Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2014 | , , , , ,

குறுந்தொடர் - பகுதி : ஒன்று

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் கண்டு எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறித் திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இருபுறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

இஸ்ரேல் என்றால் என்ன? இஸ்ரேலியர் என்றால் யார்? பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? இஸ்ரேலியர்கள் என்பவர்களின் இதயம் இருக்கும் இடத்தில் கருங்கல் துண்டு ஒன்று இருக்கக் காரணம் என்ன? காஸா என்கிற கைதி கண்ணாயிரத்தின் என்ன? எங்கே? எப்போ? என்கிற கதையின் காரணங்கள் யாவை? அலசுவோம் ஒரு குறுந்தொடராக. 

பாலஸ்தீனம் என்பது உலகப்படத்தில் மத்திய தரைக் கடலின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய லக்ஸ் சோப் அளவு இருக்கும் ஒரு கீரைப்பாத்தி நாடுதான். ஆனால் இந்த நாடுதான் உலகில் தோன்றிய பல மதங்களுக்கும் நபி மார்களுக்கும் தாய்வீடாகத் திகழ்கிறது. இஸ்லாம் கூறுகிற நான்கு வேதங்களான சபூர், தவ்ராத், இன்ஜீல் மற்றும் குர்ஆன் ஆகிய இறைவனின் வேதங்கள் என்று நம்பப்படுகிற வேதங்களில் திருக் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதங்களும் இறங்கியதும் இந்த வேதங்களில் கூறப்படும் வரலாற்று நிகழ்வுகளும் அந்த வேதங்களின் நாயகர்களும் வாழ்ந்த – ஆண்ட- போதித்த – குறிப்பிட்ட இடங்களை எல்லாம் கொண்டிருப்பது இந்த நாடுதான். 

பைபிளை எடுத்துப் பார்த்தால் இந்த பிரதேசத்தை அது கானான் நாடு என்று குறிப்பிடுகிறது. இதைதான் அந்த நாளில் இஸ்ரேல் என்றும் அழைத்தார்கள். கிருத்தவ வேதங்களில் தேவன் என்று நம்பப்படுகிற கர்த்தர் கூறுவதாக இப்படி ஒரு வாக்கு வருகிறது. இஸ்ரேலியர்களுக்காகவே படைக்கப்பட்டு அவர்களை வாழ்வதற்காக இறைவன் அவர்களை அனுப்பிவைத்த இடம் இந்த கானான் தேசம் அல்லது இஸ்ரேல். இதுவே பாலஸ்தீனம் என்றும் அழைக்கப்பட்டது. ஆகவே வேதங்களில் இஸ்ரேல் என்றாலும் பாலஸ்தீனம் என்றாலும் ஒன்றுதான். அதனால்தான் இந்த அடிபிடி.

கடவுள் இடமிருந்து வந்த வார்த்தையாக பைபிள் இஸ்ரேலியர்களை நோக்கி இப்படிக் கூறுகிறது. இதைத்தான் உலக நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த வசனங்கள் இந்தப் பிரச்னையின் அடிப்படை என்பதை நாமெல்லோரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

Palestine, or Canaan, or Israel, was described by God in Deuteronomy 8:7-9.

"For the Lord your God is bringing you into a good land, a land of brooks of water, of fountains and springs, flowing forth in valleys and hills, a land of wheat and barley, of vines and fig trees and pomengranates, a land of olive oil and honey; a land where you shall eat food without scarcity, in which you shall not lack anything; a land whose stones are iron, and out of whose hills you can dig copper."

மேற்கண்ட வரிகளில் வர்ணிக்கப்படுகிற பல வளங்கள் நிறைந்த அழகிய நீர்வளம் நிலவளம் மிக்க இடம் நிறைந்த வாழ்வாதாரங்களுடன் இஸ்ரேலியர்களுக்காகப் படைக்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்கபட்டு அவர்கள் வாழ்வதற்காக அளிக்கப்பட்டது என்பது வேத காலத்து அல்லது புராண காலத்து நிலை. இதைத்தான் இஸ்ரேலியர்கள் தங்களுக்கு தங்களின் கடவுளால் வாக்களிக்கப்பட்ட இடம் “Promised Land” என்று பாலஸ்தீனத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். 

சரித்திர காலத்துக்கு வந்தால், கி பி 636 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், இஸ்லாமியப் பேரசின் எழுச்சியின் காரணமாக கிபி 661 ஆண்டு சிரியா வெற்றி கொள்ளப்பட்டது. சிரியா இஸ்ரேலோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனமும் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அலி (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பின்பு 691 ஆம் ஆண்டு இன்றைய பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலத்தில் வைத்துத்தான் உமய்யாக்காளின் தலைவரான முஆவியாவுடைய (ரலி) பதவியேற்பு வைபவமும் நடந்தேறியது. உமய்யாக்களுக்குப் பிறகு 750ல் வந்த அப்பாஸிகளின் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து 878ல் எகிப்திய மன்னர்களாலும் ஆளப்பட்டு அன்றைய யூதர்கள் ஓரங்கட்டப்பட்டு இஸ்லாம் அங்கு ஆட்சி செலுத்தியது. ஆகவே யூதர்கள் கரங்களில் இருந்த பாலஸ்தீனம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது என்பது சரித்திர சம்பவம். 

என்றைக்குமே தன்னிகரற்ற ஜெருசலம் தலைநகராகத் திகழ்ந்தது. City of Dawood என்று அழைக்கப்படுகிற ஜெருசலம் உலகின் புராதான நகரங்களில் ஒன்றாக கருதப் படுகிறது. நபி தாவூத் (அலை) அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு அவர்களது மகன் நபி சுலைமான் (அலை) அவர்களால் அலங்கரிக்கப்பட்ட நகராகத் திகழ்ந்தது ஜெருசலம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. யூத, கிருத்தவ, இஸ்லாம் ஆகிய மதங்களான ஆப்ரகாமிய மதங்கள் என்று உலக வரலாறு குறிப்பிடும் மதங்களின் தாயகமாக ஜெருசலம் விளங்கியது. “ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும் ஆரம்பக் கிப்லா அதுதான்” என்ற கூற்றுடன் பைத்துல் முக்கத்தஸ் இங்குதான் இருக்கிறது. உலக முஸ்லிம்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தொழும் முன்பு பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசை நோக்கித்தான் தொழுது வந்தார்கள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூமியும் நகரமும் இதுதான். பெருமானார் முகமது (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்களின் இறக்கையில் வந்து இறங்கிய இடம் என்று நாம் நம்புகிற நகரும் ஜெருசலம்தான். பல நபிமார்களின் அடக்கஸ்தலங்கள் அமைந்து இருப்பதும் ஜெருசலத்தில்தான். இதன் இருப்பிடமும் பாலஸ்தீனத்தை சேர்ந்ததுதான்.

பெத்லஹெம் என்பது நபி ஈசா (அலை) அவர்களின் பிறப்பிடம். இதுவும் இருப்பது பாலஸ்தீனத்தில்தான். நபி ஈசா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கிருத்துவர்கள் நம்பிக் கண்டு இருக்கும் கல்வாரி மலை இருக்கும் இடமும் பாலஸ்தீனம்தான்.

கானான் தேசத்தார்- யூதர்கள்- கிருத்தவர்கள்- முஸ்லிம்கள் என்று பலரின் கரங்களில் அகப்பட்ட இந்த புனிதர்கள் வாழ்ந்த பூமி பின்னர் உலக வழக்கம் போல பிரிடிஷார் கைகளிலும் அகப்பட்டது. இதுதான் இன்றைய பிரச்னைகளின் ஆரம்ப அறிமுகப் படலம். 

இன்ஷா அல்லாஹ் இந்தக் குறுந் தொடரில் இன்று உலகமே இரக்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கிற பாலஸ்தீனியர்களின் கதையைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

இபுராஹீம் அன்சாரி

21 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அருமையானஉதிரவரலாற்றின்ஒருவிளக்கம்.இன்றையகுண்டுகளின் ஓசையும், பால் குடிமாறபச்சை குழந்தைகளின் பரிதாபஅலறலும் ரத்தத்தோடுகலந்த மனிதசதைகளின்சிதரல்களுக்கும் மூல காரணம்யார்? எது? எப்படி? என்பதை இனிவரும் தொடர் புலப்படுத்தும்' என்ற நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

குருதி ஆறாக ஓடினாலும் அவர்களின் உறுதிக்கு அருகில் எவனும் நெருங்க முடியாது... தொலைவிலிருந்தும், முதுகுக்கு பின்னால் இருந்தும் கொடூரத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை அல்லாஹ் நாசமாக்கட்டும்...

நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு.... இன்ஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

மிகவும் அவசியமான அத்தியவாசியமான பேசுபொருள் காக்கா.

வழக்கம்போல் முழுமையான தொடராக அமைய வாழ்த்துகள்

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இந்த முறை மட்டுமல்ல எப்போதுமே பாலஸ்தீன இஸ்ரேலிய மோதலில் குளிர் காய்ந்து பலனடையும் மிருங்கங்கள் குறித்து யாருமே வாய் திறப்பதில்லை என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

குறிப்பாக இப்போதைய பாலஸ்தீனர்களின் கொடும் நிலவரத்திற்கு பின் புலத்தில் இருந்து தூண்டிவிடுவோர் யார் என்பதை கவனித்தால் இஸ்லாத்தின் உண்மை எதிரிகள் சிலரை பற்றி தெரிய வரும்.

அவர்கள்தான் கடந்த 1400 ஆண்டுகளாக யூதர்களுடன் கைகோர்த்து இஸ்லாத்தை கருவறுத்து வந்துள்ள ஷியாக்கள்.

இந்த முறை 'சமாதி வணங்கும்', 'பில்லி சூனியம் நம்பும்' போலி ஆயதுல்லாக்கள், போலி ஹிஸ்புல்லாக்கள் ஆகியோரின் நடவடிக்கை இதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

முதலாவதாக சிரியாவின் முஸ்லீம்களை லட்சக்கணக்கில் - அப்பாவி பெண்கள் குழந்தைகள் என்று பாரமால் படுகொலை செய்த 'மூன்று கடவுள் வணக்கம் செய்யும்' ஆலவைத் ஷியா மற்றும் பஷர் அஷாதிர்க்கு உதவ ஓடோடி வந்தது யார் என்று பார்த்தால் சமாதி வணங்கி ஷியாகளின் ஈரானும், பின்னர் போலி ஹிஸ்புல்லாவும் என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறு படுகொலை செய்து தமது ஆதிக்கத்தை மத்திய கிழக்கிலும் அதன் மூலம் உலக முஸ்லீம்கள் மத்தியிலும் மேலும் உலகெங்கிலும் நிலை நிறுத்த துடித்த இந்த சமாதி வணங்கி ஷியா கொடும் பாவிகள் - அல்லாஹுவின் கோப பார்வையால் உலக மக்கள் யாவும் காணும் வண்ணம் 'ஈராக்கிலும், சிரியாவிலும்' கேவலாமாக தோற்றோடி அசிங்கப்பட்டு சந்தி சிரித்து நிற்கின்றனர் என்பதும் யாவரும் அறிந்ததே.

இந்த கடும் பின்னடைவு சமாதி வணங்கி, பில்லி சூனியம் நம்பும், ஷபே பராத் கொண்டாடும் இஸ்லாத்தின் கரும் பகைவர்களான ஷியா தெரு நாய் பயல்களை தோல்வி மற்றும் கேவலத்தின் எல்லைக்கே தள்ளிவிட்டு அவர்களது எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி இருப்பது - அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹுவின் கருணையால் நடந்த ஒரு விடயம் என்பது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த அசிகம் மற்றும் தோல்வியிலிருந்து மீள முடியாவிட்டாலும் உலக முஸ்லீம்களின் ஆதரவை பெற இறுதியாக எதையாவது செய்யவேண்டும் என்று துடிதுடிக்கும் நிலைக்க் சென்றனர் இந்த கேவலமான சமாதி வணங்கி ஷியா தெரு நாய் பயல்கள்.

இதன் பின்னர் தான் இந்த சமாதி வணங்கி ஷியாக்கள் வேண்டுமென்றே பாலஸ்தீன - இஸ்ரேலிய வன்முறைகளை தூண்டி விட்டு குளிர் காய்வதற்காக இந்த மோதல்களை தூண்டி விட்டதுமல்லாமல் - அது தொடர்வதற்கு ஏதுவாக பாலஸ்தீனத்தில் உள்ள தமது ஆதரவளர்களான ஹமாசுக்கு தீபாவளி ராகேட்டுக்களை ஒத்த 'கசாம்' வகை எறிகணைகளை வழங்கி வருவதும் தெளிவு.

இந்த எறிகணைகளில் எதுவும் சமாதி வணங்கி ஷியா போலி ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து வரவில்லை என்பது எதை காட்டுகிறது என்றால் பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள் யாவரும் 'சிரியாவில் உள்ள முஸ்லீம்களை' போல் கொல்லப்பட்டாலும் பராவாயில்லை - சமாதி வணங்கி ஷியாக்கள் சார்பாக உலக முஸ்லீம்களின் கவனம் திருப்ப படவேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் என்பதை ஒரு சர்வதேச அரசியல் பார்வையாளன் என்ற முறையிலும், வரலாற்றும் மாணவன் என்ற முறையிலும் என்னால் அறுதியிட்டு கூற இயலும்.

எனவே பாலஸ்தீனர்கள் இப்போது உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால் - சமாதி வணங்கி ஷியாக்களின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு அவர்களை சர்வதேச அரங்கில் தோலுரித்து விரட்டி விட்டு 'அமைதியான போராட்டங்களின்' மூலம் உலகின் கவனத்தை மற்றும் ஆதரவை தம் மீது திருப்பி - தமது உரிமைகளை வென்றெடுக்க முயல்வதுதான் சரி என்பது எனது கருத்து.

இது குறித்து விரிவாக ஆராய்ந்து சஹோதரர் இபுராஹிம் அன்சாரி தனது கருத்துக்களை துணிவாக எழுதி முஸ்லீம்கள் மத்தியில் சரியான, நேர்மையான கருத்து உருவாக்க உதவ வேண்டுகிறேன்.

மேலும் எனது மேற்க்கண்ட கருத்தில் தவறுகள் இருந்தால் - விமர்சனங்களையும் வரவேற்கிறேன்- நல்ல விமர்சனங்களில் மூலம் என்னை சரி செய்து கொள்வதில் தவறில்லை அல்லவே.

எனவே சமாதி வணங்கி ஷியாக்களின் சூழ்ச்சிகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதை உணர்த்த மேற்கண்டவை போதும் என்ற நிலையில் - முஸ்லீம்களின் பெயரை வைத்து கொண்டு இஸ்லாத்தின், முஸ்லீம்களின் கடும் வைரிகளாக திகழும் சமாதி வணங்கி, பில்லி சூனியம் நம்பும், ஷபே பரத் கொண்டாடும் ஷியா பயல்களின் சூழ்சிகளில் இருந்தும் யூதர்கள் போன்ற இஸ்லாத்தை வெளிப்படையாக எதிர்க்கும் கொடியோரின் சூழ்ச்சியிளிருந்தும் முஸ்லீம்களான என்னையும், உங்களையும், உலக முஸ்லீம்கள் யாவரையும் அல்லாஹ் பாதுகாக்கட்டும் என இறைஞ்சுகிறேன்.

யா முக்கல்லிபுல் கூலூப் சப்பித் கல்பிஹிம் அலா தீனிக்...

(மனங்களை புரட்டி போட வல்லவனே எனது மனத்தை உனது மார்கத்தில் நிலைத்திருக்கச்செய்வாயாக...)

Ebrahim Ansari said...

Bro. Khantestant said

//இது குறித்து விரிவாக ஆராய்ந்து சஹோதரர் இபுராஹிம் அன்சாரி தனது கருத்துக்களை துணிவாக எழுதி முஸ்லீம்கள் மத்தியில் சரியான, நேர்மையான கருத்து உருவாக்க உதவ வேண்டுகிறேன். //

நீண்ட விளக்கமான கருத்திட்டமைக்கு ஜசாக் அல்லாஹ் ஹைரன். தங்களை வரவேற்கிறோம்.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி சபீர் அவர்கள்

//மிகவும் அவசியமான அத்தியவாசியமான பேசுபொருள் காக்கா.//

அதனால்தானே ஆணையிட்டீர்கள் தம்பி !

adiraimansoor said...

சரியான நேரத்தில் சூழல் அறிந்து தறப்படும் பதிவுக்கு இதன் மூலம் சில தெளிவுகளை நாங்கள் பெறமுடியும்
ஜஸாக்கல்லாஹ் கைரன்

sabeer.abushahruk said...

சகோ Khan testant அவர்களின் கருத்து எனக்குப் பெருத்த அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

காரணம், இஸ்ரேல் எப்போதெல்லாம் பாலஸ்தீனின்மீது தச்க்குதல்களைத் தீவிரப்படுத்தி இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறதோ அப்போதெல்லாம் மீடியாக்களின் வாயிலாக நம் சகோதரர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் யாவாற்றிலும் யூதனை எதிர்த்தும் அவனுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை அமெரிக்கனை எதிர்த்தும்தான் கோஷங்கள் எழுதப்பட்டுள்ளன.

சகோ KhanTestant கூறும் ஷியாக்களின் சதியைப் பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை.

ப்ரதர், அவர்கள் அந்த அளவு பாரதூரமான சதியிலா ஈடுபடுகிறார்கள். வரலாற்றிலிருந்து சிறு குறிப்புகள் தந்து தங்கள் கருத்தை வலுப்படுத்தினால் தங்கள் கருத்துமீதான நம்பிக்கை கூடும்.

இப்படிக்கு,
வரலாற்று விஷயத்தில் பாமரன்

adiraimansoor said...

khan testant சொன்னது
///இதன் பின்னர் தான் இந்த சமாதி வணங்கி ஷியாக்கள் வேண்டுமென்றே பாலஸ்தீன - இஸ்ரேலிய வன்முறைகளை தூண்டி விட்டு குளிர் காய்வதற்காக இந்த மோதல்களை தூண்டி விட்டதுமல்லாமல் - அது தொடர்வதற்கு ஏதுவாக பாலஸ்தீனத்தில் உள்ள தமது ஆதரவளர்களான ஹமாசுக்கு தீபாவளி ராகேட்டுக்களை ஒத்த 'கசாம்' வகை எறிகணைகளை வழங்கி வருவதும் தெளிவு. ////

மேற்கன்ட வரிகள் என்னை கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது ஹமாசும் ஈராக்கில் பாதியையும் சிரியாவில் கைபற்றி இருக்கும் ஐ எஸ் ஐ குரூப் உண்மையான நம் சுன்னி முஸ்லீம் உண்மையானவர்கள் என்பதாக செய்தி பரப்பபடுகின்றது ஆனால்
ஐ எஸ் ஐ தவிற்து ஹம்மாஸ் ஷியாக்களின் கைகூளி என்பதாக தங்களின் பின்னூட்டத்தில் எழுதி இருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

Unknown said...

இது போன்ற கடும் அதிர்ச்சியை நான் கூறும் உண்மைகள் ஏற்படுத்தும் என்பதை அறிந்தே உள்ளேன்.

நான் நூலகத்தில் புத்தகங்களோடு செலவழித்த எனது இளமை கால நேரத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமானால் - அது நான் கூறும் உண்மைகளில் மட்டுமே இருக்க முடியும்.

இதன் காரணமாக தான் ஒரு 'முஸ்லீம்' குரான், ஹதீஸ் ஆகியவற்றை ஒரு வரலாற்று மாணவனின் ஆர்வத்தோடும் - உண்மைகளை அறியும் வேகத்தோடும் - அல்லாஹுவிர்க்காக மட்டும், மனிதகளின் காழ்ப்பு உவப்புக்களை துச்சமாக கருதி கல்வி பயில முயல் வேண்டும்.

பின்னர் அந்த கல்வியின் படி நிற்கவும் பயில வேண்டும் - அதாவது கற்ற உண்மைகளை அல்லாஹுவிர்க்காக துணிந்து செயலுக்கு கொண்டுவந்து மற்றவர்களையும் அறிவூட்ட வேண்டும்.

'நான் எனது மாணாக்கர்களுக்கு ஒரு அறையின் ஒரு மூலையை காண்பிப்பேன், மற்ற மூன்று மூலைகளை கண்டுபிடிப்பது எனது மாணவர்களின் பொறுப்பு' என்று தத்துவ ஞானி 'கன்பூசியஸ்' கூறியது போல நான் உங்களுக்கு அறையின் ஒரு மூலையை காட்டி விடுகிறேன்.

நான் வழங்கும் கீழ்கண்டவற்றை குறித்து இணையத்திலும், புத்தகத்திலும் தேடி படியுங்கள். மற்றவற்றை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.




1. Shia
2. Abdulla ibn Sabah
3. Imamate
4. Isma or Infalibility of Shia (Taqleed)
5. Twelver Shia
6. Dawoodi Bohra
7. Ismailis
8. Zaidis
9. Alawite Shia
10. Druze
11. Bahais
12. Ahmedhiya
13. Wahdathe wujood
14. Advaitham
15. Mahdi
16. Occultation
17. Deoband
18. Barelivi
19. Tableegh Jamaath
20. Jamathe Islami Hind
21. Moulana Moudoodi
22. Syed Kuthub
23. Islamic Brotherhood
24. Hasanul Banna


மேற்கண்டவை யாவும் ஷியாக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புள்ள இயக்கங்கள், தனி மனிதர்கள்தான்.

ஒரு முஸ்லீம் இஸ்லாத்தை தெளிவாக பின் பற்ற வேண்டுமானால் உண்மைகளை தேடி தேடி கண்டுபிடித்து படிக்க வேண்டும்.

மேலும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின் அறிஞரான பீ. ஜைனுலாபிதீன் அவர்களின் ஷியாக்களின் வரலாற்றை மிக அழகாக யூ ட்யுபில் வழங்கியுள்ளார். - படிப்பில் சோம்பல் உள்ளவர்களுக்காவே.

இஸ்லாமிய ஒற்றுமை என்று எவனாவது பேசினால் அவன் அநேகமாக 'ஷியாவாகவோ', 'ஷியாகளால்' மூல சலவை செய்யப்பட்டவனாகவோ இருப்பனே அன்றி முஸ்லீமாக இருக்க மாட்டான்.

ஏனெனில் முஸ்லீம்கள் 'அல்லாஹுவின் கயிற்றை' பற்றிபிடிப்பதில் உள்ள ஒற்றுமையை தவிர வேறு எந்த 'அரசியல் இஸ்லாமிய ஒற்றுமை', 'சமூக ஒற்றுமை' மற்றும் வேறு எந்த 'ஒற்றுமை' என்று சென்றாலும் 'உண்மைகள்' பற்றி அறியாது வழிதவறி செல்லும் - இஸ்லாம் கூறும் 'ஹுமா' என்ற 'வேலி தாண்டிய வெள்ளாடுகளாக' போவார்களே ஒழியே வேறில்லை.

adiraimansoor said...

/// 19. Tableegh Jamaath
20. Jamathe Islami Hind
21. Moulana Moudoodi ///

மேல்காணும் இயக்கங்களையும் ஷியாக்களுடன் தொடர்பு படுத்தி காட்டிருப்பது மேலும் மேலும் அதிர்ச்சியை தருகின்றது

அப்போ நமக்கு உன்மையான இஸ்லாத்தை எந்த இயக்கமும் போதிக்கவில்லையா?

ஈவன் பிஜே கூட தவ்ஹீது பற்றி போதிக்க வந்த நாட்கள் முதல் இன்று வரையும் அடிக்கடி ஒற்றுமை கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் என்று தாரக மந்திரத்தை கூறிக்கொண்டே ஒவ்வொரு க்ரூபாக கழற்றிவிட்டு தனித்தண்மையை போதிப்பதும் நீங்கள் கூறும் ஒற்றுமயில் சேறுமா

adiraimansoor said...

மெளலானா அபுல் அலா மவ்தூதி சொல்லும் கருத்தும் பிஜே சொல்லும் கருத்தும் ஏறக்குறைய ஒத்து இருக்கின்றதே அதைபற்றி தங்கள் கருத்து என்ன

adiraimansoor said...

19. Tableegh Jamaath
20. Jamathe Islami Hind
21. Moulana Moudoodi
மேற்கண்ட இயக்கங்கள்
சரியானவை என்று உலகம் முழுவதும்
பின்பற்றி வருகின்றனர் அப்படி இருக்கும்போது
பெரிய மிசைலாக தூக்கி போட்டிருப்பது
காஜா மக்களின் நிலமை போன்று உள்ளது என் மன நிலையும்

sheikdawoodmohamedfarook said...

இங்கேநடக்கும்விவாதங்களை படிக்கும்போது ஒரேகுழப்பமாக இருக்கிறது. இன்னொருமுறைநூலகம்-பள்ளிக்கூடம் போய்படிக்ககாலமில்லை. .இதைவிடஒருசாதாரணமனிதனுக்குசிறந்தவழிஒற்றுமையின்கையிற்றை கழுத்தில்மாற்றிதொங்கிவிடுவதே.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

// இங்கேநடக்கும்விவாதங்களை படிக்கும்போது ஒரேகுழப்பமாக இருக்கிறது. //

குழந்தைக்கு தேக்கரண்டியில் ஊட்டுவது போன்று உண்மைகளை ஊட்டும் போதும் ஏன் குழப்பம் வர வேண்டும்?

ஏன் குழப்பம் வருகிறதென்றால் - அல்லாஹுவையும், ரசூலையும் தவிர மற்ற மனிதர்களையும், அவர்களால் நிறுவப்பட்ட இயக்கங்கள் தத்துவங்களையும் தவறுகள் ஏதும் செய்யாத, செய்யவாய்பில்லாதவர்களாக நாம் எண்ணி கொள்வதால் வரும் வினை இது.

உதாரணாமாக தப்லீக் ஜமாஅத் இயக்கமா அவர்கள் 'சூபிகளின்' இயக்கமாயிற்றே - தவறுகள் செய்யவே வாய்ப்பில்லையே என்ற எண்ணம் தான்.

அட 'சூபி' என்ற எதையும் 'அல்லாஹுவும், ரசூலும்' சொல்லாத நிலையில் - 'சூபி' என்ற தத்துவமே 'ஷியாக்களின்' ஊடுருவலை காட்டவில்லையா என்று நமக்கு ஏன் தோன்றுவதில்லை?

இந்த மனித பலவீனத்தை வைத்து தான் 'ஷியாக்கள்' போலி ஆயதுல்லாக்களை, போலி அவுலியாக்களை, போலி சமாதிகளை உருவாக்கி வணக்கத்தலங்களாக மாற்ற முடிகிறது - மக்களை ஏமாற்ற முடிகிறது.

இதை தான் அல்லாஹுவையும் ரசூலையும் தவிர வேறு எவரையும் தக்லீது செய்வது தவறு என்று தௌஹீத்வாதிகள் அடியாய் அடித்து கூறுகிறார்கள்.

தப்லீக் ஜமாத்தின் சூபி தத்துவம் மற்றும் அவர்களது கொல்கின் மற்றும் செயல்பாட்டு ரீதியான கொடுந்தீங்குகளை அறிய விழைவோர் - அழகான தமிழில் விளக்கத்தை பெற கீழே உள்ள வலைத்தள முகவரியை (url) நகல் எடுத்து உங்களது உலவியில் (Browser) ஒட்டி தளத்திற்கு செல்லுங்கள்:

http://chittarkottai.com/sufiyism/index.htm

அடுத்ததாக ஜமாத்தே இஸ்லாமிக்கு வருவோம். கீழே உள்ள வலைத்தள முகவரியை (url) நகல் எடுத்து உங்களது உலவியில் (Browser) ஒட்டி தளத்திற்கு செல்லுங்கள். இந்த வலைப்பக்கம் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் குறித்ததாக இருந்தாலும் ஜமாத்தே இஸ்லாமியின் தோற்றம், வளார்ச்சி, இஹவனே முஸ்லிமீன் அல்லது எகிப்தில் மோர்சி தலைமையில் ஆட்சியை பிடித்து ராணுவ புரட்சியில் வீழ்த்தப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் ஆகியவற்றின் சிந்தனை ரீதியான தொடர்பை படம் பிடித்து காட்டியிருப்பதையும் கட்டுரையாளர் தனது தவறுகளையும் கறாராக ஒத்து கொள்வதையும் கொண்டு இதை சிபாரிசு செய்கிறேன்:

http://mujahidsrilanki.com/ஜமாஅதே-இஸ்லாமி-வரலாறு/

எனவே ஒவ்வொரு முஸ்லீமும் நேரடியாக அல் குரானையும், நபி வழியையும் படித்து தெளிவு பெறுவது அவசியமாகிறது.

நாளை மறுமையில் எந்த இயக்கமோ, எந்த இமாமோ வேறு எவருமோ முஸ்லீம்களாகிய நமக்கு 'சிபாரிசு' செய்யப்போவதில்லை.

அல்லாஹ் நாடினால் அனுமதி வழங்கினால் 'நமது தலைவர் முகம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே நமக்காக சிபாரிசு செய்யக்கூடியவர்' என்பதை உணர்ந்து 'அல்லாஹுவையும், ரசூலையும்' மட்டும் 'தக்லீது' செய்யக் கூடியவர்களாக நம்மை ஆக்கி கொண்டால் - அதற்காக முயன்று குரானையும், ஹதீசையும் முடிந்த வரை கற்று தேர்ந்தால் - தாயை விட 70 மடங்கு நம்மீது அன்பு செலுத்தும் 'அல்லாஹ்வாகிய' அவன் நாடினால் நம்மை மறுமையில் 'அரவணைத்து' நரகத்தை விட்டும் நம்மை காப்பான் என்ற நம்பிக்கையுடன் முயல்வோம் பி இத்நில்லாஹ். - இன்ஷா அல்லாஹ் இம்மை மறுமை வெற்றிகளை பெறுவோம்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//நாளைமறுமையில்எந்தஇயக்கமோஇமாமோவேறுஎவருமோநமக்காக சிபாரிசுசெய்யப்போவதில்லை//உண்மைMr.Khan testant. நன்றி! .அஸ்ஸலாமுஅலைக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு