Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 5 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2014 | ,


01) கைகளில் நிகழ்ந்தது:

அது ஓர் விடியற்காலம். எம் எஸ் எம் நகர் பள்ளியில் ஃபஜர் தொழுதுவிட்டு வழக்கம்போல் வாக்கிங் போவதற்கான ட்றாக் ட்ரெஸ் அணிந்து கொண்டு கைகால்களை உதறியவாறு வீட்டை விட்டு வெளியேறினேன்.

எம் எஸ் எம் நகர் வளைவை ஒட்டி உள்ள ட்டீக்கடையில் அன்றைய தொழிலுக்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்க ஒரு சிலர் காத்திருந்தனர். அவர்களில் அந்த நடுத்தர வயது காக்காவை அடிக்கடி பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் வாயில் பீடியோடு டீ பாய்லரைப்போலவே புகை விட்டுக்கொண்டே இருப்பார்.  மெலிந்த தேகம் எனினும் உடல் உழைப்பில் முறுக்கேறிய தோற்றம். கடை முதலாளியும் பரிச்சயம் என்பதால் பொதுவான ஒரு சலாத்தைச் சொல்லி உபரியாக ஒரு புன்னகையை வீசி ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக்கொள்ளட்டும் என்று நடைப் பயிற்சியைத் தொடர்வது வழக்கம்.

நான் ராஜா மடம் சாலையில் போகும் நேரம் பெரும்பாலும் என் அன்பிற்குரிய ஹாஜாமீ ஸார் அலியார் ஸார் வாவண்ணா ஸார் ஹனீஃபா ஸார் ஆகியோரின் ராஜபாட்டை நடைப்பயிற்சியின் நிறைவாக திரும்பி வந்து கொண்டிருக்கும்.  கண்களாலேயே குசல விசாரிப்புகளும் சன்னமாக ஒரு சலாமும் எங்களின் நடைப் பயிற்சியில் தொய்வு ஏற்படுத்தி விடாது. ஹோம் ஒர்க் ஏதும் தந்திருக்கவில்லை என்பதால் என் மரியாதைக்குறிய வாத்தியார்களின்மீது அபரித அன்பைப் பொழிவதில் சங்கோஜமிருக்காது. 

ராஜாமடம் பேருந்து நிறுத்தம் வரை போய் வருவது என் வாடிக்கை. வேகமான நடை, துணைக்கு ஒவ்வொன்றும் 100 தடவை தியாண(திக்ர்) வகைகள் என்று அத்தகைய நடைப்பயிற்சி உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாகவே வைத்திருக்கும். திரும்பி  ஊரை நோக்கி நடக்கும்போது காலை வெயில் கன்னத்தில் அறைய நடையிலும் தளர்ச்சி சேர்ந்து கொள்ளும். 

வரும் வழியில் ஓடைகளின்மீதான சிறிய பாலங்களில் ஒன்றில் மிதமான உடற்பயிற்சியும் செய்து கொள்வேன்.

அன்றைய பயிற்சியின் நிறைவாக அந்த டீக்கடையை நெறுங்கும்போதுதான் அது நிகழ்ந்தது. 

அந்த பீடி மனிதர் சட்டென்று பெஞ்சிலிருந்து தளர்ந்து தடுமாறி கீழே விழுந்தார். நான் விரைந்து அவரை கைகளில் தாங்கவும் மற்றவர்களும் ஓடி வந்து, "என்னாச்சு?" என்று பதறினர். நான் என் கைகளில் விழுந்தவரின் உடலின் கனம் தாங்க முடியாமல் மடியில் கிடத்தும்போதே ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டேன். ஆட்டோ பிடித்து மிக துரிதமாக அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தாலும் இறந்து விட்டார் என்று உணர முடிந்தது. 

"மாரடைப்பு மாதிரில்ல தெரியுது" "இப்பத்தானேங்க ட்டீ குடிச்சிட்டு வர்ரேண்டு போனீங்க" "எப்பப் பார்த்தாலும் பீடிதான்" "டாக்டர் பீடி குடிக்காதியண்டாரே, கேட்டியலா?" போன்ற ஆற்றாமையான வசனங்களிலிருந்து விடுபட்டு நான் வீடு நோக்கி நடக்கும்போது அந்த பீடி நாற்றமும் என் உடையோடு ஒட்டி வந்தது. 

நினைவிருக்கட்டும். மனித இதயம், தனக்குத் தகாத புகை, போதை வஸ்துகள் மற்றும் மோசமான உணவுகளைக் கொண்டு தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதில் நேரம் தாழ்த்துவதில்லை.


02) இடப்படாதக் கையொப்பங்கள்

வெட்டப்பட்டக் கிளையிலிருந்து
இன்னும்
உதிரா திருந்தன இலைகள்

வேர்களோடான
தொடர்பு துண்டிக்கப்பட்ட தறியாது
கரியமில வாயுவோடும்
கதிரவக் கதிர்களோடும்
சோலியாயிருந்தது
பச்சையம்.

மொட்டுகளும் மொக்குகளும்
கொழுந்துகளும் காய்களும்
பூக்களும் மகரந்தமமுமாய்
பூத்துக் குழுங்கிய மர மது.

காலங்களைச் சுமக்கும்
முதியோர்களிடம்
இடப்படாதக் கையொப்பங்கள்
மிச்சமில்லாததால்
காப்பகங்களில்
விடப்பட்டவர்களை விட்டும்
விலகி
இச்சைக்கேற்ற நிரமேற்று வாழ்ந்தன
பச்சோந்திகள்

காய்ந்தும் மடிந்தும்
சருகாகியும் மக்கியும்
போகும்வரை
வேர்கள்மேலான
பிடியை
விடுவதில்லை இலைகள்

இடப்படாத கையொப்பங்கள் 
சிலவற்றையாவது
கைவசம் வைத்திருத்தல்
தற்கால வாழ்க்கைக்கான
உத்திரவாதம்!

03) …and then ?

Loneliness is what
will be left with.
it wouldn’t please
but attack
when
the sounds of  footage
of those alive
descending 
slowly away from you!

Likewise,
It would though seem
residing in
apartments of towers,
the entity of
pin drop silence
would prompt cemetery!

The density of
darkness would double
during sudden power cuts,
although 
you wouldn’t be able to presume
a table’s edge before it hits your thy,
scattered dolls before they hurdle you, 
an extemporaneous routine
will guide you to guess the existence of usual things,
but not in where you would be kept
where the darkness would be thickened

The heat would touch
as if
the hell fire neared you
but  the
stitch free uniform
which has no spare dress
wouldn’t turn wet
with sweat

Lavender for self
jasmine with spouse
are what desired personally
when alive - but
odor of sandal  smelling around
would have overcome
by the smell of clay

there would be no concession
that should stay stretched straight
while resting; and
would there be no any need
to
bend the knees
or
scratch for an itch

The pain as punishment
would have no control

Fortunately…
when all that would happen on me
that not to suffer
there would be
no life
in my being! 

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

16 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

'புகையே மனிதனுக்கு பகை;இது பலி கொண்ட உயிர்களின் தொகையோ மிகை! '/ புகைமீது மனிதன் கொண்ட தனியாத மோகம் புதைகுழியில் சோகமாய் முடிவடைகிறது. ஆனால்தொடரும்அவன் குடும்பத்தின் சோகத்திற்கு புதைகுழியார் தோண்டுவாரோ?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer Abushahruk,

An awareness story of a smoker's death is heart touching. I personally used to encourage friends and relatives to stop smoking. Recently one of my co-workers stopped smoking. He explained to me how he stopped.

He decided to stop smoking.

Previous day he smoked a pack of cigarettes

Started not to smoke in the first day. But his habit of addiction made him crave for smoke. But he controlled it on that day.

Next day also he felt the urge to smoke. But he told himself that first day was successful. Why not second day to start. So he didn't touch cigarettes.

He has been continuing till today for 2 months. I observed his face is glowing nowadays. And he told that he is spending money on fruits and other health foods.

He has been doing excercise(indoor excercises, weight lifting, and running on treadmill) for an year.

He told he asked himself that if he is a man then its possible to stop this smoke addiction habit.

The above mentioned practical steps to stop smoking is useful for our brothers who have been smoking and willing to stop from today.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

A heart trembling poem.

Feelings of loneliness and silence.
Darkness, heat and sweat.
Smell and soulless and senseless body

Actually the experience of after death happiness or punishment is going to be under different physical, chemical, biological laws.

Thanks and best regards,

B. Ahamed Ameen.

sheikdawoodmohamedfarook said...

/என் பின்னூட்டத்தில்/ 'தனியாத'மோகம்/ என்பதை 'தணியாத'மோகம்/ என திருத்தி வாசிக்கவும்.

Shameed said...

பீடிக்கு ஒருவகை நாற்றம்
சிகிரெட்டுக்கு ஒருவகை நாற்றம்
சுருட்டுக்கு ஒருவகை நாற்றம்
ஆனால் இதைப்பற்றி எழுதும் உங்கள்
எழுத்துக்கு மட்டும் ஒரு வகை மணம் கமகமக்கின்றதே!

Unknown said...

//He told he asked himself that if he is a man then its possible to stop this smoke addiction habit.//

Please observe his expression of will power in the above mentioned statement.

sheikdawoodmohamedfarook said...

'' மலச்சிக்கல் பிரச்னை தீர சிறந்த மருந்து 'சுருட்டுதான்'என்று ஒருவர்கூறிய ஆலோசனையின் பேரில் கிட்டத்தட்ட இருபது ஆண்டு களுக்கு மேல்அதைதொடர்ந்தேன் .பின்னர் அது வியாபாரத்தில் வேண்டுமென்றே பங்காளியால்உருவாக்கப்பட்டபிரச்சனைகளின் வலிதீர்க்கும் சஞ்சீவியாக மாறியது.பின்னர் அந்த தொல்லை பிடித்தபங்காளியை விட்டுநீங்கி அமைதியானநதியினிலேஓடம்ஓடிய பின்னும் சுருட்டு நன்றியுள்ள நாய்போல என்னைசுற்றி- சுற்றியே தொடர்ந்தது.ஒருமுறை ஊர்வந்தபோது 25பண்டல் ' மணிக்கொடி' சுருட்டோடு மலேசியா சென்றேன். மலேசியாவை அடைந்த அன்று காலை பசியாறல் முடிந்தபின் மணிகொடியே கட்டைபிரித்து ஒரு சுருட்டை பற்றவைத்து இரண்டு ஊதல்.வாய்விட்டுபுறப்பட்ட பாசமுள்ள புகை என்னை நன்றியுடன் சுற்றிசுற்றிவந்தது!அந்தபுகைகுத்தான் என்மேல்எத்தனைபாசம்! என் இதயதிலிருந்து எழுந்த ஒருகேள்வியின் ஓசைஎன்செவிகளில்ஒலித்தது .'' நீ காஸுகொடுத்து வாங்கிய சுருட்டு உன்னை அடிமை படுத்துகிறது. அடிமைத்தனத்தைவிலைபோட்டு வாங்கும் நீ ஒருமுட்டாளே?'' தீபோல்நெஞ்சைபிடித்தஇந்தகேள்வி என்சுயமரியாதையை சுட்டது,புகைந்த சுருட்டை தூக்கிசாக்கடையில்வீசிவிட்டு பாக்கி சுருட்டைஎல்லாம்அருகிலுள்ள கடையில்விற்று காஸுபார்தேன்.சுருட்டுயாபாரத்தில் ஆதாயமே.இப்பொழுது யாரும் அருகில் நின்று சுருட்டோ சிகரெட்டோ புகைத்தால் விருட்டென்று கோபம் வருகிறது.''மாமியார் ஒடச்சா மஞ்சட்டி! மறுமவ ஒடச்சா பொஞ்சட்டியோ?''/எதற்கும் மனம் இருந்தால்மட்டுமே மார்க்கம் உண்டு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அந்த ஓர் விடியற்காலம்
புகைக்கு பகையூட்டும் நற்பாடம்.

காப்பகங்களில் விடப்பட்டோரை வெட்டப்பட்ட மரத்தின் இலைப் பச்சையத்தோடு கவித்தமை மிக அருமை.

Unknown said...

Dear brother Mr. Sabeer Abushahruk,

இடப்படாதக் கையொப்பங்கள் - Excellent analogies parents as trees and children as leaves.
The thoughts are denouncing that the children who are abandoning their parents are acting against the nature. Hence the children are abandoning and losing themselves.

Jazakkallah khairan brother.

B. Ahamed Ameen from Dubai.

Yasir said...

இத்தியாதி வாழ்க்கையின் எதார்த்தை புட்டுப்புட்டு வைக்கின்றது....தொடர்ந்து தாருங்கள் கவிக்காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///நினைவிருக்கட்டும். மனித இதயம், தனக்குத் தகாத புகை, போதை வஸ்துகள் மற்றும் மோசமான உணவுகளைக் கொண்டு தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதில் நேரம் தாழ்த்துவதில்லை.///

ஆமாம் ! ஞாபகம் இருக்கட்டும்...

…and then ?

இப்னு அப்துல் ரஜாக் said...

பஞ்ஜு மிட்டாயை
யாரெனும் கொல்லி கட்டையால்
சுடுவார்களா?

அதை செய்ய புகை போக்கிகளால்தான்
முடியும்,

பஞ்ஜு மிட்டாய் இதயத்தை
இறைவனின் அமானிதத்தை
சுட்டுப் பொசுக்க
இவர்களால் முடியும்.

ஏகன் தந்த அமானிதம்
பேணாதவர்கள்.
துடிக்கும் இதயத்தை
முடிக்க என்னும் இவர்களை
எங்கள் அல்லாஹ்வே,
திருத்துவாயாக.
-----------------------
சபீர் காக்காவின்
ஆக்கம்,
புகைப்பவர் திருந்த
ஒரு ஊக்கம்.

sabeer.abushahruk said...

wa alaikkumussalam dear brother B. Ahamed Ameen,

Thank you for your continuous support in encouraging me through your intellectual comments. You have a habit of expressing your view quite potentially but I feel it is not enough that you do it through comments only.

We miss your articles. Take care.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவை வாசித்துக் கருத்திட்ட ஃபாரூக் மாமா, ஹமீது, எம் ஹெச் ஜே, அபு இபு, யாசிர், ஜாஃபர் மற்றும் அஹ்மது அமீன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

தம்பி ஜாஃபரின்

"பஞ்ஜு மிட்டாயை
யாரேனும் கொள்ளிக் கட்டையால்
சுடுவார்களா?"

என்னும் கேள்வி ஏழெட்டு கட்டுரைகளுக்குச் சமம்.

வஸ்ஸலாம்.

அதிரை.மெய்சா said...

குட்டிக் கதை சொல்வது போல் உன் வாழ்க்கையில் கண்ட நிகழ்வை அழகான விழிப்புணர்வு பதிவாய் கொண்டு வந்துள்ளாய் பீடிக்கதை. புகை பிடிப்போர் கவனத்திற்கு...என்று சொன்னது போல் இருந்தது.

கைரேகை கவிதை கோடிரூபாய் சொத்துப் பத்திரத்தில் பதித்தாற்போல் பவர்புல்லாய் இருந்தது. அருமை.

Ebrahim Ansari said...

வேறொரு இலக்கிய வகுப்புக்குச் சென்று இருந்ததால் இந்த இலக்கிய வகுப்பை நேரத்தில் தவற விட்டுவிட்டேன். இருந்தாலும் விட்டதைப் பிடித்தேன்; படித்தேன். அனைத்தும் அற்புதம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு