Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

லுஹாத் தொழுகையின் சிறப்பு

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)

''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். கெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)

''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)

சூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.

''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

பள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்!மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே!

''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)

''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)

உளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது

''பிலாலே! இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை.  இதைவிட வேறு சிறந்த செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:1)

தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (அல்குர்ஆன்: 86:2)

அது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)

ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)

குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)

அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)

இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன்: 86:8)

அந்நாளில்  இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
(அல்குர்ஆன்: 86:9)

அவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 86:11)

பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:12)

இது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)

இது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)

நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)

எனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (அல்குர்ஆன்: 86:17)

(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

8 Responses So Far:

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கு
அலாவுதீன் பாய் (பிரதர்)

இஷ்ராக் உடைய நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் லுஹா தொழுகையை எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் கொஞ்சம் விளக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்
நிறைய பேருக்கு இந்த டைமிங் கன்பியூஷன் இருக்கு எனக்கும்தான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

உங்கள் ஒவ்வொரு உழைப்பிற்குண்டான தூய்மையான கூலியை தரக்கூடியவன் அல்லாஹ் மட்டுமே ! அவனிடமே கையேந்துகிறோம் இன்ஷா அல்லாஹ் !

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் அலாவுதீன் அவர்களின் வெள்ளி மருந்து ஒரு விருந்து அது மனதுக்கு சுவை கூட்டி அறிவைத் தூய்மையாக்குகிறது.

sabeer.abushahruk said...

நல்லுபதேசங்களை எடுத்தியம்பும் இந்த அருமருந்து வெள்லிக்கிழமைகளில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது!

நன்றி அலாவுதீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே!//

அவ்வண்ணமே நாமும் பின்பற்றுவோமாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

உங்கள் ஒவ்வொரு உழைப்பிற்குண்டான தூய்மையான கூலியை தரக்கூடியவன் அல்லாஹ் மட்டுமே ! அவனிடமே கையேந்துகிறோம் இன்ஷா அல்லாஹ் !

அலாவுதீன்.S. said...

adiraimansoor சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கு
அலாவுதீன் பாய் (பிரதர்)

இஷ்ராக் உடைய நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் லுஹா தொழுகையை எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரையும் தொழமுடியும் என்பதையும் கொஞ்சம் விளக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்
நிறைய பேருக்கு இந்த டைமிங் கன்பியூஷன் இருக்கு எனக்கும்தான்.
----------------------------------------
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
அன்புச் சகோதரர் மன்சூர்:
இன்ஷாஅல்லாஹ் விரைவில் இதுபற்றிய விளக்கத்தை தருகிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு