Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 30 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2014 | , ,


கண்களை அலங்காரம் செய்தல் (பெண்களுக்கு மட்டும்):

கீழே அலஅங்காரம் பற்றி எழுதியுள்ளேன் கணவனுக்கு மட்டும் காட்ட அலங்கரம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது ஆனால் அந்த அலங்காரத்தை அன்னியனுக்கு காட்டுவதாக இருந்தால் மட்டுமே அலங்காரம் செய்வது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

வெளியில் செல்லும் கணவன், மாலையில் வீடு திரும்பும் போது களைப்புடன் வருவான். களைப்பாக வரும் கணவனை உற்சாகமூட்டி கவரும் வகையில் தன் அழகை மெருகூட்டிக் கொண்டால் நல்லதுதானே. அதைச் செய்யத் தயங்கும் தன் மனைவி மீது எரிந்துவிழத் துவங்கும் கணவன். காலப் போக்கில் வேறு பாதையில் திசைமாறிச் செல்கிறான். சில நல்ல கணவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் கூட தங்களை அலங்கோலமாகக் காட்டிடும் மனைவியால் அங்கு சண்டைச் சச்சரவு தொடர்ந்து ஏற்படத்தானே செய்யும்.

பொதுவாக, நீ உன் குழந்தைப் பருவத்திலேயே ஆடை அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்துவாய். அதை இப்போது கைவிட்டு விடாதே! உன் கலருக்கு ஏற்ற கலர் ஆடைகளைத் தேர்வு செய்து நல்லவிதமாக அலங்காரம் செய்து கொள்! கண்களுக்கு சுருமா இட்டு, நறுமணம் பூசி, பூச்சூடி, சிரித்த முகத்துடன் கணவரை வரவேற்றுப் பார்! அளவிலா மகிழ்ச்சி கிடைக்கும். சோர்ந்து வரும் உன் கணவர், சுறுசுறுப்பாகி விடுவார். உன்னைச் சுற்றி சுற்றி வருவார். இது ஒன்றும் மார்க்கத்தில் தடை செய்யப் பட்டதல்லவே! ஆனபடியால் மேற்கொண்டு  வரும் தகவல்களுக்கு தயவு செய்து யாரும் தவறாக கருத்திட வேண்டாம் கண்ணை பற்றி எழுதும்போது எதையும் மறைக்க கூடாது என்பதால் எல்லாவற்றயும் எழுதிடலாம் என்பதால் அலங்காரம் பற்றியும் எழுதுகின்றேன்

மேலே நான் மேற்கோள் காட்டிய  விளக்கத்தில் அலங்காரம் எதற்கு செய்ய வேண்டும் என்பதை புரியலாம். ஆனால், தற்போது அதற்கு நேர் எதிரான
நிலைகளை மேற்கொண்டு கணவனின் அன்பையும், இறையன்பையும்
இழந்து நிற்கும் முஸ்லிம் பெண்களை என்னவென்பது! மகளே! வீட்டில் கணவர் அருக்கும் போது தலைவிரிக் கோலமாக காட்சியளித்துவிட்டு அன்னிய ஆடவர்களுக்கு உன் அழகை காட்டாதே

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாதுஎன்று திருகுர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையானஅலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள்தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிரமற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்,தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” (அல்குர் ஆன் 24: 31)

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்றஅலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கவேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும்.  கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். 

இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. 

ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வளரும்
(வளரும்
அதிரை மன்சூர்

7 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

// கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். //

நவூது பில்லாஹ்.

மன்சூர் மச்சான் அவர்களே,தவறான தகவல் தருகிறீர்கள்.புருவ முடியை threading செய்வது,சிரைப்பது நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் தடுக்கப்பட்டது.அதே போன்று,தலைக்கு ஓட்டு முடி வைப்பது தடுக்கப்பட்டதால்,இமைக்கும் அது தடுக்கப்பட்டதே என்பதை அறியலாம்.தயவு செய்து,உடனே திருத்தி வெளியிடும்படி அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறேன்.

adiraimansoor said...

சாரி
மச்சான் திரெட்டிங்க் என்பதற்கு தவறான ட்ரான்ஸ்லேஷன் கொண்டுவிட்டேன் த்ரெட்டிங் என்பது புருவத்தை சிரைப்பது என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக நான் இதை எழுதி இருக்கமாட்டேன் நானும் எத்த்னை பேருக்கோ இதை சொல்லி இருக்கின்றேன் ஆங்கில வார்த்தையை நான் புரிந்து கொண்ட விதத்தில் தவறு நடந்துள்ளது நவூது பில்லாஹ். அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும்
சுட்டி காட்டிய மச்சானுக்கு மிக்க நன்றி ஜஸாக்கால்லாஹ் கைரன்
நெரியாளர் தயவு செய்து இந்த வார்த்தையை நீக்குமாறு கேட்டுகொள்கின்றேன்

sheikdawoodmohamedfarook said...

//மாலையில் கணவன் வீடு திரும்பும் போது// 'ஆசை அறுபதுநாள்! மோகம் முப்பது நாள்'! என்றொரு மூடத்தனமான சொல்லடை தமிழகத்தில் வழங்கிவந்தது! இதை தகர்க்கும் விதமாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் வார இதழில் 'மோகம்முப்பது வருஷம்' என்ற தொடர் கதை அதன் ஆசிரியர் எழுதினார்.இக்கதைதிரைப்படமாகவும் வந்து பலரின் ஐதீக வைதீக கண்களைதிறந்தது.அந்தக்காலத்தில் மாமியார் வீட்டுக்கு செல்லும் புது பெண் தன் கணவனோடு தனியே பேச முடியாது ! காலையில் குளித்து பத்தை கைலியை கொடியில் காயப்போட்டால் அதை ஒருஹராமானகாரியம்போல்எண்ணி அடுத்தஅண்டுன ஊட்டுமாமியார்கள் வந்து வந்து பார்த்து மூக்கில் விரல் வைப்பார்கள். பகல்வேளையில்புது பெண்ணும் மாப்பிளையும் ரூமில்தூங்கும்போது சாவித்துவாரத்தின் வழியே ஒருவர்மாத்தி ஒருவர் மாமியார் நாத்துநாக்கள்உத்துஉத்து பாத்து பின்பு ஜாடைமாடையாக குத்துவார்கள்.அதுஎங்ககாலம்.இப்போ காலம் மாறிபோச்சு! மாமியார் எல்லாம் மருமவளுக்கு ஸலாம் போடவேண்டிய காலம்! அண்ணாசொன்னதுபோல் 'காட்டுவதை காட்டி பெறுவதை பெறுவோம்'' என்ற தத்துவத்தை இன்றய மருமகள்கள் சிக்கெனப் பிடித்துசிறப்போடுவாழ்கிறார்கள். அந்த தத்துவம் தெரியாத சில மண்டூகங்களும் மாமியார் கையிலும் நாத்துனார்கள் கையாளும் குட்டுபட்டுக்கொண்டிருக்கிறது.குனிந்தது போதும் எழுந்து நில் பெண்ணே!

sheikdawoodmohamedfarook said...

//மோகம் முப்பது வருஷம்// கதையை எழுதியவர் மணியன்.சினிமா படத்தை டைரக்ட் செய்தவர் கே. பாலச்சந்தர்.

sabeer.abushahruk said...

அழகான அத்தியாயம்!

வாழ்த்துகள் மன்சூர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவனை அவள் கவர நல் குறிப்புகள்!

Ebrahim Ansari said...

நான் இதற்கு கருத்து எழுதத்தான் வேண்டுமா?
எழுதினால் இதைத்தான் எழுத விரும்புகிறேன். யாரும் பத்வா கொடுத்துவிடாதீர்கள். .
==========================================================
" கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே! - நகக்
கண் பார்த்து நீ நடக்க வேண்டும் - மண்ணில்
பெண்ணோடு பிறந்ததது இந்த நாணம் -அதைப்
பேணாத பெண்ணுக்கு ஈனம். .

விண் போன்ற நிலவான முகத்தில் - பல
விழி எச்சில் வந்துவிழக் கூடும்
பொன் போன்ற உன் அழகுத் தோற்றம் - பலர்
கண்ணுக்கு விருந்தாகக் கூடும்
பெண்ணுக்கு இதுதானே கேடு- நல்ல
பெருமை தருமே உன் முக்காடு

மணவாளன் உள்ளத்தில் நாளும் -நீ
மலராக மணம் கமழ வேண்டும்
அனலாக அவன் மாற நேர்ந்தால்
அன்புச் சிரிப்பாலே அதை மாற்ற வேண்டும்
தினம் உன்னை அவன் காணும்போது -முல்லைச்
சிரிப்பாலே வரவேற்கவேண்டும். .

இறை வேதம் நபி போதம் எல்லாம் - உன்
இதயத்தில் பதிந்தாக வேண்டும்
பெரியோர்கள் நல்லாசி ஏற்று - உன்
புகழுக்கு பொருள் சொல்ல வேண்டும்
குறையில்லா ஐவேளை வணக்கம் -அருள்
குறையாத சொர்க்கத்தைக் கொடுக்கும்

( நாகூர் இ. எம். ஹனிபா பாடியது கேட்டு மனதில் நின்றது)

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு