Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெற்றோருடன் ஒரு கருத்து பறிமாற்றம்‏ 19

அதிரைநிருபர் | January 18, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பும் அமுதும் ஒரு சேர அள்ளித் தரும் அருமை பெற்றோர்களே! ஒரு சில நிமிடங்கள் அடியேனின் ஆதங்கத்தை அலசிப்பாருங்களேன்.

அல்லாஹ் ஆறு அறிவையும் தந்து மூன்று பருவங்களையும் ஆரோக்கியமாக அளித்து அளவிலா கிருபையாக கொஞ்சி மகிழ குழந்தை செல்வங்களை அளித்தான். அவர்களுக்கு அவப்போது தேவையான ஊக்கச்சத்தையும் அறிவமுதையும் அளித்து சிந்தனையை சீர்தூக்கி பார்க்க இஸ்லாமிய ஷரீஅத்டோடு இணைந்த ஈருலக கல்வியையும் அளித்தோம். ஆனால் பருவமடைந்ததும் வாழ்க்கை துணைவியையும் தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம். இந்த இடத்தில் தான் சற்று அமைதியாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப் படுகிறோம். அல்லாஹ்வின் உதவியால் அவன் தந்த செல்வமும் அறிவும் ஒன்று சேர பெற்றெடுத்த அருமை மகனுக்கு ஷரீ அத்தின் அடிப்படையில் எவ்வித சீர் சீதனம் இல்லாமல் பெருமானாரின் சொல்லில் 75 % மட்டும் செயல்படுத்தி திருமணத்தை இருவீட்டாரும் பலமுறை கலந்துரையாடி செய்து வைத்த திருமண ஒப்பந்தம் ஓரிரு மாதங்களிலே உடைந்துபோகிறதென்றால் அதற்ககும் பெற்றோர்தான் காரணம் என்றால் நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லவருவதை சுய நினைவோடு சீர்தூக்கி பார்ப்போம்.

யா அல்லாஹ் இனிமேலும் இத்தகைய தவறு தொடராமல் இருக்க உன்னிடமே உதவியை தேடுகிறோம்!

குறிப்பு:- மகன் என்று குறிப்பிட்டதால் தவறாக கருதாமல் மகளைப் பெற்றவர்களும் இதில் சிந்திக்க வேண்டுகிறேன்.

1.கருவுற்ற நாள் முதல் கருவரையை விட்டு வெளிவரும் வரை கண்ணும் கருத்துமாக ஈருயிரும் இமை காப்பது போல் காத்துவருகிரோம்.

2.பல சிரமங்களுக்கு பிறகு பெற்றெடுத்த பின் (பஞ்சு காயை பார்த்தவர்களுக்கு தெரியும்) பொத்தி பொத்தி பார்த்து பாதுகாக்கிறோம்..

3.அழுகை குறலை கேட்டதும் அலறியடித்து அமுதை அன்பை அள்ளித் தருகிறோம்.

4.துள்ளி குதித்திடும் நேரத்தில் கல கல சப்தம் கேட்டிட அனிகலன்கள் அனுவித்து மகிழ்கிறோம்.

5.துரும்பு செய்யும் வயதை அடைந்ததும் வீடு முழுவதும் உல்லாசமாக உலாவர நடை பழக்கம் கொடுக்கிறோம். (வசதிக்கேற்ப்ப வண்டியுடன்)

6.கூப்பிட்டவுடன் திரும்பி பார்த்து சொன்னதை செய்யும் பருவம் அடைந்ததும் பள்ளிக்கு அனுப்பி ஈருலக கல்வியையும் கற்க வசதி செய்கிறோம்.

7.பருவமடைந்ததும் படுக்கையை தனிமைபடுத்தி பாசத்தோடு பன்பையும் பழக்குகிறோம்.

8. பட்டம்,படிப்பு முடிந்ததும் தரத்திற்க்கேற்ப தொழிலை தேட வாய்ப்பு கொடுக்கிறோம்.

9.பாலியல் வயதை அடைந்ததும் வாழ்க்கை துணைவியை வலை வீசி தேடி(?) அல்லது சொந்தத்திலேயே சேர்த்து வைக்கிறோம்.

மிக முக்கியம் கவனிக்க வேண்டிய அடியேனின் ஆழ்ந்த ஆதங்கம்.

10.இவ்வளவும் சிறப்பாக செய்த பெற்றோரே எம்மருமை குழந்தைகளூக்கு (ஆண்,பெண்) இனிமேல் உனக்கென்று ஒரு வாழ்க்கை துணையை தேர்தெடுக்க இருக்கிறோம் உனக்குள் ஏதாவது ஆசை புதைந்து கிடந்தால் பொறுமையாக மலரச்செய் (மகனே, மகளே) என்று எத்தனை பேர் நம் அருமை குழந்தைகளை கேட்டிருக்கிறோம்????????

மக்களே! இனிமேல் உனக்கென்று ஒரு வாழ்க்கை துணையை உன் விருப்பப் படியே அமைத்து தந்தோம் இல்லற வாழ்வில் இன்முகத்தோடு பள்ளம் மேடுகளை அல்லாஹ் அருளிய வேதத்தில் அறிவுறுத்துவதை போல் நீங்கள் ஒருவருக்கொருவர் மானத்தை மறைக்கும் ஆடையைப் போல் மறைத்து இன்பமாக வாழ வழிவகுத்து தருவோம்.

உங்கள் வாழ்க்கை துணையோடு இப்படித்தான் நடந்து கொள்ளவேன்டும் என்று எத்தனைபேர் கற்று கொடுத்துள்ளோம்??????

இங்கு பெண்ணை பெற்றோருக்கு ஒரு கருத்து பறிமாற்றம்.

பெருமானார்(ஸல்) அவர்களின் பெருமிதமான சொல் செயல் சிந்தித்து உலமாக்களின் ஏகோபித்த கருத்தை ஷரீ அத்தின் வாழ்வில் செயல்பட்டு ஈருலகிலும் வெற்றிபெற.

மகளே! நீயே தேர்ந்தெடுத்த  உன் கணவன் வீட்டில் இருக்கும்போது அல்லாஹ்வுக்கு பிரியமான செயலான பெருமானாரின் சுன்னத்தான நோன்புகளின் ஒன்றான மாதாந்திர 13,14,15 நோன்புகளையோ அல்லது பர்ளான விடுபட்ட நோன்பையோ நோற்க கணவனின் அனுமதிபெறவேண்டும் என்பதையும், இத்தனை வயதுவரை உனக்கு வேண்டியதை செய்து தந்த எங்களை காட்டிலும் இப்படிபட்ட நோன்புகளை நோற்க எங்களிடம் அனுமதி பெற்றுதான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதையும் மாறாக புதிதாக உனக்கு சேர்த்து தந்த உன் வாழ்க்கை துணைவருக்குத் தான் முழு முதல் உரிமையை வழங்க வேண்டும் என்று இது போன்ற நல்ல அறிவுரைகளை பரிவோடு படித்து கொடுக்க மறந்தது ஏனோ?????????

ஆணை பெற்றோருக்கும் கருத்து பரிமாற்றம்.

அன்பு மகனே! துரும்பு செய்யும் வயதில் துள்ளி விளையாட விரும்பியதை வாங்கி கொடுத்தோம், வாலிபமிருக்குடன் வளரும்போது வசதிபாராது வேண்டிய கல்வி கற்க வாய்ப்புகள் அமைத்து தந்தோம், படித்த படிப்பிற்க்கேற்ப / வெளிநாட்டு உள்நாட்டு சம்பாதியத்தை வேண்டிய போது வயோதிகத்தைபாராது வெளிநாடு அனுப்பி வைத்தோம் அல்ஹம்துலில்லாஹ் எங்களுக்கும் குறையில்லாது பாசத்தோடு கண்ணியமும் செய்து வருகிறாய்.

இப்போது நீயே தேர்ந்தெடுத்த உன் வாழ்க்கை துணைவியை உனக்கு ஷரீஅத்தின் பிரகாரம் திருமணம் செய்து தருகிறோம். மகனே இத்தனை ஆண்டுகளாக நாங்கள் உனக்கு பாசம், அறிவு பன்பை மற்றும் தான் கொடுத்தோம் ஆனால் இப்போது உன்னோடு வர இருப்பவள் இதோடு ஒருபடி மேலேறி உனது ஹலாலான துனைவியாகவும் முழு உரிமை பெருகிறாள், எனவே எங்களுக்கு அள்ளித்தரும் உரிமையை விட உன் மணைவிக்கு உண்ண, உடுக்க, இருக்க இன்னும் பல வசதி வாய்ப்புகளுடன் ஷரீஅத்தின் பிரகாரம் பள்ளம் மேடுகளை கடந்து உன் வாழ்வை அமைத்து ஈருலகிலும் வெற்றி பெற தயார் படுத்திக்கொள் என்று இது போன்ற அறிவுரைகளை சொல்லி மனம் திறந்து பக்குவப்படுத்த மறந்ததேனோ ?????????

யா அல்லாஹ்! உள்ள கிடங்கை அள்ளி எழுத வாய்ப்பளித்தாய் இதேபோல் எழுத்தும் செயலும் என் வாழ்வில் ஒன்றாக நடைமுறை படுத்த கிருபை செய்வாயாக ஆமீன்!

--அதிரை A.H. அப்துல் ரசீத் ரஹ்மானி 

19 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிந்தனை தூண்டும் நல்ல விழிப்புணர்வு ஆக்கத்துடன் தன் முதல் பதிவை நம் அதிரைநிருபருக்காக அனுப்பிவைத்த அன்பு சகோதரர் அப்துல் ரசீத் ஆலிம் அவர்களுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து நல்ல விழிப்புணர்வு ஆக்கங்களை எங்களுக்குடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இப்பத்தான் நேரம் கிடைத்ததா அலீம் நண்பனே!அதிரை
நிருபரில் முதல் ஆக்கமே முத்தான ஆக்கம்.வாழ்துக்கள்.

sabeer.abushahruk said...

சொல்லுங்கள் ஆலிம் அவர்களே இனியும் சொல்லுங்கள். முன்னால் அமர்ந்து கேட்கவும் சொன்னதை உணர்ந்து செயல்படுத்தவும் இங்கொரு கூட்டம் தயாரயிருக்கிறோம்.

என்னவொன்று என்றால், எங்கள் க்ரவுனின் நண்பன் என்பதால் உங்கள்மேலான எதிர்பார்ப்பு கூடும் இக்கூட்டத்திற்கு...

வருக வாழ்த்துக்கள்!

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

வாழ்க்கையின் துடக்கத்தை பற்றி முதல் ஆக்கம்..வாழ்த்துக்கள்..

உங்கள் கட்டுரையை நான் தொடர நினைகின்றேன்.

நமதூர் திருமணம் கலப்படமும் குழப்பமும் நிறைந்ததாகத்தான் இன்றும் இருக்கிறது..

பெற்றோர்கள் சிறு வயசிலேயே சம்மந்தம் பேசிவிடுகிறார்கள். நேற்று வரை இது வாலிபர்களுக்கு வேறு பெண்ணை நினைக்காமளிருக்க இது ஒரு அழகிய கால்கட்டாக இருந்தது. (சிலருக்கு இன்றும் கூட)..இன்றைய காலகட்டத்தில், பேசிவைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் கட்டுக்கடங்காமல் கல்யாணத்திற்கு முன் எல்லாத்தையும் பகிர்ந்துகொள்ள இதுவே துணை நிக்கிறது.

கட்டிக்க போகும் பெண்ணை ஒரு முறை பார்த்து பேச இஸ்லாத்தில் அனுமதி இருக்க, அதை ஒரு மக்ரூஹைபோல் கருதும் நமதூர் , போட்டோவிலும்,மெய்ளிலும் கொஞ்சி குலவாட அனுமதிக்கின்றோம்.

அதுசரி கண்டபொண்ணோட,ஆணோட பேசாம கட்டிக்கபோறவங்களோடதான பேசுறோம்னு இளசுகள் மனசு ஊஞ்சலாட, பெருசுகளும் அனுமதிக்க, திடீர் என்று இருவீட்டார் கருத்து வேறுபாட்டால் ஊசிவெடி வைத்து பிஞ்சு மனதில் பரிவை காட்டாமல் பிரிவை காட்டி வேறு திருமணம் முடித்துவைத்துகாட்டுவதும் பெற்றோர்கள்தான். (என் நண்பன் ஒருவனுக்கு நமதூரில் கடந்த மாதம்கூட இப்படி நடந்தேரியது.)

பத்துவயதில் பேனா கேட்டிருப்பர்களே தவிர பெண் பேசி கேட்டார்கள?
பிஞ்சி வயதில் மாப்பிள்ளை/பெண் பேசிவைகும்போது குடும்பம் பிரியக்கூடாது என்ற பாசத்தின் தூய்மையான பாசத்தில் செயல்பட்ட நம் எண்ணம் தக்க தருணத்தில்(திருமண நாள் நெருங்குகையில்) மட்டும் எங்கு போயிற்ரு குடும்பம், பாசம் எல்லாம்? பரிவோடு இருந்த குடும்பத்தில் அப்பொழுது மட்டும் பிரிவு என்ற சைத்தான் எங்கிருந்து வந்தானோண்டு தெரியவில்லை..

இதற்கு பெயர்தான் "தொட்டிலை கிள்ளிவிட்டு பிள்ளையை ஆட்டிவிடுவதோ'?

சில நேரத்தில் நான் சிந்தித்ததுண்டு "திருமணம் மணமக்களுக்கு நடக்கிறதா, சம்மந்திகளுக்குள் நடக்கிறதா" என்று..

இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு நான் எழுதவில்லை. எனக்குள் தோன்றியதை எழுதினேன். இங்கு இருப்பவர்களெல்லாம் காக்காமார்களும் சாச்சாமார்க்களும்தான். தவறிருப்பின் மன்னிக்கவும். அல்லாஹ் நம்மை காப்பானாக..ஆமீன்.

MSM (MR)
MEERASHAH RAFI AHAMED

Yasir said...

ஒரு அருமையான ஆக்கதை தந்திருக்கும் ஆலிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....அ.நி-ல் அனைத்து துறை நிபுணர்களும் உண்டு ஒரு ஆலிமைதான் தேடிக்கொண்டு இருந்தோம்...தேடலுக்கு இப்பொழுது விடிவு வந்து விட்டது...இனி ஆலிமின் ஆக்கத்தை அ.நி-ல் எதிர்பார்த்து காத்திருப்போம்....சொல்ல வந்த அருமையான விசயத்தை அற்புதமாக சொல்லி இருக்கீறிர்கள்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

தங்களின் முதல் ஆக்கமே முத்தான ஆக்கமாக அமைந்துள்ளது.

தம்பி மீராஷா சொன்னது போல் நமதூர் திருமணம் கலப்படமும் குழப்பமும் நிறைந்ததாகத்தான் இன்றும் இருக்கிறது.

தூரத்து உறவிலோ அல்லது புதிய உறவை உண்டாகி கொள்வதற்கோ வெளியில் பெண்பார்க்கும் போது பார்க்கும் பெண் ஒன்றாகவும் நிக்காஹ் செய்யும் போது வேறு பெண்ணையும் ஆள் மாறாட்டம் செய்யும் அவலங்களும் சமிப காலமாக ஆங்காங்கே தலை தூக்க ஆரம்பித்துள்ளன.

Yasir said...

மார்க்க புலமைவாய்ந்தவர்களுக்காக இந்த கேள்வி ? என் கேரள நண்பன் கேட்டான் விளக்கம் சொல்ல தெரியவில்லை...கேரளாவில் ஒரு மாற்று மத நண்பர் பள்ளிவாசல் கட்டிகொண்டு இருக்கிறார் (உபயம் :கல்ஃப் நியுஸ்) அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா (அவர் மார்க்க அறிஞர்களிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறுகிறார்) அதில் தொழலாமா ?

பார்க்க
http://gulfnews.com/news/gulf/qatar/hindu-businessman-to-build-mosque-in-kerala-1.747663

ZAKIR HUSSAIN said...

//சில நேரத்தில் நான் சிந்தித்ததுண்டு "திருமணம் மணமக்களுக்கு நடக்கிறதா, சம்மந்திகளுக்குள் நடக்கிறதா" என்று..//

என் அனுபவத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரிவு ஏற்ப்பட பெரியவர்களின் கோபமே காரணமாக இருந்ததை பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிரச்சினை தீர்க்கமுடியாத அளவுக்கு பெரிதல்ல. கடைசியில் அந்த திருமண உறவு நிலைக்கவில்லை.

பெரியவர்கள் கோபத்தில் வென்றார்கள்...கணவன் மனைவி இருவரும் பெரியவர்களிடம் வாழ்க்கையை ஒப்படைத்து தோற்றார்கள்.

மனிதம் மொத்தமாக எல்லாரிடத்திலும் தோற்றது.

Meerashah Rafia said...

@ZAKIR HUSSAIN

நூற்று நூறு உண்மை..

இப்பெல்லாம் நமக்கு இரு குடும்பங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படி இருக்ககூடாது என்கிற எடுத்துக்காடுகல்தான் அதிகம் பார்க்கமுடிகிறது.

MSM(MR)

Unknown said...

அசலாமு அழைக்கும் ஆலிம்சா.......
பயனுள்ள கட்டுரை ...
அடிக்கடி வாருங்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்கினிய அப்துல் ரஷீத் ஆலிம்சாவின் முதல் ஆக்கம் உள்ளத்தின் தேக்கத்தை அருமையான தன் சொல் திறனால் வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்....முதற்கண் எம் வாழ்த்துக்களும், து'ஆவும்...

தொலை நோக்கு பார்வை கொண்ட எத்தனையோ பெற்றோர்கள் அருகில் இருக்கும் தன் ஆசை மகன், மகளின் உள்ளக்கிடங்கின் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பார்க்க/கேட்க மறந்து விடுகின்றனர் என்ற உங்களின் ஆதங்கம் உண்மையான ஆதங்கமே.

அருமை தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை. படிக்க நாங்கள் இருக்கிறோம்.

சமுதாய மக்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சி கொடுப்பது மட்டுமல்ல எம் பணி அவர்களில் பலரை எழுத்தாளர்களாக ஆக்கிய பெருமையும் அதிரை நிருபரை சாரும் என்றால் அது மிகையாகாது.

ஒரு கால‌த்தில் அதிரை எக்ஸ்பிர‌ஸ் என்ற‌ இணைய‌ த‌ள‌த்தின் அர‌ட்டை அர‌ங்க‌ம் மூல‌ம் த‌வ‌ழ்ந்து ந‌ட‌ வ‌ண்டி மூல‌ம் ந‌டை ப‌யின்று கொண்டிருந்த‌ எம்மை இங்கு 100 மீட்ட‌ர் ஓட்ட‌ப்ப‌ந்த‌ய‌த்திற்கு த‌யார் ப‌டுத்திய‌ பெருமையும் அவ‌ர்க‌ளையே சாரும்.

இனி என்ன‌ ம‌ராத்தான் தான்....ஓடிக்கொண்டே இருப்போம் எம் க‌டைசி உசுரு இருக்கும் வ‌ரை இன்ஷா அல்லாஹ்....

வேலைப்ப‌ளு கார‌ண‌மாக‌ ஆக்க‌ங்க‌ள், பின் அல்ல‌து முன்னூட்ட‌ங்க‌ள் எதுவும் ச‌ரிவ‌ர‌ முன்பு போல் கொடுக்க‌ இய‌ல‌வில்லை. இத‌னால் (இய‌ல்பு) பின்னூட்ட‌ வாழ்க்கை பாதிக்கப்ப‌ட்டுள்ள‌து. இன்ஷா அல்லாஹ் விரைவில் நிலைமை சீர‌டையும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

விரைவில் நம் அதிரை நிருபர் மற்றும் அவர்களுடன் சேர்ந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டை சிறப்புடன் நடத்தி முடிக்கும் வரை பட்ட கஷ்டங்களையும், அவதூறுகளையும் அதையும் தாண்டி அல்லாஹ் கிருபையில் சிறப்புடன் முடித்தது பற்றியும் ஒரு சிறப்பு கட்டுரை எழுத ஆசை. இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன். தலைப்பு "கேள்விப்பட்டது; பகிர்ந்து கொண்டதும்".

வஸ்ஸலாம்.

அன்புடன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நல்லதொரு அருமையான ஆக்கம். சகோதரர் : A.H. அப்துல் ரசீத் ரஹ்மானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்துல் ரஷீத் உன் முதல் ஆக்கம் அனைவருக்கு ஒரு தாக்கம் கொடுத்திருப்பது நிஜம்... தொடர்ந்திடு உறக்கச் சொல்லிடு நெருக்கமானவர்கள்தான் இங்கிருக்கிறோம் நேசமானவர்கள்தான் சுற்றியிருக்கிறார்கள்.. ஆக ! நிச்சயம் உதிக்கும் உணர்வுகளை எங்களோடும் பகிர்ந்திடு ! இன்ஷா அல்லாஹ்...

HIRASHARFUDEEN said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு அழகான அருமையான ஆக்கத்தை தந்த ஆலீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

crown said...

Yasir சொன்னது…
மார்க்க புலமைவாய்ந்தவர்களுக்காக இந்த கேள்வி ? என் கேரள நண்பன் கேட்டான் விளக்கம் சொல்ல தெரியவில்லை...கேரளாவில் ஒரு மாற்று மத நண்பர் பள்ளிவாசல் கட்டிகொண்டு இருக்கிறார் (உபயம் :கல்ஃப் நியுஸ்) அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா (அவர் மார்க்க அறிஞர்களிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறுகிறார்) அதில் தொழலாமா ?
பார்க்க
http://gulfnews.com/news/gulf/qatar/hindu-businessman-to-build-mosque-in-kerala-1.747663
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . நான் மார்க அறிஞன் இல்லை இருந்தாலும் அல்லாஹ் தந்திருக்கும் பகுத்தறிவில் அந்த நபர் கட்டாயமாக இறை இல்லம் கட்டலாம் அதற்குரிய கூலி அல்லாஹ்விடத்தில். மேலும் அவர் கட்டும் இறையில்லத்தில் தாரளமாகத்தொழலாம். முன்னோர் காலத்தில் மாற்று மத அரசர்கள் கட்டிய இறையில்லம் நிறைய உண்டு அதில் நம் முன்னோர்கள் தொழுது வந்துள்ளனர். மேலும் கடற்கரை தெரு தர்கா. தர்காவில் தொழாவிட்டாலும் அதன் அருகில் பள்ளியாக்கி தொழுகை நடை பெருகிறது. மேலும் இறைஇல்லாமோ, நம் இல்லாங்களோ மாற்று மத சகோதர தொழிலாளிகளாலேயே கட்டபடுவதால் அங்கே தொழ நமக்கு தடையேதும் இல்லை.தொழுதும் வருகிறோம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கருத்துக்கள் நண்பா

hajenakatheja said...

அழகான தொகுப்பு இதை பிரின்ட் எடுத்து புதிதாய் திருமணம் மகும் புது,மண.தம்பதிகலுக்கு பரிசாக கொடுக்கலாமே

rasheed3m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

சகோதரர் யாஸிர் கேட்டிருக்கும் கேள்வி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாற்று மத சகோதரர் தனது சொந்த வருமானத்தில் கட்டும் பள்ளியில் தொழுவதால் இதன் நிலைமை அறிந்தும் ஒருவர் அதில் தொழுவாரேயேனால் அவரின் தொழுகை நிறைவேரிவிடும் என்றிருந்தாலும் கீழே சொல்லப்படும் உண்மை சரித்திரத்தை புறட்டி பார்க்கையில் தவிர்ந்து கொள்வதே நல்லது.
ஹஜ்ரத் மூஸா நபியின் பரம எதிரியாக இருந்த பிர் அவ்ன் ஒருமுறை மூஸா நபியின் சமூகத்தில் அழைத்து விருந்து கொடுத்து கொவ்ரவிப்பதாக கூறி அவர்களின் அமல்களை ஹராமான உணவை உட்கொல்வதின் மூலமாக வீனடிக்க முயற்ச்சி செய்தான் என்ற பிரபலியமான உனர்வூடும் உபதேசம் நம்மை இப்படிபட்ட விஷயங்களை விட்டும் விலக்குகிறது.
எனவேதான் இன்றைய சமூகம் குறிப்பாக பள்ளிவாசல், மதரசாக்களுக்கு வசூல் செய்யும்போது குறிப்பாக வட்டி போன்ற ஹராமான வழியில் சம்பாதிக்கும் பொருளை ஏற்க்க மறுக்கிறது.
வல்ல ரஹ்மான் முழுமையான ஈமானோடு வாழ்ந்து முழுமையான ஈமானோடு மரனிக்க தவ்பீக் செய்வானாக ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு