Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாருக்குள்ளே நல்ல நாடு 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2014 | , ,

அவர்களைச் சிறையில் 
சந்தித்தேன்.

“என்ன குற்றம் செய்தீர்கள்” 
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச் 
சொன்னார்கள்..

எங்கள் வீட்டில் 
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக் 
கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் 
பட்டதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை 
தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த 
ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் 
வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு 
எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று 
பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை 
அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் 
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது 
திருடர்களும்” படச் 
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற 
உறுப்பினர்களை 
அவதூறு செய்ததாக 
அழைத்துக் கொண்டு 
வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை 
அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை 
அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் 
போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை 
நாடு கடத்த வேண்டும்” 
என்று எழுதினேன், 
“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் 
உண்மையை எழுதினேன். 
நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் 
குலைத்ததாகக் கொண்டு 
வந்து விட்டார்கள்”

“சுதந்திர தின விழாவில் 
‘ஜன கண மன’ பாடிக்கொண்டிருந்தார்கள். 
நான் பசியால் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தேன். 
எழுந்து நிற்க முடியவில்லை. 
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் 
அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து 
ஆயுதம் ஏந்தச் 
சொன்னான் கண்ணன்” 
என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். 
“பயங்கரவாதி” என்று 
என்னைப் பிடித்துக் கொண்டு 
வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை 
எதுவும் இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது..

பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பிலிருந்து
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி

8 Responses So Far:

sabeer.abushahruk said...

கவிக்கோவின் "பித்தன்" என்ற தொடர்க் கவிதைகளை ஜூ வியில் ஆர்வமாக வாசித்த நினைவுகளை உசுப்பி விட்டது இந்த கவிதை!

புதுக்கவிதைகளின் முன்னோடி. வைரமுத்து முமேத்தா போன்றொருக்கெல்லாம் கவிக்கோதான் புதுக்கவிதை வடிவத்தை அறிமுகம் செய்தவர்.

சந்தக்கட்டுக்குள் வார்த்தைகளத் திணிக்கும் முயற்சியில் கவியுலகம் சொந்தக் கருத்துகளைத் தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறிய சமயம் இவர் "காதுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லை; கருவும் கருத்தும்தான் முக்கியம்; இசை வடிவில் உள்ளத்தை வருடுவதைவிட விசை என உள்ளத்தை முடுக்குவதே கவிதை" என்று பரை சாற்றியவர் கவிக்கோ!

கவிதையும் கவிஞரும் நல்ல பரிந்துரை காக்கா!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு நினைவைப் பகிர விரும்புகிறேன்- குறிப்பாக உங்களுடன்.

எழுத்தாளர் சுஜாதா கொஞ்ச காலம் குமுதம் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார். அப்போது ஆசிரியருக்கான கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்டிருந்தார்.

சுஜாதா அவர்களே! தமிழ்நாட்டின் புதுக்கவிதை படைக்கும் வட்டாரத்தில் பத்தில் முதல் ஏழு இடங்களை முஸ்லிம்களாகவே ஆக்கிரமித்து இருக்கிறார்களே காரணம் என்ன என்று கேட்டிருந்தார். தனது கேள்விக்கு ஆதாரமாக கவிக்கோ, மு மேத்தா, இன்குலாப், தி மு அ. காதர், அபூ பஹத், நாஞ்சில் ஆரிது போன்ற ஏழு பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

சுஜாதா பதில் சொன்னார் இப்படி :

" ஆட்டுக் கறிக்கும் தமிழ்க் கவிதைக்கும் எதுவும் தொடர்பு இருக்குமோ என்னவோ. "
.

ZAKIR HUSSAIN said...

ஊரில் நெரிசலான இடத்தில் நடக்கும்போது லேசான பழம் அழுகிய வாசனை வரும் [ எல்லாம் குடிமகன் களின் விசிட் தான் ] ....அதனால் தான் என்னவோ

நான் இந்த தலைப்பை ' பாரு [BAR] க்குள்ளே நல்ல நாடு ] என்று வாசித்தேன்.

ஊரில் நெரிசலான இடத்தில் நடக்கும்போது லேசான பழம் அழுகிய வாசனை வரும் [ எல்லாம் குடிமகன் களின் விசிட் தான் ] ....அதனால் தான் என்னவோ நான் இந்த தலைப்பை ' பாரு [ க்குள்ளே நல்ல நாடு ] என்று வாசித்தேன்.

கவிக்கோவின் எழுத்துக்கள் 80 களின் தொடக்கத்தில் ஜூனியர் விகடனின் சர்குலேசனை உயர்த்தியது.

sabeer.abushahruk said...

//ஆட்டுக் கறிக்கும் தமிழ்க் கவிதைக்கும் எதுவும் தொடர்பு இருக்குமோ என்னவோ. //

மாட்டு மூத்திரத்திற்கு இருந்த நாட்டை ஆளும் தந்திரத்தைப் போல?

Unknown said...

'அதிரைப் பாமரன்' அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்.
'Mr. Khantestant' அவர்களின் whereabouts பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவர் என் நண்பர். எப்படியோ ஒரு நாள் 'அதிரை நிருபர்' வலைத்தளத்தின் மீது தடுக்கி விழுந்து, அதில் வெளியாகியிருந்த கட்டுரை பற்றி plus and minus விமரிசனம் செய்தார். ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் எங்களிருவரின் கைபேசிச் சொல்லாடல் நீடித்தது. அப்போது, நானே சொன்னேன்: "நீங்கள் நேரடியாக அதிரை நிருபரில் உங்கள் கருத்துகளைப் பதியலாமே."

அன்றிலிருந்து தொடங்கியது, அவருடைய சேட்டை! தயக்கத்தோடு நுழைந்தார். தைரியத்தோடு இன்று தன் கருத்துகளைப் பதிந்து வருகின்றார். படிப்பவர்களுக்குச் சற்று அலுப்பாகத் தோன்றலாம். அவர் ஓர் அறிவுஜீவி என்பதால் தளத்தினுள் நுழையச் செய்தேன். மறுப்பு / உடன்பாடு என்பவை அவரவர் அறிவின் அளவைப் பொறுத்தது.

To tell you the truth, அவரோடு கருத்தாடல் செய்யும்போது, அவர் எடுத்துவைக்கும் சில கருத்துகள் எனக்குத் தலைச் சுற்றலைத் தோற்றுவிக்கும். ஆனால், பொறுமையோடு கேட்பேன். அதனால் என்னை அவருக்குப் பிடிக்கும். சும்மா கொஞ்சம் try பண்ணிப் பாருங்களேன். அப்போது தெரியும், அவருடைய vast knowledge. அறிவு ஜீவிகள், அறிவு ஜீவிகளோடு ஒத்துப் போக வேண்டும், பொறுமையாக.

நண்பர் தவ்லத் கான் திருநெல்வேலி மாவட்டத்து ஏர்வாடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். ‘அந்தப் பக்கம்’ கொஞ்சம் சாய்ந்தவர்.

unitymedianews@gmail.com என்ற வலைத்தளச் சொந்தக்காரர். அதில் நுழைந்து பாருங்களேன். அறிமுகத்துக்கு இவ்வளவு போதும் என நினைக்கிறேன்.

அன்புடன்,- அதிரை அஹ்மத் adiraiahmad@gmail.com

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

இப்ராஹீம் அன்சாரி காக்கா

நீங்கள் சரியான் நேரம் பார்த்துதான்
கவிக்கோ அப்துல் ரஹ்மானின் பாருக்குள்ளே நல்ல நாடு கவிதையை தந்திருக்கின்றீர்கள்

ஜாஹிர் சொவது போன்று ' பாரு [BAR] க்குள்ளே நல்ல நாடாக இப்பொழுது விளங்கிவருவதால்
கவிதையில் உள்ள வரிகள் அணைத்தும் முன்னாடி கவிதையாக இருந்தது இப்பொழுது உண்மையாக இப்படித்தானே நடக்கின்றது
அதனால் ஜாஹிர் படித்தது சரிதான் ஆனால் சின்ன திருத்தம்
' பாரு [BAR] க்குள்ளே நல்ல நாடு ] தான் ஆனால் [BAR] க்குள் இருப்பவர்கள் மப்பில் இருப்பதால் அவர்களை நல்லவர்களாக எதிர்பார்க்க முடியாது நாடு வேண்டுமானால் நல்ல நாடாக இருக்கலாம்

Unknown said...

அன்புள்ள பெரியவர் மூத்த அறிஞர் அஹமது காக்கா அவர்களுக்கு அலைக்குமுஸ்ஸலாம். கான் அவர்கள் பற்றி அறிமுகம் தந்தது மிக்க சந்தோசம். இஸ்லாமிய நெறிகளின்படி முதலீட்டு ஆலோசனைகளை அவர் வழங்கலாம். வீணாக கவிஞரகளைப் பற்றி எல்லாம் விவதிப்பது அவ்வளவு சரியில்ல. உபயோகப்படுமஅப்டி கருத்துக்களை கூறினால் நல்லது. நீங்களே இஸ்லாமிய கவிதைகளைப்பற்றி எழுத்நீர்கள். அவர் மீது நான் பார்க்கும் குறை பேசும் சப்ஜெக்டை விட்டுவிட்டு ஷியா சன்னி தேவபநதி ரேபரேலி என்றெல்லாம் எழுதுவது குட்டையை குழப்புவதாகத் தெரிகிறது. அவைகளிப்றி உள்ள குறைகளை தனியாக எழுதட்டும் நாமும் தெரிந்துகொல்வெஒம். மற்றபடி அவர் ஒரு முதலீட்டு ஆலோசகாராக நல்ல விச்யன்கள் சொன்னால் வரவேற்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு