Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 4 9

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2016 | , , ,


போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;

அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு  Sorry சொல்லிவிடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.

ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். வருதப்படுவான்பா என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டிவரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?

ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS   “OK”  என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.

The Mask

முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.

அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.


ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?அது அவனுடைய  personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.

செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.

உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.

ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal  can be closed much easily.

Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல.  Sometime third party referral helps customer to make decision. 


The Empty Glass; [OR The Empty Bowl] 

இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்னஅறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.

தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.

Law Of Attraction & Law of  Vibration

உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”.  ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது  என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.

தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”

நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்


என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??

தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்க முடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய்கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும் ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.


இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…
ZAKIR HUSSAIN

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இப்போஇங்கேபணம்என்றால்பிணமும்ஸலாம்சொல்லும்

Ebrahim Ansari said...

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
- என்று கூறுவார்கள்.

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே - என்று புறனாநூற்றுப் பாடல் ஒன்றும் உண்டு.

ஆனால்

பெற்றெடுத்த தந்தையிடம் இருந்து கூட இப்படி ஒரு அறிவுரை அமுதம் கிடைத்து இருக்குமா என்று பலரை யோசிக்க வைக்கும் பதிவு.

sabeer.abushahruk said...

மிகவும் அவசியமான அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும்.

ஏற்றுக்கொண்டு பின்பற்றினால் ஏற்றம் நிச்சயம்.

ZAKIR HUSSAIN said...

//பெற்றெடுத்த தந்தையிடம் இருந்து கூட இப்படி ஒரு அறிவுரை அமுதம் கிடைத்து இருக்குமா என்று பலரை யோசிக்க வைக்கும் பதிவு. //

To Brother Ebrahim Ansari,

இதை எழுத நான் எடுத்துக்கொண்ட தகுதிகள்: [ in year 2013 ]

8 வருடம் தனியாரிடம் [ 4 + 4 வருடம் இரண்டு கம்பெனிகளில் ] 21 வருடம் பப்ளிக் லிஸ்டட் கம்பெனியில் சேவை.....கொஞ்சம் நிம்மதி / ஆரம்பத்தில் சில கஷ்டங்கள்...நிறைய மனிதர்களை படித்த மன உலவியல் விசயங்கள்....இப்படி நேரடி அனுபவங்களே அதிகம்.

இதை நான் எழுதும்போது சிலர் சொன்னது ' இந்தாளு ஏதோ புத்தகத்திலிருந்து எடுத்து எழுதுறான்பா" என்ற கமென்ட்.

நான் பதிலே சொல்லவில்லை....

பாய்மார்கள் இதுபோல் விசயங்களை [ Self efficiency & development ] எடுத்து எழுதமுடியும் என்ற நம்பிக்கை சில பாய்மார்களுக்கு அவ்வளவு எளிதாக வந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு வெள்ளைக்கார விளக்கெண்ணெய் படம் போட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு "நான் இதெல்லாம் படிக்கிரேனாக்கும்" என்று ஷோ காட்டுவதில் சிலருக்கு ஒரு ஆத்ம திருப்தி.

Shameed said...

//இதை நான் எழுதும்போது சிலர் சொன்னது ' இந்தாளு ஏதோ புத்தகத்திலிருந்து எடுத்து எழுதுறான்பா" என்ற கமென்ட்.//

பண்ணி பத்துகுட்டி போட்டது என்று (படம்போட்டு ) எழுதி இருந்தால் அந்த பாய்க்கு படாரென விளங்கி இருக்கும்
நீங்கள் 8 வருடம் தனியாரிடம் இரண்டு கம்பெனிகளில் 21 வருடமும பப்ளிக் லிஸ்டட் கம்பெனியில் சேவை செய்து நிறைய மனிதர்களை படித்து மன உலவியல் விசயங்கள் பற்றி எழுதவும் அந்த பாய்க்கு ஒன்னும் வெளங்கலே!! அதான் அப்படி சொல்லிபுட்டார்

Ebrahim Ansari said...

தம்பி !

நாமாக எழுதினால் ஆதாரம் கேட்பார்கள்.

ஆதாரத்தை சுட்டி எழுதினால் அதைப் பார்த்து எழுதுகிறான் என்பார்கள்.

படித்து விளங்கிக் கொண்டு நம் பாணியில் பிரசன்ட் பண்ணினால் இதுதான் அதில் இருக்கிறதே என்பார்கள்.

குறை சொல்பவர்கள் நெஞ்சில் கறை உண்டு. குறை சொல்லாமலே இருக்கவேண்டுமென்றால் கரை இருக்கவேண்டும்.

Ebrahim Ansari said...

தம்பி !

நாமாக எழுதினால் ஆதாரம் கேட்பார்கள்.

ஆதாரத்தை சுட்டி எழுதினால் அதைப் பார்த்து எழுதுகிறான் என்பார்கள்.

படித்து விளங்கிக் கொண்டு நம் பாணியில் பிரசன்ட் பண்ணினால் இதுதான் அதில் இருக்கிறதே என்பார்கள்.

குறை சொல்பவர்கள் நெஞ்சில் கறை உண்டு. குறை சொல்லாமலே இருக்கவேண்டுமென்றால் கரை இருக்கவேண்டும்.

sheikdawoodmohamedfarook said...

மீண்டும் ஒருமுறை படித்தபோது பல புதிய விசயங்களை தெரிந்துகொண்டேன்.எந்த விஷயம் பொருந்தினாலும் இந்தியாவுக்கு Appointment அலர்ஜி.

sheikdawoodmohamedfarook said...

'ஜாவியாவில் இன்று பிரியாணி நார்ஸா'என்றால்Appoinment சொன்னாசொன்னபடி நடக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு