Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் சாச்சா சாச்சிக்கு ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 04, 2014 | , , , , ,


என் சாச்சா சாச்சிக்கு,

இளைப்பாறுகிறீர்களா
இம்மையை -  நல்ல
தன்மையாய் வென்ற
தம்பதியரே?

நீங்கள்
நடந்து கடந்த தூரத்தைவிட
சுமந்து கடந்த தூரமே அதிகம்

நடந்தபோது
செருப்பாய் உழைத்த மனைவி
கொடியெனப்
படர்ந்தபோது
கொம்பாய் நிலைத்த கணவர்

சினந்தபோது முழுதாய்ச்
சகித்த மனைவி - வெட்கிச்
சிவந்தபோது கொலுசாய்ச்
சிணுங்கிய கணவர்

பெற்றவர்கள் சுமைகளல்ல
காணக்
கற்றவர்க்கு இமைகள்

நீங்கள்
உடனிருந்தால் வாய்ப்பது
வடிகட்டிய சுவாசமும்
வாழ்வாதாரத்திற்கான
அமானுஷ்ய கவசமும்

இப்படியொரு
இருப்பிடம் வேண்டுமானால்
யாவர்க்கும் வாய்க்கலாம்
இப்படியொரு இணை
எத்தனை
இருப்பிடங்களுக்கு வாய்க்கும்?

தலைவர் முன்னோக்க
தாயோ
புகைப்படம் எடுக்கும் தன்
தனையனை நோக்க
வாழ்க்கையின்
வெற்றி ரகசியம்
மெல்ல விளங்குகிறது
காணும் என் கண்களில்
ஆனந்தம் கசிகின்றது.

கேசம் வருடும்
தந்தையின் விரல்களும்
பாசம் பொழியும்
தாயின் மடியும்
வாய்க்கப் பெற்றவரே
வாழ்க்கைப் பெற்றார்

இன்னும்
இந்த இறக்கைகளுக்கடியில்தான்
எங்குமே கிடைக்காத - நாம்
ஏங்கித் தவிக்கும்
இதமான நிம்மதி
நிறைவாக இருக்கின்றது

வாழ்த்த வயதில்லை
நீடுழி வாழ்க என்று
வேண்டி நிற்கிறேன் இறையை
மாஷா அல்லாஹ்!

அன்புடன் மகன் சபீர் அபு ஷாஹ்ருக்

தொடர்ச்சியாக...ஒரு கோப்பை தேநீர்!

சற்றுமுன்
கடந்து சென்ற வாகனத்துள்
நானில்லாமல் போனாலும்
இனி வரயிருக்கும்
வண்டிக்குள் நானிருப்பின்
இந்த
ஒற்றைக்கடையில்
ஓரங்கட்டுவேன்

அந்தக் கடையின்
எந்தப் பலகாரமும்
எனக்கு வேண்டாம்
ஒரு கோப்பையில்
தீர்ந்துபோகாதளவு தேநீர்
வட்டமேசையைச் சுற்றி என் சிநேகிதர்கள்
மறதியில்லாத மதி
வீம்புக்காக ஒரே ஒரு சிகரெட்
போதும்

இன்னும்
இலைகளின் பச்சையோ
சாலையின் கருமையோ
குறிஞ்சிநிலக் குளிரோ
புதிதாய் ஒன்றும்
ஈர்த்துவிட இயலாது எனினும்

ஒரு
காமிக்ஸ் புத்தகத்தைப் போல
கடற்கரை சாலை நடையைப்போல
ஏழு மணி ரயிலைப்போல
குடை மறந்த நாளின் திடீர் மழையைப்போல
பெருநாள் சட்டைப்பையில் காசைப்போல
ரெண்டு விநாடிகள் கூடுதலாய் வாய்த்த
அவள் பார்வையைப்போல
சுகமானது
என் நண்பர்களோடான
உரையாடும் பொழுதுகள்

ஏனெனில்

அந்த
வளைவிலேயே முடிந்துவிடாத
நெடுஞ்சாலையைவிட
புதிரானதல்ல
வாழ்க்கைப் பயணம்!

சபீர் அஹமது அபூசாரூஹ்க்


~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~பாஸ்..... நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக இந்த இடத்துக்கு போன உணர்வை இந்த கவிதை ஏற்படுத்தியது.

எனக்கென்று சில நிமிடங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போன வெருப்பில் தனியாக காலை 10 மணிக்கு புறப்பட்டு என் வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கெந்திங்மலைக்கு போகு வழியில் தனியாக பிரியும் ஒரு சாலையில் பயணித்து.....ஒரு பள்ளிவாசலை அடைந்து , கால் வைத்தால் குளிரும் டைல்ஸில் நடந்து பள்ளிவாசலுக்குல் நுழைந்து ஒருதாயின் அரவணைப்பைப்போல் இருந்த கார்பெட்டில் இமாமுடன் லுஹர் தொழுது, பகல் சாப்பாட்டை மறந்து கிடைத்த மங்குஷ்ட்டீன் பழத்தை சாப்பிட்டு , தெரு ஓரரக்கடையில் தேனீர் குடித்து , ஊர் முழுக்க ஓடும் ஓடையில் கால் நனைத்து, காட்டு மரங்களில் கத்தும் குருவி சத்தம் கேட்டு மனசு முழுக்க அமைதியையும் சந்தோசத்தையும் சேமித்து வந்தேன்.

சமயங்களில் இது போன்ற இடங்கள் தெரிவதற்குள் நாம் பல வருடங்கள் கடந்து விடுகிறோம்.

எனக்கு 30 வருடம் கடந்திருக்கிறது. பக்கத்திலேயே இது போன்ற இடத்தை வைத்துக்கொண்டு ரேட் ரேஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிரேன்.


zakir hussain
30 January at 07:45

22 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

"என் சாச்சா சாச்சிக்கு !" -

A sentimental poem on uncle-aunt with ideal characters,
Creates longing for such nice elders
As roots of our over the land leaves like lives
Inspiring us to have such ideals in ourselves.

"ஒரு கோப்பை தேநீர்!" -
Induces to have a free, fun loving, hassle free life.
All are justified expectations for enjoying nature.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

Nice pictures which absolutely complements the poems.

Dear brother Mr. Zakir Hussain,

Your poetry like narration of traveling to have break out of rat race life
provides 'mini map' for frequent short vacations to renew and rejuvenate!!

Getting out of routines and monotonous environment and moving
to new environments by travelling, truly broadens the minds and thinking.

Keep it up.
Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாச்சா சாச்சி, தேனீருடன் தோழரின் கருத்துரை மாலையிட அருமை!

crown said...

இளைப்பாறுகிறீர்களா
இம்மையை - நல்ல
தன்மையாய் வென்ற
தம்பதியரே?
---------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆச்சா!கவிவேந்தே சாச்சாவுக்கும் சாச்சிக்கும் நீங்க நேசிக்கும் உங்கள் சகோதர சினேகிதனுக்கும் சேர்த்தார்போல் கவிதை!
--------------------------------
பாறைகளிக்கு இடையே இரு பாசமலர்களின் அமர்வு!சிறு ஓய்வு!

crown said...

பெற்றவர்கள் சுமைகளல்ல
காணக்
கற்றவர்க்கு இமைகள்
-------------------------------------------------
இவ் உவமைகள் உண்மைகள்!!!!

crown said...

தலைவர் முன்னோக்க
தாயோ
புகைப்படம் எடுக்கும் தன்
தனையனை நோக்க
வாழ்க்கையின்
வெற்றி ரகசியம்
மெல்ல விளங்குகிறது
காணும் என் கண்களில்
ஆனந்தம் கசிகின்றது.
------------------------------------------------

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாள்??? ஒரு உண்மை சாச்சி(அன்பின் சின்னமா(ன)=சாச்சி)யாகிறது!இங்கே காட்சியாகிறது.

crown said...

கேசம் வருடும்
தந்தையின் விரல்களும்
பாசம் பொழியும்
தாயின் மடியும்
வாய்க்கப் பெற்றவரே
வாழ்க்கைப் பெற்றார்
-----------------------------------------------
இந்த வரம் பெற்றவர்களே பாக்கியசாலிகள்!

crown said...

இன்னும்
இந்த இறக்கைகளுக்கடியில்தான்
எங்குமே கிடைக்காத - நாம்
ஏங்கித் தவிக்கும்
இதமான நிம்மதி
நிறைவாக இருக்கின்றது
-------------------------------------------------------
இந்த இறக்கையின் இளஞ்சூட்டிதான் இதமான பாச குளிர் வீசுகிறது!

crown said...

வாழ்த்த வயதில்லை
நீடுழி வாழ்க என்று
வேண்டி நிற்கிறேன் இறையை
மாஷா அல்லாஹ்!
-----------------------------------------
அப்படியே ஆகாட்டும் என நானும் வேண்டுகிறேன். ஆமீன்.

crown said...

ஒரு கோப்பை தேநீர்!

crown said...

சற்றுமுன்
கடந்து சென்ற வாகனத்துள்
நானில்லாமல் போனாலும்
இனி வரயிருக்கும்
வண்டிக்குள் நானிருப்பின்
இந்த
ஒற்றைக்கடையில்
ஓரங்கட்டுவேன்..............................................................................................................................அந்த
வளைவிலேயே முடிந்துவிடாத
நெடுஞ்சாலையைவிட
புதிரானதல்ல
வாழ்க்கைப் பயணம்!

----------------------------------------
அழகியல்!அது கவிதையாக சுகானுபவம் ஆங்காங்கே பரவி காற்றிகூட கவிதைவாசமும் கவிஞரின் நட்பு நேசமும் கானக்கிடைக்கிறது.இப்படி நீண்டு போகும் சாலைகள் சட்டென மாறினாலும் நாம் சேர்த்துகொண்ட நல்ல நட்போடு என்றும் நடைபோடும் வாழ்கை பயணம் என்றும் தொடர்ந்து வரும். அனுபவித்து எழுதிய கற்பனையும் அது நடந்து விட்டதாய் நம்ப சொல்லும் தோரனையும் எழுத்தில் கவிஞருக்கு இருக்கும் ஆழ்மையை காட்டுகிறது.

sheikdawoodmohamedfarook said...

இது போன்ற ஜோடிகள் அமைவது கோடியில் ஒன்றே! பெற்ற பிள்ளைகள் அமைவதும் அதுபோலவே. எனக்கு இதில் பொறாமை.'தாய் தந்தையரால் பட்டதுயர் போதுமடா போதும்' என்றாகிவிட்டது! கொடுத்துவைத்த பிள்ளைகள்! அதுபோலவே பெற்றோர்கள்.ஊரில்தான் இருக்கிறார்கள்.இன்று மாலை எங்கள்வீட்டுக்கு வருகிறார்கள்.மருமகன்சபீரின் கவிதையை படித்துக்காட்டப் போகிறேன். கவிதையின் விதைநல்ல விதை.ஒருவரியே பாராட்டினால் மறுவரி கோபங்கொள்ளும்.நமக்குஎதற்கு வீண் பொல்லாப்பு? அதனால்விட்டுவிட்டேன்!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Dear brother B. Ahamed Ameen,

Thanks for your comment

//Inspiring us to have such ideals in ourselves.//

Yes. it is always my intension to inspire the readers with wise things that i feel or experience in my life.

By the way, both the photographs were sent by zakir to my emai. i just wrote whatever came in my mind. Later, we drcided to share with AN as we felt there is message for parents and sons/daughters.

They are parents of Zakir whom i call my Sacha sachi.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

கிரவுன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//
சிறு ஓய்வு!

பாறைகளிக்கு இடையே இரு பாசமலர்களின் அமர்வு!

//

ஓராயிரம் வரிகளை உள்ளடக்கிய வர்ணனை. கவிதையின் மையக் கருத்தை மிக இலகுவாக ஆனால் ஸ்திரமாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

//.இப்படி நீண்டு போகும் சாலைகள் சட்டென மாறினாலும் நாம் சேர்த்துகொண்ட நல்ல நட்போடு என்றும் நடைபோடும் வாழ்கை பயணம் என்றும் தொடர்ந்து வரும்.//

அந்த சுந்தர தினங்களை என்றும் நினைவில் நிறுத்தவே மறதில்லாத மதி கேட்டேன்.

மிக்க நன்றி.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாருக் மாமா,

அழகாகச் சொன்னீர்கள். உதாரணமாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் இந்த ஜோடியைக் கண்டதும் எனக்குத் தோன்றிய வரிகளைப் பகிரக் காரணம், எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இப்படித்தான் வாழனும் என்று சொல்லத்தான்.

மாஷா அல்லாஹ். நான் சொல்வதையே உங்களையும் சொல்ல வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அழகான வர்னனைகள் மூலம் வாழ்க்கைத் தத்துவம்.அருமை அருமை

ZAKIR HUSSAIN said...

Thanx to everybody.

கமென்ட்ஸூக்கு பரிசு அறிவித்தால் கிரவுனுக்கு கொடுத்திடலாம். தமிழ் மனிதனிடம் தவம் செய்து ஒட்டிக்கொண்டுள்ளது.

என் பெற்றோர்களைப்பற்றி....

இதுவரை அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதையே பார்த்ததில்லை. இருவருக்கும் இப்போது வயது 83 & 77 ...இப்போது காது கேட்பதில் பிரச்சினைகளால் மட்டும் சத்தம் போட்டுக்கொள்கிறார்கள்.

அவர்களின் மூன்று மகஙளுக்கும் [என்னையும் சேர்த்து ] வரதட்சணை / பால்குடம் போன்ற எந்த சனியனையும் சேர்க்காமல் அவர்கள் காசிலேயே கல்யாணம் செய்து வைத்தார்கள்.

9 வது படிக்கும்போது வறுமையினால் மலேசியாவுக்கு வேலைக்கு வந்த என் தகப்பனார் தனது 78 வது வயது வரை சொந்தமாக உழைத்தவர். அவரது மேனஜ்மென்ட்டில் 10க்கும் மேற்பட்ட கம்பெனிக்கு டைரக்டராக வேலை பார்த்தவர். அவர் ஆரம்பித்த ஒரு கம்பெனி இப்போதைக்கு பப்ளிக் லிஸ்டட்.

இதை எழுதக்காரணம் பந்தாவுக்கு அல்ல. இதைப்படிப்பவர்கள் ஒரு வேலை மனச்சோர்வில் இருந்தால் நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற எண்ணம் வரவேண்டும்.


Ebrahim Ansari said...

நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற இறையருட்கவிமணி கா அப்துல் கபூர் அவர்களின் படைப்புகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சென்று இருந்ததால் இந்த வகுப்புக்கு வர நான் தாமதம்.

அநேகமாக நான் நினைப்பது சரியானால் , எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஹயர் வாப்பா அவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு, மாப்பிள்ளையுடன் காலைப் பசியாற கூடப் போனவர்களில் நான் ஒருவன்தான் இந்தத் தளத்தில் இருந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

மாஷா அல்லாஹ். இவர்களின் நல வாழ்வுக்கு து ஆச செய்கிறேன். இன்று அல்லது நாளை இன்ஷா அல்லாஹ் சென்று பார்ப்பேன்.

Yasir said...
This comment has been removed by the author.
Yasir said...
This comment has been removed by the author.
Yasir said...

மாஷா அல்லாஹ் கவிக்காக்காவின் கலக்கல் அறிமுகத்தோடு ஜாஹிர் காக்கா அவர்களின் பெற்றோரைக் காண்பது மட்டில்லா மகிழ்ச்சியை தருக்கின்றது...அல்லாஹ் அவர்களுக்கு நோய் நொடியற்ற நல்வாழ்வை கடைசிவரை தருவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்....என் சாலத்தினை அவர்களுக்கு சொல்லிவிடுங்கள் ஜாஹிர் காக்கா

Shameed said...

இந்த ஆக்கத்தை படித்ததும் என் மனதில் ஒரு கட்டுரையோ ரெடியாகி விட்டதால் பின்னுட்டத்திற்கு பதிலாக கூடிய விரைவில் ஒரு கட்டுரை AN னில் வரும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு