முத்துப்பேட்டை லகூன் ! - ஆவணப் படம்...!

முத்துப்பேட்டை அருகே இருக்கும் லகூன் என்றொரு சுற்றுலாத்தளம் இயற்கை அழகோடு எண்ணிடலங்கா இனிமையையும் தூய்மையான பொழுதுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதை, ஒரு குட்டி ஆவணப் படமாக சகோதரர் ஷஃபி அஹமது (ShafiCast) நமக்கு வழங்கியிருக்கிறார்.

புகைப்பட கலையில் அதீத ஆர்வம் கொண்ட ஷஃபி அஹமது, அதன் தாக்கத்தை மற்ரொரு முயற்சியாக காணிப்படமெடுத்து நல்லதொரு ஆவணமாக நமக்களித்திருப்பதில் மிக்க மகிழ்வே !


ஆவணப் படம் : ஷஃபி அஹமது (ShafiCast)
அதிரைநிருபர் பதிப்பகம்

10 கருத்துகள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அமைதியான கடலும், ஆரவாரமில்லா அலயாத்திக்காடும், கடல் பறவைகளின் சங்கமமும், தவழ்ந்து செல்லும் படகும் சண்டை போடாமல் இருக்கச்சொல்லுது....படைத்த இறைவனை வணங்கச்சொல்லுது...மரணத்தை நினைக்கச்சொல்லுது....நல்ல மனிதராய் நடக்கச்சொல்லுது.....

Ebrahim Ansari சொன்னது…

EXCELLENT.

எப்போதுமே நமக்கு கண்ணருகேயும் கையருகையும் இருக்கும் எதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.

இந்த ஆவணப் படம் இதை உறுதி செய்கிறது. ஒரு முறை போய்வந்தால் தினமும் போகத் தூண்டும் ரம்மியமான இடம். மணம் மகிழத் தக்க காட்சிகள் .

இதுவரை போகாதவர்கள் போக முயலாம். நான் அண்மையில் போனபோது நாமக்கல் நகரில் இருந்து ஒரு பள்ளியில் இருந்து மாணவர் பட்டாளம் இதைக் கேள்விப் பட்டு வந்து இருந்தார்கள்.

அரசின் தரப்பில் இன்னும் பல வசதிகள் செய்துதர வேண்டிய நிலை உள்ளது.

ஒரு முறை இங்கு அனைத்து இணைய தள பதிவாளர்களின் கலந்துரையாடலை வைக்கவேண்டும் என்று ஆசை.

Yasir சொன்னது…

9வருடத்திற்கு முன் போய் வந்த இடங்களில் ஞாபகத்தில் அகல இடம் இந்த காடுகள்...உயிருடன் மீனைப்பிடித்து அங்கே சமைத்து சாப்பிட்டா அந்த சுற்றுலா மறக்கமுடியாதவை...

Shameed சொன்னது…

நான் இருமுறை லகூன் சென்றுள்ளேன் முதல் முறை போகும்போது நம்மூர் கடல் மார்க்கமாக சென்றேன் மறுமுறை போகும்போது முத்துபேட்டை ஆற்று வழியாக சென்றேன்

இந்த லகூனை அழகிய சுற்றுலாதலமா அரசு அறிவிக்கலாம் .கேரளாவின் ஆலப்புழைக்கு அடுத்து இந்த இடம் ஒரு இயற்க்கை அழகை கொண்ட இடம்

sabeer.abushahruk சொன்னது…

ஆஹா... தம்பி ஷஃபி,

அருமையான முயற்சி. உடனே பார்க்கத்தூண்டும் ஒளிப்பதிவு. பொருத்தமானத் தகவல்கள்.

கலக்குறீங்கப்பா.

இதுபோல் இன்னும் நிறைய குறும்படப் பதிவுகளைத் தந்து வியக்க வையுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நினைத்திருந்ததை... ஒரு மின்னஞ்சல் தூண்டலோடு அசத்திய ஷஃபி !

இன்னுமிருக்கனுமே.... அடுத்தடுத்த கான்செப்ட் !

கொஹெட் ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அக்கம்பக்க அதிரையின் இயற்கையை ஒளி, ஒலித்து தந்தமை அருமை!

Unknown சொன்னது…

Thank you very much for all your kind comments

ZAKIR HUSSAIN சொன்னது…

இது போன்ற விசயங்களை நமக்கு எடுத்துச்சொன்ன சகோதார் ஷஃபி அஹமதுக்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் காற்று, கொக்கு, கூளக்கிடா, சத்தம். லேசான மண் எண்ணெய் வாசம் வரும் மோட்டார் சத்தம் கேட்ட அனுபவம்.

எந்த வளைத்தளத்தை திறந்தாலும் ஒரே அறிவுரை மயமும், அல்லது மருத்துவக்குறிப்பு எனக்கும் தெரியும்ன்ற மாதிரி 'இதை சாப்பிட்டால் இந்த நோய் பறந்து போயிடும்" நு ஜல்லியடிக்கும் சமாச்சாரமாக படித்து டயர்ட் ஆகி வாழ்த்தும்......

Zakir Hussain.

வே.நடனசபாபதி சொன்னது…

அருமையான குறும்படம். மென்மையான குரலில் தந்த விளக்கம் படத்தின் அழகை மேலும் மெருகூட்டிநேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது உண்மை. ஷஃபி அகமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்!