Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போலித் தொப்பிகள் 53

அதிரைநிருபர் பதிப்பகம் | February 09, 2016 | ,

அது ஒரு இஸ்லாமிய மேடை.தமிழ் இலக்கியம்,  மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர்.மேடையில் இருந்த எல்லாரும் மற்ற மதங்களின் இதிகாசங்களைப் பற்றி விலா வரியாக அலசிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் பற்றி அல் குரானும், ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை, அல்லது தெரியவில்லை.மற்றபடி, அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில், இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர்.பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள், ஆனால் பிரசங்கமோ - இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாமல்.

அந்தக் கூட்டத்தில் இருந்த முபாரக் மட்டும் எரிச்சல் பட்டுக்  கொண்டிருந்தான்.என்னே அறிவீனம்?ஏன் இப்படி செய்கிறார்கள்.இதற்கு இஸ்லாமிய மேடைகள்தான் கிடைத்ததா?இதே போன்றுதான், சிலர் பிலாகுகளில் இதே போன்று, செய்து கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.எடுத்து சொன்னாலும் திருந்துவார் இல்லை. ம்ஹூம்.
இவைகள் எல்லாமே தவறான போக்கு கொண்டவைகள் என சுட்டிக் காட்டினால், கண்டு கொள்வது கூட இல்லை.மேடை பேச்சாளர்களும் சரி, பிளாக் எழுத்தாளர்களும் சரி, என்ன செய்வது.அவர்களுக்கு அவர்களுடைய மேடைகளும், இணைய பிலாகுகளும் தான் முக்கியமாகப் போய்விட்டது.

சரி, இந்த முறையும், மேடை ஏறி, அவருடைய பேச்சு தவறு என சொல்லிப் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.

வ அலைக்கும் சலாம் 

என்ன பாய், நல்லா இருக்கீங்களா?

அல்ஹம்துலில்லாஹ் , நான் நல்ல இருக்கேன் நீங்க?

இருக்கேன் பாய், அல்ஹம்துலில்லாஹ் 
ஒரு சந்தேகம் பாய், கேட்கலாமா?

என்ன சந்தேகம், தாராளமா கேளுங்கோ?

இப்போ நீங்க பேசினீங்களே, இதுக்கும் இஸ்லாத்துக்கும் எதுனா சம்பந்தம் உண்டா?அல்லாஹ்வைப் பத்தி மத்தவங்க உவமானம் சொல்லுவாங்க, அத நம்ம எப்படி சொல்ல முடியும்.

இப்படி பேசுவது மிகப் பெரும் பாவம் இல்லையா?அவங்க இப்படி சொல்வதுக்கும், இஸ்லாமிய கருத்துக்கும் சம்பந்தமில்லை, இஸ்லாமியக கருத்து என்பது குர் ஆனும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளும் மட்டுமே என்று சொல்லி மக்களுக்கு புரியவைப்பதை விட்டு விட்டு, அந்த இதிகாசங்களைப் பற்றியே பேசுகின்றீர்களே , இது சரியா?

அது வந்து, நாமெல்லாம், மதச் சார்பற்ற நாட்டில் இருக்கிறோம், மேலும் நம் தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தில் உள்ளதை சொன்னேன், அது தப்பா?(அது தப்பு என்றால், நான் படித்த இலக்கியம் பற்றி மற்றவர்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா?).

என்ன பாய், அப்படி என்றால், எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?இஸ்லாத்தை மட்டுமே அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் என்று உங்களுக்கு தெரியாதா?தமிழ் தான் பெரிது என்றால், அது அழிந்து போகக் கூடியது, இறைவனைப் பற்றி, இலக்கியங்கள் தப்பும் தவறுமாக போதிக்கின்றன.ஆனால் அல்லாஹ், நித்திய ஜீவன், என்றுமே அழியாதவன்.எனவே, அவனைப் பற்றி குரானும், ஹதீசும் எப்படி போதிகின்றனவோ , அப்படி அல்லவா பேசவேண்டும்.

தயவு செய்து, திருக் குரானின், 3:83 திரு வசங்களை புரட்டிப் பாருங்கள்.

இனியாவது , மேடையில் பேசினாலும், பிலாகுகளில் எழுதினாலும், அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்து விடாமல், பேசுங்கள், எழுதுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முபாரக் விறு விறுவென நடந்தான்.இன்ஷா அல்லா, இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில்.

இப்னு அப்துல் ரஜாக்

53 Responses So Far:

Ebrahim Ansari said...

சில குறிப்பிட்ட பதிவாளர்களை மட்டுமே குறிவைத்து உள்நோக்கத்தோடு எழுதப்பட்ட வெளிப்படையான பதிவு. பாராட்டலாம். விவாதிக்கலாம்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

இந்தப் பதிவின் பேசுபொருள் விதண்டாவாதமாகவே படுகிறது.

இஸ்லாமிய மேடை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

'இஸ்லாமிய மேடை'யை வரையறுத்தால் மேற்கொண்டு பேசலாம்.

(குறிப்பு: இணை வைப்போ இஸ்லாமிய மாற்றுச் சிந்தனையோ இல்லாதவரை எதை வேண்டுமானாலும் எடுத்துப் பேசலாம் என்பது என் நிலைபாடு)

இப்னு அப்துல் ரஜாக் said...

முபாரக் விறு விறுவென நடந்தான்.இன்ஷா அல்லா, இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில்

இப்னு அப்துல் ரஜாக் said...


என்ன பாய், அப்படி என்றால், எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?இஸ்லாத்தை மட்டுமே அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் என்று உங்களுக்கு தெரியாதா?தமிழ் தான் பெரிது என்றால், அது அழிந்து போகக் கூடியது, இறைவனைப் பற்றி, இலக்கியங்கள் தப்பும் தவறுமாக போதிக்கின்றன.ஆனால் அல்லாஹ், நித்திய ஜீவன், என்றுமே அழியாதவன்.எனவே, அவனைப் பற்றி குரானும், ஹதீசும் எப்படி போதிகின்றனவோ , அப்படி அல்லவா பேசவேண்டும்.

sabeer.abushahruk said...

தம்பி,

//அப்படி என்றால், எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?//

எப்படி என்றால்?

(தெளிவில்லாமல் பேசினால் விவாதத்திற்கு நான் வரவில்லை)

இப்னு அப்துல் ரஜாக் said...


இப்படி பேசுவது மிகப் பெரும் பாவம் இல்லையா?அவங்க இப்படி சொல்வதுக்கும், இஸ்லாமிய கருத்துக்கும் சம்பந்தமில்லை, இஸ்லாமியக கருத்து என்பது குர் ஆனும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளும் மட்டுமே என்று சொல்லி மக்களுக்கு புரியவைப்பதை விட்டு விட்டு, அந்த இதிகாசங்களைப் பற்றியே பேசுகின்றீர்களே , இது சரியா?

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
கூட்டத்தின் நோக்கம் மற்றும் பேச்சின் தலைப்பு என்ன? கூட்டப்பட்ட கூட்டம் தமிழ் இலக்கியம் பற்றி பேசும் நோக்கோடு கூடியிருந்தால், இஸ்லாமியர்கள் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசினால் ஒன்றும் குற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் இலக்கியம் பற்றிப் படிப்பது நம் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. கம்பராமாயனம், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், அக-புற நானூறு, அதைவிட இறைவாழ்த்தை மனனம் செய்ய நாமெல்லாம் பயிற்சி பெற்றவர்களே. தமிழ் இலக்கியம் தாண்டிய விஷயங்களையும் முஸ்லிம்கள் அறிந்தும், கேட்டும் பார்த்தும் அறிந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள்(வட்டிக் கணக்கு).

அஹ்மது அமீன் துபையிலிருந்து.

இப்னு அப்துல் ரஜாக் said...


இஸ்லாம் பற்றி அல் குரானும், ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை, அல்லது தெரியவில்லை.மற்றபடி, அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில், இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர்.பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள், ஆனால் பிரசங்கமோ - இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாமல்.

Ebrahim Ansari said...

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

முதலாவதாக இந்தப் பதிவின் தொடக்க வரிகள் தம்பி அமீன் கேட்டிருப்பதைப்போல் பதிவின் உள்ளடக்கத்துக்கு மாறுபட்டு தெளிவில்லாமல் . தடுமாறுகின்றன. அவற்றை விளக்கவேண்டிய தேவை பதிவாளருக்கு இருக்கிறது.

//அது ஒரு இஸ்லாமிய மேடை. தமிழ் இலக்கியம், மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர்.//

இஸ்லாமிய மேடையில் தமிழையோ அல்லது வேறு எந்த மொழியையோ பேசக்கூடாது என்று குர் ஆன் ஹதீஸ்களில் சொல்லப்பட்டு இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எந்த மொழியில் எடுத்துச் சொல்வது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் மொழி தோன்றியது என்றால் அதையும் படைத்தவன் யார்? அனைத்தையும் படைத்த அல்லாஹ்தானே! அல்லாஹ் தமிழை மட்டுமா படைத்தான்? உலகில் பேசப்படும் மலைவாசிகளின் மொழியைக் கூட படைத்தவன் அல்லாஹ்தானே!

தனது தூதர்களை உலகின் அனைத்து சமுதாயங்களுக்கும் அல்லாஹ் அனுப்பினானா இல்லையா? அவர்கள் அந்தந்தப் பகுதியில் வழங்கப்பட்ட மொழிகளைப் பேசினார்களா இல்லையா?

இறுதி நபி ( ஸல்) அவர்கள் அரபுதேசத்தில் பிறந்ததால் அந்த மக்களுக்கு எளிதில் புரியும்வகையில் திருமறையை அரபி மொழியில் இறக்கி அருளினான் என்று சொல்லப்பட்டிருப்பது சரிதானா?

அந்தக் கருத்துக்களை உலகெங்கும் எடுத்துச் சென்ற அழைப்பாளர்கள், சஹாபாக்கள் அந்தந்தப் பகுதியின் மொழிகளை கற்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது சரிதானா? தங்களின் மொழியிலேயே விளக்கப்பட்ட நல்ல கருத்துக்களை மக்கள் இலகுவாகப் புரிந்து மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் சரிதானா?

தமிழ் மொழியில் இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்றவில்லையா? பல இலக்கியங்கள் இஸ்லாமிய கருத்துக்களை எதிரொலிக்கவில்லையா? ஏற்றுக்கொள்ளவில்லையா? அவற்றை எடுத்துக் காட்டிப் பேசுவதோ எழுதுவதோ தலையைக் கொய்யும் அளவுக்குக் குற்றமா?

உதாரணமாக ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்று தமிழில் சொல்லப்பட்டிருப்பது யாருடைய கொள்கை? இதை பெருமிதமாக பேசிக்காட்டுவதில் என்ன தவறு காண இயலும்?

“அதேபோல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று தமிழில் சொல்லப்பட்டிருப்பதை அறிந்தவர்கள் அது இஸ்லாத்தின் கருத்து என்று மேடைபோட்டு மார்தட்டி சொல்வதில் இருக்கும் தவறு என்ன?

அண்மையில் கூட அதிரையில் நல்ல தமிழ் எழுதுவோம் என்று அதிரையின் மூத்த அறிஞர் பெருமகன், அதிரையின் பெயரை தமிழகத்தில் இன்னும் பரப்பிய அஹமது காக்கா அவர்களின் நூல் வெளியிடப்பட்டதே! அதுவும் கூடதவறுதானா? அதையே நல்ல அரபி எழுதுவோம் என்று எழுதினால் எப்படி இருக்கும் என்று கேட்க முடியுமா?

Ebrahim Ansari said...

தமிழ்நாட்டில் வாழ்வோர்கள் தமிழ் இலக்கியங்களைப் புறக்கணித்துத் தேர்வு எழுதினால் பிளஸ் டூ பாஸ் ஆக இயலுமா? அப்படியானால் தைரியம் இருந்தால் வரக்கூடிய பிளஸ் டூ தேர்வுகளில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தமிழ்த் தேர்வின் இரண்டுதாள்களையும் வெற்றுத்தாள்களாக மடித்துக் கொடுத்துவிட்டு தேர்வு அறையைவிட்டு வெளியே வந்து விடும்படி சொல்லத் தயார்தானா என்ற என்ற சவாலை ஏற்கத் தயார்தானா?

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை அறியச் செய்ய வேண்டுமானால் அனைத்து இஸ்லாமியர்களும் அரபு மொழியில் மட்டும்தான் பேசவேண்டும் என்று ஏதாவது மார்க்க சட்டம் இருக்கிறதா?
மொழி எதுவானாலும் அது சொல்லும் கருத்தும் அதை ஏற்பதும் அமல் செய்வதும் முக்கியமா? அல்லது மொழிமட்டுமே முக்கியமா?

மற்றவர்களோடு ஒப்பிட்டு நாம் எவ்வாறு சிறந்தவர்கள் என்று காட்டுவதற்கும் மற்றவர்களும் நமது கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகிறார்கள் என்று காட்டுவதற்கும் அவைகளை உதாரணம் காட்டுவது - பதிவாளரின் பாஷையின் பிளாக்கில் எழுதுவது- தவறில்லை என்பது நமது உறுதியான கருத்து.

//தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில், இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர் // என்ற குற்றச்சாட்டுகளின் உண்மையை இறைவனே அறிந்தவன்.

//பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள், // லெபனான், ஜோர்டான், சிரியா போன்ற அராபிய தீபகற்ப நாடுகளில் வசிப்போர்கள் கூட அமீன், ஷரீப் , இஸ்மாயில், ஜெக்கரியா, இஷாக் போன்ற பெயர்கள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்ல. அவர்களில் கிருத்தவர்களும் உண்டு.

அதேபோல் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் உள்ளூர் மொழிகளைத் தழுவி பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஏக இறைவனை ஏற்கவில்லை என்று பொருளா? உதாரணமாக மலேசியாவின் முன்னாள் அதிபர் மகாதீர் முகமது என்ற பெயரில் உள்ள மகாதீர் என்ற பெயர் மலேசிய மொழியில் இருப்பதால் அவரை முஸ்லிம் இல்லை என்று சொல்லிவிட தைரியம் இருக்கிறதா?

இராமநாதபுரம் மாவட்டத்தில் அம்பலம், அரசன் போன்ற தமிழ் அடைமொழியைப் பெயருடன் இணைத்து செய்யது அஹமது அம்பலம், என்றெல்லாம் வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் அல்லவா?

ஆனால் அடிப்படையில் என்ன நினைக்கவேண்டி இருக்கிறதென்றால் தனக்குத் தெரியாத விஷயங்களை மற்றவர்கள் சிறப்பாக சொல்வதன் காரணமாகவோ அல்லது இவர்களெல்லாம் இப்படி எழுதுகிறார்களே என்ற அடிமன அரிப்பின் உச்சகட்டமாகவோ கூட இந்தப் பதிவின் கருத்து இருக்கலாம்.

ஊருக்கு வந்தால் போலித் தொப்பிகள் போடுவதும் - அமெரிக்காவில், ஐரோப்பியாவில் பீர் பார்களில் வேலை செய்து பொருளீட்டுவதும் , விசாகிடைக்கவேண்டிய காரணத்துக்காக அரசு நிறுவனங்களுக்கு பொய்த் தகவல் தருவதும் அதே காரணத்துக்காக தகப்பன் பெயரையே மாற்றித் தகவல் தருவதும் , சில நேரங்களில் மாற்றுமதப் பெயர்களில் கூட உலவுவதும், ஆடம்பரமான வீடுகளைக் கட்டுவதும், ஆடம்பரமான திருமணங்களைச் செய்வதும், உணவுப் பொருட்களை வீணாக்குவதும், நீர் நிலைகளில் வீட்டு சாக்கடை நீரைவிடுவதும் , வட்டி கொடுக்கும் நிறுவனங்களில் ஈட்டிய பணத்தை முதலீடு செய்வதும், வரதட்சணை கொடுப்பதும், மார்க்கம் காட்டிய வழியா?
சமூகக்கொடுமைகளான மார்க்கத்துக்கு களங்கமான இவைகளை எதிர்த்து நிற்பது முக்கியதத்துவம் வாய்ந்ததல்லவா? அப்படிப்பட்ட மார்க்க களங்கங்களை , விரோதங்களை கண்டும் காணமல் விட்டுவிடுபவர்கள் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பதியாதவர்கள் எழுத்திலும் பேச்சிலும் தாங்கள் வாழும் நாட்டின் இலக்கிய ஒப்பீடுகளை தாவா நோக்கத்துக்காக சுட்டிக் காட்டுவோர் மீது கண்ணை மூடிக் கொண்டு காய்வது முக்கியமா?

பொய்த் தொப்பி போட்டு தொழுவது அல்லாஹ்வுக்காக. அப்போ வைக்கோல் திருடுவது?

இப்னு அப்துல் ரஜாக் said...

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
(அல்குர்ஆன்: 24:51)

இப்னு அப்துல் ரஜாக் said...

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 24:64)

Ebrahim Ansari said...

இங்கு காட்டப்பட்டுள்ள

அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 24:64) போன்ற திருமறையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும் . பதிவாளருக்கு மட்டுமல்ல; பதில் தந்தவருக்கும்தான். அனைத்தையும் அறிந்தவன் அவனே. அவரவர் உள்ளங்களில் இருப்பதையும் அறிந்தவன் அவனே.

இந்தப் பதிவு யாரை யாரையெல்லாம் குறிவைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதைப் படிக்கும் அனைவருக்கும் தெரியும். பதிந்த நெறியாளருக்கும் தெரியும்.
பதிவர்கள் தங்களின் பதிவுகளை நேரடியாக முகநூளில் போடுவதுபோது போல் போஸ்ட் செய்வது இல்லை. நெறியாளருக்குத்தான் அனுப்புகிறோம். தமிழ் இலக்கியங்களில் வரும் செய்திகளை சுட்டிக் காட்டி இருந்தால் அவை ஹராம் என்று கருதினால் அவைகளை நீக்கிவிட்டுப் பதிய சகல உரிமையும் உண்டு. அதன்பிறகும் தொடர்ந்து எழுதுவது அல்லது எழுதாமல் இருப்பது என்ற முடிவு எடுக்க பதிவாளருக்கும் உரிமை உண்டு. ஏற்கனவே இப்படி நடந்து பல மாதங்கள் பதிவுகளை அனுப்பாதவர்களில் நானும் ஒருவன்.










இப்னு அப்துல் ரஜாக் said...

ஜனாப் இப்ராஹீம் அன்சாரி காக்கா.கட்டுரை உங்களை சுட்டாதபோது, நீங்கள் ஏன் பதட்டப்படுகிறீர்கள்.
இது மார்க்க மேடை என்றும் இணைய தளங்கள் என்ற போர்வையிலும் இருந்து கொண்டு , இதி காசங்களை தூக்கிப் பிடிப்பவர்களுக்கான பதிவு மட்டுமே.
Please be cool
Jazakkallah khair for the understanding

இப்னு அப்துல் ரஜாக் said...



ஆனால் அடிப்படையில் என்ன நினைக்கவேண்டி இருக்கிறதென்றால் தனக்குத் தெரியாத விஷயங்களை மற்றவர்கள் சிறப்பாக சொல்வதன் காரணமாகவோ அல்லது இவர்களெல்லாம் இப்படி எழுதுகிறார்களே என்ற அடிமன அரிப்பின் உச்சகட்டமாகவோ கூட இந்தப் பதிவின் கருத்து இருக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் , நியாயத் தீர்ப்பு நாளில் இது குறித்து அல்லாஹ் விடம் முறை இடுவேன்

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி!

//ஜனாப் இப்ராஹீம் அன்சாரி காக்கா.கட்டுரை உங்களை சுட்டாதபோது, நீங்கள் ஏன் பதட்டப்படுகிறீர்கள்.//

இதே கருத்துக்களை எனக்கு அறிவுரையாக நீங்கள் வாட்ஸ் அப்பில் எனக்குப் பேசி இருக்கிறீர்கள்.
மேலும் இந்தத் தளத்தில் யாரெல்லாம் அவைகளைக் குறிப்பிட்டு எழுதுகிறார்களோ அவர்களை சார்பாக நான் எழுதுகிறேன்.

இதிகாசங்களைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்ற பழியை சுமத்தப்படுபவர்களும் அல்லாஹ்விடத்தில் நியாயத் தீர்ப்பு நாளில் முறையிடுவார்கள். அல்லாஹ் அனைவருக்கும் பொதுவானவன்.

இந்தத்தளத்திலோ அல்லது வேறு பிளாக்கிலோ எழுதும் எவரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல்தான் எழுதுகிறார்கள். இரவு பகல் உழைத்து , மனத்திருப்திக்காகவும் இறைப் பொருத்தத்துக்காகவுமே பணியாற்றுகிறார்கள். இங்கு எழுதுபவர்களுக்கு ஒன்றும் மாதச் சம்பளம் கிடையாது. எண்ணங்களில் மறைந்து இருப்பவற்றையும் இதயங்களையும் இறைவனே அறிந்தவன். செய்யும் பணிகளுக்கு கூலியாக பழிச்சொல்லும் சாபமும் தான் கிடைக்குமென்றால்

போலித் தொப்பிகள் போன்ற வார்த்தைகளை காலில் போட்டு மிதிப்பேன் என்ற கடும்வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும் கைகளால் கசக்கி எறிவோம் என்று சொல்ல முடியும்.

அந்த வார்த்தைகள் வாபஸ் வாங்கப்பட வேண்டும். உண்மை போலி என்று தீர்மானிக்க நீங்கள் யார்? இது உங்களின் அதிகாரமா? ஆணவமா?

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.ஒவ்வொருவரின் எண்ணங்களையும்,செயலின் நோக்கங்களையும் அல்லாஹ் ஒன்றே அறிவான்! என் பொதுக்கருத்து.தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விடும் என்பார்கள் .இங்கே தலைப்பாகை போனாலும் தலைக்குமேல் பகை வந்து விடுமோ என அஞ்சுகிறேன்!தலைப்பாகை போய்விடும் கதையில் இங்கே தொப்பியினால் தலையல்ல கழுத்து நெறிக்கப்படும் கருத்து போய் கொண்டிருக்கு!ஆகவே நல்லசெயல் என்று (எழுதியவர்) நம்பினால் அதற்குரிய கூலி அல்லாஹ்விடம்!பிறருக்கு துன்பத்தை கொடுக்கும் சமுதாயத்தின் ஒற்றுமைகோ வருத்தத்திற்கோ உட்படும் எந்த ஆக்கமும் இனி தொடராமல் நிர்வாகிகள் கண்கானிப்பாக இருக்கவும்.இந்த ஆக்கத்தை நீக்கிவிடுவது சாலச்சிறந்தது என்று இப்ப எனக்குப்படுகிறது!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த யாரையும் குறிவைத்து எழுதவில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுடன் நான் முரண்படுகிறேன்.

ஒரு தலைப்பின் கீழ் வரும் தொடர்பதிவு என்பது பல ஆய்வுகளின்படி, பல்வேறு கருத்துக்களை ஒன்றிணைத்து இறுதியில் இஸ்லாமிய அடிப்படை மாறாமல் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த தளத்தில் உள்ள பதிவுகள் வருகிறது.

பதிவுகளில் உள்ள மார்க்க விரோத கருத்து என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்டினால், நிச்சயம் பதிவை எழுதுபவர்கள் திருத்திக்கொள்வார்கள். இதல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோணியில் இது ஹராம் இது ஹலால் பத்வாக்கள் கொடுப்பது மார்க்க அறிவின்மை என்று தான் எல்லோராலும் கருத நேரிடுகிறது.

குர்ஆண் ஹதீஸ் என்று சொல்லும் பலருக்கு, எந்த வசனம் எந்த எந்த கருத்தை சொல்லுகிறது என்று விளங்காமல் இஷ்டத்துக்கு குர்ஆன் வசனங்களை சுட்டிக்காட்டி, இஸ்லாமிய மார்க்கத்தை கேளிக்கூத்தாக்கும் மூன்றேழுத்து கொண்ட ஒரு வழிகேட்டு கூட்டம் போன்ற போக்கு மிகவும் ஆபத்தானது.

நான் அறிந்தவரை இந்த தளத்தில் வரும் பதிவுகளில் மார்க்க விரோத கருத்துக்கள் என்று எதையும் சரியான முறையில் சுட்டிக்காட்டினால், பதிவர்களும் நெறியாளரும் அவைகளை நீக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

crown said...

நான் அறிந்தவரை இந்த தளத்தில் வரும் பதிவுகளில் மார்க்க விரோத கருத்துக்கள் என்று எதையும் சரியான முறையில் சுட்டிக்காட்டினால், பதிவர்களும் நெறியாளரும் அவைகளை நீக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
-------------------------
ஆமாம்!

இப்னு அப்துல் ரஜாக் said...

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில்முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத்தெரிந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்தமார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும்ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடையமார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்குமுஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறேஉங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடையஇத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்றமனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைகடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான்உங்களுடைய பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்தபாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன் & தாஜுதீன்.
ஜசக்கல்லாஹ் ஹைரன். பதிவை நீக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். கருத்துக்கள் மாறுபடுவது ஜனநாயகம். ஜனநாயகம் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தலாமா என்பதுதான் தெரியவில்லை.

Ebrahim Ansari said...

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில்முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத்தெரிந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்தமார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும்ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடையமார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்குமுஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறேஉங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடையஇத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்றமனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைகடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான்உங்களுடைய பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்தபாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.

Ebrahim Ansari said...

//பதிவுகளில் உள்ள மார்க்க விரோத கருத்து என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்டினால், நிச்சயம் பதிவை எழுதுபவர்கள் திருத்திக்கொள்வார்கள். // இப்படிப் பலமுறைகள் நடந்துள்ளன. வருத்தம் தெரிவித்து அடக்கத்துடனும் தனது அறியாமையை ஒப்புக் கொண்டும் திருத்தி இருக்கிறோம். நானும் அவ்வாறு நடந்து கொண்டுள்ளேன். அவ்வாறே தவறு என்றாலும் அவர்களுக்கு போலித் தொப்பி என்று பட்டம் சூட்டுவது சரியா? தவறை சுட்டிக் காட்டுவது சரியான முறையா? மார்க்கம் படித்த மேதைகள் சொல்லட்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

லகும் தீனுக்கும் வலியதீன்

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த பதிவை நீக்க விரும்பினால் , நீக்கிக் கொள்ளலாம் .
ஆட்சேபணை இல்லை.
நெறியாளருக்கு உரிமை உண்டு.

மரியாதைக்குரிய அபூ இப்ராஹீம் காக்கா அவர்களை தர்ம சங்கடப்படுத்த விரும்ப வில்லை.

If it hurts anyone, (especially janab Ibrahim Ansari kaka)please forgive me.
And also aware that this is for cause of Allah.
Take extra care before write anything.
May Allah forgive me and you.
Aameen

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//லகும் தீனுக்கும் வலியதீன்//

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த குர் ஆன் வசனம் தவறாக பலரால் பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பாக தனி பதிவாக எழுதி விளக்க வேண்டும்.

காபிர்களின் ஈமான் பற்றி அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துரைத்த வசனங்களை கொண்ட ஸூரா ஸூரத்துல் காஃபிரூன்(காஃபிர்கள்) அத்தியாயம் 109: வசனங்கள் 1-6.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

109:1 قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏ 
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2 لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ‏ 
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ‌ ۚ‏ 
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ‏ 
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ‏ 
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6 لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ 
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers,

This particular post is not legible and it targets few individuals, and there is no direct reply to my queries above(just copy & paste from the post is not enough). Its looking unintelligent and unnecessary arguments are wasting all our time. Quranic verses have been quoted irrelevantly to cover or just showing threat to protect oneself.

May Allah grant us straight path.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

And I request not to remove this post.

இப்னு அப்துல் ரஜாக் said...

லகும் தீனுக்கும் வலியதீன்

Ebrahim Ansari said...

லகும் தீனுக்கும் வலியதீன்

//உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.//

What is the necessary to quote these verses. I strongly hope that we are all in one path- the path of Allah. I once again repeat இது அதிகாரமா? ஆணவமா?

இந்தப் பதிவை நீக்கவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்தப் பதிவை நீக்கவேண்டாமென்று நானும் கேட்டுக் கொள்கிறேன்.

sheikdawoodmohamedfarook said...

//நீவட்டிக்கு கொடுப்பவனிடம்நான்வட்டிக்கு கொடுக்கமாட்டேன்; நான்வட்டிக்கு கொடுப்பவனிடம் நீ வட்டிக்கு கொடுக்காதே.// இது மதராஸ் மண்ணடிஒப்பந்தம்.

sheikdawoodmohamedfarook said...

இப்ராஹிம்அன்ஸாரிமீதுவெறுப்பை தூண்டுவதேஇந்தப்பதிவின் நோக்கம்.இதன்பின் அணியில் சிலர்உண்டுயென யூகிக்கலாம். அவர்கள்எண்ணத்திற்குஎதிராகபுத்தக வெளிஈடுவெற்றிபெற்றது. ''மதச்சாயம் பூசிமறைக்கப்பட்டவரலாறு''நூல்பெற்றவெற்றியை மதச்சாயம்பூசிமறைக்கும் முயற்சிதான் இந்தப்பதிவின்நோக்கம். ஆயிரம் காகங்கள்கூடிகறைந்தாலும் குயிலின்கூவலை வெல்ல முடியாது.

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்கள் தவறான வாதங்களுக்கு மல்லுக் கட்டும் சகோதர்ர்களே!
இந்த கட்டுரை மற்றும் உங்கள் வாதங்களையும் , நகல் எடுத்து, ஒரு ஆலிமிடம் கொடுத்து,குர்ஆன் ,ஹதீஸ் படி, எது சரி எது தவறு என அவரிடம் கருத்து எழுதி வாங்கி, பதியலாமே.
என் பக்கம் தவறு உள்ளது என அந்த ஆலிம் தீர்ப்பு சொன்னால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் , இன்ஷா அல்லாஹ் .

உங்கள் கருத்து தவறென்றால், இனி அப்படி எழுதுவதை நிறுத்துவீர்களா?

crown said...

sheikdawoodmohamedfarook சொன்னது…

இப்ராஹிம்அன்ஸாரிமீதுவெறுப்பை தூண்டுவதேஇந்தப்பதிவின் நோக்கம்.இதன்பின் அணியில் சிலர்உண்டுயென யூகிக்கலாம். அவர்கள்எண்ணத்திற்குஎதிராகபுத்தக வெளிஈடுவெற்றிபெற்றது. ''மதச்சாயம் பூசிமறைக்கப்பட்டவரலாறு''நூல்பெற்றவெற்றியை மதச்சாயம்பூசிமறைக்கும் முயற்சிதான் இந்தப்பதிவின்நோக்கம். ஆயிரம் காகங்கள்கூடிகறைந்தாலும் குயிலின்கூவலை வெல்ல முடியாது.
------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.பாரூக்காக்கா நலமா? இந்த கட்டுரை எழுதியவரை நான் அறிந்தவகையில் சொல்கிறேன். இவர் யாரையும் குறிப்பிட்டு எழுதுபவர் அல்லர்!அப்படி எழுதினால் ஆம் எழுதினேன் என ஒப்புக்கொள்பவர்!மேலும் யார் குற்றம் செய்தாலும் தனக்கு தெரிந்த வகையியில் நேரடியாகவே சுட்டிக்காட்டுபவர்! அதிலும் இ.அ.காக்கா விடம் எந்த பகையும் இல்லை! இவர் யாரிடமும் கூட்டும் சேரவில்லை!இ.அ.காக்கா எல்லா அறிவும் பெற்ற மேதை அவர்கள் தான் இந்த தளத்தில் எல்லா வித எடுத்து காட்டுடன் கட்டுரை எழுதும் ஆய்வாளர் என்பதால் அவர்களை சாடுவதாக அமைந்தது தோற்றபிழை! அல்லாஹுக்கெ எல்லாப்புகழும்.
குறிப்பு:இ.அ.காக்கா! இது உங்களை பற்றி அல்ல என்பது திண்ணம்!அதனலேயே பொது ஆக்கமாய் எடிட்டர் பதிந்துள்ளார்.!

crown said...

ஆயிரம் காகங்கள்கூடிகறைந்தாலும் குயிலின்கூவலை வெல்ல முடியாது.
--------------------------------------------------------------
நம் காக்கா மார்கள் எல்லாம் ஞானக்குயில்தான் !சந்தேகமோ,பொறாமையோ இல்லை! சந்தோசமே!

Ebrahim Ansari said...

இந்த பிரச்னையை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்படி பணிவுடன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏதாவது உணர்ச்சிவசபப்ட்டு கருத்துப் பிழையுடன் கருத்து இட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்; யார் மனமும் புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.
இன்ஷா அல்லாஹ் இனி இத்தகைய வாய்ப்புக்கள் ஏற்படாது.

அல்லாஹ்வே அறிந்தவன்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

இந்த பிரச்னையை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்படி பணிவுடன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏதாவது உணர்ச்சிவசபப்ட்டு கருத்துப் பிழையுடன் கருத்து இட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்; யார் மனமும் புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.
இன்ஷா அல்லாஹ் இனி இத்தகைய வாய்ப்புக்கள் ஏற்படாது.

அல்லாஹ்வே அறிந்தவன்.
----------------------------------------
உங்களைப்போல் உள்ளவர் மனம் புண்பட்டிருந்தால் என்னைபோல் உள்ளவர்களுக்கும் அதன் தாக்கம் இருக்கும்.எல்லாருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக,ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கிரவ்ன் சொல்வது போன்று இந்த பதிவின் கட்டுரையாளர் அப்துல் லத்தீஃப் நேரிடயாக சொல்லக் கூடியவர், மாறாக இந்த பதிவில் யாரையும் சுட்டிச் சொல்லாததால் நாம் யாரும் ஒருவருக்கொருவர் சாடிக் கொள்வது நல்லதல்ல, அதேபோல் பேசுபொருளைப் பற்றியும் அதன் தாக்கத்தையும் விமர்சிக்கவும் பதிலுரைக்கவும் நம் அனைவருக்கும் முழு உரிமையுண்டு அதனை அனுமதித்தே ஆகனும் as long this post one live here !

இப்னு அப்துல் ரஜாக் said...

நான் ஏதாவது உணர்ச்சிவசபப்ட்டு கருத்துப் பிழையுடன் கருத்து இட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்; யார் மனமும் புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன். We are all Muslims,alhamthulillah.
இன்ஷா அல்லாஹ் இனி இத்தகைய வாய்ப்புக்கள் ஏற்படாது.

அல்லாஹ்வே அறிந்தவன்.

Ebrahim Ansari said...

Let us make 47 comments into 50. Hahaha.

//We are all Muslims,alhamthulillah.// அப்போ லக்கும் தீனுக்கும் என்று பிரிவினையாக போட்டது வாபஸ்தானே! Pls cnfm.

Unknown said...

Assalamu Alaikkum
Dear All,
I afraid and want to be cautious from the people who take Islam as a commodity or a child toy to play with. And some abuse and misuse Islam for their personal profits or group profits or political power gainig without concerning about the dignity and respect of fellow muslims.

May Allah save us from such evils.

Unknown said...

Practicing Islam is based on knowledge.
My knowledge level and my maturity level determine my spiritual level.
Every individual is in non stopping learning process towards higher maturity level.
Mistakes and corrections are inevitable in learning. But true learners should be humble by burying their egos.

At the end its all mercy of God Almighty on us to show us the straight path.

Jazakkumullahu khaira

B. Ahamed Ameen

sheikdawoodmohamedfarook said...

மருமகன் அஹமத் அமீனுடைய கருத்தே என் கருத்தும்.

Unknown said...

முதலில், இந்த 'எழுத்தோவியத்தை' தளத்தில் பதிவிட்டதற்காக, 'அதிரை நிருபர்' மீது கோர்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

மவனே! இனி எழுதுவதென்றால், ஆக்கபூர்வமான கட்டுரைகள் எழுதணும்! தெரிஞ்சதா? 'கவிதை ஹராம்' என்று சொல்லி, மாட்டிக்கொண்டது போல், இதிலும் மாட்டிக்கொண்டீர். போகட்டும். இனி, நல்ல புள்ளையா, நல்ல சிந்தனைகளை விதைக்கவும்! தெரிஞ்சுதா? 'புதிய முஃதஸிலாக்கள்'தான் ஆணவம் தலைக்கேறி வாந்தி எடுக்கிறார்கள்! அவர்களோடு நீங்களுமா?! அப்ப, இனி அமெரிக்காவை விட்டுப் பெட்டி கட்டவேண்டியதுதான்!

ஆ! அங்கேயும் தீனை அழகாகப் பிரச்சாரம் செய்பவர்கள் (உதாரணத்திற்கு, டாக்டர் யாசிர் காழி, மிர்சா யாவர் பேக், நுஉமான், ஷேக் இஸ்மாயில் மின்க் ..... போன்றோர்) இருக்கிறார்கள். அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருந்தால், இவ்வாறெல்லாம் எழுதியிருக்க மாட்டீர்கள்!

போகட்டும். இனியாவது, sarcastic statements with stubbornness பதிவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

சாச்சா ரெஸ்ட்டில் இருந்ததால், இருப்பதால், லேட்டாத்தான் உங்கள் சர்ச்சைப் பதிவு கண்ணில் பட்டது. அதனால்தால்தான், கடைசியாக நான்.

Ebrahim Ansari said...

அன்பின் அஹமது காக்கா,

தாவா என்கிற விதையை எனது நெஞ்சில் விதைத்தவர்கள் நீங்கள். அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஆசைக்கு நீரூர்ரியவர்கள் நீங்கள். நான் இதை பற்றி எழுதி தவழ்ந்து, தரையில் உதைத்து விளையாடுவதை ரசிப்பவர்கள் நீங்கள். தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரை இது கருத்துமட்டுமல்ல குழப்பத்துக்கான முடிவு. அதுவும் ஒரு அறிஞர் வழங்கிய தீர்ப்பு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.