Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்றே வேண்டும் ஒற்றுமை. 12

அதிரைநிருபர் | March 01, 2011 |

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

சமீப நாட்களாக சூடு பிடித்திருக்கும் அரசியல் ஆய்வு பற்றி அவ்வப்போது நமது அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் பதிவுகளை படித்து எனக்குள் எழுந்த எண்ணங்களை நமதூர் இஸ்லாமிய சகோதரர்களுடன் கருத்து கணிப்புபெற்று நாம் ஏன் மற்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடாது?

“சிறு துளியே பெரு வெள்ளம்”, “ ஓடும் நீர் புதைக்குழி கண்டு பதுங்கும்” என்ற கருத்து நிறைந்த கற்பனை மொழிகளை நடைமுறைபடுத்த இஸ்லாம் கற்று தருவதை முன் நிறுத்தி இன்ஷா அல்லாஹ் இன்றே செயல்படுவோம்.

எதையும் சாதிக்க நினைக்கும் இளைஞர்களே! சற்று இஸ்லாமிய நெறியை சீர்தூக்கி சிதைந்து கிடக்கும் நம் ஊர் சகோதரர்களிடம் உள்ள தெரு வேற்றுமை, கொள்கை வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பிளவுகளுக்கு முதன்மையாய் தலையை அசைக்கும் தராதரத்தை தூக்கி எறிந்து விட்டு சீறிய நெறியை செயல்கொண்டுவர நேரம் காலம் பாராது இப்பொழுதே திருமறையில் சமுதாயம் வெற்றி பெற கையாளவேண்டிய கருத்து நிறைந்த குறுகிய சொல்லாம் واعتصموا بحبل للله - "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள்".என்ற சொல்லை முதலில் நமதூர் சகோதரர்கள் குறிப்பாக இளைஞர்கள் (10 +1 & +2 மாணவர்களை தவிர) எடுத்து நடக்க முதலில் வெட்டிபேச்சு இடங்களில் இருக்கும் சகோதரர்களை தவிர்த்து வாக்குறிமை உள்ள ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு நாளும் தான் செல்லும் விளையாட்டு மைதானதில் இது சம்மந்தமாக அருகில் உள்ள சகோதரனோடு வான்சையோடு வார்த்தொடுக்கலாமே.

துவங்கும் வார்த்தை இஸ்லாமிய முகமன் கூறி சமுதாய ஒற்றுமை மட்டுமே எனது குறிக்கோள் என்று சொல்லின் நளினம் வைத்து துவங்கி பாருங்களேன். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி நமதே!

கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், ஒருபடிமேல் ஏறி எழுதினால் கல்லு மனமும் கறையும், எப்போது தெறியுமா? ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் பரிசுத்தமான உள்ளத்தோடு பரிபூரனமாக உளூ எடுத்து தேவைகள் வெற்றியோடு நிறைவேற (ஸலாத்துல் ஹாஜ்ஜத்) இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் கையேந்தி விட்டு செல்லுங்கள் நிச்சயம் வெற்றி நமக்கே என்பதில் சந்தேகமிருக்காது.

விளையாட்டு மைதானத்தை முதல் மொழிகிறேன் என்ற கேள்வி எழுகிறதா? எனது பள்ளி படிப்பு பருவத்தில் எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த ஹாஜி SKM ஹாஜாமுஹைதீன் ஆசிரியர் அவர்கள் கற்று தந்தது பச்சை மரத்தில் ஆணி அரைந்தாற்போல் பதித்த சொல்லின் (சாதி மதம் வேற்றுமையை களையுமிடம், ஒற்றுமையை நிலைபெற செய்யுமிடம் விளையாட்டு மைதானம்) செயல் நிறைந்த பிறதிபளிப்பே இது. நாங்கள் ஊரில் இருக்கும் போது மாலை நேரம் விளையாட்டு மைதானத்தில் தான் எல்லா வேற்றுமைகளை மறந்து எவ்வளவோ நற்செயல்களுக்கு திட்டம் போட்டிருக்கின்றோம், செயல் படுத்தியிருக்கின்றோம். இது எங்கள் அனுபவதிலும் பல முறை கண்டது.

ஆம் ஊரில் உள்ள அன்பு அதிரை இஸ்லாமிய இளைஞர்களே இன்று மாலை பொழுதில் உங்கள் சகாக்களோடு இதை துவங்கி பாருங்களேன் விளையாட்டு மைதானத்தில். இந்த தேர்தலில் ஒரு தாக்கம் ஏற்படும். இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையிலும் நிம்மதி கிடைக்கும்.

உண்மை ஆதங்கள் வேளை பளுவோடு எழுதப்பட்டது இந்த பதிவு, இதை படித்து பின்னூட்டமிடும் சகோதர சகோதரிகளும் அவரவர் சொந்த பந்தங்களுக்கும் உரிமையோடு சொல்லிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் இந்த தேர்தலில் குறிப்பாக நமதூரில் இஸ்லாமிய உள்ளங்கள் ஒன்றுபட்டு ஊருக்கு எல்லாவகையிலும் நன்மை ஏற்படுத்திதர உத்திரவாதம் (தேர்தல் வாக்குறிதியல்ல) தரும் ஒரே ஒரு கட்சியையே ஆதரிப்பது அல்லது நமக்கு எவர்களும் ஒத்துவராதவர்கள் என்று தோன்றினால் இந்த தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு என்ற முடிவை எடுக்கவேண்டும் என்ற பரிந்துறையோடு நிறைவுசெய்கிறேன்!

இன்ஷா அல்லாஹ் வரதட்சனையை ஒழிக்கும் ஆக்கம் 3ஆம் பதிவாக எழுத சிறு இடைவெளி தேடுகிறேன்.

-- அப்துல் ரஷீத் ரஹ்மானி

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல உணர்வுபூர்வமான ஆக்கம், வித்தியாசமான அனுகுமுறை...

நாமும் முயற்சித்த்துதான் பார்போமே இன்ஷா அல்லாஹ்...

அப்துல் ரஷீத் வாழ்த்துக்கள் !

Yasir said...

அதிரை நிருபரின் மனசாட்சி சகோ.அப்துல் ரஷித் ரஹ்மானி அவர்களின் மூலமாக பேசி இருக்கிறது...இவ்வளவு வேலைப்பளுகளுக்கிடையே சமுதாய சிந்தனை உள்ள ஆக்கத்தை தந்த உங்களுக்கு துவாக்கள்..உங்கள் கனவுகள்,எண்ணங்கள் நிறைவேறும் காலம் வெகுவிரைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்

Meerashah Rafia said...

ஓட்டு போட்டு ஓட்டு போட்டு நம்ம கை தேஞ்சிபோனதுதான் மிச்சம்.50 வருசமா ஒன்னும் உதிக்கவில்லை. ஆதலால... பேசாம இப்போ புதி யுக்தியாகவும்,பெரும் சக்தியாகவும் வளைகுடா நாடுகளில் நடக்குறமாதிரி அரசை எதிர்த்து ஓட்டு போடாம இருந்துபார்போமே?அப்டி என்னத்தான் நடக்குதுன்னு பாப்போமே!! ஓட்டு போட்டாலும் போடாட்டியும் நம்ம ஆளுங்க யாரும் நிக்க போறதில்ல, எப்புடியும் எட்சளைகுகூட லாயக்கில்லாத கேடுகெட்ட அரசியல்வாதிதான் வருவான். இந்த ஊர் மக்கள் ஒன்றாக புறக்கனிசாங்கலாமே!னு நாலு பேருக்கு தெரிஞ்சா நமக்கு அங்கீகாரம் கிடைக்குதோ இல்லையோ, ஆறுதலும் தைரியமுமாச்சும் கிடைக்கும்.

msm(mr)
meerashah rafi ahamed

Unknown said...

"(அல் உலமாவு வரசத்துல் அன்பியாயி- நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்!" என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்:
ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ

அப்துல் ரஷீத் ரஹ்மானி - ஆலிம் காக்காவின் யோசனை உண்மையிலேயே சமுதாயதிற்கு பயன் தரவல்லது. இதனை செயல்படுத்தும் போது, அதன் பலனை அறியாலாம். இன்ஷாஅல்லாஹ்.

abufahadhnaan said...

meerashah சொன்னது…
ஓட்டு போட்டு ஓட்டு போட்டு நம்ம கை தேஞ்சிபோனதுதான் மிச்சம்.50 வருசமா ஒன்னும் உதிக்கவில்லை. ஆதலால... பேசாம இப்போ புதி யுக்தியாகவும்,பெரும் சக்தியாகவும் வளைகுடா நாடுகளில் நடக்குறமாதிரி அரசை எதிர்த்து ஓட்டு போடாம இருந்துபார்போமே?......................
என்று இல்லாமல் நமது ஒட்டுமொத்த வலைப்பூ சகோதர்கள் சேர்ந்து தேர்தல் ஆணையர் அவர்களுக்கு நமது தொகுதியில் ஒட்டு யாருக்கும் போடா விருப்பம் இல்லை என தெரிவித்து அதற்கு உண்டான படிவத்தை பூர்த்தி செய்து அனுபினால் நமது ஓட்டை யாரும் கள்ள ஒட்டு போடமுடியாது இதற்கான முயற்சியை உடனே எடுத்தல் சில வருடத்திற்கு முன் TMMK1998தமிழக அளவில் எடுத்த முயற்சியால் அப்போது ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் கதிகலங்கினர்!

Meerashah Rafia said...

சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் கூறியதை நான் ஏற்கிறேன்..ஓட்டு போடாமல் இருந்தால் களவாணி பசங்க கள்ள வோட்டு போட்டுடுவாங்க.

ஆதலால சகோ. அப்துல் ரஹ்மான் சொன்னவாறு செய்யலாம், இல்லாவிடில் "யாருக்கும் போட விருப்பமில்லை" என்ற பதிவை கட்டாயம் வாக்குச்சாவடி போய் போடவேண்டும்.

msm(mr)

sabeer.abushahruk said...

தம்பிகளா, அதுரைப்பட்டினம் ஒரு தனித் தொகுதியெனில் உங்களின் அதிரடி யோசனைகளை பரீட்ச்சித்துப் பார்க்கலாம்.

நாம் மிரட்ட அவர்களும் மிரண்டதுபோல் பாவித்து நம்முடன் பேச்சுவார்த்தை என்று நடிக்க, நாமும் போராட்டம் வென்றதாக மனப் பிரமையில் லயிக்க, அந்த சைக்கிள் கேப்பில் அதிரை முஸ்லிம்கள் ஓட்டுப் போடாததால் பட்டுக்கோட்டைத் தொகுதியில் முஸ்லிமுக்கு முற்றிலும் விரோதமானவன் கெலிக்க, அடுத்த ஐந்து வருடங்களுக்குச் நம்ம ஊருக்கு சின்ன நலத்திட்டம்கூட செய்யமாட்டாய்ங்க! 

இன்னும் கடுப்பாகி அகலப்பாதையைக்கூட அதிரைக்கு மேலே மேம்பாலம் மாதிரி அமைத்து நம்மூரை இருப்புப் பாதையிலிருந்தே துண்டித்து அப்புறப்படுத்திடுவாங்க!

அல்லது, சுந்தரத்திற்கும் மகிழங்கோட்டைக்குமிடையே சுரங்க ரயில் விடுகிறோம் என்று திட்டமிட்டு நம்மூரை சுரங்கப்பாதைக்குமேல் வைத்து மொத்த ரயில் நிலையத்தையும் நினைவுச் சின்னமாக்கிடுவாங்கப்பு. தட்டிக்கேட்ட, "உங்களுக்குத்தான் உப்பை வெள்ளையாக்கும் தொழிற்சாலை தரப்போகிறோமே என்று ஆப்பு வைப்பாங்க்ணா!

அதனால, ரஹ்மாணி சகோதரர் சொல்றபடி ஒற்றுமைக்கு குறி சொல்லுங்க தம்பிகளா!

-இப்படிக்கு "புரட்சி பதிவர் முஜீபின் டூப்பு"

Mohamed Rafeeq said...

இன்னும் எத்தனை நாளைக்கு இதை புறக்கனிகனும் அதை புறக்கனிகனும் சொல்லிக்கிட்டு இறுக்க போறோம் ! இப்படியே சொல்லி சொல்லி தான் நம்மலேயே புறகனுச்சுட்டனுங்க, இப்போ கையில இருக்கிறது இந்த ஒட்டு மட்டும்தான் அதையும் புறக்கனிக்கனுமா ... சபாஷ் ,நம்ம மட்டும் தானே உணர்ச்சி உள்ள சமுதயமுனு சொல்லிக்கிட்டு திரியுறோம், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க...

அதிரை தொகுதி பட்டுகோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது, நம் சமுதாயத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யப்பட்டது என்று எல்லாம் கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறோம், அனால் அந்த சூழ்ச்சி செய்யப்பட்ட தருணத்தில் நாம், நம்மவர்கள் , நம் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று ஒரு வினாடியாவது சிந்திதது உண்ட ??? .. உண்மையை சொல்ல போனால் நாம் ரகத்தாக துங்கிகொண்டு இருந்தோம், இந்த சூழ்ச்சி நடந்திருக்கிறது என்று தெரிவதற்கே நமக்கு பல வருடங்கள் தேவை படுகிறது

பட்டுகோட்டை தொகுதியில் இதுவரை உயர் சாதி இந்துக்களை தவிர ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றது உண்ட என்று கட்டுரை எழுதிகிறோம், எந்த கட்சியும் ஒரு முஸ்லிமை வேட்பாளராக அறிவித்தது உண்ட என்று குமுறுகிறோம் அனால் அதற்க்கு தகுதியான ஒருவரை நாம் வளர்த்தது உண்ட??? திமுக வின் கோட்டை என்று புகழப்படும் அதிரையில் திமுகவின் செயலாளர் யார் ஒரு முஸ்லிமா? அல்லது அதிமுகவின் செயலாளர் முஸ்லிமா ? இப்போ சொல்லுங்கைய எப்படியா ஒரு முஸ்லிமா வேட்பாளராக அறிவிப்பாங்க ............

முதலமைச்சர் கலைஞர் எங்க உட்டுள சாப்புட்டு இருக்காறு எங்க மாமா உட்டுள சாப்புட்டு இருக்காறு சொல்லிட்டு அன்னைக்கு நம் மூத்தவர்கள் அரசியலை புரகனிததால் இன்றைக்கு குப்பனும் , சுப்பனும் கட்சிக்கு தலைவராக மாறிவிட்டார்கள் , அவர்களுக்கு பிறந்த நாமும் இதைதான் செய்ய போகிறோமா ???

வெற்றி பெரும் அளவுக்கு நமக்கு வாக்களர்கள் சக்தி இல்லை என்றாலும் , வெற்றியை நிர்ணயம் செய்யும் வாக்காளர் சக்தி நம்மிடம் உள்ளது , தலித்துடன் ஒன்றுகுடி மிக பெரிய அரசியல் சக்தியாக உருவாக வேண்டும்

அன்புச் சகோதரர்களே
இனியாவது விழித்து கொள்ளவேண்டும்!
அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும்!!
அரசை நமதாக்க வேண்டும் !!!
இல்லையெனில் நமது சமுதாயத்தை காவிகளுக்கு காவு கொடுக்கும் சூழ்நிலையை யாராலும் தடுக்க இயலாம் போகும்

பி. கு
அடிகடி கரண்டு போகுது வாங்கையா போராட்டம் நடத்துவோம் என்றால் வரமாட்டிங்க அட்லீஸ்ட் வாக்கை பதிவு செய்வதற்காவது வாங்கையா

Mohamed Rafeeq said...

http://elbluemoon.blogspot.com/2011/03/blog-post.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Mohamed Rafeeq சொன்னது...
பி. கு
அடிகடி கரண்டு போகுது வாங்கையா போராட்டம் நடத்துவோம் என்றால் வரமாட்டிங்க அட்லீஸ்ட் வாக்கை பதிவு செய்வதற்காவது வாங்கையா ///

சகோ முஹம்மத் ரஃபீக் : யாருக்கு பதியலாம் சொல்லித் தாருங்களேன்...

Mohamed Rafeeq said...

அன்புச் சகோதரர் அபு இபுராஹிம் அவர்களே தங்களின் கேள்விக்கு பதிலை ஒரு பதிவாக போட்டுள்ளேன், அதில் தனி நபர் விமர்சனம் இருப்பதால் அதிரை நிருபர் வலைப்பூவில் என்னால் பின்னுட்டம் இட முடியவில்லை , மேலும் பதிவுக்காக கிழே கொடுக்க பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும் http://elbluemoon.blogspot.com/2011/03/blog-post_02.html

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் ரஷீத்,

வித்யாசமான அனுகுமுறை, இது நம்மைப் போன்றவர்களின் அனுபவமும் கூட, சில விடையங்களை விளையாட்டு மைதானத்தில் வைத்தே முடிவு செய்துள்ளோம்.

ஒரு காலத்தில் நான் அதிரையில் இருக்கும் போது ஒரு தெருவுக்கு தெரு கால்பந்து அணிகள், கிரிக்கெட் அணிகள். ஆனால இன்று அப்படியில்லை, எல்லாதெருவாசிகளிலும் ஒரே அணியில் விளையாடும் நிலை இன்று கண்கூடாக காணமுடிகிறது.

ஏன் நாங்கள் அமீரகத்தில் வெள்ளிக்கிழமைகளில் விளையாடும் விளையாட்டுப்போட்டிகளில் எல்லா தெருவாசிகளும் ஒன்றினைந்து பரஸ்பரம் நட்புடன் விளையாடிவருகிறோம்.

விளையாட்டு மைதானத்தில் ஏற்படும் நட்பு போன்றே இன்று எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக அதிரைநிருபர் வலைப்பூவிலும் இதயங்கள் இணைக்கப்படுகிறது.

இந்த வருடத்தேர்தலில் ஊர் நலனை மனத்தில் வைத்து ஒட்டுக்களை பதியவேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு