அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
காலையிலும், மாலையும்
அல்லாஹ்வை நினைவு கொள்வது! :
அல்லாஹ் கூறுகிறான்:
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும்
நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
(அல்குர்ஆன் : 7 : 205 )
(நபியே) சூரியன் உதிப்பதற்கு
முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப்
புகழ்வீராக! (அல்குர்ஆன் : 20:130)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும்
போற்றிப் புகழ்வீராக!
(அல்குர்ஆன்: 40 : 55 )
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும்,
அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும்,
மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ, அவர்களை
அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை
விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள்
அஞ்சுவார்கள். ( அல்குர்ஆன் : 24 : 36,37 )
''காலையிலும்,
மாலையிலும், '' சுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி '' என 100 தடவை ஒருவர்
கூறினால், இது போன்ற கூறியவர், அல்லது இதைவிட அதிகம் கூறியவர் தவிர, மறுமை நாளில்
எவரும் இவர் கொண்டு வந்ததை விட மிகச் சிறந்ததை கொண்டு வரமாட்டார் என்று நபி (ஸல்)
கூறினார்கள்.
பொருள்:
அல்லாஹ்வை
போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1451)
''நபி(ஸல்)
அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இரவில் தேள் ஒன்று என்னைக் கொட்டி
விட்டது'' என்று கூறினார். ''அறிந்து கொள்! மாலை நேரம் வந்ததும், ''அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அது உமக்கு இடையூறு தராது'' என்று நபி(ஸல்)
கூறினார்கள்.
பொருள்:
அல்லாஹ்வின்
படைப்புகளின் தீமைகளை விட்டும் முழுமையான அவனது சொற்களால் பாதுகாப்புத்
தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1452 )
காலையிலும், மாலையிலும் ''குல்ஹுவல்லாஹுஅஹது'' அத்தியாயம், மற்றும் (குல்அஊது
பிரப்பில் ஃபலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்ற)
இரண்டு முஅவ்விதய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப்
பொருட்களின் தீமையை விட்டும் (உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்'' என்று
என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு
குபைப் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1456 )
பிரார்த்தனையின்
சிறப்பு:
அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை அழையுங்கள்!
உங்களுக்குப் பதிலளிக்கிறேன், எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில்
இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன்: 40:60)
உங்கள் இறைவனைப்
பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க
மாட்டான். (அல்குர்ஆன்:7:55)
''பிரார்த்தனையும் வணக்கமாகும்''
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: நுஹ்மான்
இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (அபூதாவூது,திர்மிதீ)
(
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1465 )
‘’அல்லாஹும்ம ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன், வஃபில் ஆகிரதி ஹஸனதன்,
வகினா அதாபன்னார்’’ என்பது நபி(ஸல்)
அவர்களின் பிரார்த்தனையில் மிக அதிகமாக இருந்தது.
பொருள்:
இறைவா! இவ்வுலகில் அழகிய வாழ்க்கையை அருள்வாயாக! மறுமையிலும் அழகிய
வாழ்க்கையை அருள்வாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1467 )
''நபி(ஸல்) அவர்கள் ''அல்லாஹும்ம
இன்னீ அஸ்அலுகல் ஹுதா வத்துகா, அல்அஃபாஃப, வல்ஃகினா '' என்று
கூறுவார்கள்.
பொருள் : இறைவா!
நேர்வழியை, இறையச்சத்தை, பேணுதலை, பிறரிடம் தேவையாகாத நிலையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1468 )
''ஒரு மனிதர் முஸ்லிமாகிவிட்டால், அவருக்கு தொழுகையை நபி(ஸல்) கற்றுக்
கொடுப்பார்கள். பின்பு அவரிடம் ''அல்லாஹும்மஃஹ்பிர்லீ,
வர்ஹம்னீ, வஹ்தினீ, வஆஃபினீ, வர்சுக்னீ ''
என்று பிரார்த்திக்க கட்டளையிடுவார்கள்.
பொருள்:
இறைவா! என்னை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி
காட்டுவாயாக! எனக்கு சுகமளிப்பாயாக! எனக்கு உணவளிப்பாயாக! (அறிவிப்பவர்: தாரிக் இப்னு அஷ்யம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1469 )
''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக, மினல் அஜ்ஸி வல்கஸலி, வல்ஜுபுனி
வல்ஹரமி, வல்புஃக்லி, வஅஊது பிக மின் அதாபில் கப்ரி, வஅஊது பிக மின் ஃபித்னதில்
மஹ்யா வல் மமாதி '' என்று நபி (ஸல்)
கூறுவார்கள்.
பொருள்:
இறைவா! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், முதுமை, கஞ்சத்தனம்
ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன். மேலும் மரண (கப்ரு) வேதனையை விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் வாழ்வில் மற்றும் மரணத்தின் குழப்பத்தை
விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1474 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
5 Responses So Far:
நோன்பானாலும் அருந்த அனுமதி உள்ள ஒரு மருந்து உண்டென்றால் அது இதுதான். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.
குத்பா, வெள்ளிக்கிழமைகளின் சிறப்பு,
அருமருந்து, அதிரை நிருபரின் சிறப்பு.
நன்றி அலாவுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஜஸாக்கலலஹ் ஹைரன் காக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை நிருபரிலே
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்துதரும்
அற்புத விளக்கே
ஜஸாக்கலலஹ் ஹைரன்
Post a Comment