Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் 11

அதிரைநிருபர் | October 01, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நல்லா இருக்கியலா? எத்தனை வருசமாச்சு?

அஸ்ஸலாமு அலைக்கும், மாப்புளே எப்புடிடா இருக்கே? எத்தனை வருசமாச்சு?

அஸ்ஸலாமு அலைக்கும், என்ன தம்பி எப்படி இருக்கிய? எவ்வளவு வருசமாச்சு?

அஸ்ஸலாமு அலைக்கும் என்னை ஞாபகம் இருக்கா?

என்று இது போன்ற உணர்வுகளோடு உரசும் கேள்விகளும் அதற்கான பதில்களுமாக அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்து கலகலவென்று குவிந்த அதிரைச் சகோதரர்களின் வருகையோடு நேற்று 30.09.2011 துவங்கியது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொது குழு கூட்டம் துபையில்.

அல்ஹம்துல்லில்லாஹ் !. அல்லாஹு அக்பர்.

நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழுக்கூட்டம் அற்புதமான ஏற்பாட்டுடன் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அமீரகத்தில் வாழும் அனைத்து முஹல்லா மக்கள், குறிப்பாக குடும்பத்துடன் வசிக்கும் அதிரை நேசங்கள் தங்களின் மனைவி பிள்ளைகளுடம் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். கலந்துக்கொண்ட அனைத்து மக்களிடமும் புன்னகை. இது அதிரை மக்களின் அமீரக வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு என்று சொன்னால் மிகையில்லை. இந்த முக்கிய நிகழ்வுக்கு நூற்றுக்கணக்கான அதிரை நேசங்கள் கலந்துக்கொண்டார்கள் என்பது மிகச்சிறப்பு.

கூட்டம் சரியாக மாலை 06:30 மணியளவில், துபாய் அல்கிஸ்ஸ்ஸ் பகுதியில் உள்ள கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் துவங்கியது, இந்த கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பே மக்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். முதலில் இறைவசனம் ஓதப்பட்டது. நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று சகோதரர் ஜமீல் அவர்கள் மிகச்சிறப்பாக கூட்டத்தை நிறைவுவரை வழிநடத்திச் சென்றார்கள். இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அதிரையிலிருந்து பேராசிரியர். அப்துல்காதர் அவர்கள் வந்திருந்தார்கள் மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள், அதிரை இதயங்களை இணைக்கும் வகையில் இனிப்பாக இருந்தது பேராசிரியர் அவர்களின் கணீர் குரல் சொற்பொழிவு.

நிகழ்சியில் முத்தாய்ப்பாக நம் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி, சகோதரர் சபீர் அவர்கள் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பொது குழு கூட்டத்தை சிறப்பிக்கும்விதமாக கவிதை வாசிக்கப்பட்டு வந்திருந்த எல்லோரையும் ரசிக்கவைத்து ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் இந்த கவிதை வரிகளுக்கு தன் உரை இறுதியில் விளக்கமளித்து நம் அதிரைநிருபர் கவியின் கவிதைகளை வந்திருந்த எல்லா வயதினருக்கும் புரியும்படி ஒரு பாடமே எடுத்துவிட்டார்கள். நல்ல வரவேற்பை பெற்ற நம் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் அந்த கவிதை விரைவில் நம் அதிரைநிருபரில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

மேலும் நிகழ்சியில் அனைத்து முஹல்லா பொது குழு உறுப்பினர்கள் சிலர் சிறப்புரையாற்றினார்கள். தீர்மானங்கள் வாசிக்கபட்டது (விபரம் விரைவில்), தொடர்ந்த நிகழ்சியில் அதிரையில் உள்ள முஹல்லாக்களின் துபை கிளையின் நிர்வாகிகள் முஹல்லா வாரியாக மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். இறுதியாக தேர்ந்தெடுப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். சகோதரர் தமீம் (ஏர்லிங்க்) அவர்கள் தலைவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள் மற்ற நிர்வாகிகள் பற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.

இடைவிடாமல் நடைப்பெற்ற இந்த நிகழ்சியின் நடுவில் வந்திருந்தவர்களுக்கு தேநீர் மற்றும் சமூசா வழங்ப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவும் பார்சலாக வழங்கப்பட்டது.

இந்த மறக்கமுடியாத நிகழ்வு இனிதே நிறைவுற்றது. கலந்துக்கொண்ட அனைவரின் புன்னகையே அவர்கள் அனைவரின் உணர்வுகளின் வெளிப்பாடாக காணப்பட்டது. அல்ஹம்துல்லில்லாஹ்.

இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அனைத்து சகோதரர்களுக்கும் நம் அதிரைநிருபர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்றைய நிகழ்வுகளின் நிறைவாக நம் அதிரைநிருபர், அதிரைபிபிசி, மற்றும் பல அதிரை வலைத்தளங்களில் நேரலை செய்ய உதவிய சகோதரர் U. மெய்னுதீன் மற்றும் அதிரைபிபிசி சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

அல்லாஹ் போதுமானவன்.

-அதிரைநிருபர் குழு.
புகைப்படங்கள்:

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

மிகவும் சிறப்புடனும், அனைத்துள்ளங்களின் ஆதரவுடன் நடை பெற்ற அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதலாவது பொதுக்குழு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

U.ABOOBACKER (MK) said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்..!
அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிகழ்ச்சியை நேரடி காணொளி மூலம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன் நான் அமீரகத்தில் இருந்தபோது நம் சகோதரர்கள் இதுபோல் ஒரு கூட்டமைப்பு உருவாக்க முயன்று நிறைவேறாமல் காலம் கடந்தாலும் இப்போது சிறப்பாக நிறைவேறியது கண்டு ஆனந்த கண்ணீர் வந்தது.அமீரகத்தில் பல ஊர் கூட்டமைப்புகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பல நற்காரியங்களை சாதித்து வருவதை முன் மாதிரியாக கொண்டு செயல்படவேண்டும்.
தூர நோக்கு சிந்தனை கொண்ட சகோதரர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. இதுபோல் ஒரு அமைப்பை பல நாடுகளிலும் உள்ள நம் சகோதரர்கள் உருவாக்கி அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் வழிமுறையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதுதான் ஷைத்தனின் முக்கிய பணி. அதற்கு இடம் கொடுக்காமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்.

ஒன்று கூடி வளம் பெறுவோம்..! அல்லாஹ்வின் துணையுடன்.

அன்புடன்
மு.கி.அபுபக்கர்
சென்னை

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 750 .
பேர் கலந்துக் கொண்டிருப்பது மாபெரும் வெற்றித்தான்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
அனைத்து மக்களிடமும் காணப்பட்ட அந்த புன்னகை.ஊர் ஒற்றுமைக்கு போடப்பட்ட அஸ்திவாரம் என்று நினைத்து தொய்வில்லாமல் அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடத்தி ஒற்றுமை என்னும் கையிற்றை வலுவாக பிடிக்க அனைத்து சகோதரர்களை கேட்டுக் கொள்வதோடு .வல்ல இறைவனிடம் துஆ செய்கின்றேன்.

அப்துல்மாலிக் said...

உற்சாகங்கள்.. பள்ளிப்பருவத்தில் பார்த்தவர்களை மீண்டும் பார்த்தது (ஒரே நாட்டில் இருந்தும்) அதுவும் அவரவர் வாரிசுகளூடன்

ஆச்சரியங்கள்... 22 வருஷங்களுக்கு முன் ஜும்மா பள்ளியில் சந்தித்தபிறகு இவ்வளவு கூட்டத்தையும் ஒரே இடத்தில் நம் ஊர் வாசிகளை பார்த்தது

இமெயில், ஃபோன் நம்பர், நலம் விசாரனை, குடும்ப நிலவரம், உத்தியோகம் இப்படி பலவகையில் பறிமாற்றங்கள்

இப்படிப்பட்ட களேபரங்களுக்கிடையிலும் நமக்கிடையே ஒற்றுமை வேண்டும் என்ற உணர்வு அனைவரின் ஆழ்மனதிலும் இருந்தது என்னவோ உண்மைதான். ஒவ்வொருவரின் மனதிலும் நினைத்ததை இறுதியில் பூனைக்கு மணி கட்டிக்காட்டியது இந்த கூட்டம்.. முக்கியக்கருத்தான 25-35 வயதினரிடையே இந்த தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம், இவைகள்தான் முதல் கூட்டத்தின் வெற்றிக்கு அடையாளங்கள்...இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யவேண்டும்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்,
நிர்வாகிகள் திறம்பட அதிரைக்கு நல்வழிகாட்ட வாழ்த்துக்கள்.
'நிய்யத்' அத்தனையும் அப்படியே நிறைவேறிட 'துஆ'செய்தவனாக.

அபூபக்கர்-அமேஜான் said...

அடிக்கடி இதுபோல் கூட்டங்களை நடத்தி சாதனை படைக்க வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பள்ளிக் கூடம் முடிந்ததும் சொல்லிச் சென்ற நட்பு நேற்று கிள்ளிப்பார்த்துச் சொன்னது என்னடா எப்படியிருக்கே எங்கேயிருக்கேன்னு !?

தொலைத்த நட்புகளை மீட்டெடுத்தேன் !

ஓ... அவனா நீ என்றெல்லாம் கேட்காமல் ! அப்படியே இருக்கியே என்றவர்களும் உண்டு, இவ்வுலகில்தானே இருக்கேன்னு கேட்டவர்களும் உண்டு, இப்பையாவது கண்டேனே என்று சொன்னவனும் உண்டு !

திருவிழாவில் காணடித்த பிள்ளையை பெற்றோர் அடுத்த திருவிழாவுக்குச் சென்று இன்றாவது கிடைக்கமாட்டானா என்று தேடுவதுபோல் வந்திருந்தான் ஒரு பள்ளிக் கால நண்பன் ! நிச்சயம் இங்கு வந்திருப்பேன் என்றுதான் வந்தானாம் இங்கேயும் வரலையான்னு கிளம்பவும் பார்த்தானாம் வாசலிலே நின்றானாம் கடைசியிலே கையைப் பிடித்து அதே முறுக்கு முறுக்கினான் ! அட நீ எங்கே இங்கே !?

இதெப்படி இருக்கு !?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Dear NAS,

Assalamu Alaikkum.

Will you (or anyone) please explain me of the 'Seventh Sense' that Prof. Abdul Kadar spoke about in his speech and on which I am in confuse.

Thanks.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

Dear kaakkaa,

There is nothing truly exists, known as seventh sense if not a kind of fiction. They probably want to mean the extreme creative sense, sense in extraordinary activities, magic sense,etc., as seventh sense. But to me, seventh, eighth, ninth, tenth and so on., senses ALL MUST BE included within sixth sense that the human being blessed with, by Allah.

Human being easily get attracted by stuff like Star Wars, Aliens, astrology, graphical fights of tamil heroes, etc. and the ‘seventh sense gentlemen’ will shortly show boogieman to threaten and that will be created by seventh sense.

Lets forgive them.

Sabeer Ahmed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"ஞானக்கண்" பார்வைக்கு !? எத்தனையாவது சென்ஸ் இருக்கனும் !

யாரவாது சொன்னா நல்லா இருக்கும் !

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி சபீர்,

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஸப்-கான்ஷியஸ்/ஆழ்மனம்/புதைமனம் போன்றவையே. மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் ஆகியன பற்றியும் படிப்பறிவு உண்டு.

அவ்வகையில், ஐன்ஸ்ட்டீனின் சாரதி கூறிய பதில் சமயோசித பதில்தானே ஒழிய ஏழாம் அறிவின்பாற் பட்டது என ஏற்பது சரியா? என்பதே என் ஐயம்.

தங்கள் விளக்கத்துக்கு நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு