மோடி எனும்...!

கட்சிக்காரர்களைப்
‘பெட்டி’ப் பாம்பாக்கி
கைக்காசைப் போட்டு
கனவுகள் வாங்குகின்றீர்

இலவு காத்தக் கிளியாகி
முனகிய
மூத்தத் தலைவர்களை
முகம் மலர
மிரட்டியாயிற்று

உமது
புராதனக் கனவான
பிரதான நாற்காலி
கைக்கெட்டும் தூரமென
பகல்கனவு வேறு
பாடாய்ப் படுத்துகின்றது

ஊடகங்களை நோக்கிய
பூடகமான புன்னகையில்
புதைந்து கிடக்கின்றது
வேடதாரி வில்லங்கம்

தலையாயக் கொள்கையாய்
ராமருக்குக் கோயில்,
ரகசிய ஒப்பந்தங்களில்
பாப்ரி மஸ்ஜிதின்
வடுவைக்கூட
விடுவதாயில்லை
மற்றுமொரு கரசேவையில்
கைப்பற்றத் திட்டமாமே?
பகிரங்க அறிவிப்பிலோ
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு!

சொந்த மாநிலத்தில்
காற்றின் மூலக்கூறுகளுக்கெல்லாம்
காவி வர்ணம் பூசி
சிறுபான்மையினரின்
ரத்தச் சிவப்பு மறைத்தாயிற்று

‘கோத்ரா’ ரயில் எரிப்பிற்கும்
‘யாத்ரா’ வலை விரிப்பிற்கும்
இன துவேஷ
கொலைவெறிதானே பின்னணி!

அறுபது மாதங்கள்
ஆட்சி அதிகாரம் வேண்டுகிறீர்
அத்தனை சுலபமென்றா கணிக்கின்றீர்
இனப்படுகொலை நிகழ்த்துவது?
கர்ப்பிணிப் பெண்டிரின்
வயிறு கிழித்து
கருவிலேயே கழுத்தறுக்கும்
அருவறுப்பில் கில்லாடியல்லவா!

காங்கிரஸ்
நீர்த்துப் போய்விட்டது என்பதற்காக
நெருப்பைத் தேர்ந்தெடுத்தால்
பற்றி எரியாதோ பாரதம்

‘ச்சாயா’
ஆரிப்போவதற்குள்
விற்றுத்தீர்ப்பதே
உமது
அரசியல் சாணக்கியத்தின்
அடிப்படை அறிவு

நீலச்சாயம் பூசி
நரி ஆண்ட காட்டைப் போல
பசுத்தோல் போர்த்தி
புலி பதுங்கும் வனத்தைப்போல
சாந்தம் தரும்
வெண்தாடி வேடமணிந்து
மனித வேட்டையாடும்
அரக்க வேடன் ஆள்வதா?

மதம் கொண்ட யானைக்கும்
மதம் கொல்லும் உமக்கும்
அங்குசமும் ஆட்சியும்
கைவசம் வாய்க்கப்பெற்றால்
சனநாயகம் சந்திசிரிக்கும்

உமது
கள்ள ஆட்டத்தையும்
மாறு வேடங்களையும்
கண்டவர் கேட்கின்றனர்;:
“மோடியே ஐயா
தாடியும் முகமூடியா?”

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

23 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//காங்கிரஸ்
நீர்த்துப் போய்விட்டது என்பதற்காக
நெருப்பைத் தேர்ந்தெடுத்தால்
பற்றி எரியாதோ பாரதம்//

எங்கெல்லாம் புகை மூட்டப் படும் என்று தொரிந்திருந்தும்...

கவுண்டிங் மினிஸ்டர் என்று ப.சி.யை சீண்டினார் இந்த மோடி நேற்று...

மானங்கெட்ட காங்கிரசுக்கு இன்னும் புரியவே மாட்டங்குது...!

தமிழக முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடமும் அவர்களின் அடிவருடிகளிடமும் இவர்கள் பாடம் கற்க வேண்டும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் திட்டித் தீர்க்க எதிராளியை !

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

Your poem tears the multiple masks of Modi.

Service for humanity with good intentions is rewarded by God Almighty.

Not only Modi, anyone's true nature will be revealed sooner or later one day. Because a person cannot act for long.

God Almighty has created everything with balance. Hence justice will be established as per the balancing law of God Almighty. What we need is the trust in God almighty's justice, patience and peseverence.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai.

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மோடி எனும் மோடி மஸ்தான்!
ஆஹா பாம்பை வைத்து
வித்தைக் காட்டுபவனுக்கும் மோடிக்கும்
என்ன வித்தியாசம் கண் கட்டு வித்தை!

மோடியை பிரதமர் என்று சொல்பவர்கள்
காவி அரை டவுசர்களும்
என்னமோ தூண் என்று சொல்வார்களே
அதுதான் காவித்தூணாகிப்போன கூஜா,
ஜால்ரா செல்லரித்த மீடியாத்தூண்!

மக்களோ! தெளிவாக இருக்க
இந்த மோடி மஸ்தானை
மக்கள் தலையில் கட்டிவிட வேண்டும்
என்று களம் காணும் செல்லரித்த மீடியாத்தூண்!

நானே கடவுள் என்ற ஆணவத்துடன் அலைந்த
ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த சர்வ சக்தியாளன்!

வானம், பூமிக்கும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட
அனைத்திற்கும் சொந்தக்காரனாகிய வல்ல அல்லாஹ்வுக்கு
ஒரு செகண்ட் கூட ஆகாது இந்த மோடியின் நரம்பை; பிடிப்பதற்கு!

காவிகளும் அரை டவுசர்களும் மோடி கூட்டங்களும் இந்த உலகைப்படைத்த ஒரே இறைவனான வல்ல அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அல்லாஹ்வின் பிடி கடினமானது அதிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து நேர்வழி பெறட்டும்.

மோடி மஸ்தானுக்கெல்லாம் கவிதை போட முடியுமா? முடியும் என்பதை கவிதையாக்கியிருக்கிறாய் வாழ்த்துக்கள்!

sheikdawoodmohamedfarook சொன்னது…

மருமகன் சபீரின் இந்த கவிதைகளை தமிழக காங்கிரஸ்அச்சிட்டு பிரச்சாரம் செய்தாலே வெற்றி நிச்சயம். காலமெல்லாம் தொங்கி தொங்கியே பயணம் செய்த காங்கிரஸ் இந்த முறை உட்கார்ந்தே டெல்லிக்கு போகலாம்.தொட்டில் பழக்கம் மாறனும்.

Yasir சொன்னது…

//மதம் கொண்ட யானைக்கும்
மதம் கொல்லும் உமக்கும்
அங்குசமும் ஆட்சியும்
கைவசம் வாய்க்கப்பெற்றால்
சனநாயகம் சந்திசிரிக்கும்// சிறுபான்மையினரின் இரத்த வாடையை கமகமக்கும் செண்டாக அள்ளி பூசிக்கொள்ளும் இந்த கேடி.....டெல்லியில் ஒரு மாணவன் வன்முறையில் இறந்துபோனதை” இனவெறி” என்று கூறும் இந்த நரபலி நாயகன்...ஒன்றுமறியாத இனத்தையை கொலை செய்து குவித்ததை மறந்துவிட்டு....அல்லாஹ் கரீம்..

கவிக்காக்காவின் கடுமையான கவிதை பாரூக் மாமா சொன்னதுபோல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.....

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
கவிக்காக்கா "காவிக்காக்காய்களை" நாடாளுமன்ற மேடையை விட்டு விரட்டி அடிக்க "கவன்" எடுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பிற்குரிய அதிரை நிருபர்.
நட்பாலும் நாகரித்தாலும் படிப்பறிவிலும் பட்டறிவிலும் நல்லவற்றில் இணங்குவதிலும் அல்லாதவற்றில் முரண்பட்டு எதிர்ப்பதிலும் எல்லா நிலையிலும் இறைக் கொள்கையில் உறுதியாக நிற்பதிலும் ஒத்த குணமுடைய சகோதரர்கள் ஒன்றுகூடி உரையாடும் இந்த தரமான தளத்தில் என் எண்ணங்களைப் புதுக் கவிதை வடிவில் தொடர்ந்து பதிந்து உதவி வருவதற்காக என் நன்றியும் கடப்பாடும்.
இங்கு உங்களுடன் இணைந்த பிறகு என் நட்பு வட்டம் விட்டம் வளர்த்தது. குறைகூற இயலாத நற்குணங்களோடான அதிரை சகோதரர்களின் அன்பு கிடைத்தது. அடிமனதில் உறங்கிக்கிடந்த என் ஆத்மார்த்த விருப்பமான எழுத்துத் துறையில் எனக்கென்று ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்தது. பிரியாணிப் பொட்டலத்திற்குக் கூடும் கூட்டம் போன்றல்லாது பிரியத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்த்தக் கூட்டம் கிடைத்தது. இதை நடத்துபவர்களும் பங்களிப்பாளர்களும் வாசகர்களும் ஒன்று நன்றாகப் படித்தவர்களாக இருக்கிறார்கள் அல்லது வாழ்க்கையைப் படித்தவர்களாக இருக்கிறார்கள், அல்லது குறைந்தபட்சம் நாகரிகம் கற்றவர்களாக இருப்பதால் நாகரிகமான நடைமுறை சாத்தியப்பட்டு இனிதே கழிகின்றது என் நேரம். இதை நான் இழக்க விரும்பவில்லை. எனவே, எந்த தரமற்ற விமரிசனங்களும் தங்களை தீண்டாதும் தங்களின் கொள்கைகளில் சலனமேற்படுத்தாமலும் இருக்கட்டும்.
கடுமையான உழைப்பை இம்மைக்காகவும் இயன்றளவு அமல்களை மறுமைக்காகவும் என வாழ்ந்து வரும் எனக்கு இளைப்பாற இந்தத் தளம் ஏற்ற இடம். ஏற்புரைக்கு முன் இந்த குறிப்பு எழுத ஒரே காரணம் நான் புழங்கும் தளம் தரமானது என்று சொல்ல மட்டுமே; ஏனையவற்றைக் குறைகூற அல்ல. வாழ்க்கை ஒரு ரயில் பயணமெனில் இந்த முதல் வகுப்புப் பயணம் சுகமானது; மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் அனுபவமும் இல்லை ஆர்வமும் இல்லை.
மொழியை கழிவுகளகற்றி உபயோகிக்க முயல்வோம்; சொந்த சுபாவங்களை மொழியில் தோய்த்து தத்தம் மன அழுக்கையும் அநாகரிக பாமரத்தனத்தையும் பரப்பாமல் இருப்போம். பெரியவர்களை மதிப்போம்.
மேற்சொன்னது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ யார் வாசித்துத் துணுக்குருகிறார்களோ அவர்களுக்குப் புரிய மட்டுமே.

Unknown சொன்னது…

பொய்யும், புரட்டும் தனது சித்தாந்தமாய் தனது பிரச்சாரத்தில் உளரிக்கொண்டு இருக்கும் மோடியின் பிரதமர் கனவு பொய்த்துப் போகட்டும். அதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

வரலாறுகளை கண்டவாறு பொது மேடைகளில் திரித்துக் கூறும் மோடி, குஜராத் 7 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலும் வரலாறுகளை மாற்றி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்..!

நல்ல தருணத்தில் தனது பாணியில் சபீர் காக்கா வெளிக்கொண்டு வந்துள்ள கவி வரிகள்.

அதெல்லாம் சரி.. எனக்கு புரியாத ஒன்று சபீர் காக்காவின் திடீர் தன்னிலை விளக்கம்தான்...! ஒரு வேளை அ.நி யின் ரெகுலர் பின்னூட்ட சகோக்களுக்கு புரியுமோ!

அவ்வப்போது பின்னூட்டமிடும் என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கும் புரிந்தால் நல்லது.

Ebrahim Ansari சொன்னது…

பெர்னாட்ஷா தாடி வைத்திருந்தார் - அவர் அறிஞர் . அதற்காக தாடி வைத்தவறேல்லாம் அறிஞரல்ல.

ஞானம் தாடியில் இல்லை. தலையில்தான் இருக்கும்.
மோடி வைத்திருக்கும் தாடி ஊரை ஏமாற்ற. குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்திவிட்டு இன்று தேர்தலுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி பற்றி அற்புதமான கவிதையை தேவையான நேரத்தில் வடித்திருக்கும் தம்பி சபீர் அவர்களைப் பாராட்டுவோம்.

அரசியல் கடல்களில் சுனாமிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. மோடி பிரதமராக்க வரவேண்டிய நிலையை இந்த சுனாமி உருவாக்கிவிட்டால் அதிலிருந்து மீள பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் இந்தியாவையும் சமுதாயத்தையும் காப்பாற்றுவானாக!

sheikdawoodmohamedfarook சொன்னது…

மோடியே ஒடுக்க எல்லோரும் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும். பேரம்பேசும் கட்சிகளை ஓரம் கட்டவேண்டும்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

எமனை விரட்ட நற்கவிமருந்து!

sheikdawoodmohamedfarook சொன்னது…

மருமகன் சபீரின் பின்னூட்டத்தில் இனம் புரியாத ஒரு இன்னல்இழையோடுகிறது. என்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கை கடகடாதடதடா என்று ஓடும் ரயில்பயணமல்ல. நிமிடத்து நிமிடம் வினாடிக்கு வினாடி பனை.தென்னை ஆலமரங்கள் நம்மைகடக்கிறதா? அல்லது நாம் அதை கடக்கிறோமா? என்று தெரியாதஅளவுக்குக்கு வண்டியின் வேகம்இருக்கும் .சீக்கிரமேசேரவேண்டிய ஊர்போய்ஈர்ந்திடலாம். அதில் த்ரில்இல்லை. வாழ்க்கையை நடைபயணமாக்கினால்மேடுபள்ளங்களில் ஏறிஇறங்கலாம்.பாதத்தில் தைக்கும்முள்ளின்வலியையும் பனிபடர்ந்த பசும்புல்லின்குளிரையும்உணரலாம். பனைமரத்தின் நுங்கின்சுவைபோல் அதன் நிழல்நமக்கு நிற்க இடம் தருமா? தென்னைமரத்தின் இளநீரும் அதன்தோகையின் சலசலப்பும் எப்படிஇருக்கும் என்பதை கவிஞனாகிய தமக்கு சொல்லிதரவேண்டியது இல்லை. எல்லாம் கூட்டிகழித்து நான்சொல்ல வந்தது// வாழ்க்கையே பைபாஸில் செலுத்தி விரைவில் ஊர் போய்சேர்வதைவிட அதை நடந்தேகடந்து எதிர்வரும் இன்னல்கள் இன்பங்கள் இரண்டையும்சமமாக நுகர்ந்து நடப்பதே நல்லது' என்பதே.இது புத்திஅல்ல! என் கருத்து. சரி'என்றால்இதுசரி :இல்லை என்றால்இது இல்லை!

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
பாரூக் சாச்சா அவர்கள், வாழ்வின் நிதரிசனத்தை எளிமையாகவும் இனிமையாகவும் சொல்லிவிட்டார்கள்.
"இதுவும் கடந்து போம்"
N.A.Shahul Hameed

Ebrahim Ansari சொன்னது…

" Modi ஆட்சிக்கு வந்தால் நாடே Dead Body " இதை உணர்ந்தவன் கில்லாடி "
- முகநூலில் முகவை ஷேக்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அன்புக்குரியவர்களுக்கு !

கவிக் காக்கா அவர்கள் பளிச்சென்று சுட்டியிருக்கும் பல விடயங்கள் அனைத்து மிகச் சரியே ! [யாருக்குப் புரிகிறதோ இல்லையோ யார் வாசித்துத் துணுக்குருகிறார்களோ அவர்களுக்குப் புரிய மட்டுமே.]

பிதற்றலில் ஊரிப் போன ஒரு குட்டை குழம்பி இருக்கிறது என்பதற்க்காக... நாம அதனைச் சுத்தம் செய்ய முயன்றேமானால்... சகதி தெரிக்கும் !

இருந்தாலும் நம் வீட்டு வாசலில் அந்த சாக்கடைய ஓடவிடமாட்டோம் அனைத்து வகையிலும் அதனை அங்கிருந்து அகற்றவே செய்வோம் !

ஆக!

ஆக்கப் பொறுத்த மனமே ஆறப் பொறுத்தருள்க ! [இதுவும் கவிக் காக்கா சொன்னதில் உள்ளடக்கம்]

அ.நி.(யில்)-படித்தவர்கள் படிக்காதவர்கள் இரு வித்தியாசத்தை தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் கவிக் காக்கா !

ஒரு வினா !? : குழப்ப வாதிகள் என்று பெயரெடுத்தவர்கள் யார் ?

Yasir சொன்னது…

இயக்கம் என்ற போதையினால் மயக்கம் பிடித்து திரியும் இந்த வீணர்கள் திருந்துவது எப்போது....சாக்கடைகள் அதன் கால்வாய்க்குள் ஓடிக்கொள்ளட்டும்....எங்கள் வீட்டுவாசலை தொட்டு செல்ல முற்ப்பட்டால் அது நல்லதல்ல.... [யாருக்குப் புரிகிறதோ இல்லையோ யார் வாசித்துத் துணுக்குருகிறார்களோ அவர்களுக்குப் புரிய மட்டுமே.]

sabeer.abushahruk சொன்னது…

//தமிழக முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடமும் அவர்களின் அடிவருடிகளிடமும் இவர்கள் பாடம் கற்க வேண்டும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் திட்டித் தீர்க்க எதிராளியை !//

நம் மார்க்கம் எல்லாவற்றையும் கற்றுத்தருவது போலவே மனிதனுக்கு 'நாகரிகமாக சக மனிதர்களிடம் எப்படிப் பேசுவது' என்பதையும் கற்றுத் தருகிறது. ஆயினும், எல்லாவற்றையும் தாண்டி ரத்தத்தில் ஊறிய பிறவி குணம் வெளிப்பட்டே தீருகிறது; என்ன செய்ய?

பிறந்து வளர்ந்து வரும் பிள்ளைப் பிராயந்தொட்டே கண்டு அவர்களின் அயோக்கியத்தனத்திற்காக நாம் வெறுத்த சக மனிதர்கள் சட்டென ஸாலிஹான தோற்றத்திற்கு மாறினாலும் உள்ளே அந்த மிருக குணம் ஒளிந்துகொண்டுதான் இருக்கின்றது. அதன் வெளிப்பாடே உங்கள் கருத்திற்கான காரணம்.

இவர்கள் மோடியை விட மோசமானவர்கள்.

sabeer.abushahruk சொன்னது…

//a person cannot act for long.//

Certainly.

Your statement fits for everyone including our brothers who are blind by heart but loud in voice.

Thanks for your comment.

sabeer.abushahruk சொன்னது…

//மோடி மஸ்தானுக்கெல்லாம் கவிதை போட முடியுமா?//

கவிதையோ கட்டுரையோ எது வாயிலாகவோ விமரிசிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதை நயவஞ்சகன் மோடிகூட நாகரிகமான முறையில் எதிர்கொள்வான் போலிருக்கிறது ஆனால் நம் சகோதரர்கள்?

உன் அழகானக் கருத்துக்கு நன்றி

######

//காலமெல்லாம் தொங்கி தொங்கியே பயணம் செய்த காங்கிரஸ் இந்த முறை உட்கார்ந்தே டெல்லிக்கு போகலாம்.தொட்டில் பழக்கம் மாறனும்.//

ஹாஹ்ஹா...

மாமா, இப்படி அமைவதைத்தான் தொங்கு பாராளுமன்றம் என்கிறார்களோ?

######

//ஒன்றுமறியாத இனத்தையே கொலை செய்து குவித்ததை மறந்துவிட்டு//

இன்னும் வேலை பாக்கி இருக்கிறதாம்; அதற்குத்தான் 60 மாதங்கள் தாருங்கள் என்று பகிரங்கமாகவே கேட்கிறான்.

######

//அஸ்ஸலாமு அலைக்கும்!
கவிக்காக்கா "காவிக்காக்காய்களை" நாடாளுமன்ற மேடையை விட்டு விரட்டி அடிக்க "கவன்" எடுத்திருக்கிறார்.//

ஸார், என்ன இப்டி கெளம்பிட்டிய? உட்டா கவிதை எழுதிடுவிய போலருக்கு!!!sabeer.abushahruk சொன்னது…

//அதெல்லாம் சரி.. எனக்கு புரியாத ஒன்று சபீர் காக்காவின் திடீர் தன்னிலை விளக்கம்தான்...! ஒரு வேளை அ.நி யின் ரெகுலர் பின்னூட்ட சகோக்களுக்கு புரியுமோ!//

தம்பி ஜாஃபர்,

சரியாக வாசித்தீர்களா?

இது தன்னிலை விளக்கமில்ல. என்னோடு ஒத்த உங்களைப் போன்றவர்களின் 'நம்நிலை விளக்கம்' .

'பிறிது மொழிதல் அணி'யை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. அவிங்களுக்குப் புரியும்.

####

//பெர்னாட்ஷா தாடி வைத்திருந்தார் - அவர் அறிஞர் . அதற்காக தாடி வைத்தவறேல்லாம் அறிஞரல்ல. //

தாடிகளெல்லாம் தாகூருமல்ல மீசைகளெல்லாம் பாரதியுமல்ல.
கேடிகளெல்லாம் மோடியுமல்ல

(பி.கு.: இது என் சொந்தக் கருத்தல்ல. வைரமுத்துவிடமிருந்து காப்பி பேஸ்ட் செய்தது. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தக்க சமயத்தில் செளியிடுவேன். மறுத்தால் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? ஆ டண்டனக்கா )

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

எனக்கு எந்த சஞ்சலமும் இல்லை. பாமரனுக்கு பிடிக்க வேண்டுமெனில் பேச்சிலோ தோற்றத்திலோ கவர்ச்சி இருந்தால் போதுமானது. தலைவனாக்கி விடுவார்கள். அந்தத் தலைவனுக்கு வேறு தகுதிகள் தேவையில்லை. சினிமா நடிகர்களும் தற்கால கட்சித் தலைவர்களும் அவ்வாறே.

ஆனால், எனக்கு (எங்களைப்போன்றவர்களுக்கு) பிடிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சியும் அனுபவமும் கல்வியறிவும் ஆழ்ந்த சிந்தனையும் உள்ளவரால் மட்டுமே எங்களைக் கவர முடியும். அப்படிப்பட்ட என் மதிப்பிற்குரிய ஒரு காக்கா அவர்களைத் தகுதியற்றோர் விமரிசத்ததால் எழுந்த கோபத்தாலும் ஆதங்கத்தாலும் எழுதியது அது.

ஒரு மனிதரின் சமூக அக்கறையையும் சக மனிதனுக்கும் அறிவூட்டவேண்டும் என்னும் பொறுப்புணர்வையும் சமூகம் மேம்பட வேண்டும் என்று எழுத்துப் பணியில் ஈடுபட்டுவரும் நல்ல உள்ளத்தைக் கொச்சைப் படுத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது.

அதன் வெளிப்பாடே என் முதற் கருத்து.

Unknown சொன்னது…

புரிந்தது சபீர் காக்கா.. புரிந்தது.. நான் தளங்களை தேடிப்பிடித்துப் போவது கிடையாது.. என்னைத் தேடி வரும் சிறந்த தளங்களை மட்டுமே பார்வையிடுவேன்..அதில் சிறந்த கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.

பெரும்பாலும் நாகரீகமற்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் இருந்தால் அதுவே நாகரீகம் தெரியாதவர்களுக்கு கொடுக்கப்படும் மிக்கப்பெரிய பதிலடி என்பது என் தனிப்பட்ட நிலை. சிலர் அதனை பின்வாங்கிவிட்டார்கள் எனக் கருதுவதுண்டு.

உறங்குபவர்களை எழுப்பிவிடலாம்.. உறங்குபவர்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதால் அவர்களை நாம் சீண்டிப் பயனில்லை.

Shameed சொன்னது…

//சமூகம் மேம்பட வேண்டும் என்று எழுத்துப் பணியில் ஈடுபட்டுவரும் நல்ல உள்ளத்தைக் கொச்சைப் படுத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது.//

கொச்சைப் படுத்திவிட்டார்களே என்று வருத்தப்பட வேண்டாம் சாக்கடையில் இருந்து சந்தன வாடை வருமா?? சாக்கடை வாடை தானே வரும்!!