Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 20 - பிரிந்து போன இதயங்கள் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2014 | ,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறை மறுப்பு (போன்ற குற்றச் செயல்) ஆகும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவித்தார்கள்.

ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலி அறிவித்தார்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது இறைத்தூதர் ஸல் அவர்கள் "மக்களை மெளனம் காக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு (மக்கள் மெளனமான) பின்னர், "எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக் கொல்லும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்" என்றார்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மேற்கண்ட இரு நபிமொழிகளும், முஸ்லிம்கள் எவ்வாறு ஒவ்வொருவரிடமும் நடக்க வேண்டும் ,அவ்வாறு நடவாமல் இருந்தால் எவ்வளவு பெரிய பாதகம் என்பதையும் விளக்குகிறது அல்லவா ?

இன்றைய நம் முஸ்லிம்களுடைய நிலையை எண்ணிப் பார்ப்போம் ! 

ஒரே ஊரில் உள்ள முஸ்லிம்கள் தெருவாசிகளாக பிளவுபட்டுப் போயுள்ளார்கள் .அவன் அந்த தெருவான் இவன் இந்த தெருவான் என்றும் பிரிவினைகள், திருமண பந்தங்கள் ஏற்படுத்துவதும் கிடையாது. காரணங்கள் கேட்டால் ஆளுக்கொரு சப்பைக் கட்டுக்கள்தான் சொல்லப்பட்டு வருகின்றது. இத்தனைக்கும் இரு தெருவாசிகளுக்கும் நிறைய நண்பர்கள் உண்டு ஆனால் மனதளவில் பிரிவினை தலைதூக்கியுள்ளதை மறுக்க இயலுமா ?

அடுத்தபடியாக இயக்க மயக்கங்கள் ! ஒவ்வொரு இயக்கமும் தங்கள் உறுப்பினர்களை மட்டுமே முஸ்லிம்களாக எண்ணி, அவரவர் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருக்கின்றனர். விதிவில்லாக சில விஷயங்கள் நடந்தாலும் பொதுவாக தன் இயக்கம், தன் உறுப்பினர் என்ற நிலைபாட்டைத்தான் கொண்டுள்ளனர்.

இயக்கங்களின் நல்லது, கெட்டது களைப் பற்றி யாரேனும் விமர்சிக்க ஆரம்பித்தால்,அவர் சொல்வது சரியா ? என  பார்ப்பது கிடையாது, ஆனால் மற்றவர்களை அடிக்கவும், திட்டவும் ஆரம்பித்து விடுவார்கள். இதற்கு அவர் பதிலடி கொடுக்க ஆரம்பிக்க, ஷைத்தானோ "இதற்குத்தானே காத்திருந்தேன்" என்று இன்னும் தூண்டி விடுவான். பிறகென்ன ? உடல் காயங்கள்,மனக் காயங்கள் என்று தனித் தனிக் கூட்டங்களாக பிரிந்து அந்தோ பரிதாபம் ! கூட்டாக இருந்த ஆடுகளை தனித்தனியே பிரித்து, அந்த தனியான ஆடுகளை வேட்டையாடிய ஓநாயின் நிலைமை நம் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொண்டு போய்விடும், அவல நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். நம்மை வேட்டையாட ஆர்.எஸ்.எஸ். ஓநாய்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை, எச்சரிக்கையை ஏன் மறந்து போனோம் !

மேடைக்கு மேடை, எழுத்துக்கு எழுத்து ஆர்.எஸ்.எஸ். பற்றிய எச்சரிக்கையை நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால், அதை நடைமுறையில் ஏன் கொண்டு வர முடியவில்லை !? சிந்தனை செய்தோமா ?

நம் பெண்களுக்கு எதிராக பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் சதி வேலைகளைக் கண்காணித்து, களைந்து, எச்சரித்து நம் பெண் சமுதாயத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள இயக்கங்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டால், நம் பெண்களுக்கு யார்தான் அரணாக இருப்பது ?

ஊரில் பல ரூபங்களில் அன்னியர்கள் நடமாடுகின்றார்கள், பால்காரன், பேப்பர், பழைய பொருட்கள், இரும்பு, பிளாஸ்டிக் வாங்குபவர், காய்கறி விற்பவர், வட்டிக்கு கொடுத்து வாங்கும் பைனான்சியர்கள் என்று எத்தனை நூறு பேர்கள் - நம் தெருக்களில் நுழைகிறார்கள் ? இவர்களில், ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டு சதித்திட்டங்களோடு, பெண்களின் மானத்தையும், சொத்துக்களையும் குறி வைத்து செயல்படுகின்றார்கள் என்றும் நாம் எச்சரிக்கையாக இருந்ததுண்டா ? இவைகள் இயக்கங்கள் மட்டுமே செய்யும் காரியம் என ஒதுங்கிவிடவும் முடியாது. தனி மனிதனுக்கும் இந்த சமூக பொறுப்பு இருக்க வேண்டும். சில இயக்கங்கள் கவனம் செலுத்தினாலும், சண்டை சச்சரவுகள் நம்மை பலவீனப் படுத்தி விடுகின்றன. எவ்வளவுதான் பைத்துல்மால் பணிகள் நடைபெற்றாலும், முழு அளவில் வட்டியை ஒழிக்க இயலவில்லை, வீட்டுப் பெண்களில் சிலர் பட்டுக்கோட்டை, கரையூர் தெரு பகுதிகளில் சென்று வட்டிக்கு வாங்கி அதிலும் மிகச் சிலர் கற்பை இழந்தனர் எனவும் செய்திகள் வெளியாவது ஏன் ? இதற்கு பைத்துல் மால், இயக்கங்கள், ஆலிம்கள் தனிமனிதர்கள், நான் என்று நம்மை அல்லாஹ் நிறுத்தி கேள்விகள் கேட்கமாட்டானா ? அல்லாஹ்விடம் நாம் பதில் சொல்லி ஆகவேண்டுமே ! இதற்கு நம் பதில்தான் என்ன ? பேசுவதோடும், எழுதுவதோடும் நின்று விடாமல் எப்போது காரியத்தில் உருப்படியாக இறங்கப் போகிறோம் !?

இது வரை எழுதப்பட்ட பிரகாரம் நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக.

இந்த தொடரில் குறை இருப்பின் அது என்னை சாரும். நான் குறைகள் உள்ள ஆதமின் மகன்.மன்னியுங்கள்.

நிறைகள் இருப்பின் அது ஏகன் அல்லாஹ்வை சாரும். அவன் நிறைவானவன்.இரக்கமுள்ளவன்.

அல்ஹம்துலில்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ்! இறைவன் அருளால் இந்த தொடர் நிறைவு பெறுகிறது!

இப்னு அப்துல் ரஜாக்

4 Responses So Far:

Ebrahim Ansari said...

நோன்பு நாள் என்றும் பார்க்காமல் பலரை வார்த்தைச் சாட்டையால் விளாசி இருக்கிறீர்கள்.

தெருவிட்டு தெரு திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

ஆனால் மாற்றாரிடம் வட்டிக்குப் பணம் வாங்கும் பெண்கள் விஷயம் இந்த சமுதாயம் உடனே கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயமாகும். இதனால் பல தவறுகள் நடைபெறுகின்றன. அண்மையில் நான் கேள்விப்பட்ட இரண்டு வழக்குகளில் பணக் கொடுக்கல் வாங்கல் நடைமுறைகள் பல அதிர்ச்சியான செய்திகளைத் தந்தன.


இதைப் பற்றி நானே எழுத வேண்டும் என்று இருந்தேன்.

இவைகளை எல்லாம் சரி செய்யாமல் ஊரில் எந்த இயக்கமும் இயங்க இலாயக்கற்றவைகள் என்பதே என் கருத்து.

பாராட்டுக்கள் தம்பி.

sabeer.abushahruk said...

நிறைவாக,

நச் நச்சென்ற குற்றச்சாட்டல்களோடும் பளார் பளார் என்ற அரைகளோடும் வெளிப்படுத்தியிருக்கும் தங்களின் ஆதங்கமே எங்களோடதும்!

வாழ்த்துகள் தம்பி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்லதை போற்றிப் பாராட்டுவதிலாகட்டும், கெட்டதை நேருக்கு நேர் எதிர்ப்பதிலாகட்டும்... இவர் எப்போதுமே நட்சத்திரமாகவே தெரிவார் !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.நிறைவாக,

நச் நச்சென்ற குற்றச்சாட்டல்களோடும் பளார் பளார் என்ற அரைகளோடும் வெளிப்படுத்தியிருக்கும் தங்களின் ஆதங்கமே எங்களோடதும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு