத்தினரும் நீங்க தந்துள்ள பட்டியலை தங்களின் அலுவலகத்தில் பதிய வேண்டுமென்று நான் வரும் மூன்றாம் தேதி ஒரத்தநாட்டில் நடைபெறவிருக்கும் அரிமா சங்கத்தின் மண்டல மாநாட்டில் முன் மொழிவேன். இன்ஷா அல்லாஹ்.
உறுப்பு தானம் பற்றிய சிறப்பான ஆய்வுக்கு
ஜஸாக்கல்லாஹ் ஹைர் மன்சூராக்கா.
தேடிப் பிடிக்க வேண்டிய விஷயங்கள் நம்மைத் தேடி வந்திருக்கிறது !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் மன்சூராக்கா..
இந்த அருமையானத் தொடரின் அதி முக்கிய அத்தியாயம் இது.
கட்டுரையினூடே கண்தான முகவர்களைத் தந்து தன் அர்ப்பணிப்பை நிரூபித்திருக்கும் மன்சூருக்கு வாழ்த்துகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னை வாழ்த்தி இந்த பதிப்புக்கு வழ்த்துரை வழங்கிய நல் உள்ளங்களுக்கு
நேரமின்மை காரணமாக அதிகமாக பின்னூட்டத்திற்கு
பதில் தரமுடியவில்லை
ஜஸாக்கல்லாஹ் கைரன்
எனது பாசமிகு இபுராஹீம் அன்சாரி காக்காவின் பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்து மெய் சிலிர்த்துப்போனேன்
ஜஸ்ஸாக்கல்லாஹ் காக்கா
மக்களுக்கு பிரையோஜனம் அளிக்க கூடிய இப்படிபட்ட பல தரப்பு விசயங்களை ஒவ்வொருத்தரும் முன் நின்று செய்வதுதான் நாம் மனித குலத்திற்கும் திக்கற்றவர்களுக்கும் செய்யும் உதவி உதவியாகும் இதனுடைய பலனை இன்ஷா அல்லாஹ் நாம் மறுமையில் காண்போம்
Aameen
நாம் கண் தானம் செய்வது சரி, ஆனால் மேற்குறிப்பிட்ட மருத்துவமனை அந்த தானத்தை வைத்து பணம் சம்பாதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தேசம் இருக்கிறது?
பலவிதமான பலனளிக்ககூடிய தகவல்கள்...அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா
Post a Comment