Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 18 - சோதிடம் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2014 | , , ,

சோதிடமும் ஒரு அறிவியலே, ஒரு கலையே அதற்கும் கோள்களுடைய இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு அதை நம்புவதில் தவறில்லை என்றும் ஒரு சாரார் நம்பிக் கொண்டுள்ளனர். இல்ஸாத்தைத் தவிர ஏணைய மதங்கள் அனைத்தும் அதில் நம்பிக்கை கொண்டுள்ளவைகளே ! 

இந்து மத விசேஷங்கள் அனைத்தும் சோதிடத்தை முழுவதும் அடிப்படையாகக் கொண்டவையே. ஆனால், துரதிர்ஷ்டமாக முஸ்லீம்கள் சிலரும்கூட, சோதிடம், சகுணம், பால் கிதாபு, நட்சத்திர நம்பிக்கை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இவைகள் மிகப் பெரும் ஷிர்க் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.

சோதிடமும் அறிவியலே என்று வாதிடுவோர்க்களுக்கு, நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். கேள்விகளை அடிப்படையாக வைத்து - அதன் சுழற்சி,தங்கும் இடங்களை வைத்து, சோதிடம் சொல்லப்படுகிறது என்றால் அதன் மூலம் பலன்கள் இருக்கிறது என்றால், முன்பு 9 கோள்கள் என்று சொன்ன அறிவியல் இப்போதோ புது புதிதாக கண்டு பிடித்துக் கொண்டே உள்ளதே, அது எப்படி ? அதனுடைய பலன்கள் என்ன ? இதன் மூலம் ஏக இறைவனாகிய அல்லாஹ், கோள்கள் அனைத்தையும், மற்றவைகளையும் படைத்து விட்டு, சும்மா இருந்து விடவில்லை. புதிது புதிதாக படைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும், அவன் இயங்கிக் கொண்டே இருக்கிறான் என்றும் விளக்குறதா ? அல்லது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் கோள்களின் கிரக ராசி என்ன ? அதைப் பற்றி ஏன்  மூச்சு விட மறுக்கிறது சோதிடம்.

முன்பு புளோட்டோ என்று அறியப்பட கோள் இன்று விஞ்ஞானிகளால் ஒரு கோளாக அடையாளம் காட்டப்படுவதில்லை. முன்பு புளுட்டோவை வைத்து கணித்த முறைகள் இப்போது செல்லுபடியாகதே ! அதற்கு சோதிடம் என்ன சொல்லப் போகின்றது. இனி அதை வைத்து இப்போது சோதிடம் சொல்ல முடியாத நிலைக்கு சோதிடப் புரட்டர்களின் பதில்தான் என்ன ?

கார்ல் பாப்பர் என்ற விஞ்ஞானியின் கூற்றுப்படி, எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என நிருபிக்கப்படுமானால், அந்த விஞ்ஞானக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். ஆனால், சோதிடத்தில் பலிப்பதைவிட, பொய்ப்பதுதான் மிக அதிகம். ஒவ்வொரு சோதிடனும் ஒவ்வொரு மாதிரி சொல்வார். அதில் யார் சொல்வது சரி ? இப்படி பொய்ப்பதன் மூலம், சோதிடம் பொய்யானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், இஸ்லாத்தின் எந்தக் கொள்கைகளும் இன்று வரை பொய்யானதில்லை. இன்றும் திருக்குர்ஆன் உலகமக்கள் யாவரிடமும் சவால் விட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படிதான் அறிவியலும் சென்றாக வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ! மனிதப் படைப்பு, பிரபஞ்ச தோற்றம், கரு உருவாவது, மழைநீர், இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அறிவியல் ஒன்று சொல்லும் கருத்து, குர்ஆனுக்கு ஆரம்பத்தில் மாற்றமாக இருந்தால், கடைசியில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, குர்ஆன் என்ன சொல்கிறதோ, அந்தக் கொள்கையில் வந்து நின்று விடுகிறது அந்த அறிவியல்.

இதுவரையில் சொன்னவை அனைத்தும் பொய்க்காத சோதிடரை யாரும் கண்டதுண்டா ? முடியவே முடியாது ! காரணம் சோதிடமும் ஒரு மிகைப் படுத்தப்பட்ட ஒரு பெரிய பொய் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது.

இதை சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் நம்புகிறார்கள் என்பதுதான் மன வேதனை. இது ஒரு மனநோய் அல்லது அதன் ஆரம்ப அறிகுறி என்று கூட கூற இயலும்.

சிலரைப் பார்த்தால், ஒரு தினசரி நாளிதழை கையில் விரித்துக் கொண்டு, அவர்களின் அன்றைய ராசி - பலன்கள் என்ன போட்டிருக்கிறது  என்று பார்ப்பவர்கள் அதை நம்புவார்கள். அதே போன்று செயல்பட ஆரம்பிப்பார்கள். காலண்டரையும் நாளிதழ்களையும் பார்த்து, பார்த்து சோம்பேறிகளாக, மடையர்களாக, மன நோயாளிகளாக என்று மாறிப் போய் விடுவார்கள் .

இந்த சோதிடம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?

இன்ஷா அல்லாஹ் தொடரும் !

இப்னு அப்துல் ரஜாக்

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//புதிதாககண்டுபிடிக்கப்பட்டகோள்களின்கிரகராசிஎன்ன? அதைபற்றிஏன்மூச்சுவிடமறுக்கிறதுஜோதிடம்// தம்பிஇப்னுஅப்துல்ரசாக்கேட்டது. புதிதுபுதிதாககண்டுபிடிக்கும்கோள்களுக்குபலன்கண்டுபிடிக்கும்ஆராய்ச்சி செய்யஅவர்களிடம்பூதக்கண்ணாடிஇல்லை!அடுத்துஆராய்ச்சிசெய்ய மூளை வேண்டும் .அதுவும்இல்லை. ஏற்க்கனவேஎவனோஒருத்தன்எழுதியபழையபஞ்சாங்கத்தைபுறட்டிபுறட்டி ஏழுராசியில்ஒருராசியேசொல்லிஏதோஇந்தவயதானகாலத்தில்வயறு கழுவிபிழைக்கிறார் .பாவம் வயதானவர் பிழைத்து போகட்டும் .விட்டுவிடுங்கள் .

sabeer.abushahruk said...

முஸ்லிம்களும் ஜோதிடத்தை நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சியான விஷயம்.

மார்க்கத்தை "விளங்கி" பின்பற்றத் துவங்கிய இந்த நூற்றாண்டிலுமா?

தீவிர விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்!

நல்ல பேசுபொருள் தம்பி!

ZAKIR HUSSAIN said...

வார நாட்களில் வரும் ராசி பலன் எப்படி அச்சுக்கு வருகிறது என்பதை நான் பார்த்தது / கேட்டது.

" நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைல...எங்கேயா தொலைஞ்சான் அந்த எலவெடுத்த ஜோசியன்??...அவன் எழுதியதை காப்பி எடுக்கனும்ங்கறது நம்ம தலையெழுத்து..பேப்பர் பேஜ் செட்டிங் எல்லாம் முடிஞ்சுது...இந்த ஜோசியன் ராசி பலனை 7.30 க்குள்ள தரலேன்னா கஷ்டம்யா...

'என்னா பெரிய கஷ்டம்..அந்த நாதாரி ஆடி அசைஞ்சி வர்ர வரெ நாமெ இந்த எடிட்டருக்கு பதில் சொல்ல முடியாது...வழக்கம் போல ரெண்டு மாசத்துக்கு முன்னே போட்ட ஒரு வாரத்து ராசி பலனெ அப்படியே ப்ரின்ட்லெஏத்து...பேப்பர் படிக்கிறவன் ரென்டு மாசத்து பேப்பரெ கைலெ வச்சிக்கிட்டா ராசி பலன் படிக்கிறான்'

கர்மம் புடிச்சவனுங்க இதை நம்பித்தான் சில பேர் செயல் படுகிறானுங்க. ஆனால் எப்படி உருவாகிறது ராசி பலன் !!!

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட வாசித்த துவா செய்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி

Yasir said...

சரியான கேள்விகள்...இந்த திருட்டு ஜோசியர்களை நம்பி ஈமானை பறிகொடுக்கும் கூட்டத்தை நினைத்தால் மனது கஷ்டப்படுகின்றது....தொடருங்கள் சகோதர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களே

Ebrahim Ansari said...

பேசப்பட வேண்டிய பேசுபொருள் ! தொடரட்டும்.

நம்மிலும் பலர் நல்ல நாள் கெட்ட நாள் ராகு காலம் எமகண்டம் என்று பார்ப்பது அதன் படி காரியங்கள் -திருமணம் உட்பட நடத்துவது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவைகள் பொய்மூட்டைகள் என்கிற உண்மைகளை போட்டு உடைக்க வேண்டும்.

இவர்களது திறமையை கண்டு ஒரே ஒரு விஷயத்தில் நான் வியக்கிறேன். சோதிடத்தைக் கூட கணினி மயமாக்கிவிட்டார்களே! தனி மென்பொருள் எல்லாம் இருக்கிறதாமே!

அண்மையில் ஒரு நண்பர் வீட்டில் கணியில் கணித்து அச்சிட்ட ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு