பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)
வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!
படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?
படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?
உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்
வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!
தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!
ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை
பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!
ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.
ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.
எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?
இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!
புர்கா என்றொரு திரை எதற்கு?
தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!
பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?
தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!
அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!
ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?
பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?
மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!
ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!
பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!
கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
12 Responses So Far:
நண்பா,
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை சாறுபிழிந்து கவிதை எனும் ஆற்றில்
ஓடவிட்டு எங்களை மூழ்கடித்திருக்கின்றாய்.
பெண்களின் அழகை அவர்களின் அந்தரங்கத்தை ரசிப்பதுதான் பெண்ணுரிமை என்று கூக்குரலிடும் கூட்டத்திற்கு நெத்தியடி இக்கவவிதை.
பஜ்aரு தொழுகைக்கு புறப்படுமுன் உன் நண்பன்.
மகளிர்க்கு ஏற்ற அருமையான கருத்துப் பெட்டகம்.
இன்ஷா அல்லாஹ் நான் வகுப்பு எடுக்கிற பெண்கள் கல்லூரியில் தாவா வகுப்பில் இதை அவசியம் படித்துக் காட்டுவேன்..
மார்க்கம் பேணும் மகளிர்க்கோர் விழிப்புர்ணர்வு
//பெண்மைஎன்னும்தன்மையே //பெண்ணுக்குசிறப்பென்ற சீர்திருத்தம்செப்பினால் பெண்ணுரிமைபறிப்பதாய் பிதற்றுதல்நேர்மையா?// இப்பொழுதுஇதையும்காலம்தாண்டிவிட்டது. பொது இடங்களில்ஆணும் பெண்ணும்ஒன்றுகூடி முத்தவிழாகொண்டாடும்புதுநாகரீகத்திற்கு தொட்டில்கட்டிதாலாட்டுபாடஆரம்பித்துவிட்டார்கள். [குறிப்பு.28/11/2014 திஇந்து [தமிழ்] நாளிதழில்[இளமைபுதுமை]இன்னைப்புபகுதியில் முத்தம் பற்றியநீண்டமனோவியல்&வரலாற்று கட்டுரை ஒன்று வந்து இருக்கிறது! பொது இடங்களில் வாலிபனும் வாலிபியும் முத்தமிடுவது பற்றிஇதில்ஒன்றும்கூறவில்லை.இதைபடித்துவிட்டுபொதுஇடங்களில் வாலிபனும்வாலிபியும்முத்தமிடுவதுபற்றிஇஸ்லாமியபார்வைஎன்ன வென்றுஆலிம்களிடம்கேட்டறிந்துகவிதையோகட்டுரையோதீட்டுங்கள்.
//பொது இடங்களில் வாலிபனும் வாலிபியும் முத்தமிடுவது //
பகிரங்க விபச்சாரத்திற்கு கொல்லைப்புற அங்கீகாரம்.
கேள்வி பதில் வகைக்கவிதை நன்று வானத்திற்க்குரியோனே வணக்கத்திற்க்குறியோன்
அஸ்ஸலாமுஅலைக்கும்.வாழ்வியல் தத்துவத்தின் விளக்க உரை இந்த கவிதை!
படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?
-----------------------------------------------------------------
அழகான வார்தையில் கோர்த்த வினா!அது விடையாகவும் விரியும் விந்தை!
ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.
---------------------------------------------------------------------------------
நகரும் நாட்களில் செல்வத்தை ஈகை செய்தால் ம் முடிவு நாளில் செல்வோம் சுவர்கம்!அதனால் செல்வம் தேவைக்கு போக தானம் செய்வோம்!!!
ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!
-----------------------------------------------
இதுதான் இறுதியான உறுதி!
கவிதைமூலமும் ப(ய)யான் செய்ய முடியும் என்பதை கவிஞர் நிரூபித்துள்ளார் நன்மைக்கு வழி சொல்லி இறை அருளை அள்ளுகிறார்!
பெண்களுக்கு மட்டுமல்ல மூட நம்பிக்கையாளர்களுக்கும் அறிவுரையுடன் உணர்த்த வைக்கும் அருமையான வரிகள். எத்தனைதான் எடுத்துரைத்தாலும் அனைத்தும் அறிந்தவர்களே இறை நெறிக்குப் புறம்பான மார்க்கத்தில் சொல்லப் படாத வேலைகளைச் செய்கிறார்கள் இவர்களை எப்படித் திருத்துவது.? இவர்கள் எப்போது திருந்துவது.? நண்பா .!
Post a Comment