Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 21 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2013 | , , , ,

புதுவையில் வீதியும் நீதியும் சிறப்பு வாய்ந்தவை என்று கூறுவார்கள். ஆனால் புதுவையின் வீதிகள், இப்போது  சுற்றுச்சூழல் காரணமாக தனது சிறப்பை இழந்து நிற்கிறது. அதே போல் இப்போது புதுவையில் வழங்கப் பட்ட நீதியும் நடுநிலையாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு ஒன்றும் பெரிய பீடிகை தேவை இல்லை. பூக் கடைக்கும் சாக்கடைக்கும் விளம்பரம் வேண்டியது இல்லை. இருப்பினும் இந்தப் பதிவை பதியும் முன் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறோம். இங்கு பதியப் படும் பேசுபொருளின் நோக்கம் யாரையும் காயப்படுத்த அல்ல; முழுக்க முழுக்க ஒரு அநீதியை எதிர்த்தும் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் தண்டிக்கப் படவேண்டுமென்ற உயர்ந்த நோக்கிலும்தான்  என்பதை வலியுறுத்திப் பதிவு செய்கிறோம். 

புதுவை நீதிமன்றத்தில் நடைபெற்று அண்மையில் தீர்ப்பு வழங்கப் பட்ட காஞ்சி சங்கர மடத்தின்  மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கின் அம்சங்களை நாம் ஆராய்வதின் நோக்கம் சில உணமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்றே. குறிப்பாக சமுதாயத்தில் ஒரு குற்றம் நிகழ்ந்தால் அநீதி இழைக்கப் பட்டால் அவற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்குமே அரசியல் சட்டத்தால் வழங்கப் பட்டு இருக்கின்றன. அப்படி நம்பிக்கைக்குப் பாத்திரமாக தகுதி பெற்று இருக்க வேண்டிய   அமைப்புகளின் மேலேயே சந்தேகம் ஏற்பட்டால் , “ மாமா! காய்ந்து கிடக்கிற குளமெல்லாம்  வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் . அந்த நதியே காய்ந்து போயிட்டா – துன்பப் படுறவங்க எல்லாம்  தங்களோட குறைகளை தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க அந்த தெய்வமே கலங்கி நின்னா?” என்று வசனமா பேசிக் கொண்டிருக்க முடியும்? மங்கை  சூதகமானால் கங்கையில் குளிக்கலாம் அந்த கங்கையே சூதகமானால் என்ன செய்வது  என்கிற நிலைதான் இப்போது நடந்து இருப்பது என்று இந்த கொலை வழக்கின் தீர்ப்புக்குப் பின் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

நடு நிலையில் நின்று இந்த வழக்கை அலசலாம். அதற்கு  முன் இந்த வழக்கு பற்றி சுருக்கமான ஒரு அறிமுகம். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக – அந்த மடத்தின் வரவு செலவுகளை – நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பில் அமர்த்தப் ப ட்டு இருந்ததவர் சங்கரராமன். இவரை இந்தப் பதவிக்கு நியமித்தவர் இப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் அல்ல. அதற்கு முன் மடாதிபதியாக இருந்த சந்திர சேகர சுவாமிகளே ஆவார். சங்கர ராமனின் நேர்மைக்கு சான்றாகவே அவர் மேலாளராக நியமிக்கப் பட்டு பணியாற்றி வந்தார். சந்திர சேகர சுவாமிகளின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த     ஜெயேந்திரருக்கும் சங்கர ராமனுக்கும் பல வகைகளில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் உருவின. இதற்கு பல எழுத்து பூர்வமான சான்றுகள் உள்ளன. இருவருக்குமான மோதல்களில் முதன்மையானது நிர்வாக  முறைகேடுகள் மட்டுமல்லாமல் ஆகம விதிகளின் மீறலும், ஒரு புனிதம் என்று கருதப் படும் மடத்தின் அதிபதி – ஒரு துறவி- கடைப்பிடிக்க வேண்டிய புனிதரென வணங்கப் படும்  தனி நபர்  ஒழுக்கமும்             ஒருங்கிணை ந்ததகும். 

சங்கராச்சாரியார்களுக்கென வகுக்கப்பட்ட ஒழுக்கவிதிமுறைகளும், ஆகம வழிகாட்டல்களும் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரால் மீறப்பட்டபோதெல்லாம், சுட்டிக்காட்டியும் மடத்தில் நடக்கும் விதிமீறல்கள் குறிப்பாக இளம்பெண்கள் நடமாட்டம், நிதிமுறைகேடுகளை அவ்வப்போது புனைப்பெயர்களில் கடிதம் எழுதி அம்பலப்படுத்தி வந்துள்ளார் சங்கரராமன். 

சங்கராச்சாரியார் கடல்தாண்டக்கூடாது என்ற ஆகம விதிமுறைகளை மீறி ஜெயேந்திரர் சீனாவுக்குச் செல்ல முயன்றதையும் தடுத்துள்ளார். அது மட்டுமின்றி, மடத்தில் நடக்கும் பாலியல் முறைகேடுகளில் சங்கராச்சாரியார் நேரடியாகவே ஈடுபட்டிருப்பதையும் கண்டித்துள்ளார்.  சங்கர ராமன் மேலாளராக இருந்ததால் மடத்தின் நிர்வாகம் அவருக்கு அத்துப்படி.  நிர்வாகம் மட்டுமல்ல நிவாகத்தில் நடக்கும் ஊழல்களும் அவருக்கு அத்துப்படி. ஒரு உண்மையான பக்திமானாக தனிப்பட்ட வாழ்வு வாழ்ந்த சங்கர ராமனால் கடவுளின் பெயரால் நடந்த அத்துமீறல்களை சகிக்க முடியவில்லை. 

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு பத்திரிகைகளுக்கு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். ஊடகங்கள் ,  அதன்பிறகு , அதைப்  படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினார்கள்.  

இந்த மடத்தில் அதன்  கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம் கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அதுவும் முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது. கசப்பும் கூடிக் கொண்டே போனது கொலைக்கான மோடிவ் என்கிற நோக்கமும் கூடிக் கொண்டே போனது. 

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே  பத்திரிகைகளில் மேற்கண்ட அத்துமீறல்கள் வெளியானதற்குக் காரணம் சங்கர ராமன் என்பது அவரது உயிருக்கு வேட்டுவைக்க உதவிய காரணியாகும் என்பது வெள்ளிடை மலை.  

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சில ஊடகவாதிகளிடம் சங்கரராமன் புட்டுப் புட்டு வைத்த பயங்கர ஷாக்கான சமாச்சாரம்.

ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து சங்கர ராமன் ,  அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன் என்பதாகும். நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர ராமன். பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார். 

டைம்ஸ் ஆப இந்தியாவின் நிருபர் சங்கர் சொல்கிறார் : “ டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்கே நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது. இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன் . இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்.”     என்று அன்று சொல்லி இருப்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் திரு. சங்கர். 

மேலே பட்டியலிடப்பட்ட  சம்பவங்களின் பரிணாம  வளர்ச்சியில்தான்  சங்கரராமன், வரதராஜ பெருமாள்கோவில் வளாகத்தில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். கொலைக்குப் பொறுப்பேற்று கதிரவன் என்பவர் உட்பட்ட சிலர் சரணடைந்தார்கள். இந்தக் கதிரவன் மற்றும் அவரது சகாக்களுக்கு சங்கரராமனை கொலை செய்ய எந்த உள்நோக்கமும்  இல்லை.  அவர்கள் உண்ணும சோற்றில் சங்கரராமன் மண்ணை அள்ளிப் போடவில்லை. உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிவது அவர்கள் ஒரு கூலிப்படையினர் என்பதுதான். 

ஒரு கொலை விசாரணையில் நேரடி தடயங்கள் எதுவும் கிடைக்காதபோது, கொல்லப்பட்டவருக்கிருந்த எதிரிகள், முன்பகை, கொடுக்கல்-வாங்கல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படுவது இயல்பான நடைமுறை. இதன் அடிப்படையிலேயே எவ்வித நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லாதபோதும்கூட, 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய பெற்றோரையே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள்தண்டனையும் விதித்தது. அவ்வகையில் சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் இருந்த முன்பகைகளின் அடிப்படையிலும், மடம் குறித்து சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எதிராக எழுதிய கடிதங்களின் அடிப்படையிலும்- அந்தக் கடிதங்கள் சங்கர ராமன் வீட்டில் அல்ல காஞ்சி மடத்திலேயே கைப்பற்றப் பட்டன என்கிற  காரணத்தாலும், கொலை நடந்து இரண்டு மாதம் எட்டு நாட்களுக்குப் பிறகே புலன் விசாரணையின் தெளிவான முடிவாக  கொலைக்கான முகாந்திரம் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதும் இருப்பதாகக் கருதப்பட்டு, 2004 தீபாவளியன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில்,  கொலைக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படும்போது பேணப்படும் அத்தனை சட்டநடைமுறைகளும் அவாள் என்பதால்   மீறப்பட்டு, நீதிமன்றத்திற்குப் பதிலாக நீதிபதியே சங்கராச்சாரியாரின் வீட்டிற்கு வந்தும், விடுமுறை தினத்தன்று விசாரித்ததும் இந்த வழக்கில்தான் நடந்தேறியது. மட்டுமின்றி சிறையில் மலம் கழிக்க வாழை இலை, வாய்க்கு ருசியாக சமைக்க மடத்தின் ஆஸ்தான சமையல்காரர்கள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் ஓரிரு நாட்கள் சிறையிலிருந்து ராஜமரியாதையுடன் ஜாமீனில்  வெளிவந்தனர் சங்கராச்சாரியார்கள்.


அதன்பிறகு, வழக்கை இழுத்தடிப்பதிலாகட்டும், வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் தொலைபேசியில் நேரடியாகவே பேரம் பேசுவதிலாகட்டும் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அரசியல்வாதிகளுக்கேயுரிய சாதுரிய அணுகுமுறைகளைக் கையாண்டதோடு, வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக்கூறி பாண்டிச்சேரிக்கு மாற்றக்கோரியதிலாகட்டும் பல  தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்கள். 

குற்றம் சாட்டப்பட்டவருக்காக எவ்வளவு வளைந்து கொடுக்கமுடியுமோ சட்டம் அவ்வளவு வளைந்து கொடுத்தது.  3369 நாட்கள், 24 குற்றவாளிகள், 1873 பக்க குற்றப்பத்திரிகை, 189 அரசு தரப்பு சாட்சிகள் என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் உனக்கும் பேப்பே உங்க அப்பனுக்கும் பேப்பே என்று  விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். 

தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்றுதான்  வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கரராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. 128 சாட்சிகளில் 81 பேரின் சாட்சியங்கள் ஏற்கப்பட்டு, எட்டாண்டுகள் இடைவெளிக்குள் அத்தனைபேரும் பிறழ் சாட்சியங்களாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு பாண்டிச்சேரி நீதிமன்றம் மனுநீதி மன்றமாகவே திகழ்ந்துள்ளது. இவர்களின் விடுதலைக்கு முக்கியக் காரணமாக  நீதிபதி குறிப்பிட்டது சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதே. 

இப்படி தாங்கள் முன் சொன்ன சாட்சியத்தை பிறகு மாற்றிச்சொல்லி பிறழ் சாட்சியாக மாறியவர்களில்  குறிப்பிடத்தகுந்தவர்கள் கொலை செய்யப் பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மாவும்  அவரது மகனும் அடங்குவார்கள். அதாவது தனது கணவரைக் கொலை செய்தவர்களையும் தனது தந்தையைக் கொலை செய்தவர்களையும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டுமென்று சபதமும் சங்கல்பமும் ஏற்றவர்கள் அந்த எளிய பிராமணர்கள்,  வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது குறுக்கு விசாரணையில் தங்களது முந்தைய சாட்சிகளின் முக்கிய சாராம்சங்களை மாற்றிச் சொன்னார்கள்.  

ஆனால் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்ததும் கதறி அழத்தொடங்கினார்கள். தீர்ப்பு வெளிவந்ததும் தாங்கள் மிரட்டப் பட்டதாக பத்திரிகை  மற்றும் ஊடகங்களில் சொன்னார்கள். முக்கியமாக சங்கர ராமனின் மனைவியிடம் உன் மகன் உனக்கு வேணுமா வேண்டாமா என்று மிரட்டப் பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே கணவனை இழந்த ஒரு ஏழை, தனது மகனின் உயிரையாவது காப்பாற்ற தனது சாட்சியத்தை நீதிமன்றத்தில் மாற்றி சொல்லவேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப் பட்டார். இவைகளைப் பார்க்கும்போது நீதி என்று ஒன்று இருக்கிறதா என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. 

இந்தத் தீர்ப்பும் வழக்கின் நடை முறைகளும் சட்டத்தின் ஆட்சிதான்  இங்கே நடைபெறுவதற்கு சான்று பகற்கிறதா என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சத்தியம் செய்து  சொல்ல வேண்டும். 

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தீர்ப்பு வெளியான உடன் தேநீர்கடையில் பெஞ்ச துடைத்துக் கொண்டிருந்தவர் வரை இது ஒரு அநியாயம் என்று கருத்து சொன்ன நேரத்தில் “ கோயில் கூடாது என்பதற்காக அல்ல- கோயில் கொடியவரின் கூடாரமாகக் கூடாது “ என்று வசனம் எழுதி கைதட்டு   வாங்கிய தமிழினத்தலைவரும் – யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று தன்னை ஒரு நடுநிலைலயாளராகவும் நீதி தேவதையாகவும் காட்டிக் கொண்ட அம்மையார் ஜெயலலிதாவும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.  அவர்கள் இருவர் வாயிலும் “ ஏற்காடு பிளாஸ்திரி “ ஓட்டப்  பட்டு இருந்ததே காரணம். அவர்களின் கருத்து , ஏற்காட்டில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய   அவாளின் வாக்குகளின் மீது இதன்மீதான இவர்களின் கருத்து கை வைத்துவிடுமோ என்ற அச்சமே காரணம். இப்போது தேர்தல் முடிந்து விட்டது. இனி இவர்களின் கருத்தை எதிர்பார்க்கலாம். 

ஆனால் சில வெத்துவேட்டுகள் உடனே கருத்துத் தெரிவித்தன. இப்படி கருத்துத் தெரிவித்தவர்களையும்  அவர்களின் கருத்தையும் கண்டாலே இந்த வழக்கின் தீர்ப்பில் யார் யாரெல்லாம் பின்புறத்தில் விளையாடி இருப்பார்கள் என்பதை அறியலாம். ஒன்று சுப்ரமணியம் சுவாமி. இவர் சொன்னார் இந்த வழக்கின் தீர்ப்பைக் கண்டபிறகாவது  தன்னால் அநியாயமாக  கைது செய்யப் பட்ட  சுவாமிகளை காஞ்சி மடத்தில் போய்க் கண்டு அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார். மற்றவர் இராம கோபாலன் சங்கராச்சாரியார்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது இந்து மதத்திற்கும், துறவிகளுக்கும் கிடைத்த வெற்றி என்கிறார் ராம.கோபாலன். அதாவது பிராமண  துறவிகள் என்பவர்கள் இப்படியெல்லாம் ஆட்டம் ஆடினாலும் இறுதியில் தண்டிக்கப் படமாட்டார்கள் என்கிற மனுநீதியின் சட்டத்தின் ஷரத்தே  வெற்றி பெற்றது  என்பதையே அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்றே எண்ண வேண்டியுள்ளது. 

ஆனால் ஒன்று இந்த வழக்கின் தீர்ப்பின் முக்கிய அம்சம் குற்றம் அரசுத்தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதே. குற்றவாளிகள் அல்ல என்பதல்ல தீர்ப்பு. குற்றவியல் வழக்கறிஞர்களின் கூற்றுப் படி இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப் பட்டால் நீதி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். 

இந்த வழக்கில் இத்தனை பேர் குற்றம் சாட்டப் பட்டு இருந்தும் அவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை என்பது வழக்கு மன்ற வரலாற்றில் அதிசயம். அத்துடன் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டார் என்பது உண்மை. அப்படியானால் அவரைக் கொன்றது யார்? இதைக் கண்டு பிடிப்பதற்காக அதற்காக அரசு செய்யும் முயற்சிஎன்ன? இதோ சங்கரராமனின் மகன்  ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா? என்று நெத்தியடியாகக் கேட்கிறார். மேலும் வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டால் யாருக்கும் பயப்படாமல் தாங்கள் உண்மைகளை நீதிமன்றத்தில் சொல்வோம் என்றும் சொல்கிறார். 

இந்த வழக்கு ஆரம்பம் முதல் வழுக்கத்தொடங்கி தடுமாறிய புலன்விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்துமே உயர்ந்த அந்தஸ்தில் இருப்போரைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே நடத்தப் பட்டு அப்படியே முடிவடைந்து இருக்கிறது. இந்தியாவை ஆளும்  அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் என்ற ஒன்று எல்லோருக்கும் பொதுவானதா  இல்லை ஒரு சாரார் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாமா? என்பதே நமது நீதி மன்றங்களின் மீது நாம்   வைத்திருக்கும் கடைசி நம்பிக்கையின் ஆணிவேரையும் ஆட்டிப் பார்க்கிறது. 

இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவில்லை அது பற்றி அறிவிக்கவில்லை. பத்தாயிரம் மக்கள் நலப் பணியார்கள் ஒரே இரவில் பதவி நீக்கம் செய்யப் பட்டது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் காட்டிய அவசரத்தில் எள்ளின் மூக்கின் முனையளவும் கூட அரசால் செய்யப் படவில்லை. இப்படி சூ... டுப்.... என்று நீர்த்துப் போகச்செய்யும் வழக்குக்காக ஏன் மடாதிபதிகளை அரசு கைது செய்யவேண்டும்? பின் வழக்கை சரிவர நடத்தாமல் ஏன் வழக்கை குழி தோண்டிப் புதைக்க வேண்டும்?  Something Fishy.  பின்னணியில் இருந்த மருத்துவமனை விவகாரம் என்ன? 

இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்வுகள் தினமலர், தினமணி, தினத்தந்தி, நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவைகளின்       தொகுப்பேயாகும்.  பழைய  பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் இன்னும் முகம் சுளிக்க வைக்கும் செய்திகள்  இருக்கின்றன. அவற்றில்  முக்கியமானவை  காஞ்சி மடத்து காதல் லீலைகள் . அதே காஞ்சியில் பிறந்த அண்ணா எழுதிய ரோமாபுரி ராணிகள் நூலைப் போன்ற சுவராஸ்யமான செய்திகள் . அவற்றை  அடுத்த வாரம் பார்க்கலாம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும் .
ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இபுராஹிம் அன்சாரி

20 Responses So Far:

Unknown said...

நீதிக்கு தண்டனையும், அநீதிக்கு விடுதலையும் வாங்கிக்கொடுத்த நீதிபதிகளை என்னென்று சொல்வது.

இந்தியா நிறத்தால் மொழியால்,இனத்தால் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருமைப்பாடு என்ற சொல்லால் ஒரே நாடே என்று சொல்வது ஏட்டளவில் மட்டும் இருப்பது என்பது தெரிந்தது தான் என்றாலும்,

நீதி செலுத்துவதில் ஏழ்மை, செல்வம், இவற்றில் பாகுபாடு
காட்டுவதிலும் ஒற்றுமை உள்ள ஒரே நாடு.

நீதிக்கு தண்டனை,
அநீதிக்கு சிவப்புக்கம்பலமா?

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

காக்கா,

இவ்வளவு தெளிவான வழக்கிற்கு சட்டுபுட்டுன்னு குற்றவாளிகளை பொதுவில் வைத்து தலையை வெட்டிப்போட வேண்டாமா?

இனி யாருக்காவது அவாளை எதிர்க்க தில் வருமா? சட்டம் என்ன இப்படி கேலிக்குறியாகிப்போய்விட்டது!

justice delayed is justice denied என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த வழக்கு.


sabeer.abushahruk said...

பிரேமானந்தாவில் வெளிப்பட்டு நித்தியின் ரஞ்சிதத்தில் தொடர்ந்து சங்கரராமனின் கண்களில் பட்டு காமக் களியாட்டம் போட்ட சாமியார்களை இன்னும் நம்புகிறதே கேணைக்கூட்டம்.

ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் வருவது போன்றதொரு இயற்கையின் உபாதையாகிய "மூன்றை" எப்படி சமாளிப்பார்கள், இயல்புக்கு முரணாக வாழத்தலைப்படும் சாமிகள்?

இதுல எந்த சாமியும் நல்லவைங்களே கிடையாது; இன்னும் வீடியோவில் சிக்கவில்லை என்பதே உண்மை.

என்னதான் ஆதரபூர்வமாக அகப்பட்டு அகில உலகும் கொந்தளித்தாலும் கொஞ்சகாலம் கம்முனு இருந்தால் அப்புறம் ஜம்முன்னு வெளியே வந்து தந்தி தொலைகாட்சியைப்போன்றதொரு ப்ரொக்ராம்மில் தோன்றி பாவங்களுக்குப் பரிகாரம் சொல்லலாம் என்பதை நித்தி நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

இவிங்கள நெனச்சாலே சடப்பா வருது காக்கா.

தங்களின் தெளிவான கட்டுரைக்கும் நடுநிலையான பரிந்துரைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. இருப்பினும் காக்கா, இப்ப டெல்லியிலும் மோடிமஸ்த்தான் வேலைகள் துவங்கிவிட்டதால் மேல் முறையீடும்

ஸூ....... டொப்புதான்!

sabeer.abushahruk said...

இன்னொண்ணு,

இப்ப உள்ள தொழில்நுட்பத்தைக்கொண்டு சங்கரராமன் சாகும்தருவாயில் கொடுத்த வாக்குமூலம் சிக்கியிருப்பதாக புருடா வுட்டு, ஒரு நாளைய இயக்குனரின் திறமையைக் கொண்டு கிராஃபிக்ஸில் சங்கரராமன் ரத்த வெள்ளத்தில் சாகும் தருவாயில் இப்படிச் சொல்ல வாய்ப்புண்டு.

" நான் காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கும்போது காகா வலிப்பு வந்துவிட்டது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் வலிப்பின் மிகுதியில் கத்தி ஆடிஆடி என்னையே அறுத்துவிட்டது.
குழந்தை மனம் படைத்த அவாள் விளையாடிவிட்டு தூக்கிப்போட்ட காற்றுப்போன பலூன்களை காண்டம்ஸ் என்று தவறாக நினைத்து வெளியே சொன்ன என் தவறுக்கான சாமி குத்தத்தின் சாபமே என் சாவுக்குக் காரணம்"

அப்புறம் கேஸ் ஸூஸூஸூ டொப்டொப்டொப்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நடுநிலையாளர்களுக்கு நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்னு சொல்லி புக்கை பைண்டிங்க் செய்துட்டாய்ங்க !

//அதே காஞ்சியில் பிறந்த அண்ணா எழுதிய ரோமாபுரி ராணிகள் நூலைப் போன்ற சுவராஸ்யமான செய்திகள் .//

காஞ்சி என்றாலே ! கருவறையும் இழுத்து மூடுதாமே !?

உண்மையைச் சொல்லப்போனால் அவாள் உள்ளே போயிட்டு வெளியில வந்ததுமே வழக்கு முடிந்து விட்டதுன்னுதான் இருந்தோம்... இவய்ங்க என்னடான்னா கிளறிவிட்டு தீர்ப்புங்கிற பேருல்ல கிச்சு கிச்சு காட்டுறானுங்க...

Yasir said...

எங்கேயும் போகாமல் இந்த பிரச்சனைப் பற்றி அக்கு வேறு அசல் வேறாக தந்திருக்கும் முத்துபேட்டை பகுருதீன் காக்கா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

உண்மை வெளிவந்தே தீரும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...


குற்றம் சாட்டப்பட்டவருக்காக எவ்வளவு வளைந்து கொடுக்கமுடியுமோ சட்டம் அவ்வளவு வளைந்து கொடுத்தது. 3369 நாட்கள், 24 குற்றவாளிகள், 1873 பக்க குற்றப்பத்திரிகை, 189 அரசு தரப்பு சாட்சிகள் என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் உனக்கும் பேப்பே உங்க அப்பனுக்கும் பேப்பே என்று //

பணநாயகம் வென்றுள்ளது எனறு பலர் சொன்னாலும் காஞ்சி பக்தி பரவசத்தில் அத்தனை பேருக்கும் பேப்பே சொல்லிவிட்டார் நீதிபதி.

மனுநீதி தீர்ப்பை குடுமியில வைத்து ஆடுரவனுகளிடம் மனித நேயம் கியாம நாள் வரை வராது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆக தீர்ப்பு விலை கொடுத்தும் வாங்க முடியும்
ஆதாரமே இல்லாமல் மனசாட்சி அடிப்படையிலும் கொடுக்க முடியும்
ஆள் பார்த்தும் கொடுக்க முடியும்

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே! நண்பர்களே!

தீர்ப்பு "பூ" வென்று போய்விட்டது. இதுவரை மேல் முறையீடு பற்றி பேச்சு மூச்சையே காணோமே!

ஏற்காடு பிளாஸ்திரி ஓட்டி இருந்தது தானாக காய்ந்து விழுந்துவிட்டது. . இப்போது பாராளுமன்றத் தேர்தல் பிளாஸ்திரி புதிதாக ஓட்டப பட்டு இருக்கிறது.

சிரம் அறுத்தல் வேந்தருக்கு
பொழுது போக்கும் இனிய கதை - ஆனால்
அதுவே நமெக்கெல்லாம்
உயிரின் வாதை - என்று பாரதிதாசன் பாடினார்.

ஒரு தன்னார்வ அமைப்பு இந்த வழக்கை எப்படி மேல் முறையீடு செய்யலாம் என்று சட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக ஒரு தகவல் .

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம்.

இந்தப் பதிவின் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரமும் வரவிருக்கிறது.

Unknown said...

//ஆக தீர்ப்பு விலை கொடுத்தும் வாங்க முடியும்
ஆதாரமே இல்லாமல் மனசாட்சி அடிப்படையிலும் கொடுக்க முடியும்
ஆள் பார்த்தும் கொடுக்க முடியும்//

இதற்க்குபெயர்தான் இந்திய குற்றவியல் சட்டம்.



sabeer.abushahruk said...

இந்த வாரம் கருத்துகளுடன் எதிர் வாதமோ சார்புரையோ நிகழ்த்தவில்லையே காக்கா, தாங்கள் வேலைசோலியாகிப் போனீர்களா அல்லது எங்கள் கருத்துகள் இம்முறை சப்பையா?

ஏனெனில், தங்கள் பதிவுக்கு நிகரான உபயோகம்/கலகலப்பு/சுவாரஸ்யம் அப்பதிவிற்கான கருத்துகளுடனான தங்களின் நேர்/எதிர் வாதங்கள்.

இம்முறை அது ஸூ...டொப்!

பிஸியோ?

sabeer.abushahruk said...

காதரூ,

முழிச்சிட்டியா? டி குடிச்சிட்டியா? தலை சீவிட்டியா?

சரி, காக்கா வராட்டி போறாக நீ சொல்லு. இதைவிட மரத்தடி பஞ்சாயத்தும் சொம்புத் தண்ணி குடிச்சிட்டு சொல்லும் தீர்ப்பும் பெட்டரா இல்லையா?

அங்கே மேல்முறையீட்டைக்கூட அங்கேயேதான் செய்யனும், "நாட்டாம، தீர்ப்ப மாத்திச் சொல்லு" அப்டீனு.

இவிங்களப் பத்தி மேல்முறையீடு வொர்த்துன்றே?

sabeer.abushahruk said...

சீக்கிரம் சொல்லுடா.

அப்புறம் அலாவுதீனின் அருமருந்து வந்துட்டா ரொம்ப பேச முடியாது; தசுவுமனியைக் கையில் கொடுத்த மாதிரி ஆயிடும்; வேற சிந்தனை வராது.

(தலை சீவிட்டியா?)

sabeer.abushahruk said...

பக்கம் பக்கமாய்க்
குற்றப் பத்திரிகை

அக்கம்பக்கமெல்லாம்
புலண் விசாரனை

வாதி பிரதிவாதி
வாதம் எதிர்வாதம்

வழக்கு வாய்தா
சுத்தியடிச்சு ஒத்திவைப்பு

கருப்பு அங்கி
வெளுத்துப் போகும்
காதோரம் - வக்கீலுக்கு
நரைத்துப் போகும்

வாட் சமோசா மிளகா பச்சியின்
பாமாயில் அடைப்பு
பரலோகம் அனுப்பும்

மேல்முறையீடு முடியுமுன்
குற்றவாளி
சொகுசாக
வாழ்ந்து முடித்திருப்பான்

இன்னுமொரு ஸூ...டொப்புக்கு
என்னதான் அவசியம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பக்கம் பக்கமாய்க்
குற்றப் பத்திரிகை//

வெட்கம் வெட்கம்
தலை
குனிறது பாரதம் !?


//அக்கம்பக்கமெல்லாம்
புலண் விசாரனை//

துக்கம் விசாரிக்க
புல்லுருவிகளின் புலம்பல்


//வாதி பிரதிவாதி
வாதம் எதிர்வாதம்//

சாதிவெறி கயவர்கள்
தீவிர'வாதம்' செய்தனர்..


//வழக்கு வாய்தா
சுத்தியடிச்சு ஒத்திவைப்பு//

வழக்கெல்லாம் அழுக்கு
புதுவை விதைத்தோ இழுக்கு !


//கருப்பு அங்கி
வெளுத்துப் போகும்
காதோரம் - வக்கீலுக்கு
நரைத்துப் போகும்//

வழக்காடு மன்றத்தில்
நீதி தேவைதை
வழுக்கி விழுந்தாள்!


//வாட் சமோசா மிளகா பச்சியின்
பாமாயில் அடைப்பு
பரலோகம் அனுப்பும்//

அபிஸ்து...
துஸ்மனைத் தான்
துண்டாக்கிட்டாரே !


//மேல்முறையீடு முடியுமுன்
குற்றவாளி
சொகுசாக
வாழ்ந்து முடித்திருப்பான்//

மட(ம்)மை பூசி
மறைப்பதே அவாள்
மரபு !


//இன்னுமொரு ஸூ...டொப்புக்கு
என்னதான் அவசியம்?//

உடைந்தது..!

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

நான் அவ்வளவு பிசி இல்லையே! கேள்விகள் ஒன்றும் இல்லையே பதில் அளிக்க.

மற்றபடி தங்களின் கவிதைக்குப் பல பின்னூட்டங்களை நான் இட்டு இருக்கிறேனே.

இபோதுதான் ஒரு கேள்வி வந்து இருக்கிறது.

//இன்னுமொரு ஸூ...டொப்புக்கு
என்னதான் அவசியம்?//

ஒதுங்க முடியாது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் சாயத்தை வெளுத்துக் கட்ட வெளுத்துக் காட்ட வரும் வாய்ப்புகளை அவசியம் பயன்படுத்த வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்.

அதே நேரம் விடியாத இரவுக்கு சங்கு ஊதி என்ன பிரயோஜனம் என்கிற ஆதங்கமும் இருக்கிறது.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இபு ஒரு கலக்கு கலக்கி இருக்கிறீர்களே. பாராட்டுக்கள்.

sheikdawoodmohamedfarook said...

கொலை செய்யப்பட்டது சங்கர ராமன் மட்டுமல்ல; நீதிதேவதையும்தான்.புதைக்கப்போகிறார்களா?எரிக்கப்போகிறார்களா?கொள்ளி வைக்கும் தலைமகன் யாரோ!

sheikdawoodmohamedfarook said...

ஆடிதள்ளுபடியில் நீதி விற்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை;மற்றும் ஒன்னு வாங்கினால் ஒன்னு இலவசமும் கிடைக்கலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு