கண்தானம், சிறுநீரகதானம் செய்வதில் இஸ்லாமிய சட்ட அறிஞர்களிடம் நெருக்கமான கருத்துக் காணப்பட்டாலும் இரத்ததானம் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளதால் அதையும் விளக்குவோம். இந்த கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட உணவுகள் விலக்கப்பட்ட உணவுகளை தரம் பார்த்து அறிவிக்கின்றது. விலக்கப்பட்ட உணவுகளைக் கூறும் வசனங்களில்...
''(தானாக) செத்தது, பன்றியின் இறைச்சி, இரத்தம், இறைவன் பெயர் கூறாமல் அறுக்கப்பட்டது''... என்று பட்டியல் கூறப்படுகிறது (பார்க்க அல்குர்அன்- 5:3, 2:123, 16:115 ஆகிய வசனங்கள்)
இதில் இறைவன் இரத்தத்தைத் தடுத்துள்ளான் எனவே இரத்தமாற்று சிகிச்சைக்கு நமது இரத்தத்தை தானம் செய்யக்கூடாது என்பது சில அறிஞர்களின் வாதம்.
''உங்கள் மீது விலக்கப்பட்டது'' என்று இறைவன் தடுத்துள்ள பொருள்கள் உணவாக உட்கொள்ளப்படுவதைத்தான். அதாவது இரத்தத்தை உணப்பொருளாகப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் அந்த வசனத்தின் பொருள். இரத்தத்தை அப்படியே குடிக்கும் மனிதர்களும் வறுத்து பொரித்து சாப்பிடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறைவன் இதைத்தான் தடுக்கிறான்.
இரத்த மாற்று மருத்துவம் என்பது உணப்பொருள் போன்று வாய்வழியாக நடப்பதல்ல. நரம்புகள் வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இதை அந்த வசனங்கள் தடுக்கவில்லை என்பதை சிந்தனையாளர்கள் விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவுகளைக் கூறும் வசனங்களில் இறுதியில் இறைவன்... ''வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் எவராவது நிர்ப்பந்திக்கப்பட்டு தடுக்கப்பட்டவற்றை பயன்படுத்தினால் அவர் மீது குற்றமில்லை'' என்று முடிக்கிறான்.
தடுக்கப்பட்டவற்றை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே... என்ற நப்பாசையில் அதை நெருங்காதீர்கள் உண்மையிலேயே நெருக்கடி சூழ்நிலை உருவாகி பயன்படுத்த வேண்டி வந்தால் பயன்படுத்துங்கள் குற்றமில்லை என்கிறான் இறைவன். ஒருவருக்கு இரத்தம் தேவை என்ற சூழ்நிலை உருவாகும்போது அதுதான் தலையாய நிர்ப்பந்தம்.
இத்தகைய நிர்ப்பந்தங்களில் நமது இரத்தத்தை பிறருக்குக் கொடுப்பதோ அவர் அந்த இரத்தத்தை தம் உடலுக்குள் செலுத்த அனுமதிப்பதோ எத்தகைய தடையுமில்லாத பெரிதும் அனுமதிக்கப்பட்ட செயலாகும். "ஒரு மனிதன், தன் வாழ்க்கைக்கு பிறகும் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்றால் அது கண் தானத்தால் மட்டுமே முடியும். கண் தானம் என்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகவும் உள்ளது."
கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும்.
நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை.
மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும். காலம் முழுதும் இருளில் மூழ்கியவன் கண்பார்வை கிடைத்ததும் நிச்சயம் அவன் அதைக்கொண்டு நல்ல வழிகளின் பயண் படுத்துவானே அல்லாமல் தீய வழியிகளில் பயண்படுத்த துளிகூட விரும்பமாட்டான் ஏனெனில் அவைகள் இல்லாமல் இருக்கும்போது அவர்கள் அனுவபவித்த கஷ்ட்டம் அவர்களுக்குத்தானே தெரியும்.
சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.
கண் புரை அறுவை சிகிச்சை செய்தவங்களோ, கிளக்கோமா இருந்தவங்களோ, சுகர் பிரஷரினால் ரெடினல் சிகிச்சை செய்தவ்ர்களோ எது செய்திருந்தாலும் கண்களை தானமாகத் தரலாம். ஏன்னா, கண்களை நாம் எடுத்தால் கூட கண் பார்வை இழந்தவங்களுக்கு நாம பொருத்தப் போவது கருவிழியைத்தான். இது கருவிழி மாற்று சிகிச்சை. கார்னியல் டிரான்ஸ்ப்ளேண்ட் சர்ஜரி. மற்ற பிரச்சினை இருக்கிறவங்களுக்கும் கண்தானம் செய்யலாம்
கொயட் ரேர் கண்டிஷனில் இது மாதிரி நடக்கலாம். இறைவனின் படைப்பில் கண்களின் படைப்பே பெரிய விஷயம். ஒருவரின் கருவிழியை இன்னொருவருக்கு பொருத்தலாம். அது சரியாகப் பொருந்தும். இரத்த தானத்திலாவது ஒரு குரூப் இரத்தம் இருக்கிறவங்களுக்கு அதே குரூப் இரத்தம் தான் தானம் கொடுக்க முடியும். கண்களைப் பொருத்தவரையில் மகத்தான விஷயம் என்னன்னா பெரியவங்க கண், சின்னவங்க கண் என்ற பாகுபாடு இல்லாமல் யாருடைய கருவிழியையும் யாருக்கு வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி பொருத்தலாம். ரொம்ப சின்ன குழந்தைங்க இல்லைன்னா ரொம்ப வயது முதிர்ந்தவங்களுடையது மட்டுமே சில விஷயங்களுக்கு பொருந்தாது. பொதுவாகப் பாத்தீங்கன்னா எல்லோருடையதும் எல்லோருக்கும் பொருந்தும். சுலபமாக இருக்கும். ரேர் கண்டிஷன்ல ஒருவருடைய கருவிழி இன்னொருத்தருக்கு ஒத்துக்காம ஏத்துக்காம இருக்கும். கிராப்ட் ரிஜக்ஷன் னு சொல்வோம். அந்த மாதிரி சமயங்களில் இரண்டாவது கருவிழி அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போது செட்டாக வாய்ப்பிருக்கிறது.
அடுத்த தொடரிலும் கண்தாணம் தொடரும் உடல் தானம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி இடம் பெறும் யாரும் படிக்க தவறிவிடாதீர்கள்
(தொடரும்)
அதிரை மன்சூர்
8 Responses So Far:
//சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.//
Super super super
//கண்களின் படைப்பே பெரிய விஷயம்.//
இந்தப் பதிவும் ! கொண்டிருப்பதுமே நிறைய விஷயமே !
அழகிய விளக்கங்களுடன் அருமையான கட்டுரை
//இரத்த மாற்று மருத்துவம் என்பது உணப்பொருள் போன்று வாய்வழியாக நடப்பதல்ல. நரம்புகள் வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இதை அந்த வசனங்கள் தடுக்கவில்லை என்பதை சிந்தனையாளர்கள் விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவுகளைக் கூறும் வசனங்களில் இறுதியில் இறைவன்... ''வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் எவராவது நிர்ப்பந்திக்கப்பட்டு தடுக்கப்பட்டவற்றை பயன்படுத்தினால் அவர் மீது குற்றமில்லை'' என்று முடிக்கிறான்.//
Super Super
மன்சூர் மச்சானின் கண்கள் தொடர் பல விஷயங்களை உள்ளடைக்கிய ஒரு கருத்து பெட்டகம் என்பதில் சந்தேகம் இல்லை.
உறுப்பு தானம் பற்றிய குரான் ஹதீஸ் ஒளியில் பொதுவாக மார்க்க அறிஙர்களின் வாதம், பிரதி வாதங்கள்,கூடும் என்பவர்களின் ஆதாரம்,கூடாது என்பவர்களின் ஆதாரம் பற்றிய அலசல்கள் இடம் பெற்றால்,இஸ்லாத்தின் கருத்தை புரிய முடியும்.
//காலம் முழுதும் இருளில் மூழ்கவன்//உதவிதேவைபடும் ஒருவனுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதை அன்றே செய் ! அதற்கான நண்மையேஅல்லாநமக்குஅளிப்பான். அதை பெற்றவன் நாம் செய்தஉதவியே தீயவழியல் பயன்படுத்தினால் அதற்கான தண்டனையே அல்லாஅவனுக்கு கொடுக்கட்டும்.அதை விட்டு ''நாம் இதை செய்தால் அவன் அதை செய்வானே ;நாம் அதைசெய்தால் இவன் இதை செய்வானே '' என்றுபட்டி மன்றம் நடத்தி தர்மம் செய்தால் அந்த தர்மத்திற்கு நண்மை கிட்டுமா? என்பது சந்தேகமே!.
Super ! Super! Super!
Post a Comment