Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 30 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2014 | , ,


கண்களை அலங்காரம் செய்தல் (பெண்களுக்கு மட்டும்):

கீழே அலஅங்காரம் பற்றி எழுதியுள்ளேன் கணவனுக்கு மட்டும் காட்ட அலங்கரம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது ஆனால் அந்த அலங்காரத்தை அன்னியனுக்கு காட்டுவதாக இருந்தால் மட்டுமே அலங்காரம் செய்வது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

வெளியில் செல்லும் கணவன், மாலையில் வீடு திரும்பும் போது களைப்புடன் வருவான். களைப்பாக வரும் கணவனை உற்சாகமூட்டி கவரும் வகையில் தன் அழகை மெருகூட்டிக் கொண்டால் நல்லதுதானே. அதைச் செய்யத் தயங்கும் தன் மனைவி மீது எரிந்துவிழத் துவங்கும் கணவன். காலப் போக்கில் வேறு பாதையில் திசைமாறிச் செல்கிறான். சில நல்ல கணவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் கூட தங்களை அலங்கோலமாகக் காட்டிடும் மனைவியால் அங்கு சண்டைச் சச்சரவு தொடர்ந்து ஏற்படத்தானே செய்யும்.

பொதுவாக, நீ உன் குழந்தைப் பருவத்திலேயே ஆடை அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்துவாய். அதை இப்போது கைவிட்டு விடாதே! உன் கலருக்கு ஏற்ற கலர் ஆடைகளைத் தேர்வு செய்து நல்லவிதமாக அலங்காரம் செய்து கொள்! கண்களுக்கு சுருமா இட்டு, நறுமணம் பூசி, பூச்சூடி, சிரித்த முகத்துடன் கணவரை வரவேற்றுப் பார்! அளவிலா மகிழ்ச்சி கிடைக்கும். சோர்ந்து வரும் உன் கணவர், சுறுசுறுப்பாகி விடுவார். உன்னைச் சுற்றி சுற்றி வருவார். இது ஒன்றும் மார்க்கத்தில் தடை செய்யப் பட்டதல்லவே! ஆனபடியால் மேற்கொண்டு  வரும் தகவல்களுக்கு தயவு செய்து யாரும் தவறாக கருத்திட வேண்டாம் கண்ணை பற்றி எழுதும்போது எதையும் மறைக்க கூடாது என்பதால் எல்லாவற்றயும் எழுதிடலாம் என்பதால் அலங்காரம் பற்றியும் எழுதுகின்றேன்

மேலே நான் மேற்கோள் காட்டிய  விளக்கத்தில் அலங்காரம் எதற்கு செய்ய வேண்டும் என்பதை புரியலாம். ஆனால், தற்போது அதற்கு நேர் எதிரான
நிலைகளை மேற்கொண்டு கணவனின் அன்பையும், இறையன்பையும்
இழந்து நிற்கும் முஸ்லிம் பெண்களை என்னவென்பது! மகளே! வீட்டில் கணவர் அருக்கும் போது தலைவிரிக் கோலமாக காட்சியளித்துவிட்டு அன்னிய ஆடவர்களுக்கு உன் அழகை காட்டாதே

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாதுஎன்று திருகுர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையானஅலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள்தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிரமற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்,தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” (அல்குர் ஆன் 24: 31)

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்றஅலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கவேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும்.  கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். 

இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. 

ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வளரும்
(வளரும்
அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் - 5 - [இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?] 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2014 | ,


இஸ்லாம் எந்தளவுக்கு நடைமுறைக் கேற்ற மார்க்கம் என்பதை நம் அன்றாட வாழ்விலும், செய்திகள் மூலமும்  அறிந்து கொள்கிறோம். முன்பு பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்வித்தார்கள். பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளும் தன் கணவனை / மனைவியைக் காதலித்தார்கள். பிரச்சினைகள் எழவில்லை, அப்படி எழுந்தாலும் அதன் அளவு மிக மிகக் குறைவே,அதையும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டார்கள்.

ஆனால், இன்றைய நவீன??? கால உலகில் திருமணத்திற்கு முன்பே திருட்டுக் காதல், கள்ளக் காதல் என்று எல்லா சமூகங்களிலும் பெருகி வருவது மிக மிக கவலைக்குரியதாகும். பிற மதங்களில் இவ்வாறு நடப்பது என்பது ஒரு பெரிய விஷயமல்ல. காரணம், ஆண்/பெண் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் சட்டங்கள்-திட்டங்கள் அவர்களின் மத நூற்களில்  கிடையாது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று அவாள்களின் புராணக் கதைகளும், சிலைகளின் சிற்ப வேலைப்பாடுகளும் காட்டுகின்றதே தவிர, நல்ல விஷயங்களை போதிக்கவில்லை. அதனால் அவர்கள் பாழுங்கினற்றில் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

நம் மார்க்கத்தைப் பொருத்தவரை, நமக்கென்று தெளிவான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. யார் யார் எப்படி நடக்க வேண்டும், சிறுநீர், மலம் கழிக்கும் முறையைக் கூட ஆரோக்கியம் பேணும் வழிமுறையாக கற்றுத் தரும் நம் மார்க்கத்தில் சிலர் புதிய சிந்தனைகளால், அதனால் ஏற்பட்ட கோளாறினால், "நான் ஷைத்தானுக்கு மச்சான்" என்ற ரீதியில் செயல்படுவதனால் அவரும் தறிகெட்டு, அவரைத் தொடர்ந்தவர்களும் நிலை தடுமாறி, நரக நெருப்பை சந்திக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

"ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் இருப்பான்" (ஆதாரம் : அஹ்மது) என்ற நபிகள் நாயகத்தின் அருள் மொழியை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு நிதர்சனமென்பது புரியும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையினால், கூடவே இருக்கும் ஷைத்தானை மறந்து விடுகிறார்கள். அந்த ஷைத்தான் - அந்த பிள்ளைகளை நரக படுகுழியில் தள்ளும் முயற்சியை தூண்டி விடுகின்றான்.

இன்று தொலைக்காட்சிகள், இணையதளங்கள், செய்தித்தாள்கள் என எதிலும் நிறைந்திருக்கும் கள்ளக் காதல், காதலன் ஏமாற்றியதால்,கணவனின் அல்லது மனைவியின் கள்ள தொடர்பால் தற்கொலை அல்லது கொலை இப்படியான செய்திகள் வியாபித்திருப்பவைகள் தான் அதிகம், அதிகம். இவைகளை களைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு - அடிப்படை மார்க்க அறிவினை போதிப்பது இன்றியமையாக் கடமையாகும்.

தன் பிள்ளைகள் டாக்டர், எஞ்சினியராக வேண்டும் அதன் மூலம் பெண் வீட்டைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று ஆண் மகனைப் பெற்ற பெற்றோரும் என் மகள் மெத்தப் படித்தவள் என்று தன் மகளைப் பெற்றோரும் பீற்றிக் கொள்கிறார்களே தவிர, என் மகன் அல்லது மகள் தொழக் கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய, அல்லாஹ்வையும், அவன் தூதரையுமே பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் என்று சந்தோஷப்படுகிறோமா? அவர்களை அப்படி வளக்கிறோமா ? அவ்வாறு செய்ய ஏவுகிறோமா ? இப்படி எண்ணுபவர்களின் சதவிதம் மிகக் குறைவு. அதனால்தான் முஸ்லிம் குடும்பத்தில் கூட இவ்வாறெல்லம் நடக்க அரம்பித்து விட்டது.அப்படி மார்க்கத்தை - அடிப்படை இஸ்லாமிய அறிவை ஊட்டவில்லை என்றால் இது தொடர் கதை ஆகிவிடும்.

இவைகளைக் களைய, நம் தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கிறது.முஸ்லிம் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் கடமை இருக்கிறது.அரசியல் பேச மட்டுமா இயக்கங்கள் !? அசிங்கங்களைக் களையவும் தான். நம்மிடையே இருக்கும் இயக்கங்கள் எல்லாம், ஒன்று கூடி ஒருவருக்கொருவர் அனுசரித்து மார்க்கத்தின் போதனைகளை ஒரே குழுவாக இருந்து எடுத்துரைத்தால் இன்னும் வலுவாக இருக்கும்.இது நடக்கக் கூடிய காரியமா? என தயவு செய்து அங்கலாய்க்கவோ, கமெண்ட் கொடுக்கவோ எண்ணாதீர்கள், மாறாக, சீரியசாக விவாதியுங்கள். அவரவர் இயக்க உறுப்பினர், அந்த அந்த இயக்க தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள், முடிவு செய்யுங்கள், காரியத்தில் இறங்குங்கள்,மாற்றத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் எல்லாம் இணைந்தால், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகும். ஒரே குரலாக எதிரொலிக்கலாம். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்க வலுவான ஒரு கூட்டணியாக ஏற்படுத்தி, தேர்தலில் நின்று சாதிக்கலாம். இவைகளுக்கு எல்லா கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். ஆனால்,இதற்கு  அந்தக் கட்சிகளின் / இயங்கங்களின் தலைவர்கள்தான் தங்களின் ஈகோவை கைவிட வேண்டும்.

"உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே, அல்லாஹ் அன்பை ஏற்படுத்தி விடக் கூடும், அல்லாஹ் ஆற்றலுடையவன்" - (அல்குர்ஆன் 60:7)

"உன் பகைவனை அளவோடு வெறு ! ஒருநாள் அவன் உன் நண்பனாக ஆகலாம்" (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்).

"எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களே!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆக, இறைவன் நாடினால், எதுவும் சாத்தியமே ! இதை அரசியல் கட்சிகள் / இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஓன்று கூடி, சிந்தித்து ஒரே தலைமையின் கீழ் செயல்பட முயற்சிக்க வேண்டும்.

இன்றொன்றையும் சொல்லியாக வேண்டும், மார்க்க விஷயங்களில், பிரச்சாரத்தில் கொள்கைகளை விளக்கி ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்ற உயரிய கொள்கையைக் கொண்ட எல்லா முஸ்லீம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாக பிரச்சாரத்தை பலப்படுத்தி, நம் களப் பணிகளை வீரியமாக ஆக்கினால் இன்ஷா அல்லாஹ் கை மேல் பலன் கிட்ட வாய்ப்பாக அமையும்.

கட்டுக் கோப்பான உறுப்பினர்களை கொண்ட இயக்கங்கள் அதன் தலைவர்களின் ஈகோவை மறந்து அல்லாஹ்விற்காக அவைகளை துறந்து செயல்பட்டால், ஒரே குரலாக மார்க்கப் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.

அரசியலுக்கு ஒரு கட்சி என்றும் மார்க்கம் போதிக்க மற்றொரு இயக்கமென்றும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக, செயல்பட முடியும். ஒரே குரலில், ஒரே முகம் கொண்டு, ஒரே லட்சியம் என வரும்போது இன்ஷா அல்லாஹ் நிறைய சாதிக்க இயலும்.

இந்த வேண்டுகோளை அனைத்து இயக்கங்களின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

ஏக இறைவன் அல்லாஹ்வுக்காக, நம் இதயத்தில் என்றும் நிலைத்து இருந்து கொண்டிருக்கும், இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?

இறைவன் நாடினால் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2014 | , ,

தொடர் -20

கடற்கரைப்பக்கம் காலார நடந்தவன், முத்துக்கள் அடங்கிய சிப்பிகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வானோ அத்தனை மகிழ்வெனக்கு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை தேடத் தொடங்கிய அனுபவத்தையே நான் அவ்வாறு உணர்கிறேன். இந்திய தேசிய உணர்வு அற்றவர்கள் என்று மூடர்களால் முத்திரை குத்தப் பட்டு பரப்புரை செய்யபப்டும் ஒரு சமுதாயம் , வரலாற்றால் விளம்பரப் படுத்தப்படும் மற்ற எல்லோரையும் விட வீரத்திலும் தியாகத்திலும் விலை மதிக்க முடியாத தொண்டுகளை ஆற்றி இருக்கிறது என்று அறிய, அறிய அதைப் பகிரப் பகிர நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. எண்ணிலடங்கா இஸ்லாமியத் தியாகிகள் என்கிற தலைப்பிட்ட பட்டியல் இதோ இன்னும் தொடர்கிறது. இதற்கு மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

ஹாஜி கருத்த ராவுத்தர் :-

தமிழகத்தின் தென் புறத்தில் , உத்தம பாளையத்தில் கல்விச் சோலை அமைத்து கல்விப்பணிக்காக கல்லூரியை அமைத்துத் தந்த ஹாஜி கருத்த ராவுத்தர் என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பரிணமித்தார் என்பதை இங்கு பகிர்வதில் பெருமைப்படுகிறேன். 

முதலாவதாக, எந்த ஒரு அரசியல் போராட்டம் என்றாலும் அதற்கு உரிய செலவுகளை செய்வதற்கு நிதி வேண்டும். 

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொள்வதில்லை 
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”

என்று ஒரு பாடல் உண்டு. பணமும் மனமும் படைத்திருந்த மாமனிதர்கள் மிகச் சிலரே. அவர்களின் மதிக்கத்தக்க மாண்பு பெற்றிருந்த செல்வந்தர் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்கள். காந்தியார் அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டம், பொதுக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் நடைமுறை செலவுகளுக்கு தனது இரும்புப் பெட்டியைத்திறந்து பணத்தை அள்ளி இறைத்தவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். நாட்டின் சுதந்திரத்துக்கு முன் தான் தேடிவைத்திருந்த செல்வம் பெரிதல்ல என்பதை பலமுறை தேவைக்குக் கொடுத்து நிரூபித்தவர். 

இவரது அஞ்சாத நெஞ்சுக்கு ஒரு உதாரணம் என்னவென்றால் ஹாஜி கருத்த ராவுத்தர் பிறந்து வாழ்ந்த கம்பம் பள்ளத்தாக்கில் சுதந்திர இயக்கத்தை ஒடுக்குவதற்காக, கதர்த் துணியை விற்கக் கூடாது என்று ஆங்கில அரசு தடை வித்தித்து இருந்தது. ஆனால் இந்த செப்படி வித்தை ஹாஜி கருத்த ராவுத்தரின் நெஞ்சில் கனல் வீசிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வின் முன் செல்லுபடியாகவில்லை. உத்தம பாளையத்தில் தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை அரசின் அடக்குமுறை உத்தரவுக்கு அஞ்சாமல் துவக்கினார். மராட்டிய மாநிலத்தில் இருந்து கதர் துணிகளை தடைகளை மீறி வரவழைத்து அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தட்டுப்பாடின்றி கதராடை கிடைக்க வழிவகுத்தார். 

வானளாவிய அதிகாரம் படைத்ததாக மார் தட்டிக் கொண்ட ஆங்கில அரசின் அடக்குமுறைகள் கூட ஹாஜி கருத்த ராவுத்தரின் செல்வாக்குக்கு முன் செல்லாக்காசாகின என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்கிறார்கள். 1922- ல் , பெரியகுளம் தாலுகாவின் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுக்கு காந்திஜியால் வழங்கப் பட்டது. மாநாடு நடத்தப் பட்டதன் முக்கிய நோக்கம் கிலாபத் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவித்தும் - எதிர்த்தும் மக்களுக்கு அந்த நடவடிக்கைகளை விமர்சனம் செய்து அவர்களது கவனத்துக்குக் கொண்டு வருவதே ஆகும். 

அன்னாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை தனது உணர்வுகரமான உரையாற்றலால் வீரம் கொப்பளிக்க வைத்தவர்களில் சேலம் வரதராஜுலு நாயுடு அவர்கள் முக்கியமானவர். ஹாஜி கருத்த ராவுத்தர் நடத்திய மாநாட்டிற்கு தலைமை தாங்க வரதராஜுலு நாயுடு அவர்கள் அழைக்கப் பட்டு இருந்தார். தலைவர் வந்து மாநாட்டுப் பந்தலில் அமர்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு கனத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கஷ்டப்பட்டு மேடையேறி தலைவரின் கையில் ஓர் கட்டளை இடப்பட்ட காகிதத்தைத் திணிக்கிறார். அதில் குறிப்பிட்டிருந்தது என்ன வென்றால் இந்த மாநாட்டில் வரதராஜுலு நாயுடு உரையாற்றக் கூடாது அப்படி உரையாற்றினால் உடனே கைது செய்யப்படுவார் என்ற எச்சரிக்கைதான் அந்தக் காகிதத்தின் உள்ளடக்கம். 

காகிதத்தை வாங்கிப் படித்த வரதராஜுலு நாயுடு எழுந்தார்; மைக்கைப் பிடித்தார். கண்ணியம் மிக்க ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களே! என்று அழைத்து தனது உரையைத் தொடங்கி, கிலாபத் இயக்கம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை முதலிய விஷயங்களை அலசி ஆழமான உரையை சற்றும் அஞ்சாமல் அயராமல் ஆற்றி அமர்ந்தார். கைது செய்ய வந்த காவல்துறை , ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற அரண் அங்கே அமர்ந்து இருந்ததால் அவரை மீறி தனது விலங்குகளை வைத்து வித்தை காட்ட இயலவில்லை. அந்த அளவுக்கு ஆங்கில அரசின் கட்டளையையும் காவல்துறையையும் கட்டிப் போட்டது ஹாஜி கருத்த ராவுத்தரின் கடைக்கண் பார்வையாகும். மாநாடு முடிந்து, உத்தம பாளையத்தின் எல்லை தாண்டிய பிறகே வழிமறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டார் வரதராஜுலு நாயுடு என்பது வேறு விஷயம். இப்படி தனது செல்வத்தாலும் செல்வாக்காலும் சுதந்திரப் போராட்டத்துக்கு துணை நின்றவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். பின்னாளில் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுடைய கல்விப்பணிக்காகவும் சமுதாயம் அவருக்காக துஆச் செய்யக் கடமைப் பட்டு இருக்கிறது. 

ஹாஜி முகமது மெளலானா:-

“மதுரைவாசி ஹாஜி முகமது
மவுலானா பெயர் மங்குமோ 
அவர் மனதிலே துயர் தங்குமோ!
மகிழ்வினோடு சிறையில் வாழும் 
மாட்சி தன்னை எண்ணுவீர் ! -"

என்று பாடினார் கம்பம் பீர் முகமது பாவலர். இந்தப் பாடல் மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி முகமது மெளலானா அவர்களின் தியாகத்தின் பானை சோற்றுக்குப் பதமாகும்.

1886-இல் பிறந்த முகமது மெளலானா தனது தொடக்கக் கல்வியை ஆங்கில வழிக்கல்வி மூலம் பெற்று பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். மதுரை முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜிமுகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில் பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிகுந்தவராக இருந்ததால் அந்நாளில் சுதந்திர தாகம் நிறைந்தவர்கள் வாங்கிப் படிக்கும் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை, ஹாஜிமுகமது அவர்களும் படித்து அன்றாடம் நாட்டின் நடப்புகளை கவனித்து அறிந்து வந்தார். 1910 இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.

ஆங்கிலேயக் கப்பல் கம்பெனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பெனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பும் இவற்றை உற்று நோக்கிக் கொண்டிருந்த மௌலானாவின் நாட்டுப்பற்றின் ஆர்வத்தை அதிகமாக்கின.

1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்தநாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது ஆங்கிலேயரின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவை இன்னும் பெரும் கவலைக்குள் ஆழ்த்தியது. அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராக ஆத்திரம் கொண்டார். துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை விரட்டும் வீரனாகத் தன்னைத்தானே கற்பனை செய்து கொண்டார். இவ்வாறு இளமையிலேயே தனது உணர்வுபூர்வமான ஆர்வத்தை நாட்டு நலனுக்காக அமைத்துக் கொண்டார். 

“சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது “ எனும் இலக்கணத்துக்கேற்ப சிறந்த நாவன்மை படைத்த முகமது மெளலானா அவர்கள் பேசத்தொடங்கினால் கூட்டம் வாய் பிளந்து கேட்கும் நாவன்மை படைத்தவராகத் திகழ்ந்தார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், இலக்கிய ரசனையுடனும் உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பி இவருக்கென்று ஒரு கூட்டம் கூடும். பல அறிஞர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்துப் பேசிய முறைகள்- அந்த சண்டமாருத எழுச்சி மிக்க சொற்பொழிவுகள் ஆங்கில அரசுத் தரப்பினரை அச்சம் கொள்ள வைத்தன. அரசு இவரை தனது இரகசிய கவனத்தின் பட்டியலில் வைத்துக் கொள்ளத் தொடங்கியது. 

1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. கள்ளுக்கடை வைத்து காசு பார்த்துக் கொண்டிருந்த கள்ளுக்கடை அதிபர்கள் இந்த மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலரை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்தியதால், அங்கு ஓர் கலவரம் உருவாகி, சமூக விரோதிகளால் பல கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறையோ சுதந்திரப் போராட்ட தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆகவே அரசு அடுத்த சந்தர்ப்பத்தை நோக்கி இருந்தது. 

தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்காக, மக்களைத் தூண்டிவிட்டார் என்ற கோழைத்தனமான குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தரப்பட்டது. சிரித்த முகத்துடன் சிறை சென்றார். 

மீண்டும் 1932-ல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் ஹாஜி முகமது மெளலானா கைது செய்யப்பட்டு, இன்னொரு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 

தீவிரமான மதப் பற்றும் பேணுதலும் ஒழுக்கமும் உள்ளவராக ஹாஜி முகமது மெளலானா அவர்கள் திகழ்ந்தார். அதில் சிறிதும் குறையாத அளவுக்கு நாட்டுப்பற்றும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் தலைவராகவும் , துணைத் தலைவராகவும் பதவி வகித்தும் தொண்டாற்றினார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.

இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி சிறையில் இருந்த முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் ஆகியவை கிடைத்திட வழிவகுத்தவர் என்று சிறைச்சாலைக் குறிப்புகள் இவரது செயல்களுக்கு சான்று பகர்கின்றன. முகமது மெளலானா சாஹிப் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! 

மாஷா அல்லாஹ் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி
================================================================
எழுத உதவியவை:
எஸ் கே. அமீர் பாட்சா – இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு 
எம். கவுது முகையதீன்- ஹாஜி கருத்த ராவுத்தர் – ஒரு பார்வை. 
நன்றி: பேராசிரியர் .மு. அப்துல் சமது.

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 33 ( நமது கல்வி- 5 ). 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2014 | , , , , ,

நமது கல்வியின் நிலை பற்றிய ஒரு அலசலை, கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம் ! என்ற தலைப்பில் இதே அதிரைநிருபர் வலை தளத்தில் 2012 பிப்ரவரி 04-ஆம் நாள் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் கல்வி பற்றிய பகுதியை இங்கு நினைவு கூறி, மேலும் சில கருத்துக்களுடன் இந்தத்தொடரை நிறைவு செய்ய விரும்புகிறோம். இதோ அந்தப் பதிவின் பகுதி.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம். எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாக உருவெடுக்கும் வகையில் - கிருத்துவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்து இருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.

உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் ந்ம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களை இந்த இந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள். சொந்த அனுபவத்தை கூறி சுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல் இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள். மாஷா அல்லாஹ்! அனைவரும் ஆப்ரிக, எகிப்திய, ஜோர்டானிய, பிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிருத்துவர்கள். ஒரு கர்னாடக மாநில இந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் சிதறிப்போய் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை நரி ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லை? ஏன் பின் தங்கி இருக்கிறது? ஏன் சக்தியற்று இருக்கிறது?

மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருககிரார்கள்? தொழில் வளர்ச்சியிலும், இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்கவைக்கவும், விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும், அநியாயமாக படை எடுக்கவும், அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களை தூக்கிலடவும், துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?

நம்மிடையே கல்வியறிவு இல்லாமை, நமக்குள் ஒற்றுமை இல்லாமை.

நம்மை விட ஏன் யூதர்களும், கிருத்துவர்களும் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும் முன்வைக்கிற நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகின்றோம் மறுத்து விடுகிறோம். யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான், அவர்களின் கல்வி வளர்ச்சி.

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள். 

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன. உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை. 

உலக கிருத்துவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%:; ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.

முழுக்க முழுக்க கிருத்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100% கல்வியறிவு பெற்ற நாடுகள் 15. ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை.

அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிருத்துவ நாடுகள் 98%. ஆனால் இஸ்லாமிய நாடுகள் 50% கூட தேறவில்லை. 

உயர் படிப்புக்கு செல்கின்ற கிருத்துவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர்படிப்புக்கு செல்வதில்லை.

ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர். ஆனால் , ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில் முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் நிந்தனைக்கு ஆளானோர், அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மை உலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர். கல்வி நிலையங்களை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர், பீட்டர், அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம். அல்லது சேர்க்கத்தானே பிரியப்படுகிறோம். 

தமிழகத்தை பொருத்தவரை கூட கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி.க கட்சி கூட தனக்காக ஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறது. அதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும் மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தையும், ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில் நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்? இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான் ஆண்டோம்- கல்வியை ஆளவில்லையே.! ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்வி நிலையங்களை ஆங்கில கிருத்துவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது? தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .

என்பதே அக்கட்டுரையின் பகுதி 

ஆயினும் பலமுறை பலருடைய இடிப்புரைகளுக்குப் பிறகு கல்வியின் முக்கியத்துவத்தைப் படிப்படியாக உணரத்தொடங்கிய சமுதாயம், பல ஊர்களிலும் கல்வி நிலையங்களையும் களை மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் நிறுவத் தொடங்கியது. இதிலும் சில வேதனையான விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறோம். 

அரசியல் அமைப்புச் சட்டப்படி மைனாரிட்டி சமூகம் என்ற பெயரில் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப் பட்டாலும் மைனாரிட்டி என்கிற வார்த்தையை வைத்து அங்கீகாரமும் அரசின் சலுகைகளும் பெற்றுக் கொள்வது ஒரு வணிக நோக்கில் அமைந்ததே தவிர உண்மையான சமுதாய முன்னேற்ற சிந்தனை இப்படித் தொடங்கப் பட்ட பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இல்லை. நம்மைப் போலவே மைனாரிட்டி சமூகமாக இருக்கிற கிருஸ்தவ சகோதரர்கள் தங்களின் மதத்தின் மேல் வைத்து இருக்கும் பற்று மட்டும் நடை முறையில் பாதி கூட நமது கல்வி நிலையங்களில் இல்லை. தொழுகைக்காக மட்டுமல்ல ஜூம்ஆ தொழக்கூட வசதிகள் செய்து தராத கல்வி நிலையங்கள் முஸ்லிம் மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கி வருவதுடன், பெரும் பணத்தை வசூல் செய்து தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனவே தவிர, பின் தங்கி இருக்கும் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்த உணமையாகப் பாடுபடுகிறோம் என்று எல்லா நிறுவனங்களும் சொல்ல இயலாது. இது ஒரு வேதனையான உண்மை. 

மற்றொரு வேதனையான உண்மை என்ன வென்றால் தப்பித்தவறி, பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட தான் படித்த படிப்புக்குத்தகுந்த அரசு மற்றும் தனியார் வேலைகளைத் தேடிக் கொள்வது இல்லை. அண்மையில் தமிழ்நாடு மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையங்கள் நிறைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரங்களை வெளியிட்டன. எத்தனை முஸ்லிம்கள் இத்தகையப் போட்டித்தேர்வுகளில் பங்கெடுக்க விண்ணப்பிக்கிறார்கள் என்று கணக்கை எடுத்துப் பார்த்தால் – இப்படி நாட்டில் ஒரு நிகழ்வு நடக்கிறதா என்று கூட நமக்கெல்லாம் தகவலோ அல்லது அவற்றில் கலந்துகொள்ளும் ஆர்வமோ அறிவோ இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். பாரத ஸ்டேட் வங்கி, நிறைய வேலைவாய்ப்புகளை விளம்பரப் படுத்தியது. அதே போல் பொதுத்துறை நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம்மில் படித்துத் தகுதிகள் இருந்தும் இப்படிப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பது இல்லை. அண்மையில் வெளியான ஐ. ஏ. எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இதற்குக் காரணம் , நமது சமூக வாழ்வில் ஊடுருவி ஆணிவேர்விட்டு வளர்ந்து நிற்கும் நமது வெளிநாட்டு மோகமே என்பதை ஐநா சபையில் கூட அறிவிக்கலாம். 

இந்தப் பதிவை எழுதும் நாங்கள் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறோம் . குற்றவாளிக் கூண்டில் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் பங்கு பெற்று, பத்துக் காசு செலவில்லாமல் சிபாரிசுக் கடிதம் இல்லாமல் கூட்டுறவுத்துறையில் பயிற்சி தணிக்கையாளராக பணியாற்றிய இப்ராஹீம் அன்சாரியும் , அதே கூட்டுறவுத்துறையில் உதவி அலுவலளாராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பகுருதீனும் அரசு தந்த வேலைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளிநாடு தேடி ஓடிய குற்றத்தை இங்கு ஒப்புக் கொள்கிறோம். இதே போல் எத்தனை பேர்?

கல்வியறிவு பெற ஆர்வமின்மை, கல்வி நிலையங்களின் சமுதாய நலனைப் பின்தள்ளி பணம் பார்க்கும் பழக்கம், படித்த படிப்பை அதே துறையில் பயன்படுத்தி முன்னேறும் ஆர்வமின்மை ஆகியவை நமது சமுதாயத்தின் சாபக்கேடு. 

கல்வியில் ஆர்வம உள்ள முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் தேவைப்பட்டால் அந்த நோக்கத்துக்காக உதவும் பல பொதுநல அமைப்புகளை அதிரையின் சகோதரர் மீராசா ராபியா அவர்கள் ஒரு முறை பதிந்து இருந்தார். அவருக்கு நன்றி கூறி அந்தப் பட்டியலை இங்கு தருவதில் மகிழ்கிறோம். பிளஸ் டூ தேர்வுகள் முடிந்து, பத்தாம் வகுப்புத்தேர்வுகள் ஆரம்பமான நிலையில் பலருக்கு இந்தப் பட்டியல் உதவலாம். இன்ஷா அல்லாஹ்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447

7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .

மேலும் முஸ்லிம்களால் நடத்தப் படும் கல்லூரிகள் மற்றும் பொறியால் கல்லூரிகளின் பட்டியலும் நமக்கு இந்த நேரம் பயன்படலாம். 

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

புதுக்கல்லூரி சென்னை

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி (SIET) சென்னை

காதிர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம்

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம்

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம்

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி மதுரை

மஸ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை திருநெல்வேலி

காயிதேமில்லத் கல்லூரி மேடவாக்கம், சென்னை

முஸ்லிம் கலைக்கல்லூரி திருவிதாங்கோடு

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை

அய்மன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி , சாத்தனூர், திருச்சி, 

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர்- சென்னை

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி பாபநாசம், கும்பகோணம் அருகில் 

ராபியாம்மாள் மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி, திருவாரூர்

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி , இராமநாதபுரம் 

அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக் கல்லூரி, அம்மாபட்டினம்.

முஸ்லிம்களால் நடத்தப் படும் பொறியியல் கல்லூரிகள் 

1. Crescent Engineering College, Chennai
2. Mohammed Sathak Engineering College, Kilakarai, Ramnad Dist
3. C. Abdul Hakeem College Of Engg. & Technology, Melvisharam, Vellore Dist
4. Noorul Islam College Of Engineering, Thiruvithancode, Kanyakumari Dist
5. M.I.E.T. Engineering College, Gundur, Trichy
6. M.A.M. Engineering College, Trichy
7. Sethu Institute Of Technology, Kariapatti, Virudhunagar Dist
8. Popular Engineering College, Tirunelveli
9. National Engineering College, Tirunelveli
10. A.M.S. College Of Engineering, Chennai
11. MEASI Academy Of Architecture, Chennai
12. Al Islam College of Engineering – Thirumangalakkudi- Aduthurai. 

அன்பானவர்களே! நேற்று! இன்று! நாளை ! என்கிற தலைப்பில் வந்த இந்த தொடர் தற்காலிகமாக விடை பெறுகிறது. 

இன்ஷா அல்லாஹ் சூடான நடப்பு அரசியல் கட்டுரைகள் அந்த இடத்தை அலங்கரிக்கும்.

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 33 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மன்னிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள், மேலும் அவர்கள் யாவரும் பகைமை பாராட்டாதவர்களாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதை அறிந்து நாம் படிப்பினைப் பெற்றோம். இந்த வாரம் சத்திய சஹாப்பாக்கள் என்போர் யார்? அவர்களின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்ன சொல்கிறது? என்பது பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

நாம் வாழும் இன்றைய நவீண யுகத்தில், மக்களின் கவனம் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும், நபி மொழிகளின்மீது இருப்பதைவிட உலக விசயங்களின் அதிக கவனம் செலுத்துவதையே விரும்புகிறார்கள். ஒரு அரசியல் தலைவன், சினிமா முன்னணி நடிகன், ஒரு இயக்கத் தலைவன், இவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள், நடிப்புகள், விவாதங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் நம் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்த சத்தியத் தோழர்களான அந்த ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றுக்கு இருப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை ஒட்டுமொத்த தியாகக் கூட்டத்தின் கண்ணியமிக்க, வீரமிக்க, எழுச்சிமிக்க வரலாற்றை மறக்கடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நபியவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ, அன்று முதல் அவர்களது மரணம் வரை அவர்களுடன் துணை நின்று அவர்களது மரணத்திற்குப் பின்னால் இந்த இஸ்லாத்தை உரிய முறையில் வருங்காலத் தலைமுறைக்கு எத்திவைத்து அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற ஒரு சமுதாயமே நபித்தோழர்கள். அவர்கள் பற்றி அறிந்து கொள்வது, அவர்களை நபிவழி சொல்லும் வடிவில் நம்புவது நம்முடைய இஸ்லாமிய நெறியில் ஒரு பகுதியாகும். 

‘நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று அதே நிலையில் மரணித்தவரே ஸஹாபி என அழைக்கப்படுவார்.’ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தகுதியை பெற்றுள்ளனர். ஆனாலும் ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து  அறிவித்தவர்கள் 1600ற்கும் குறைந்தவர்களே. ஸஹாபாக்களை அல்-குர்ஆன் 3 தரங்களாக வகுக்கிறது. 1-முஹாஜிரூன் 2-அன்ஸார் 3 -மக்கா வெற்றியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

ஒரு காலகட்டத்தில் நபித்தோழர்களைப் பற்றி படுமோசமாக விமர்சனம் செய்து, அவர்களின் கண்ணியத்தை கேளிக்கூத்தாக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சியா என்ற பிரிவாக பிரிந்தது. அதே நிலையை இன்று குர்ஆன் சுன்னாவை பற்றி பேசும் ஒரு கூட்டத்தார் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நம் அனைவரிடம் எழுகிறது.  நபித் தோழர்களை நாம் விமர்சிக்கவோ ஏசவோ கூடாது என்பது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. 

நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களுக்கு ஒரு சச்சரவின் போது நபித் தோழர் காலித் பின் வலீத் ஏசிவிட்டார் அந்த சமயத்தில் நபியவர்கள் பின்வருமாறு  கூறுகிறார்கள்.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) ஆதாரம் : புஹாரி 3673

நபித்தோழர்களிடம் பிழையிருந்தாலும் சரியிருந்தாலும் அவர்களை ஏசுவதற்கும் விமர்சனம் செய்யவும் யாருக்குமே உரிமை கிடையது. உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்று நபியவர்கள் கூறியிருப்பது நபித்தோழர்களின் உளத்தூய்மையையும், இஸ்லாத்துக்காக எவ்வளவும் செலவு செய்வோம் என்ற அவர்களின் தாராளத் தன்மையையும், தியாகத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

உண்மையில் நபித் தோழர்கள் செய்த வணக்க வழிபாடுகளையும், நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகளையும் ஒப்பிடும் போது கால அடிப்படையில் நாம் அதிகமாக வணக்கம் செய்வதாகத் தெரிந்தாலும் உளத்தூய்மையில் நபித்தோழர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசங்களுள்ளன. எனவே அதிகமாக வணக்கம் செய்வது பெருமையான அம்சமல்ல. ஒரேயொரு வணக்கம் செய்தாலும் முழுமையான உளத்தூய்மையோடு அதைச் செய்வதுதான் அவசியமானதாகின்றது. ஹுதைபியா உடண்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர்  காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால் நம்மைப் போன்றவர்களுக்கு எவ்வகையிலுமே நபித்தோழர்களை ஏசுவதற்கும் விமர்சனம் என்ற பெயரில் கிண்டலான வார்த்தைகள் சொல்லி அழைப்பதற்கோ எந்த அனுமதியும் இல்லை.

நபித்தோழர்கள் பற்றி ஆய்வு செய்யும் போது, அல்குர்ஆன் அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது? ஹதீஸ் அவர்கள் தொடர்பில் என்ன கூறுகின்றது? என்ற இரு பெரும் மூலாதாரங்களின் அடிப்படையில்தான் நபித்தோழர்கள் தொடர்பான ஆய்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அல்லாஹ் ஒரு சமுதாயத்தினரை ‘மோசமானவர்கள்’ என்று  சொல்லிவிட்டால்.  அவர்கள் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் நாம் அவர்களை ‘மோசமானவர்கள்’ என்றே கூறுவோம்.

அதே வேளை அல்லாஹ் ஒரு சமூகத்தை ‘நல்லவர்கள்’ என்று கூறிவிட்டால் அவர்கள் என்ன தீமைகள் செய்திருந்தாலும் அவர்களை நாமும் ‘நல்லவர்கள்’ என்றே சொல்வோம். ஏனெனில் நடைபெற்றவைகளை வைத்தே ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று நாம் தீர்மானிப்போம். நடக்கப் போகின்ற விடயங்களை வைத்து யாரையும் நல்லவர், கெட்டவர் என முடிவு செய்ய நம்மால் முடியாது. ஏனென்றால் நடக்கப் போவனவைப் பற்றிய அறிவு நமக்குக் கிடையாது. நடந்தவை, நடைபெற விருப்பவை அனைத்துமே தெரிந்தவன் அல்லாஹ் ஒருவனே. ஆகவே அல்லாஹ் ஒரு சாராரை நல்லவர்கள் என்று சொன்னால் அவர்கள் செய்கின்ற நன்மைகள் அல்லாஹ்வுக்குத் தெரிந்திருப்பதைப் போல அவர்களுடைய தீமைகளும் அல்லாஹ்வுக்குத் தெரியும் எனவே நன்மை, தீமை இரண்டும் தெரிந்துதான் அல்லாஹ் அவர்களை நல்லவர்கள் என்று சான்று பகர்கின்றான்.

இதைப் போன்றுதான் நபி(ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னால் நபித்தோழர்களுக்குள் என்னென்ன ஏற்படும் என்பது பற்றியும், அபூபக்கர் (ரழி) உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலீய் (ரழி) போன்றோரினால்  நடைபெறும் தவறுகள், பிழைகள் பற்றியும் அல்லாஹ் மிக அறிந்தவனாகும். எனவே அவர்களிடமுள்ள தவறுகள், பிழைகள் பற்றிய அறிவோடுதான் அல்லாஹ் அவர்களை ‘சிறந்தவர்கள்’ எனக் கூறியுள்ளான் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். ‘ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவர்’; என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் என்றால் அது நேற்றைய தூய்மை மட்டும் குறிக்காது நாளைய தூய்மையையும் குறிக்கும். ‘நம்பிக்கையாளர்’ என அல்லாஹ் ஒருவரைக் கூறினால் நம்பிக்கை விடயத்தில் அந்நபர் நம்பகமானவர் என்பது உறுதியாகிவிடுகின்றது. அவ்வாறுதான் அல்லாஹ் ஒருவரை ‘தூய்மையானவர்’ என்று சாட்சி சொல்லி விட்டால் மனிதனென்ற அடிப்படையில் சில தவறுகள் அவரிடம் காணப்பட்டாலும் அவர் கெட்டுப் போகமாட்டார்.

நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றி ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் உள்ளன, அவைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க ஹுதைப்பிய்யா உடன்படிக்கையில், ஒரு மரத்தடியில் 1400 ஸஹாப்பாக்கள் பங்குபெற்றார்கள், அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்ற பின் வரும் வசனத்தை வாசித்துப் பாருங்கள்.

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அவன் அருளினான். அவர்களுக்கு சமீபத்திலிருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்பத்ஹ் : 18) 

மேலும் நபித்தோழர்கள் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்.

முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இறக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூஉ, ஸஜ்தா செய்வோராக நீர் அவர்களைக் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் விளைவாக அவர்களின் முகத்தில் இருக்கும். ( சூரத்துல் பத்ஹ் : 29)

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விசயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்……‘ (சூரத்துத் தவ்பா : 100)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாகமாட்டார்கள். (வெற்றிக்குப்)  பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான  பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே  வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (சூரத்துல் ஹதீத் :  10) 

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும்  அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம்  புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில்  அவரைப் பின் பற்றியவர்களையும் மன்னித்தான். (சூரத்துத் தவ்பா : 117)

நபித்தோழர்களின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது.

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்தம் பின் முழர்ரிப் ஆதாரம் : புஹாரி 6428

நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால்வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். அறிவிப்பவர் : அபூ புர்தா ஆதாரம் : முஸ்லிம் 6629

எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்.  

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி). ஆதாரம்: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 20710

வழிகெட்ட ஷியாக்கள், நபித்தோழர்களை பற்றி கேவலமாக பேசியும் திட்டியும், விமர்சனம் செய்தும் தங்களுடைய கொள்கை வளர்த்துக் கொண்டார்கள். இன்று அதே ஷியாக் கூட்டம் ஈராக்கிலும், ஈரானிலும், சிரியாவிலும், லெபனானிலும் குர்ஆன் சுன்னா வழியில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னா மக்களை கொன்று குவித்து தங்களுடைய வெறித்தனத்தின் உச்ச நிலையில் உள்ளார்கள். நபித்தோழர்களை நேசிக்கும் முஸ்லீம்களை கொல்லும் ஒவ்வொரு ஷியாவும் ஷஹீதுடைய அந்தஸ்து பெற்றவர்கள் என்ற கொள்கையை வைத்து படுமோசாமான மனித இனமில்லா ஜன்மங்களாக உள்ளார்கள் அந்த ஷியாக்கள். அந்த அயோக்கிய ஷியாக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று தமிழ் பேசும் ஒரு சில மக்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து, அவர்கள் கொண்டு வந்த தீனுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்த சத்திய ஸஹாப்பாக்களை ஒரு சாதாரண மனிதர்களைப் போன்று தங்களுடைய பேச்சால் விமர்சனம் செய்து கேவலப்படுத்துகிறார்கள். போனாப்போகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் என்றும் நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் செய்வதோடு அல்லாமல், இது போன்ற விமர்சனங்கள் நபித்தோழர்களுக்கு செய்வதில் என்ன தவறு என்றும் வாதிட்டு தங்களின் தவறுகளை மறைக்க நடைமுறை வழக்கு மொழி என்று வெட்டி நியாயம்வேறு பேசி வருகிறார்கள். இது போன்ற கேடுகெட்ட கூட்டத்திலிருந்து நம் எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.

நபித்தோழர்களை நேசிப்போம், அவர்களை கண்ணியப்படுத்துவோம், அவர்களை கேவலப்படுத்தும் கயவர்களை களையெடுப்போம் என்ற சபதம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். காரணம், இந்த தூய மார்க்கம் இன்று நம்மிடம் கிடைப்பதற்கு அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷங்கள் நபித்தோழர்கள். அல்லாஹ் இந்த நபித்தோழர்களை வைத்தே திருக்குர்ஆனை பாதுகாத்தான், நபித்தோழர்களை வைத்தே ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துதர உதவி செய்தான். 

ஏதாவது ஒரு நபித்தோழர் பற்றி ஒரு துளி அளவு தீய எண்ணம் நம்மிடம் இருந்தால், நம்முடைய நேர்மையில் கோளாறு உள்ளது என்பதாக நாம் கருத வேண்டும். காரணம் அல்லாஹ்வும், அவன் தூதரும் கண்ணியப்படுத்தி சிலாகித்து பாராட்டிய நபித்தோழர்களை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும். மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தவறு செய்திருந்தால் அவற்றை பெரிதுபடுத்தாமல், அவர்கள் மேல் நல்லெண்ணம்கொள்ள வேண்டும்.

நபித்தோழர்கள் மேல் கண்ணியம் நமக்கு குறையுமானால், ஹதீஸ்களின் மேல் இருக்கும் நம்பிக்கை குறையும் வாய்ப்பு உருவாகலாம், பின்னார் குர்ஆனின் மேல் உள்ள நம்பிக்கையும் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்(நவுதுபில்லாஹ்). அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதியுள்ள மக்களாக ஆக்கி அருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

வெட்கமில்லை! வெட்கமில்லை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2014 | , , , ,

இற்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன், ‘பாரதமணி’ (நவம்பர் 1994) இதழில், கவிஞர் முத்துமணி என்பார் எழுதிய மரபுச் சந்தக்  கவிதை இதோ: தமிழகத்தின் அன்றைய சாக்கடை அரசியல் நிலையைத் தமது கருத்தின் கவிதைப் பதிவாக, இன்றைக்கும் பொருத்தமானதாக,

வெட்கமில்லை!  வெட்கமில்லை!  வெட்கமென்ப  தில்லையே!
மக்கள்முன்பு  மதிப்பிழந்து  நிற்கநேர்ந்த  போதினும் - (வெட்கமில்லை)

நிற்கவைத்து  மக்கள்கேட்கும்  நிலைமைவந்த  போதினும்               
சொக்கத்தங்கம்  போலியாகிப்  பல்லிளித்த   போதினும் - (வெட்கமில்லை)

சர்க்கரைக   லக்கப்பேசிச்   சாதிக்காத   போதினும்                           
கொக்கரித்து   விட்டுப்பின்பு   கொள்கைமாறும்   போதினும் - (வெட்கமில்லை)

சுக்கல்சுக்க   லாகிக்கட்சி   சுருங்கிவிட்ட   போதினும்  
ரொக்கம்ரொக்க   மாகவாங்கி   ரொம்பிவிட்ட   போதினும் - (வெட்கமில்லை)

மக்கிவிட்ட   கொள்கையோடு   மாரடிக்கும்   போதினும்                    
மெய்க்கலப்பில்   லாதுபேச   மேடையேறும்   போதினும் - (வெட்கமில்லை)

கைகலப்பி   லேயிறங்கிக்   களங்கப்பட்ட   போதினும் 
வெட்கமில்லை!   வெட்கமில்லை!   வெட்கமென்ப   தில்லையே!

பரிந்துரை : அதிரை அஹ்மது

கண்கள் இரண்டும் - தொடர் - 29 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2014 | ,


கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம். 

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்) பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம். 

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது. 

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும். 

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது. 

கண்களை பாதுகாக்க டிப்ஸ்:

சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவவும். •சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். •

கம்பியூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.• கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.. 

ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், கொண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வரும்
(தொடரும்)
அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் - 4 [பெண்ணே, இனிய மார்க்கம் தேடி வாராயோ] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2014 | , , , ,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் தலை விரித்தாடி வருவதை நாம் அறிவோம். 'வன் செயலர்களின் தலைநகர் டெல்லி' என அழைக்கப்படும் அளவுக்கு நம் இந்தியாவின் பெயர் உலகளவில் அறியப்பட்டு வருகிறது.

இதனைக் களைய 'இஸ்லாத்தின் தீர்வை' அமல்படுத்துங்கள் என்றால் கேட்பவர் இல்லை, இஸ்லாம் சொல்லும் தீர்வை அமுல் படுத்தினால், இஸ்லாம் வளர்ந்து விடும், பிற மதங்கள் காணாமல் போய்விடும் என்ற பயம்தான் இதற்கெல்லாம் காரணம். "நான் நாசமாகத்தான் போவேன், என்ன பந்தயம் " என்று சொல்லாமல், சொல்கிறார்கள். ஆனால், இவைகளால், நாள்தோறும் பெண்கள்தான் அவல நிலைகளுக்கு ஆட்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இதைக் கண்டுகொள்வோர் யாருமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி உரை உலகப் பிரசித்துப் பெற்றது என்பதை நாம் அறிவோம். அந்த உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. ஒவ்வொரு நட்டினதும் constitution ஆக வைக்கப்பட மிக மிக தகுதியுள்ளவை எனில் அது மிகையில்லை !

பெருமகனார் கூறுகிறார்கள் "மக்களே! பெண்கள் குறித்து, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமை உள்ளது. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப் பட்ட அமானிதம் ஆவர்...!"

“பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்பட்ட அமானிதம், அதைப் பேனுதலாக பாதுகாப்பது ஆண்களின் கடமை என்றும், பரஸ்பரம் இருவருக்கும் உரிமைகள் உள்ளன” என்றும் அண்ணலார் அவர்கள்  பறை சாற்றுகிறார்கள்.

இதே போன்ற அறிவிப்பை, நடைமுறையை எங்காவது, எந்த மதத்திலாவது காண இயலுமா ? இன்னும் பிற மதங்களில் பெண்களை தாசியாக நடைமுறைப் படுத்தியுள்ளன, அவர்களுக்கு சொத்துரிமையும் கிடையாது என்று சொல்லும் மனுதர்ம சூத்திரங்களை வைத்துக் கொண்டு - பெண்களை சுரண்டிக் கொண்டிருக்கும் சாமியார்கள், பாதிரியார்கள், முனிவர்கள் பதில் சொல்ல முடியுமா?

மதத்தின் விஷக் கருத்துகளை, மனுதர்ம சூத்திரங்களை வைத்து, மனிதரிடையே பாகுபாடு காட்டும் உயர்ந்த- தாழ்ந்த சாதிக் கருத்துகளை வைத்து, பிராமணன் என்றும் சூத்திரன் என்றும் கூறுபோட்டு, இன்னும் அவர்களை அடிமைகளாய் நடத்தும் சாதி இந்துக்கள் திருந்தவில்லையே ! இப்படி இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அல்லல்களை சொல்லில் வடிக்க இயலாது.

"இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களைத்தான் பார்க்கின்றான்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அருளியுள்ளார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூல் : முஸ்லிம்.

மனிதனுக்கு பல நிறத்தோல்கள் இருக்கலாம். பல நிலைகள் இருக்கலாம். ஏழையாக, பணக்காரனாக, படித்தவனாக, படிக்காதவனாக இப்படி இருக்கலாம். ஆனால், இவைகளால் அவன் சிறந்தவன், மற்றவன் தாழ்ந்தவன் அல்ல ! சிலர் உசத்தி சிலர் தாழ்த்தி அல்ல. அவரவரின் இறை அச்சமும், செயல்களும்தான் மனிதனை நல்லவனாகவும் உயர் பண்புள்ளவனாகவும் தீர்மானிக்கின்றன.

இப்படி ஒருவன் வாழத் தேவையான, நடைமுறைப்படுத்த இலகுவான, சரியான ஒரு திட்டத்தைதான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியும், செயல் படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்கள்.

நமக்கு வழைப்பழமும் கொடுத்து, உரித்தும் தந்து அதனைச் சாப்பிடு என்று கையிலும் தந்தாகி விட்டது, இஸ்லாம் என்ற பெயரில். அதை அப்படியே  மென்று விழுங்க வேண்டியதுதான் மீதிவேலை. சாப்பிட்டால் உனக்கு, எனக்கு,எல்லாருக்கும் நல்லது, உடனடி சக்தியுடன் போஷாக்கு கிடைக்கும்.

இல்லை, இல்லை எனக்கு வாழைப் பழமெல்லம் வேண்டாம், அரளி விதையே போதும் என்று சொன்னால் சாவு, இப்படி தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்து அதனால் வந்து விடப் போகின்றது? அப்படிதான் என்ன வேண்டியுள்ளது.

பிறமத புராணங்களும், வேதநூல்களிலும் ஏனைய மத புழுகுகளும் பெண்களை அடிமையாக்குகின்றன, மனிதர்களிடம் பாகுபாட்டை போதிக்கின்றது. கெட்ட வழிமுறைகளை புராணங்கள். இதிகாசங்கள் என்ற பெயரால் போதிக்கின்றனர். இதனால், இந்த உலகத்திலும் இழிவு.  அம் மறுமையிலும் இழிவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கும் உதவாத, நடைமுறை சாத்தியமற்ற போலிச் சடங்குகள். சம்பிரதாயங்கள். சட்டங்கள் வேண்டுமா ? அல்லது சாத்தியமானதும். நடைமுறைக்கும் ஏற்ற சத்திய இஸ்லாம் வேண்டுமா ? என்பதை மாற்றுமத நண்பர்களே,சகோதரிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தின் வேதம் திருக்குர்ஆன் சொல்கிறது, "உன்னையும் என்னையும் முதல் மனிதர் ஆதம் (அலை) மற்றும் அவர் மனைவி ஹவ்வா (அலை) இவர்கள் மூலமாக, இறைவன் படைத்தான்" என்கிறது.

ஆனால், பிறமத வேத புத்தகங்களிலோ, வர்ணங்கள் மூலமாக, தலை வயிறு கால் என்று சொல்லி தலித் மக்களை தள்ளி வைக்கிறது. இதுவா வேதம் ?

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் "மனைவியிடம் நல்லவரே, உங்களில் நல்லவர் (முஹம்மதாகிய) நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன் - ஆதாரம் : திர்மிதி

பெண்கள் மேல் தனிக் கவனம் செலுத்தி அவர்களை பல வகைகளிலும். கண்ணியப்படுத்தி உயர்ந்த நிலையில் அவர்களை வைத்து அழகு பார்க்கும் இஸ்லாத்தைப் பற்றி பிற மத சகோதர / சகோதரிகள் ஏனோ அதைப் படித்து, உணர்ந்து ருசித்து பருக வருவதில்லை. தூரத்தில் நின்று கொண்டு, காவிக் கூட்டங்களின் பொய்ப் பிரச்சாரத்தால் கல்லெறிகிறார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்! அந்தக் கல்லடியில் முஸ்லீம்கள் காயப் படலாம் கண் மூடலாம். ஆனால், இஸ்லாம் காயப்படாது, கண் துஞ்சாது ! நாளை மறுமையில் இன்று இழந்தவைகளை இன்ஷா அல்லாஹ் சேர்த்தே பெற்றுக் கொள்வோம்.

ஆனால் உங்களின் நிலையோ "(ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களை செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே, அவர்களுக்கு கைசேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள் (ஏக இறைவனை) மறுத்தோர், நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்" - திருக்குர்ஆன் என்ற திருக் குரானின் போதனையை எண்ணிப் பாருங்கள்.

ஆக! எனதருமை பிற சமுதாய மக்களே சீர்தூக்கிப் பாருங்கள் ! இன்றே விழித்துக் கொள்ளுங்கள்! எப்போதும் விடிந்து கொண்டிருக்காது. "அந்த நாள்" வருவதற்குள் அரளி விதைகளை ஒதுக்கி வைத்து விட்டு வாழைப்பழம் உண்ண வாருங்கள்! புது சக்தி பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கே புண்ணியமாகப் போகும்.
தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...!
இப்னு அப்துல் ரஜாக்

கூட்டணிக் கொட்டகைகள்! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , , ,

மர்ம முடிச்சுகளைக் கொண்டு
கட்டுப்போட்டு
மந்திர வார்த்தைகளால்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

சவாரி செய்ய வாய்ப்பில்லாமல்
திராவிடக் கட்சிகள்
சண்டிக்குதிரைகளாகிவிட...
ஆளும் பாரம்பர்யக் கட்சி
உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட
கூட்டணி அமைக்க இயலவில்லை

மசூதி இடிப்பிற்கும்
மாற்று மத அழிப்பிற்கும்
பேர்போனக் கட்சியுடன்
போதைக் கதாநாயகன் சேர
சரக்கிற்கு ஊறுகாயாய்
சாட்டையில்லா பம்பரமும்
மரத்தை வெட்டிப் பறித்த மாம்பழமும்

தேசிய நெடுஞ்சாலையின்
மரங்களைப் பார்த்து
மருத்துவருக்குக் கை பரபரக்க;
இனி 'இவரின்' நடைப்பயணம்
டெல்லி நோக்கி நீளும்

ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது

கூட்டணி கூத்தில்
குருடாய்ப் போனது
குருஜியின் நேர்-பார்வை !

எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்

பொதுவுடைமை பேசியோரும்
பெட்டிக்கடை கட்சிகளும்
சொற்ப வருமாணத்திற்கே
கடையைச் சாத்துவர்

தொகுதிப் பங்கீட்டுப்
பேச்சுவார்த்தைகளில்தான்
எத்தனைச் சுற்றுகள்!
பங்குச் சந்தையின்
இலாபக் கணக்கைப்போல

கூட்டணி தர்மப்படி
பெற்றோரைத் தவிற
யாவற்றிலும் சமரசம் என்றாகி
கொள்கைக்காரர்கள்
கொள்ளைக்காரர்களாகின்றனர்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
எழுத்துகளைக் கொண்டல்ல
எண்களைக் கொண்டே
நிரப்பப் படுகின்றன

ஆட்சியில் பங்கு -நுட்ப
அரசியல் பாங்கு;
வெளியிலிருந்து ஆதரவு - சுயம்
செழிப்பதற்கானக் காப்பீடு

குதிரைப் பேரங்களில்
லகான்களாகப் பணப்பெட்டிகளும்
ஆதரவுக் கடிதம் என்னும்
கள்ளச் சாவியும் கலைகட்டும்

கூட்டு யாரோடு யார் வைத்தாலும்
வேட்டு அவருக்கு அவரே வைப்பார்
ஓட்டு எண்ணிக்கை போட்டுடைக்கும்
நாட்டு மக்கள் குட்டு வைத்ததை

ஊர்க்கோடி சாமான்யனும்
நூருகோடியில் உரையாட - இந்தத்
திருவிழாக்காலம் விட்டுச்செல்வதோ
தீர்விலா கோலம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , ,

அப்ப...ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது....

இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார வர்க்க கிருமிகள்.

இந்த தூரோகத்திற்கு சட்டரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக அவர்களுக்கு கிடைக்கும் அதனை அனுபவித்தே தீருவார்கள்.

சின்னஞ்சிறுசுகள் பேச்சுவாக்கில் சொன்னது "இருக்கிற இருப்பு பாதையை அங்கிட்டாலேயும் இங்கிட்டாலேயும் இழுத்துப் போட்டுட்டு ரயில ஓட்டுங்கப்பான்னு".

அட! அப்படியே செய்தால் என்ன !?

கண்ணை மூடாம ஐந்தே வினாடிகள் பாருங்க...! இவ்வளவு ஈசியான வேலையை எவ்வளவு கஷ்டமா காட்டுறாய்ங்க !


ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் இந்த தருணத்தில் நினைக்கு வந்தால் தவிர்க்கவா முடியும்?

புகைப்பட பொக்கிஷம் : Sஹமீத்
அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு !

...ங்க ! டா ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 21, 2014 | , , , , ,

சாதிக்க வேண்டுமென்று..
சாதிக்கொரு கட்சியென்று..
ஆட்களை நிறுத்தி வச்சாங்க
ஐயாமார், அண்ணன்மார்
அதுக்கும் ஓட்டுப் போட்டாங்க
ஆளுக்கொண்ணா ஆகிப் போனாங்க !
அவிங்க ஆகிப் போனாங்க !!

பிராமணர், அவர் நம்மாளுதான்
வன்னியர், இவர் எங்காளுதான்
தேவர் இனம் நம்ம சனம்தான் என்று
ஆளுக்கொரு தேர்வா ஆகிப் போனாங்க
சாதி மக்க ஓட்டு போட்டாங்க !
அவிங்க சாதி சனம்
ஓட்டு போட்டாங்க !!

சிறுபான்மை இனமென்று
சொல்லிக் கொண்டாங்க
முஸ்லிம்கள் சொல்லிக் கொண்டாங்க
தேர்தல் தேதி வந்தவுடன்
ஆளாளுக்கு அடித்துக் கொண்டாங்க !
ஐயா! அடித்துக் கொண்டாங்க...

நம்ம கட்சியென்றும் இயக்கமென்றும்
பிரிந்து விட்டாங்க - நல்லா
முடிஞ்சு விட்டாங்க !
ஐய்யாவுக்கு நானென்றும்
அம்மாவுக்கு நீயென்றும்
கோஷம் போட்டாங்க !
எங்களை பிரிச்சே போட்டாங்க !

மோடி என்ற விஷப் பாம்பு
கொத்த பாக்குது  - மீண்டும்
கொத்த பாக்குது
காவிக் கூட்டம் நம்மை
விரட்டப் பாக்குது,
துறத்த பாக்குது

பாபர் பள்ளி
இழந்தாச்சு - இன்னும்..
புத்தி படிக்கல !
குஜராத் கலவரம்
கண்டாச்சு - இன்னும்
விழித்துப் பாக்கல !

ஐய்யாவோ ! அம்மாவோ..
முட்டுக் கொடுப்பார்(ள்)
மோடிக்கு முட்டுக் கொடுப்பார்(ள்)
அவன் எங்க தோள் ஏறி
எட்டி உதைப்பான் - எங்களை
எட்டி உதைப்பான் !

ஐயா தலைவர்களே !
எங்களுக்கு
கட்சியும் வேனாம்
இயக்கமும் வேனாம் !

எங்களை விட்டுவிடுங்க !
நாங்கள் முஸ்லிம்களென்றே
சாட்சி சொல்வோம் !
நல்லா சாட்சி சொல்லுவோம்
அல்லாஹ்வை மட்டுமே
நம்பி இருப்போம்... இன்னும்
நல்லா இருப்போம்,

இறைவனின் நாட்டப்படியே !
இன்ஷா அல்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக்

இது கவிதையல்ல... ஒரு சாமானியனின் வேதனை!

நேற்று! இன்று ! நாளை! – தொடர் - 32 ( நமது கல்வி- 4 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2014 | , , , , ,

முஸ்லிம்களின் கல்வி மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு உரிய காரணங்களை விவாதிக்கும் போது ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டும். எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதே அது. பிறகு அந்த ஆட்சியையும் ஆங்கிலேயர்களால் பறித்தெடுக்கப்பட்டு விட்டதால் வெள்ளையருக்கு எதிரான ஒரு உணர்வும் வேட்கையும்தான் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் முதலிடம் பெற்றது. படிக்க வேண்டும் -முன்னேற வேண்டும் - பதவி பெற வேண்டும் ஆளும் வர்க்கமாக ஆகவேண்டுமென்று எண்ணங்கள் அவர்களின் இதயங்களில் அரும்பவில்லை. அதன் விளைவுதான் முஸ்லிம்களே முன்னின்று நடத்திய சிப்பாய்க் கலகமும், மாப்பிள்ளைமார் புரட்சியும், இன்னும் பிற சிறு சிறு போராட்டங்களும் ஆகும். இதனால் முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷார் மீது ஒருவித வெறுப்பும், பிரிட்டிஷாருக்கு முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பும் அவர்களின் கல்வியை மற்றும் மொழியையும் படிக்கும் வெறுப்பில் போய் முடிந்தது. 

உத்தரப் பிரதேசத்தில் இன்றும் இருக்கும் புகழ்பெற்ற தேவ்பந்த் அரபுக் கல்லூரியின் மார்க்க அறிஞர்கள் “ ஆங்கிலம் படிப்பது ஹராம் “ என்று மார்க்கத் தீர்ப்பான பத்வா வழங்குமளவுக்கு அந்த வெறுப்பு விதைகளைத் தூவி நட்டு வளர்ந்த்தது. (காலத்தின் ஒரு கோலம இன்று அதே தேவ்பந்த் கல்லூரியில் பயின்ற சென்னை மக்கா மசூதியின் இமாம் மவுலானா சம்சுதீன் காசிமி , முஸ்லிம்களின் பின் தங்கிய கல்வியின் நிலையைப் போக்க இல்மி (ILMI ) என்று ஒரு இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறார். )

தோப்பில் மீரான் என்றொரு தென் தமிழகத்தின் தேங்காய்ப்பட்டினத்து நாவலாசிரியர் மண்ணின் கதைகளை மணத்துடன் பரிமாறுபவர் என்று இலக்கிய உலகில் தொடர்புடைய நண்பர்கள் அறிவார்கள். ‘இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி’ என்று கூறுவார்கள். அந்த வகையில் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மக்களின் வார்த்தைகள் வரலாற்றையும் வெளிப்படுத்தும். தோப்பில் மீரான் எழுதிய நாவல்களில் மக்கள் உரையாடிக் கொள்வதாக வரும் சில வார்த்தைகள் மக்களின் மனநிலையைக் காட்டும். அவற்றில் சில 

"அரபி அல்லாஹ்க்கா பாசே – இங்கிலீஷ் நஸ்ராநிக்கா பாசே" ( அரபி அல்லாஹ்வுடைய மொழி – ஆங்கிலம் கிறிஸ்தவர்களின் மொழி )

"ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் படிச்சா நரகம்தான் கிடைக்கும்"

"உலகம் அழியப் போகும் நாளின் அறிகுறிதான் ஆங்கிலக் கல்வி"

என்றும் கூற வைத்து இப்படிப்பட்ட நம்பிக்கைகள் முஸ்லிம்களின் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டு இருந்த நிலைமைகளை தோப்பில் மீரான் கோடிட்டுக் காட்டுகிறார். இப்படிப் பட்ட மனோநிலை அரபி மற்றும் பார்சி கூடவே உருது போன்ற மொழிகளைப் படிக்க முஸ்லிம்களைத் தூண்டியதே அல்லாமல் “ சீனா சென்றேனும் சீர்கல்வி பெருக” என்ற அரேபிய பழமொழியை மறக்கடித்தன. எந்த மொழியையும் கற்காதே என்று இஸ்லாம் தடைப் பட்டியல் இட்டு இருக்கிறதா? அன்னத்தில் வின்னத்தைக் கலக்கும் சமுதாய விரோதிகள் அப்போதே இருந்து இருக்கிறார்கள். 

இவ்வாறு பிரிட்டிஷார் மீதான் வெறுப்பின் காரணமாக, ஆங்கில மொழியும் அந்த மொழி மூலமான உலகக் கல்வியும் நமது சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டன. இதன் விளைவாக பல்வேறு கல்வியின் பரிணாமங்களின் துறைகளைக் கற்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் இழந்தனர். 

அலிகரில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்த சர். செய்யத் அகமது கான் போன்றோர் முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் நவீன ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்ட வேண்டுமென்று பரப்புரை செய்தனர்; வலியுறுத்தினர். பலருடைய எதிர்ப்பையும் மீறி சர். செய்யத் அகமது கான் அவர்களால் தொடங்கப் பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்ட பின்னரும் கூட அதில் சேர்ந்து படிக்க பல முஸ்லிம்கள் தயங்கினார்கள். காரணம் அலிகரில் படிப்பது நரகத்துக்குப் பாதை வகுத்துவிடுமென்ற பலரின் தவறான பரப்புரையே காரணம். அலிகர் பல்கலைக் கழகத்தின் நோக்கம் நிறைவேறி அது தன் வெற்றியைக் கண்ட பின்னரும் கூட பல பகுதிகளிலும் தயக்கமே காணப்பட்டது. இந்த நிலையில் முஸ்லிம்களின் கல்வி நிலை மீது இன்னொரு இடி இறங்கியது. 

1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்றது காங்கிரஸ் மாநாடு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இந்த மாநாடு இருந்தது. காரணம் இந்த மாநாட்டில்தான் ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய வைகளாக பதினோரு வழிமுறைகள் காந்தியால் அறிவிக்கப் பட்டன. அவற்றின் ஒன்று ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுமாகும். காந்தி முதல் நேரு வரை பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்த அறிவிப்பு ஒரு வேடிக்கையான அம்சம். 

இதற்குத் தலையாட்டி பலியானோரில் அதிகம் பேர் முஸ்லிம்களே என்பதே வேதனையான உண்மை. காரணம் இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கிலாபத் இயக்கம் . முஸ்லிம்கள் மட்டுமே பெருமளவில் பங்கு வகித்து, தன் வாயில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலையை ஏற்படுத்தியது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய உணர்வுப் பெரு ஆழி அலைகள். 

1920 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியின் பல பகுதிகளிலும் கிலாபத் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பள்ளிகள் , கல்லூரிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்த தீர்மானத்தை உணர்வுடன் நடை முறையும் படுத்தினர். இதே போல் தீவிரமாக சுதந்திர வேட்கையுடன் கல்வியையும் சேர்த்துப் புறக்கணித்த வேறு ஒரு சமுதாயம் இருந்து இருக்குமா என்பது சரித்திர சந்தேகம். 

கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்த மெள லானா முகமது அலி அவர்கள் 1921 – ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தின் தலைமை உரையில் முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் என்று முழங்கினார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமானால் அதற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள் படிப்பை புறக்கணித்ததால் ராணுவம் என்கிற ஒரு பெரும் வேலைவாய்ப்புத் துறையிலே அவர்களது வாடை கூட வீசாமல் போனது. 

 26/01/1921 அன்று சென்னையில் இருந்து வெளியான உருது நாளேடான ‘கெளமி ரிப்போர்ட்’ என்கிற பத்திரிகை , ‘ஒவ்வொரு முஸ்லிம் இளைஞன் மற்றும் மாணவனின் கடமை’ என்கிற தலைப்பிட்டு, ‘ “தங்களைப் படைத்த இறைவன் மற்றும் இறை தூதருக்காக, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித இலாப நஷ்டமும் பாராமல் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ்காரர்களின் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் “ என்று படித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்று சில இயக்கங்கள் மூளைச் சலவை செய்வது போல் செய்தன. 

இதற்கு மாறாக, முஸ்லிம் மாணவர்கள் கிலாபத் இயக்கத்தில் ஈடுபடுவதும் அவர்களை ஈடுபடுத்துவதும் அவர்களது கல்வியைப் பாதிக்கும் எனவே அவ்வித பங்கேற்பையும் அதற்கான அழைப்பையும் முஸ்லிம் மாணவர்கள் புறக்கணித்துவிட்டு படிக்கச் செல்ல வேண்டுமென்று உருது நாளேடான ஜார்தா – இ- ரோஜ்கார் தலையங்கம் ( 12/02/1921) தீட்டி எச்சரித்தது. இதையேதான் அண்மையில் ஒரு இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தில் மாணவர்களை விலகி இருக்கும்படி நாமும் சொன்னோம். அதற்காக நியாயமற்ற முறையில் தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டோம்.

இவை போன்ற அரசியல் மற்றும் இயக்க உணர்வுகளால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. பலர் படிப்பை பாதியில் விட்டனர். 1920-21 ஆம் கல்வியாண்டில முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சென்னை மாகாண நிர்வாக அறிக்கை குறிப்பிடும்போது “1920-21–ல் சென்னை மாகாணத்தில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 4,420 குறைந்தது. இதற்கு, கிலாபத் இயக்கத்தின் தாக்கமே காரணம் “ என்று குறிப்பிடுகிறது. 

ஒரு வேதனையான உதாரணத்தைச் சொல்லலாம். 1921-ல் கிலாபத் இயக்கத்தின் தீவிரம் காரணமாக வாணியம்பாடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் , பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஊரை விட்டு விலக்கி சமுதாயப் புறக்கணிப்பு செய்வது என்று கூட தீர்மானித்தனர் என்று ஒரு குறிப்பு இந்த துரதிஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 75 % குறைந்தது. 

1920 – ஆம் ஆண்டு, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் , இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. சென்னை முகம்மதன் கல்லூரிக்குப் பிறகு இது இரண்டாவது கல்லூரி. 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வித்துறையின் இயக்குனரின் அறிக்கையில் வாணியம்பாடிக் கல்லூரியைப் பற்றி குறிப்பிட்டு கடைசியில் ஒரு செய்தியைச் சொ௦ல்கிறார். அந்தச் செய்தி, "கிலாபத் நாட்களில் வாணியம்பாடிக் கல்லூரி நின்று தழைக்குமென்று கல்வித்துறை நம்பவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்தக் குறிப்பு அன்றைய நிலையை சொல்லாமல் சொன்னது. 

வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி தொடங்கப் பட்ட நேரத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கல்லூரியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டுமென்று அரசு விதி வகுத்து இருந்தது. ஆனால் சோகத்திலும் சோகம் கிலாபத் இயக்கத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆங்கில முறைக் கல்வியை புறக்கணித்த காரணத்தால் விதிகளை மீறி பிற மத மாணவர்கள் அதிகம் சேர்க்கப் பட்டனர். 

காந்திஜி முன் மொழிந்த ஒத்துழையாமை இயக்கத்தை உயிரோட்டமுடையதாக ஆக்குவதற்கு தோளோடு தோளாக நின்ற கிலாபத் இயக்கத்தின் தாக்கம் , முஸ்லிம்களின் சுதந்திர தாகம் அவர்களின் கல்வியை பலி கொண்டது. முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை சந்தித்தது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் வரை தங்களின் படிப்பைப் பாதியில் விட்டனர். சுதந்திர போராட்டத்துக்கும் முஸ்லிம்களின் கல்வி உணர்வு காவு கொடுக்கப்பட்டது. அதே நேரம் மற்றவர்கள் கல்வியில் முஸ்லிம்களைவிட முன்னேறினார்கள். 

இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டுமென்ற ஆவலும் செயல்பாடும் மிக தாமதமாகவே முஸ்லிம்களுக்கு மூளையில் உரைத்தன. அதன் பின்புதான் திருச்சியில் ஜமால் முகமது, அதிராம் பட்டினத்தில் காதிர் முகைதீன், உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர், சென்னை புதுக் கல்லூரி, மதுரையில் வக்பு போர்டு, பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா ஆகிய கல்லூரிகள் துவங்கின. பெண்களுக்காக, ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் அவர்களால் சென்னையில் S I E T கல்லூரியும் தொடக்கமாக துவங்கி வைக்கபப்ட்டன. இந்தக் கல்லூரிகளைத் துவக்கிய பெருமக்களுக்காக நாம் அனைவரும் துஆச் செய்வது நமது சமுதாயக் கடமை. அண்மையில்தான் வணிக நோக்கோடு கீழக்கரை, இராஜகிரி முதலிய பல ஊர்களிலும் முஸ்லிம்களால் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் எவ்வளவு முஸ்லிம்கள் பயில்கின்றார்கள் அவை எவ்வாறு நமது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன என்பது விவாதத்துக்கு உரியது. 

ஆயினும் இன்னும் கல்வியில் தொடர்ந்து பின் தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் இன்னும் உணரவேண்டும். இதைப் பற்றி இன்னும் விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு